Monday, February 18, 2008

நானும் சைக்கிளும் - இறுதி பாகம்.

சைக்கிள் வாங்குவதுன்னு முடிவானவுடன் நான் கேட்டது
BSA SLR, மெலிசா அழகா இருக்கும். ஆனா, அம்மா கொண்டு
வந்து இறக்கியது HERCULES.

முதல் ஆப்பு இதான். அந்த சைக்கிளைத் தூக்கி
வரண்டாவில நிப்பாட்டறதுக்குள்ள சாப்பிட்ட
சாப்பாடு ஜீரணமாகிடும்.


வீட்டில வாகனம் ஓட்டும் முதல் நபர்ங்கற பட்டம்
எனக்குத்தான். அம்மாவுக்கு லீவு லெட்டர் கொடுக்க,
கடைக்கு போக எல்லாம் நாம தான்.



காலேஜுக்கு பள்ளத்தூர் போறப்போ சைக்கிளைக்
கொண்டு போயி பஸ்ஸ்டாண்டில் போட்டுட்டு,
பஸ்ஸைப் பிடிச்சு போயிட்டு, திரும்ப வரும்போது
சைக்கிளை எடுத்துக் கிட்டு வருவேன்.


வீட்டுக்கு வந்தா "அம்மா வரச்சொன்னாரு"
"அப்பா இங்க போகச் சொன்னாருன்னு" மெசெஜ்
சொல்ற பாட்டி மேல கோபமா வரும். அதெல்லாம்
முடிச்சுட்டு ஹிந்தி கிளாஸ் போகனும்.


ஏதோ ஒரு நாள் கடைக்கு போய் சாமான் வாங்கி
கிட்டு வர்றது பிரச்சனையில்லல. எக்ஸ்ட்ரா பால் வேணுமா?
என் அதிகாலைத் தூக்கம் கெடுக்கப்படும்.
பின்ன டவுன் பேங்க வாசல்ல பால் வாங்க
நான் தேன் போகணும். (ஆனாலும், எனக்கு மிகவும்
பிடித்த ஒரு டிரைவ் அதான். ஆள் நடமாடடம்
அதிகமில்லா அந்த அதிகாலை, டீக்கடையில்
ரேடியோ சத்தம், தூய காற்று, மெயின் ரோடே பளிச்சுன்னு
அழகாத் தெரியும் ரசிச்சு கிட்டே பயணம்)


தக்ஷினாமூர்த்தி மார்க்கெட்ல 25 கிலோ அரிசிமூட்டை
வச்சிருக்கேன், போய எடுத்துகிட்டு வா! அப்படின்னு
அப்பா சொன்னதுக்கப்புறம் மறுக்கவா முடியும்.



25 கிலோ அரிசியை லொங்குன்னு லொங்க்குன்னு
மிதிச்சு கொண்டுவருவேன்.




ஒரு முறை வீட்டுல மோட்டர் ரிப்பேர். பாழாய்போன
குழாய் தண்ணியும் வரல. 4 நாள் அப்பா ஆபீஸ்லேர்ந்து
தண்ணி கொண்டு வந்தேன். சைக்கிள்ள இரண்டு
பக்கமும் குடத்தைக் கட்டி, நிறப்பி கொண்டு வந்தா
அதை உள்ள வாங்கி கூட கொட்டாம அவங்கவங்க
வேலைக்கு ரெடியாகிட்டிருப்பாங்க.



நானே கொண்டுவந்து, தொட்டி, டிரம்மை நிரப்பி
கஷ்டபட்டுகிட்டு இருக்குறப்ப எங்க பாட்டி
ஸ்பூனெல்லாம் வச்சு தண்ணி நிறைச்சு வெப்பாங்க.


சைக்கிளை எடுத்துக்கிட்டு கொஞ்சம் போயிட்டுவாயேன்னு,
சொல்லி சொல்லியே புதுக்கோட்டையை சுத்த
வெச்சுருவாங்க. ஏண்டா சைக்கிள் கத்துக்கிட்டோம்,
சைக்கிள் வாங்கினோம்னு அழுவாச்சியா வரும்.


ஆனால் இவ்வளவு ஆப்புகளுக்கு இடையேயும்,
நான் என் சைக்கிளையும், சைக்கிள் பயணத்தையும்
மிகவும் ரசித்தேன். திருமணம் நிச்சயம் ஆனதும்,
சைக்கிளை விற்று விட்டு வந்துபோது மனது மிகவும்
வலித்தது.

13 comments:

பாச மலர் / Paasa Malar said...

25 கிலோ அரிசி வச்சுட்டுப் போனீங்களா? சூப்பர்தான்..சைக்கிள் அனுபவம் நன்று..நாந்தான் கத்துக்கலியேன்னு இப்போ கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்..

