Wednesday, May 07, 2008

பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி - 2

போன பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள்.

பிராமணீயம் அது இதுன்னு சொல்லி. :(

கைகளில் இருக்கும்
கிருமி மிக மோசமானது.

முகத்தை அழகா வெச்சுக்கனும்னு நினைக்கறவங்க அடிக்கடி
முகத்தை கழுவி, மேக்கப் போட்டுகிட்டு இருந்தா மாத்திரம்
போதாது. முகத்து கிட்ட கையை கொண்டே போகாதீங்க.
முகம் அழுக்கா ஆகிடும். (சுவற்றில கை தடயங்கள் இருக்குமே
பார்த்திருபீங்க.) கைகளில் இருக்கும் கிருமிகள் பத்தி
ஒரு தனி பதிவே (FOOD HYGINE) அப்படீங்கற பதிவை ஒரு
தனிப் பதிவா போடறேன்.

1.குளிக்காமல் சமைக்கக்கூடாது:
நல்லதைத்தான் சொல்லியிருக்காங்க. தூங்கி எழுதல்
என்பது சாவிற்கு சமம். அதனால குளிச்சிட்டுதான்
சமைக்கணும் அப்படின்னு நம்ம பெரியவங்க
சொல்லியிருக்காங்க.

நான் அதை புரிந்து கொண்டது இப்படித்தான்.
குளிப்பதனால் நாம் புத்தணர்ச்சி அடைகிறோம்.
நம் உடலில் இருந்து செல்கள் இறக்கின்றன.( அவை
பெருக்கும்போது தரையில் சேரும் குப்பையில்
சேரும்.) மீதி உடம்பில் இருப்பவைகளை
கழுவி களைய குளியல் அவசியத்தேவை.

கிருமிகளிலிருந்து விடுதலை, வியர்வை நாற்றம்
இல்லாமல் ஆரோக்கிய சமையல்.

சரிதான். ஆக அன்றாடம் அதிகாலை குளித்து
பிறகு சமைக்கவேண்டும் என்று பெரியவர்கள்
சொன்னது உண்மைதான்.

மேலும் இந்த இறந்த செல்கள் பெருக்குவதனால்
மட்டும் போகாது. நீர் கொண்டு தரையை (படுத்த
இடத்தை) துடைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

மறக்காமல் மெத்தையையாவது தட்டி,
மெத்தை விரிப்பை உதறி போடுவது நல்லது.

தொடரும்.......

12 comments:

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

கோபிநாத் said...

\\\மறக்காமல் மெத்தையையாவது தட்டி,
மெத்தை விரிப்பை உதறி போடுவது நல்லது.\\

இதை படிக்கும் போது என்னை நினைச்சி பார்த்தேன் ஒரே சிரிப்பு தான் வருது ;))))

நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிங்க..;)

ரசிகன் said...

//முகத்து கிட்ட கையை கொண்டே போகாதீங்க.
முகம் அழுக்கா ஆகிடும். (சுவற்றில கை தடயங்கள் இருக்குமே
பார்த்திருபீங்க.)//

இது கைகளில் கசியும் வியர்வை ஈரம். இதே வியர்வை முகத்திலிருந்தும் வழிக்கிறது.

சாதாரணமாக காற்றில்பரவும் கிருமிகளும் தூசுகளும் முகத்தில் பரவுகின்றன.நம் கைகளை நம் முகத்தில் கொண்டு போகக்கூடாத அளவு கட்டுப்பாடு தேவையா அண்ணி?:P

நிஜமா நல்லவன் said...

நான் இப்பவெல்லாம் சமைக்கிறதே இல்ல(அப்ப முன்னாடி சமைச்சியான்னு கேக்க கூடாது).

