Wednesday, May 07, 2008

பொம்மரில்லு - ஆடவாரி மாடலுகு அர்தாலே வேருலே !!!!

ஐயோ திட்டலைங்க. இவை தற்போது தமிழில் ஓடிக்கொண்டிருக்கு
இரு திரைப்படங்களின் தெலுங்கு பதிப்பு.

பொம்மரில்லு - இதுதான் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம்

ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே - இது யாரடி மோகினி.

இரண்டு படங்களையும் தெலுங்கில் பார்த்திருக்கிறேன்.

தமிழில் பார்த்தவர்கள் பலர் தற்போது வலைப்பூக்களில் விமர்சனம்
எழுதி வருகிறார்கள். அதில் நான் மிகவும் ரசித்து படித்தது
நந்தா எழுதியது.

பொம்மரில்லு படம் முழுதும் மிக அருமையாக இருந்தது. ஆனாலும்
எனக்கு மிகவும் பிடித்தது கிளைமாக்ஸ்தான். தந்தைசெய்த தவறை
சுட்டிக் காட்டும் நேரத்தில், அவரின் பாசத்தையும் மறக்காமல், மரியாதையுடன்
புரிய வைக்கும் காட்சி மிக மிக அருமை.

தெரிந்து தவறு செய்வது இல்லை. தன்னை அறியாமலேயே
இவ்வாறு தவறு இழைக்கும் பெற்றோருக்கு ஒரு பாடம்.
(தெலுங்கில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில்
தற்போது வெளி வந்திருக்கும் தெலுங்கு படம் "பருகு" (ஓட்டம்)
அதுவும் தந்தை மகன் உறவு பற்றியதாம் பார்த்து விட்டு சொல்கிறேன்.)

யாரடி மோகினி: இந்தப் படத்தை தெலுங்கில் அனைவரும்
புகழ்ந்தார்களே என்று போனேன். சத்தியமாக இந்த படத்தில்
வெங்கி( அதான் வெங்கடேஷ் :))) ) நடிப்பைத் தவிர
பெரிதாக ஒன்றும் இல்லை. தகப்பன் கேரக்டரில் தெலுங்கு
கோடா ஸ்ரீநி கலக்கியிருப்பார். இவர்கள் இருவரையும் தவிர
வேறு ஏதும் சரியில்லை. எப்படி இந்தப் படம் புகழடைந்தது
என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். அப்படி இருக்க
தமிழில் இந்தப் படம் நன்றாக இருக்குமா என்பது சந்தேகமே!!!

விகடன் வேறு 42 மார்க் கொடுத்திருக்கிறது. (விமர்சனக்
குழு காரர்களுக்கு வயதாகி இருக்கலாம். )

தெலுங்கு பதிப்பை பார்த்து என் விமர்சனம் இது.
தமிழ்ல பாத்தவங்க சொல்லுங்க.

31 comments:

MyFriend said...

ஆமாஅங்க.. தெலுங்குல அதுவும் அந்த க்ளைமேக்ஸ் கட்டதுல சித்தார்த் நடிப்பு அபாரம். :-)

கலக்கிட்டார்.. படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நல்ல தேர்வு. :-)

தமிழில் ஜெயம் ரவி கெடுத்துட்டார்..

MyFriend said...

அட.. ஆடவாரி மாடலுகுல திரிஷா கூட நடிக்க தெரியும்ன்னு நடிச்சு காட்டியிருப்பாங்க.. தமிழ்ல் நயந்தாராவுக்கு அந்த ரோல் நல்லா பொருந்தல.

pudugaithendral said...

ஆஹா,
சித்தார்த பத்தின்ன உடனே வந்துட்டாங்கப்பா கமெண்ட் சொல்ல
நம்ம மைஃப்ரண்ட்.

என்ன ஒரு விசிறி.!!!!!!

pudugaithendral said...

அப்படியா தமிழ்ல சொதப்பிட்டாரா???

கொடுமையே. எனக்கு பொம்மரில்லுவில் பிடிச்சதே கிளைமேக்ஸ்தான்.

MyFriend said...

//புதுகைத் தென்றல் said...

ஆஹா,
சித்தார்த பத்தின்ன உடனே வந்துட்டாங்கப்பா கமெண்ட் சொல்ல
நம்ம மைஃப்ரண்ட்.

என்ன ஒரு விசிறி.!!!!!!//

அதெல்லாம் கரேக்ட்டா ஆஜரா ஆகிடுவோம்ல. :-) உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நீங்களும் சித்தாஅர்த் ஃபேன்தான்..

நம்பலையா? தமிழ்மணத்துல பாருங்க.. ஹீஹீஹீ...

pudugaithendral said...

ஆ.மா.அ.வே வில் த்ரிஷா நடிப்பா??!!!

எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. பரவாயில்லை ரகம் தான்.