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

சைக்கிள் ஒரு ஜாலி அனுபவம் தான்.

நிஜமா நல்லவன் said...

உங்ககிட்ட இருசக்கர நான்குசக்கர வாகன உரிமம் எல்லாம் இருக்கா? எதுக்கு கேக்கிறேன்னா மிதிவண்டி ஒட்டவே நான்கு பதிவு போட்ட நீங்க அதுக்கு எல்லாம் எத்தனை பதிவு போடுவீங்கன்னு தெரிஞ்சுக்கதான்.

நிஜமா நல்லவன் said...

/////ஆனாலும், எனக்கு மிகவும்
பிடித்த ஒரு டிரைவ் அதான். ஆள் நடமாடடம்
அதிகமில்லா அந்த அதிகாலை, டீக்கடையில்
ரேடியோ சத்தம், தூய காற்று, மெயின் ரோடே பளிச்சுன்னு
அழகாத் தெரியும் ரசிச்சு கிட்டே பயணம்////




அடடா என்ன சுகமான அனுபவம். படிக்கும் போதே ரொம்ப ஏக்கமா இருக்கு.

நிஜமா நல்லவன் said...

////சைக்கிள் வாங்குவதுன்னு முடிவானவுடன் நான் கேட்டது
BSA SLR, மெலிசா அழகா இருக்கும். ஆனா, அம்மா கொண்டு
வந்து இறக்கியது HERCULES.////



25கிலோ அரிசியும், 2 குடம் தண்ணியும் எடுத்து வருகிற திறமை உள்ள உங்களுக்கு BSA SLR நல்லாவா இருக்கும். அதான் HERCULES.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

கார் ஓட்ட கத்துகிட்டதுக்கப்புறம், அந்த அனுபவம், உரிமம் வாங்கறது அப்படி இப்படின்னு ஒரு 25 பதிவு போட்டிடலாம்.....

அதிகாலையில ரோடில போற அனுபவமே தனிதானே. அதுலையும் அது மார்கழி மாதமா இருந்தா........

ஆஹா, ஆஹா

pudugaithendral said...

நீங்க வேற நிஜமா நல்லவன்,

ஆனா அந்த ஹெர்குலீஸை தூக்கி தான்
வீட்டுக்குள்ள நிப்பாட்ட முடியும்.

கை காச்சு போகும்.

ம்ம்ம். அது ஒரு அவஸ்தை.

அதை விட எஸ்.எல்.ஆர் வண்டி அப்போ ரொம்ப பேமஸ். முகப்பத் ஹிந்தி படத்தில அனில்கபூர் அந்த வண்டியை ஓட்டி கிட்டு வர்ற அழகே தனி...

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
தக்ஷினாமூர்த்தி மார்க்கெட்ல 25 கிலோ அரிசிமூட்டை
வச்சிருக்கேன், போய எடுத்துகிட்டு வா! அப்படின்னு
அப்பா சொன்னதுக்கப்புறம் மறுக்கவா முடியும்.
==>
பின்னாடி நீங்க பெரிய சைக்கிள் வீராங்கணையா வரணும்னு அவர் நினைச்சிருப்பாரு போல.

சும்மா சொல்லக்கூடாது உங்க அப்பா உங்களை நல்லாவே "பெண்டு" வாங்கியிருக்கார் =)))

நிஜமா நல்லவன் said...

BSA SLR க்கு தனி மவுசுதான். அனில்கபூர் ஒட்டுனது இருக்கட்டும். பொண்ணுங்க அத ஓட்டிட்டு போற அழகே தனிதான்.

pudugaithendral said...

வாங்க சாமான்யன்,

ஆமா நல்லாவே பெண்டு வாங்கிடுவாரு.

cheena (சீனா) said...

ஆகா - ஆகா - 25 கிலோ அரிசி - 2 குடம் தண்ணி ( பொடியா இது நெசத் தண்ணி) - ச்சுச்ச்சூப்பர் - சைக்கிள் கத்துக்கிட்டா வூட்லே இந்த வேலை எல்லாம் செய்யணும் தெரியுமா ? - பள்ளத்தூரிலே எங்கே - சீதாலட்சுமி ராமசாமியா

pudugaithendral said...

ஆமாம் சீனா சாரி,

இதுக்காகத்தான் சைக்கிள் கத்துக்கச் சொன்னாங்க போலிருக்கு,

பள்ளத்தூரில் சீதாலட்சுமி ஆச்சி காலேஜ்.

cheena (சீனா) said...

ஆமாமா - சீதாலட்சுமி ஆச்சி தான் - ராமசாமி திருச்சியிலெ இருக்கு

சீனா