Wednesday, March 05, 2008

அன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்

ஹைதராபாத்திலிருந்து 498 கி.மீட்டர் தொலைவில்
அமைந்திருக்கிறது இத்திருக்கோவில்.

விசாகப்பட்டிணத்திலிருந்து 124 கி.மீட்டர்.




ரத்னகிரி மலையின் மீது அம்ர்ந்து அருள்பாலிக்கிறார்
ஸ்ரீ வீர வேங்கட சத்யநாராயண சுவாமி.

(சங்கராபரணம் திரைப்படத்தில் கூஜாவைத்
தவரவிட்டு நாயகனும், நாயகியும் ஓடுவார்களே
அது இந்தக் கோயில் தான்.)


அனின வரம் (கேட்ட வரம்) கொடுத்து பக்தர்களைக்
காக்கும் சாமி இருக்கும் இடம் தான் "அன்னவரம்"
ஆனது. மேலும் ஸ்தல புராணம் படிக்க (ஆங்கிலத்தில்)
இங்கே சொடுக்கவும்.


பொதுவாக பொளர்ணமியிலும், ஏகாதசியிலும் சத்யநாராயண
ஸ்வாமி விரதம் இருந்து பூஜை செய்பவர்களூக்கு
வேண்டியது வேண்டியபடி கிடைக்கும் என்பார்கள்.
கதை படிப்பது மிக முக்கியம். ஆந்திராவில் திருமணம்,
புதுமனை புகுதல் எல்லா சுப நிகழ்ச்சியின் போதும்
சத்யநாரயாண பூஜை செய்வார்கள்.
ஸ்ரீ சத்ய நாராயணம் உபாஸ்மஹே நித்யம்.
சத்யஞானா நந்தமயம் சர்வம் விஷ்ணு மயம்.



10 comments:

வால்பையன் said...

இங்கெல்லாம் போனா ஓசியில சோறு போடுவாங்களா?!!!

வால்பையன்

மங்களூர் சிவா said...

இப்பத்தைக்கு இங்கிருந்தே கன்னத்துல போட்டுகிட்டு வேண்டிக்கிறேன்.

நாராயணா.

நிஜமா நல்லவன் said...

ஒரே பக்தி மணம் கமழுதே. நாராயணன் எல்லாரும் நல்லா இருக்க அருள்புரியட்டும்

நிஜமா நல்லவன் said...

மங்களூர் சிவா எங்க போனாலும் நீங்க தான் முதல் போஸ்ட்டா?.

ரசிகன் said...

//மங்களூர் சிவா said...
இப்பத்தைக்கு இங்கிருந்தே கன்னத்துல போட்டுகிட்டு வேண்டிக்கிறேன்.

நாராயணா.
//
ரிப்பீட்டேய்ய்ய்...

நிஜமா நல்லவன் said...

ஏனுங்க மங்களூர் சிவா

ஆளாளுக்கு சூடான இடுகைல இடம்பிடிக்க அலையுறாங்க. நீங்க என்னன்னா எப்பவும் முதல் கமெண்ட் போடுறதே போதும்னு இருக்கீங்களா?

pudugaithendral said...

வாங்க வால் பையன்,

இலவச சாப்பாடு போடு வாங்க.

pudugaithendral said...

சிவா, நிஜ்மா நல்லவன், ரசிகன்

வருகைக்கு நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

சிப்பிக்குள் முத்து படத்துல்யும் வரும்..பெரும்பாலும் கே.விஸ்வநாத் படங்கள் எல்லத்துலயும் வரும்..

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

சிப்பிக்குள் முத்து படத்தில் வருவது வேற இடம். (அடுத்து அதுதான் பதிவு)

கே.விஸ்வநாத் படத்தில் ஒவ்வொன்றும் அருமை.