நல்ல பதிவு. தினம் ஒரு பதிவு போட்டு மறுபடியும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//கைகளில் இருக்கும் கிருமிகள் பத்தி
ஒரு தனி பதிவே (FOOD HYGINE) அப்படீங்கற பதிவை ஒரு
தனிப் பதிவா போடறேன்.
//
பதிவிடுங்கள் புதுகை. பெரும்பாலான நோய்க்கிருமிகள் கைகளை அடைக்கலம் கொண்டே பின் வேறு அவயங்களுக்குப் பரவுகின்றன.

pudugaithendral said...

வாங்க சிவா,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க கோபிநாத்,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

சாதாரணமாக காற்றில்பரவும் கிருமிகளும் தூசுகளும் முகத்தில் பரவுகின்றன.நம் கைகளை நம் முகத்தில் கொண்டு போகக்கூடாத அளவு கட்டுப்பாடு தேவையா அண்ணி?:P//

வாங்க ரசிகன்,

கட்டுப்பாடு என்று அல்ல தவிர்த்தல் நலம். கைகளில்தான் முதலில் கிருமிகள் மற்றும் தூசிகளின் தொற்று ஏற்படுகிறது. சமீபத்தில் கைகொடுக்காதீர்கள், நோயை வரவைக்காதீர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரைக் கூட படித்தேன்.

நம் இந்திய முறையில் வணக்கம் சொல்வது பெஸ்ட் என்று சொல்லியிருந்தார்கள்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,

போடவேண்டியதுதான். தின்மதோறும் போடுவேன் பதிவு அப்படின்னு ஜோதிகா மாதிரி ஒரு டான்ச் + பாட்டு பாடலாம்னு இருக்கேன்.

pudugaithendral said...

வாங்க நிர்ஷான்,

கணவர் FOOD SAFE certificate பெற்றவர். அவர் குறிப்புகள் எடுத்து கொடுப்பதாக் சொல்லியிருக்கிறார்.

அப்போது நிறைய விடயங்களுடன் அந்த பதிவு கண்டிப்பாய் அனைவருக்கும் உபயோகமானதாய் இருக்கும்.

புகழன் said...

//
போன பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள்.

பிராமணீயம் அது இதுன்னு சொல்லி. :(
//

மன்னிக்கவும்
கருத்துச் சுதந்திரத்தில் குறுக்கிட்டதற்கு.
பின்னூட்டத்திலும் கருத்துச் சுதந்திரம் இருந்ததால் கொஞ்சம் ஓ....வரா எழுதிவிட்டேன் போல.

"பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி - 2"
மிக நல்ல - தேவையான பதிவு

//

தூங்கி எழுதல்
என்பது சாவிற்கு சமம்.
//

உண்மையான வரிகள்.
ஆனால் இதனை உணர்ந்தவர்கள் குறைவு

தொடர்ந்து எழுதுங்கள்.

எங்கள் கருத்துக்களைச் சொல்லவும் சுதந்திரம் கொடுங்கள்.

பின்னூட்டத்தில் வாசகர்கள் மட்டுமே இருக்க வேண்டும். விமர்சகர்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம்.

இப்படிக்கு
புகழன்

pudugaithendral said...

வாங்க புகழன்,

//தொடர்ந்து எழுதுங்கள்//.

கண்டிப்பாய் எழுதுவேன். ஊக்கத்திற்கு நன்றி.

//எங்கள் கருத்துக்களைச் சொல்லவும் சுதந்திரம் கொடுங்கள்.

பின்னூட்டத்தில் வாசகர்கள் மட்டுமே இருக்க வேண்டும். விமர்சகர்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம்.//

கருத்துக்களைச் சொல்லவேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது. யாரும் கொடுக்கவும் தேவையில்லை, எடுக்கவும் தேவையில்லை.

விமர்சனம் செய்வது நல்லதுதான். ஆனால் விமர்சனம் விமர்சனமாக இல்லாமல் கண்டனம்போல் வார்த்தை ப்ரயோகம் இருப்பது ஆரோக்கியமான து அல்ல. இதுதான் என் எண்ணம்.

யாரையும் புண்படுத்தாது வார்த்தைகள் படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி.

புரிதலுக்கு நன்றி.