வெங்கி சூப்பரா செஞ்சிருப்பர்.

pudugaithendral said...

aamam paatheen,

magan kooda ketten ennamma siddarth photo irukkennu.

naanum kozambi ponen.

appuram irukattumda thambi. myfriend paatha santhosha pattukvaangannu sonnen. :))

tamilla thaan siddarthuku nalla padangal kidaikala.

telugvil nalla padangal.

sukulla sandiradu, aata niraya.

மங்களூர் சிவா said...

வந்துட்டேன்

மங்களூர் சிவா said...

நல்ல வேளை இரண்டு படமும் நான் இன்னும் பாக்கலை :))))

மங்களூர் சிவா said...

யாரடி நீ மோகினி தெலுங்குல ஹீரோயின் யாரு????

MyFriend said...

//aamam paatheen,

magan kooda ketten ennamma siddarth photo irukkennu.

naanum kozambi ponen.

appuram irukattumda thambi. myfriend paatha santhosha pattukvaangannu sonnen. :))//

ஆஹா.. என்ன நல்ல எண்ணம். அப்போ சித்தார்த்தே உங்க பதிவுக்கும் வரட்டும். அட் லீஸ்ட் நான் அடிக்கடி தமிழ்மணம் விசிட் பண்றதுக்கு ரீஸன் வேணாமா? இப்படி சித்தார்த் படங்கள் வந்தால், அது பார்க்கவாவது வருவேன்ல. ;-)

// tamilla thaan siddarthuku nalla padangal kidaikala.

telugvil nalla padangal.

sukulla sandiradu, aata niraya.//

ம்ம்.. NVNV-ல தெலுங்கு நடிகரா அறிமுகமாகி, சுக்கல்லோ சந்துருடுல கதாசிரியர் உருவம் எடுத்து, பொம்மரில்ல்லுல பாடகர் அந்தஸ்து பெற்று ஆத்தாவிலும் ஒரு பாடல் பாடி (இதுல அவரோட தெலுங்கு உச்சரிப்பு மெருகூடியிருக்குன்னு சொன்னாங்க. அசல் தெலுங்கு பையன் பேசுறாப்ல..), இப்போ தமிழ் படத்திலும் பாட ஆரம்ப்ச்சுட்டார்..

நடுவுல ஹிந்தியில ராங் டே பசந்தியில் கலக்கி "சௌதர்ன் அமீர்கான்" பட்டம் பெற்று இப்போ ஹிந்தியில் ஹீரோவா நடிக்க வாய்ப்பு அவரை நாடி தினமும் வந்துட்டு இருக்கு. :-)

இந்த செய்த் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? ;-)

MyFriend said...

//மங்களூர் சிவா said...

யாரடி நீ மோகினி தெலுங்குல ஹீரோயின் யாரு????//

நான் இல்ல.. மூனுஷா தான் ஹீரோயின். :-)

MyFriend said...

//மங்களூர் சிவா said...

நல்ல வேளை இரண்டு படமும் நான் இன்னும் பாக்கலை :))))//

வேஸ்ட்டூ.....

pudugaithendral said...

வாங்க சிவா,

ஐயோ இன்னும் பாக்கலியா?

ஒரு படம் பாருங்க. மத்தது பாக்காதீங்க. :)

pudugaithendral said...

சித்தார்த் பத்தின விசயங்கள் உங்க விரல் நுனியில் இருக்கும்னு தெரியுமே
மைஃபிரண்ட். :)))))))

pudugaithendral said...

மைஃபிரண்ட் நீங்க வேஸ்டுன்னு சொன்னது சிவாவையா? படங்களையா!!!!

:)))))))))))))))))

MyFriend said...

//புதுகைத் தென்றல் said...

மைஃபிரண்ட் நீங்க வேஸ்டுன்னு சொன்னது சிவாவையா? படங்களையா!!!!

:)))))))))))))))))//

எனக்கு எங்கேயோ "நாராயணா நாராயணா"ன்னு கேட்குதே? :-P

pudugaithendral said...

எனக்கு எங்கேயோ "நாராயணா நாராயணா"ன்னு கேட்குதே? :-P


அப்பாடி ஒரு வேலை முடிஞ்சிடுச்சு :)))))))))))))))))))

நிஜமா நல்லவன் said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆமாஅங்க.. தெலுங்குல அதுவும் அந்த க்ளைமேக்ஸ் கட்டதுல சித்தார்த் நடிப்பு அபாரம். :-)///


சித்தார்த் புகழ் பாட வாய்ப்பு கிடைச்சா விடமாட்டீங்களே!


///தமிழில் ஜெயம் ரவி கெடுத்துட்டார்..///


ரிப்பீட்டேய்...

சுரேகா.. said...

ஆஹா நீங்க எதை பாக்கவேணாம்னு சொல்றீங்களோ அதத்தாங்க ஓடிப்போய் பாத்தேன். காட்சிகளால் நிறைந்த படம்.! கதையை சீட்டுக்கு அடியில் எல்லாம் தேடினேன்.

pudugaithendral said...

