Friday, March 07, 2008

ஏலேலோ! ஐலசா! போவோமா! ஊர்கோலம்!

மொதல்ல இங்க போய் இந்தப் பாட்டை பாத்துட்டு
அப்புறமா பதிவைப் படிங்க.
http://www.youtube.com/watch?v=8MiYFh60Goo
அந்தப் பாட்டை பதிவுல சேர்க்க பார்த்தேன்,
யூ ட்யூப் சொதப்பிடிச்சு. :(


என்ன பாட்டை ரசிச்சாச்சா? (நிதின் சந்திரா &
கமலினியையும் கூட ரசிச்சோம் அப்படின்னு
யாரோ சொல்றது காதில கேட்குது. :))) )

சுந்தரத்தெலுங்கில், மயக்கும் பாலுவின் குரலில்,
அருமையான காட்சிகள். நான் மிகவும் விரும்பும் பாடல்.
கோதாவரி என்னும் பெயரில் ஒரு திரைப்படம்
வந்திருக்கிறது. யூ ட்யூபில் இருக்கும். அர்த்தம்
புரியவில்லை என்பவர்களுக்காக... இங்கே..
இங்கேயும்.

இந்தப் பாடல் கோதாவரி ஆற்றின் அழகையும்,
பெருமையையும் சொல்வதுடன் சின்னக் கதையையும்
சொல்கிறது.

இப்படி ஒரு இனிதானப் பயணம் செய்தால்
எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணுதுல்ல.!

போகலாமே ! இது சாத்தியம்.



ராஜமுந்திரியிலிருந்து பத்ராசலத்திற்கு இப்படி ஒரு பயணம் போகலாம்.

ஆந்திரா டூரிஸம் இயக்கும் சேவைகளை அறிய

பத்ராசலம் ராமர் கோயில் பிரசித்தம். மற்ற

விவரங்களுக்கு.

விக்கிப்பீடியா தகவல்களுக்கு

(சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில்
"ராமன் கதைக் கேளுங்கள்" பாடல்
இந்தக் கோயிலில் தான் எடுக்கப்பட்டது.
http://www.youtube.com/watch?v=lDnLk6OiRGU
தெலுங்கில் தான் கிடைச்சது. (திட்டப்டாது)

கோதாவரி பாட்டில் பார்த்தது போல்

சாப்பாடு எல்லாம் தருகிறார்களாம்.

தனி அறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

போயிட்டு வந்தவங்க சொல்றதைக் பாருங்க http://kosuru.blogspot.com/2007/09/my-bhadrachalam.html

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ஒரு
இன்பச்சுற்றுலாவாக செல்லலாமே!




12 comments:

Hari said...

நான் செல்ல ஆசைபடும் இடங்களில் இதுவும் ஒன்று. கூடிய விரைவில் செல்லதான் வேண்டும்.

இந்த இடத்திற்க்கு போவதை பற்றி "கைப்புள்ள" சொல்றது என்னனா :

"கம்பனில வேலையை சொல்லியே கொல்றாய்ங்கப்பா.'பொட்டி'-யை ஓரமா கட்டி வைச்சுட்டு இங்க போயிட்டு வந்தாதான் உசிரு வாழ முடியும்.வர்ட்டா???!!!1"

நிஜமா நல்லவன் said...

உங்க பதிவ படிக்கும் போதே அங்க போகனும் போலதான் இருக்கு.

pudugaithendral said...

வாங்க ஹரி,
கைப்புள்ளையும் ஹைதாராபாத்தானா?

சரி சரி.

ஆமாம் கோதாவரி படம் பாத்தீங்களா?

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

கண்டிப்பா எல்லோரும் ஒரு முறை
இந்தப் படகு பயண்த்தை அனுபவிக்கணும்.

கானா பிரபா said...

இணைப்புக்களைக் கொடுத்து சுருக்கமாவே முடிச்சிட்டீங்க. நல்ல பாடல்கள், கோதாவரி படத்தை தேடி எடுத்து விலைக்கு வாங்கி பார்த்துவிட்டேன். நல்ல படம். நீங்கள் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பும் போது பார்க்க வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் சொல்கின்றது.

pudugaithendral said...

வாங்க பிரபா,
//நீங்கள் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பும் போது பார்க்க வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் சொல்கின்றது.//

உங்க ஜோஸ்யம் உண்மையாகலாம்.
இந்தப் பதிவெல்லாம் போட்டு
இங்க கூட்டிகிட்டு போங்கன்னு அயித்தானைக் கேக்கணும் என்பது தானே திட்டம் :)

மங்களூர் சிவா said...

பாட்டு நல்லா இருந்தது அந்த பொண்ணு டான்சும் சூப்பர்.

இந்த மாதிரி படகுல போறதுக்காச்சும் கோதாவரி ஒரு எட்டு போயிட்டு வரவேண்டியதுதான்.

pudugaithendral said...

வாங்க சிவா,

பாட்டு நல்லா இருக்கான்னா? பொண்ணு நல்லா இருக்குன்னு சொல்றீங்க.

என்சாயிங் த பியூட்டி :)

ஆமாம் கண்டிப்பா ஒரு எட்டு போயிட்டு வாங்க.

பாச மலர் / Paasa Malar said...

ஹைதராபாத் போவதற்குள்ளே ஊர் மேல் உங்களுக்கு எத்தனை பாசம்!

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

பாசம்லாம் ஒண்ணும் இல்ல.

கானா பிரபா அவர்களின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க.
அதான் உண்மை :)

நிஜமா நல்லவன் said...

புதுகைத் தென்றல் said...
வாங்க பிரபா,
//நீங்கள் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பும் போது பார்க்க வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் சொல்கின்றது.//

உங்க ஜோஸ்யம் உண்மையாகலாம்.
இந்தப் பதிவெல்லாம் போட்டு
இங்க கூட்டிகிட்டு போங்கன்னு அயித்தானைக் கேக்கணும் என்பது தானே திட்டம் :)///



ஆஹா உங்க பதிவுக்கு இப்படி வேற அர்த்தம் இருக்கா? அப்ப மாண்டிசோரி பள்ளி திறக்கிறது கன்பார்ம் தான்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,
மாண்டிசோரி பள்ளி ஆரம்பிக்கணும்னா
கொஞ்சம் பார்மாலிட்டீஸ் அது இதுன்னு
கொஞ்சம் வேல இருக்கு.

இந்த டிரிப் அப்படி எல்லாம் வேல இல்லையே.