கேள்விக்கு என்ன பதில்? பதிலுக்கு என் கேள்வி!!!!
கேள்விகேட்டா என்னைக்காவது சரியா பதில்
சொல்லியிருப்பாரா ரங்கமணி?
"கழுவுற மீன்ல நழுவுற மீன்" மாதிரி
பதில் சொல்லாம முழுப்புவாங்களே! கேள்விக்கு
நேரடியா பதில் சொன்னதா சரித்திரமே கிடையாது.
"ஏங்க இவ்வளவு லேட்டு? எங்க போயிருந்தீங்க?"
இப்படி ஒரு கேள்வி ரங்கமணியிடம் கேட்டால்
அவரின் பதில்," நான் எங்க போயிருப்பேன்"?
அப்படின்னு ஐயா சொல்றாருன்னா என்ன
பொய் சொல்லலாம்னு யோசிக்கிறார்.
தப்பா எதுவும் செஞ்சிருக்கணும்னு அர்த்தம் இல்லை.
தங்கமணிகளுக்கு பிடிக்காத/அனுமதிக்காத
ஒன்றை செஞ்சிருக்காருன்னு அர்த்தம்.
ஒரு சின்ன எடுத்துக் காட்டோட சொல்றேன்.
அப்ப சரியா புரியும். ஐயா ஆபிஸவிட்டு சீக்கிரமாவே
கிளம்பி, அவங்க நண்பர்களைப் பார்த்து, அவங்களோட
"ஜாலியா" கொண்டாடிட்டு வந்திருப்பார்.
நாளெல்லாம் தனியா குழந்தையோட கஷ்டபட்டு
கிட்டு இருக்கிற தங்கமணிகிட்ட இதைச் சொன்னா
அப்செட் ஆவங்களேன்னும், இப்படி ஒரு கேள்வி
வரும்னு நினைச்சுப் பார்க்க முடியாத படி
ஜாலியாக இருந்ததனால் முன்கூட்டியே
பதிலை யோசிக்க மறந்து போயிட்டாங்கன்னா,
உடனே குரை உயர்த்தி நாம கேட்ட
கேள்விக்கு பதில் கேள்வி கேட்கிறார்னு வைங்க,!
அப்ப ஐயா, என்ன பொய் சொல்லாம்னு? யோசிக்கிறார்.
அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,
"எப்பெல்லாம் வீட்டய்யா தேவையில்லாம,
குரலல உயர்த்தி பேசுறாரோ? கேள்விக்கு
பதில் எதிர் கேள்வியா வருதோ! அப்ப
இட்டு கட்டறாருன்னு அர்த்தம்.
அவ்வளவுதான் புரிஞ்சுக்கோங்க.
(இதை நான் சொல்லலை. Marie Magdala Roker (PERSONAL
DEVELOPMENT COACH) சொல்லியிருக்காங்க.)
அடுத்த வாரம் சந்திக்கலாம்.
36 comments:
யப்பாஆஆஆஆஆஆஆஅ
வாங்க tbcd,
என்ன ஆச்சு????????
கழுவுற மீன்ல நழுவுற மீன்..கழுவக் கூட விடாமல் தப்பிக்கிற மீன்..
வாங்க பாசமலர்,
அதே அதே சபாபதே!!!!
பாருங்க .. ரங்கமணி லேட்டா வர்றதுனால தானே உங்களால சும்மா தனியா "உக்கார்ந்து" இந்த மாதிரி எல்லாம் யோசிக்க முடியுது?? அதுக்கு நன்றி சொல்வீங்களா .. அத விட்டுட்டு குறை சொல்றீங்க!! ;-)
..ராம்
வாங்க ராம்,
முதல் வருகைக்கு நன்றி.
லேட்ட வர்றதைப் பத்தின பாடமெல்லாம் முடிஞ்சிடுச்சு.
இன்னையப் பாடம் பொய சொல்றதைக் கண்டுபிடிக்கறது.
அதாவது , ர.மணி முன்னாடியே யோசிச்சு வச்சுகிடணும்னு சொல்றீங்க? சரியா?. அதத்தான செஞ்சுக்கிட்டு வர்ரோம்.
