Thursday, March 27, 2008

இயற்கை அன்னையின் மடியிலே....... 2

பேட்டரி டவுனாக இருக்கும்போது, ரீ சார்ஜ்
செய்து கொள்ள மிகச் சரியானது
இயற்கை அன்னையின் மடிதான்.

குடவரைக் கோயில் பாத்திருப்பீங்க,
குடவரை ஹோட்டல் பாத்திருக்கீங்களா?
கோயிலுக்கு சொந்தமா யானை
வெச்சுருப்பாங்க, ஹோட்டலுக்கு
சொந்தமா 2 யானைங்க இருப்பது புதுசு.

கந்தலாமா- இதுதான் ஜெஃப்ரி பாவா
அவர்களின் மிக அற்புதமான படைப்பு.


கந்தலாமா ஏரியின் அருகில்
"அலிகல" - யானைமலையைக்
குடைந்து நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.




இது மலையேற்றம் எல்லாம் இல்ல, பாறை ஏற்றம் தான் :)))


ஹோட்டலின் முகப்பு.




காட்டு வழிப்பாகை இல்லீங்க, ஹோட்டலுக்கு போகும்பாதைதான்.


ஹோட்டலை சுற்றி இருக்கும் காடு,



நீச்சல்குளத்தை ஒட்டி இருப்பதுதான் கந்தலாமா ஏரி, இது 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது,ராஜா வாசபவால் கட்டப்பட்டது. இன்றும் சுற்றுபுர கிராமங்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு ஆதாரம்.










கந்தலாமா- உலகிலேயே முதன் முறையாக சான்றிதழ் பெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இதுதான் இந்த ஹோட்டலின் தாரக மந்திரம்.



இயற்கை அன்னையின் சொத்தை
பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்று
சொன்னால் மிகையாகாது.
ஒன்றா, இரண்டா இந்த ஹோட்டலுக்கு
கிடைத்திருக்கும் விருதுகள்.
1. "GREEN GLOBE" விருது 6 முறை.

2. ISO CERTIFICATION.
3. WTTTC- WORLD TRAVEL & TOURISM COUNSIL- 1
4. PATA- Pasicific Asia travel association award,
5. INTAIN-SATTE - Indian National Trust for Art,
culture & Heritage south asia, Travel & tourism exchange award,


இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான
ஒரு விருது 7 முறை வழங்கப்பட்டிருக்கு.

அது எதுக்கு?
சொல்றேன்.
ஒரு தொடரும் போட்டுக்கிட்டு
அடுத்த பதிவுலசொல்றேன்.






7 comments:

மங்களூர் சிவா said...

தொடரும் போட
மறந்துட்டீங்க பாருங்க

மங்களூர் சிவா said...

படங்கள் அருமை

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

படங்கள் நல்லாருக்கு.

pudugaithendral said...

தொடரும் போட்டுக்கறேன்னு சொல்லியிருக்கேன் சிவா..

pudugaithendral said...

படங்கள் நான் என் N 70 மொபைலில் எடுத்தது. நன்றி.

நிஜமா நல்லவன் said...

அது சரி. பெரிய மனுஷங்க வந்தாங்களே யாருக்காவது பிங் பண்ணனும்னு தோணுச்சா? எதோ எனக்கு நிலாக்குட்டி சொல்லி கொடுத்ததால 'அனுபவம்/நிகழ்வுகள்' ல பண்ணி இருக்கேன்.

தென்றல்sankar said...

super padangal,yea nice picture.