வாங்க நிஜமா நல்லவன்,
வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

படம் நல்லா இருக்கு. தமிழில் எடுத்த விதம் தான் சரியில்லை.

இத்துப்போன ரீல் said...

//படம் நல்லா இருக்கு. தமிழில் எடுத்த விதம் தான் சரியில்லை.//
நான் தமிழிலேயும் பார்த்தேன்.தெலுங்குலேயும் பார்த்தேன்.இரண்டும் ஒரேமாதிரிதானே இருக்கு ஜெராக்ஸ் எடுத்த மாதிரி.டைட்டில்,செட்டிங்ஸ்,காஸ்ட்டியூம்ஸ் எல்லாமே!.

pudugaithendral said...

வாங்க இத்துப்போன ரீல்,

முதல் வருகைக்கு நன்றி. படம் ஜெராக்ஸ் மாதிரிதான் எடுத்திருப்பாங்க. மழை, சம்திங் சம்திங் எல்லாம் அவ்வகைதான்.

நடிகர்கள் தேர்வு, வசனம் ஆகியவைகலையும் பார்க்க வேண்டும். தெலுங்கில் பிரகாஷ்ராஜைப் பார்க்கும்போது நம் வீட்டு அப்பாபோன்றே இருக்கும்.

தமிழில் பிரகாஷ்ராஜுக்கு அந்த கோரமான ஹேர்ஸ்டைல் எதற்கு, மீசையை மழிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. :)))ஜெயசுதாவின் நடிப்பை பார்த்தபிறகு கீதா பொம்மை மாதிரி இருப்பதாக தோன்றியது.

என் கருத்தைச் சொன்னேனுங்கோ.

கானா பிரபா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ஆமாஅங்க.. தெலுங்குல அதுவும் அந்த க்ளைமேக்ஸ் கட்டதுல சித்தார்த் நடிப்பு அபாரம். :-)

கலக்கிட்டார்.. படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நல்ல தேர்வு. :-)//

Excuse me???

MyFriend said...

//படம் ஜெராக்ஸ் மாதிரிதான் எடுத்திருப்பாங்க. மழை, சம்திங் சம்திங் எல்லாம் அவ்வகைதான்////

ithukku poduren oru repeatuu..

//நடிகர்கள் தேர்வு, வசனம் ஆகியவைகலையும் பார்க்க வேண்டும். தெலுங்கில் பிரகாஷ்ராஜைப் பார்க்கும்போது நம் வீட்டு அப்பாபோன்றே இருக்கும்.//

rightuu....

//தமிழில் பிரகாஷ்ராஜுக்கு அந்த கோரமான ஹேர்ஸ்டைல் எதற்கு, மீசையை மழிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை. :)))ஜெயசுதாவின் நடிப்பை பார்த்தபிறகு கீதா பொம்மை மாதிரி இருப்பதாக தோன்றியது.//

Arai En 305-il Kadavulkkaage meesai vazichchirukkaar. at least ru oddu meesai vachchirukkalaam.. thapu panniddaangga.. Kausalya & ravi annan character total waste. ethukku intha sappa characterukkellaam ivanggalai therntheduththaaru Raja?

//என் கருத்தைச் சொன்னேனுங்கோ.//

naanumthaanungo.. :-)

pudugaithendral said...

வாங்க பிரபா,

எக்ஸ்க்யூஸ்டு....

pudugaithendral said...

வாங்க மைஃபிரண்ட்,

என்னுடைய பதிவுகளிலேயே தங்களது அதிக பட்சமாக பின்னூட்டம் இட்டது இதற்குத்தான் என் நினைக்கிறேன்.

நன்றி. :))))

MyFriend said...

//புதுகைத் தென்றல் said...

வாங்க மைஃபிரண்ட்,

என்னுடைய பதிவுகளிலேயே தங்களது அதிக பட்சமாக பின்னூட்டம் இட்டது இதற்குத்தான் என் நினைக்கிறேன்.

நன்றி. :))))//

சித்துவை பத்தி சரியா எழுதுனா கண்டிப்பா என் ஆதரவு இருக்கு. இதுல தமிழ்மண அவதார் கூட சித்து போட்டிருக்கீங்களே.. அதுக்காகவாவது இது பண்ணுவோம்ல. ;-)

நந்தா said...

ரொம்ப லேட்டா இந்தப் பக்கம் வர்றேன்.. நன்றி பு.தென்றல்...

pudugaithendral said...

வாங்க நந்தா,

தங்களது விமர்சனம் அருமை. அதைப் படிச்ச பிறகுதான் நான் பார்த்துவிட்ட இந்தப் இரண்டு படங்களைப் பத்தியும் பதிவா போடணும்னு (அதாவது உங்க பதிவுக்கு பின்னூட்டம்னு வெச்சுக்கங்களேன். :))) )தோணிச்சு.