வாங்க சாமான்யன்,
முன்னகூட்டி யோசிச்சு சொல்வீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா? :))))))))))))))))))))
இது பொய் சொல்லும்போது ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு எடுத்துச் சொல்ற பாடம்.
<==
புதுகைத் தென்றல் said
அவங்களோட
"ஜாலியா" கொண்டாடிட்டு வந்திருப்பார் ==>
ஏற்க்கனெவே அலுவலகத்தில் கஷ்டம்
வீட்டுக்குப் போனால் அடுத்த கஷ்டம் வரப்போகுது. அதச் சமாளிக்கறதுக்குத்தான் அப்படி கொஞ்சமா எனர்ஜைசர் போட்டு ர.மணி சக்தியை("ஜாலியா") ஏத்திகிடறது.
த.மணிகள் புத்திசாலின்னு ர.மணிக்குத் தெரியாதா? ஏற்க்கனவே யோசிச்சு பொய் சொல்ரப்ப முக பாவத்தையும், அதுக்குத் தகுந்தமாதிரி வச்சுக்க தெரியாதா என்ன? நீங்க அப்புராணியா இருக்கீங்க.
<=
பாச மலர் said...
கழுவுற மீன்ல நழுவுற மீன்..கழுவக் கூட விடாமல் தப்பிக்கிற மீன்.. ==>
அதே அதே.
<==
புதுகைத் தென்றல் சைட்...
வாங்க ராம்,
முதல் வருகைக்கு நன்றி.
லேட்ட வர்றதைப் பத்தின பாடமெல்லாம் முடிஞ்சிடுச்சு.
இன்னையப் பாடம் பொய சொல்றதைக் கண்டுபிடிக்கறது.
==>
எடுத்ததுமே முதல் வரில்ல உங்க நோக்கத்தப் போட்டா வாசகர்களூக்கு உடனே புரிஞ்சிடும். என்ன, இந்த எக்ஸ்ட்ரா கமெண்ட் கிடைக்காது.
இப்பவெல்லாம் ஹபண்டாலஜில ர.மணிக்கு ட்ரீட்மெண்டே இல்ல. ர.மணிகள் த.மணிகள் எதிபார்க்கிற மாதிரி மாறிட்டாங்களா? புரியலயே.
<==
அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,"எப்பெல்லாம் வீட்டய்யா தேவையில்லாம, குரலல உயர்த்தி பேசுறாரோ? கேள்விக்கு பதில் எதிர் கேள்வியா வருதோ! அப்ப இட்டு கட்டறாருன்னு அர்த்தம். ==>
சேச்சே, அப்படியெல்லாம் இல்லீங்க. ர.மணி நிறைய விஷயங்களை (என்னன்னு அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் =)) ) செய்ய வேண்டியிருக்கு இல்லயா? அதனால மறந்துபோயிட்ரார். அதுதான் யோசிக்கிறார்.அம்புட்டுதேன்.
வாங்க சாமான்யன்,
முக பாவத்தை மாத்தி நடிப்பீங்கன்னு
எங்களுக்குத் தெரிஞ்சுடுமே.
கல்யாணம் ஆன உடனே கண்டுபிடிக்கப்படும் சில் விஷயங்களில் இதுவும் ஒன்று.
டீரிட் மெண்ட் எப்படி கொடுக்கணும், எதுக்கு கொடுக்கணும்னு ரங்கமணிகளுக்குத் தெரியும். எல்லாமே சொல்லிக்கொடுக்க முடியாது. அதனால அவங்களே தெரிஞ்சு வைச்சு "கில்லி" மாதிரி அடிப்பாங்க.
//ர.மணி நிறைய விஷயங்களை (என்னன்னு அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் =)) ) செய்ய வேண்டியிருக்கு இல்லயா? அதனால மறந்துபோயிட்ரார். அதுதான் யோசிக்கிறார்.அம்புட்டுதேன்//
நானும் அதேதான் சொல்றேன், யோசிச்சு பொய் சொல்லத் தேவைப்படும் அவகாசத்திற்காகத்தான்
குரலை உயர்த்தி பேசறது, இல்லைன்னா கேள்விக்கு கேள்வியே பதிலாக்கறது எல்லாம்......
:)))))))))))))))
/அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,
"எப்பெல்லாம் வீட்டய்யா தேவையில்லாம,
குரலல உயர்த்தி பேசுறாரோ? கேள்விக்கு
பதில் எதிர் கேள்வியா வருதோ! அப்ப
இட்டு கட்டறாருன்னு அர்த்தம்.
அவ்வளவுதான் புரிஞ்சுக்கோங்க./
இப்படிஎல்லாம் உண்மைய போட்டு உடைச்சா எப்படி?
வாங்க நிஜமா நல்லவன்,
உண்மையைச் சொன்னாத்தானே
புது ரங்கமணிகளுக்கு உதவியாய் இருக்கும்.
அதான்..... :))))))
அப்ப ஆல்வேஸ் ஜவுண்டா பேசினா என்ன செய்வீங்க????
சீக்கிரம் பதில் சொல்லுங்க.
என் வாழ்க்கையே இதிலதான் அடங்கியிருக்கு.
:)))
//
TBCD said...
யப்பாஆஆஆஆஆஆஆஅ
//
அண்ணே எவ்வளவு அடி வாங்கினாலும் ஜவுண்ட் வெளில வரப்பிடாது!!
நாமெல்லாம் ஜிங்கமில்ல!!
//
பாச மலர் said...
கழுவுற மீன்ல நழுவுற மீன்..கழுவக் கூட விடாமல் தப்பிக்கிற மீன்..
//
இந்த சூழ்ச்சிகரமான வார்த்தைகளை போட்டு ஆண்களை குழப்புவதை நான் வண்ண்ண்ண்மையாக கண்டிக்கிறேன்.
//
Ram Ravishankar said...
பாருங்க .. ரங்கமணி லேட்டா வர்றதுனால தானே உங்களால சும்மா தனியா "உக்கார்ந்து" இந்த மாதிரி எல்லாம் யோசிக்க முடியுது?? அதுக்கு நன்றி சொல்வீங்களா .. அத விட்டுட்டு குறை சொல்றீங்க!! ;-)
..ராம்
//
அண்ணே வாங்க நன்றி
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
அதாவது , ர.மணி முன்னாடியே யோசிச்சு வச்சுகிடணும்னு சொல்றீங்க? சரியா?. அதத்தான செஞ்சுக்கிட்டு வர்ரோம்.
//
செய்வதை திருந்த செய்னு சொல்றாங்க!!
அவ்வளவே.
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
புதுகைத் தென்றல் said
அவங்களோட
"ஜாலியா" கொண்டாடிட்டு வந்திருப்பார் ==>
ஏற்க்கனெவே அலுவலகத்தில் கஷ்டம்
வீட்டுக்குப் போனால் அடுத்த கஷ்டம் வரப்போகுது. அதச் சமாளிக்கறதுக்குத்தான் அப்படி கொஞ்சமா எனர்ஜைசர் போட்டு ர.மணி சக்தியை("ஜாலியா") ஏத்திகிடறது.
//
இதெல்லாம் ஜகஜம்தான் இங்கல்லாம் சொல்லாதீங்க!!
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
இப்பவெல்லாம் ஹபண்டாலஜில ர.மணிக்கு ட்ரீட்மெண்டே இல்ல. ர.மணிகள் த.மணிகள் எதிபார்க்கிற மாதிரி மாறிட்டாங்களா? புரியலயே.
//
ஒருவேளை சீக்ரட்டா எதுவும் ஏற்பாடு நடக்குதோ!?!?!
ஓ மை காட்!!
நீங்க ஜவுண்டா பேசினா
என்ன நடக்கும்னு பிராக்டிகலா தெரிஞ்சுக்கலாமே சிவா.
அப்பத்தான் நல்லாத் தெரியும்.
:))))))
//
புதுகைத் தென்றல் said...
நீங்க ஜவுண்டா பேசினா
என்ன நடக்கும்னு பிராக்டிகலா தெரிஞ்சுக்கலாமே சிவா.
அப்பத்தான் நல்லாத் தெரியும்.
:))))))
//
தம்பிங்களுக்கு உதவி பண்றதில்லைன்னு முடிவோடதான் இருக்கீங்க!!
நல்லா இருங்க!!
<==
மங்களூர் சிவா said...
அப்ப ஆல்வேஸ் ஜவுண்டா பேசினா என்ன செய்வீங்க????
சீக்கிரம் பதில் சொல்லுங்க.
என் வாழ்க்கையே இதிலதான் அடங்கியிருக்கு.
:)))
==>
புதுகைத் தென்றல், அவர்தான், இதுலதான் அவரோட வாழ்கையே அடங்கியிருக்குன்னு சொல்ரருல்ல, அதுக்ககவாவது, சரியான் பதில் சொல்லுங்க.
உங்க பதில பார்த்துட்டு அவர் முடிவெடுப்பாருல்ல.
இப்போவெல்லாம் தினசரி வர்ர செய்திகள(ஆம்லெட் போடச்சொன்ன கணவனை கத்தியால் குத்திய மனைவி)பார்த்து, இவங்கள மாதிரி கல்யாணமாகாதவங்க ரொம்பத்தான் பயந்துபோய்கிடக்காங்க.
உதவக்கூடாதுன்னு இல்ல சிவா,
நாங்க ஜவுண்டாதான் பேசுவோம்னு சொல்றீங்க, விளைவு என்னவா இருக்கும்னு சொன்னேன்னா,
மிரட்டலான்னு கேப்பீங்க. அதான் நீங்களே தெரிஞ்சுக்கங்கன்னு சொன்னேன்.
இதெல்லாம் ஜகஜம்தான் இங்கல்லாம் சொல்லாதீங்க!!//
நீங்க சொல்லாட்டி தெரியாதா!!!!!!!!!!
ஒருவேளை சீக்ரட்டா எதுவும் ஏற்பாடு நடக்குதோ!?!?!
அப்பாடி புரிஞ்சா சரி........
<==
புதுகைத் தென்றல் said...
உதவக்கூடாதுன்னு இல்ல சிவா,
நாங்க ஜவுண்டாதான் பேசுவோம்னு சொல்றீங்க, விளைவு என்னவா இருக்கும்னு சொன்னேன்னா,
மிரட்டலான்னு கேப்பீங்க. அதான் நீங்களே தெரிஞ்சுக்கங்கன்னு சொன்னேன்.
==>
ஒரு மாணவர் கேட்கும் அவசியமான, அதுவும் தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விக்குப் பதில் தர மறுப்பதை நான் வன்மையா கண்டிக்கிரேன் =)))
பாடம்னா எல்லாம் இருக்கத்தான் செய்யும்.அதுக்கெல்லாம் தயங்கினா அப்புரம் மாணவர்கள் எப்படி மார்க் வாங்குவாங்க? =))
//ஒரு மாணவர் கேட்கும் அவசியமான, அதுவும் தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விக்குப் பதில் தர மறுப்பதை நான் வன்மையா கண்டிக்கிரேன் =)))
பாடம்னா எல்லாம் இருக்கத்தான் செய்யும்.அதுக்கெல்லாம் தயங்கினா அப்புரம் மாணவர்கள் எப்படி மார்க் வாங்குவாங்க? =))//
எப்படி? சாமான்யன் இப்படி!!!!!!
Grass itching............
சாமான்யன் சொல்லிப்புட்டாரு
அதனால உங்க டவுட்டை கிளியர் பண்ணிடறேன் மங்களூர் சிவா.
எப்பவுமெ ஜவுண்டா பேசினா,
நீங்க பொய் சொல்வதைப் போல தங்கமணியும் பொய்பொய்யா சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க.
ஒரு கட்டதுக்கு மேல வெறுப்பாகி
சல்லுன்னு பேசுவாங்க. உங்க மரியாதைக் குறைஞ்சு நாளடவில் வாழ்க்கை நரகமாகரதுக்கான சாத்தியக்
கூறுகள் அதிகம்.
கணவன் மனைவிக்குள்ள நேசம், அந்நியோன்யம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பதும் முக்கியம்.
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா....
புதுகைத் தென்றல் said...
கணவன் மனைவிக்குள்ள நேசம், அந்நியோன்யம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பதும் முக்கியம்.
சரியான புரிதல் இருக்கும் இடத்தில்தான் ஒளிவுமறைவு இல்லாமல் இருக்கமுடியும்
வாங்க நிஜமா நல்லவன்,
சரியா சொன்னீங்க
Post a Comment