Thursday, May 22, 2008

பயண அனுபவம்.

என்னோட விமானப் பயண அனுபவத்தை
படிச்சிருப்பீங்க. படிக்காட்டி இதையும் படிங்க..
இதுவும் தான்.
என் கதைதான் இப்படி இருக்குன்னு பாத்தா
இவரோட அனுபவத்தையும் படிக்க...
http://girirajnet.blogspot.com/2008/05/blog-post_21.html

இதைப் படிச்சதும் எனக்குத் தெரிந்தவர் ஒருவரின்
விமானப் பயணமும் நினைவுக்கு வந்தது. :)))

தலைவர் முதன் முதலா விமானத்துல ஏறுராருன்னு
அவங்க சொந்தக்காரங்க விளாவாரியா உப்பு, புளி
வெச்சு விளக்கி என்னென்ன நடைமுறைகள் எல்லாம்
எழுதி அனுப்பி வரவழைச்சாரு. இலங்கைக்குத்தான்
வந்தாரு.

இலங்கை விமான நிலையம் "கடுநாயகே" எனும்
இடத்தில் இருக்கு. கொழும்புவிலுருந்து 38 கிமீ தொலைவு.

சொல்லிக்கொடுத்தபடி நல்ல படியா விமானத்துல ஏறி
விமானமும் கடுநாயகேவை அடைந்தாச்சு. எல்லோரும்
இறங்கறாங்க. நம்மாளு மாத்திரம் சீட்டை விட்டு
எழுந்திருக்கலை. அவரைப்பாத்து இன்னும் 4 பசங்களும்
எந்திர்க்கலை.

ஏர்ஹோஸ்டஸ் வந்து," இலங்கைக்குத்தானே! இலங்கை
வந்தாச்சு இறங்குங்கன்னு சொல்ல", நம்மாளு இது
கடுநாயகேன்னு சொன்னீங்களே? நான் கொழும்பு போகணும்னு
சொல்ல.... எப்படி இருந்திருக்கும்னு சொல்லனுமா?

விமானம் தரையிறங்கி குறைஞ்சது 45 நிமிட்த்துல
வெளியே வந்திடலாம். ஆனா தலைவரைக் காணோம்.
கூப்பிட போனவங்களுக்கு டென்ஷன். என்னடா
ஆளைக் காணோமேன்னு!!!!!!

நம்மாளு நெத்தில குங்குமப்பொட்டு, கிருதா,
கையில செம்புகாப்பு எல்லாம் போட்டுகிட்டு
வந்து இறங்கிருக்காரு. விமானத்தை விட்டு
வேற இறங்காம உட்கார்ந்திருக்க, சந்தேகத்தைக்
கிளப்பிவிட்டுடுச்சு.

பொதுவா கடுநாயகேவில் இறங்கினதும் "ஆன் அரைவல்"
1 மாதத்துக்கு விசா கொடுப்பாங்க. இவரை பாத்ததும் 3
நாள் தான் தருவேன்னு சொல்லியிருக்காங்க.
அவங்க கிட்ட கெஞ்சிக் கூத்தாடி 1 மாசத்துக்கு
விசா வாங்கிகிட்டு தலைவர் வெளியில வர்றதுக்குள்ள
கூட்டுகிட்டு போக வந்தவங்களுக்கு உன் பாடு என் பாடுன்னு
ஆயிட்ச்சு.

இப்ப நினைச்சாலும் குபீர்னு சிரிப்பு பொத்துக்கும்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு அனுபவம்.

18 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//தலைவர் முதன் முதலா விமானத்துல ஏறுராருன்னு//

யாரிந்த தலைவருன்னு சொல்லலையே?

Sanjai Gandhi said...

ஜூ..ஜூ..ஜூப்பரு.. :))

நிஜமா நல்லவன் said...

அக்கா அவர் யாருன்னு சொல்லவே இல்லையே?

கிரி said...

எல்லாருடைய அனுபவத்தையும் எழுதினா ஒரு பெரிய புத்தகமே போடலாம் போல இருக்கே :-))))

pudugaithendral said...

தலைவர் அப்படிங்கறது சும்மா.

ஒரு பேச்சுக்கு. எனக்குத் தெரிந்தவர்.

pudugaithendral said...

வாங்க சஞ்சய்,

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

அவர் யாருன்னு சொல்லிட முடியாது
பாரதி :))))

pudugaithendral said...

வாங்க கிரி,

முதல் வருகைக்கு மிக்க நன்றி.

தலகாணி சைஸ் புத்தகமா போடலாம்.

cheena (சீனா) said...

ஹா ஹா

இப்படிப்பட்ட ஆட்கள் விமனத்தில் போகும் போது நல்ல பயிற்சி கொடுத்து அனுப்ப வேண்டும்

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

பயிற்சி கொடுத்தாலும் சில சமயம்
பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் வேணும்ல.

கட்டி கொடுத்த சாப்பாடு எத்தனை நாளைக்கு வரும்.

அனுபவம் தான் பாடம்.

இப்ப தல ஆஸ்திரேலியா கூட போற அளவுக்கு தயராகிட்டாராம்.

ரசிகன் said...

:)))))))

pudugaithendral said...

வாங்க ரசிகன்,

வருகைக்கு நன்றி.

ambi said...

உங்களின் அனுமதி எதிர்பார்த்து தங்களின் பதிவை வலைசரத்தில் கோர்த்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_27.html

pudugaithendral said...

ஆஹா அம்பி,

மிக்க நன்றி.

பரிசல்காரன் said...

நான் விமானப் பயணம் செய்ததை சொன்னால், ஊரே சிரிக்கும். முன்னாடி ஜன்னலுக்குப் பக்கத்தில உட்கார்ந்து போய்ட்டே இருக்கறப்ப.. சரி.. வேண்டாம். நம்ம வலையில இதப் பத்தி எழுதறேன்! நாளைக்கு படிச்சுப் பார்த்து பயன் பெறுங்கள்! (எப்படியெல்லாம் வலைய விரிக்க வேண்டிருக்கு!)

pudugaithendral said...

பதிவைப் போட்டுட்டு ஒரு லிங்க் கொடுங்க. ஓடி வந்து பாக்கிறேன்.

passerby said...

Such amusing confusions face train travellers too. For e.g a few trains like Chennai Rajadhani Exp terminates at a station called Hazrat Nizamuddin. Passengers, who are bound for New Delhi, and who are new to the city, go on sitting dreamily, thinking that New Delhi has not arrived. The fact is H.N stn is right at the heart of the city.

Likewise, Trivandrum Rajdhani terminates not at Trivandrum but at another station at the outskirts of the city named Ucchiveli.

In Bhopal, the Rajdhani and also, sataapthi Expresses terminate at Habibganj, which is at the entrance of the city.

The Rly authorities are cocksure that the passengers have known everything before boarding the trains!

The embarrassment of the passengers may be avoided if the flight crew make an announcement while the aeroplane is landing, that the airport is called kaattunaike airport, which is a few miles away from the main city!

I am not amused; but vexed with such unprofessionalism!

passerby said...

I find the photo of a young man, that accompanies your blog in Thamizmanam agreggator, also being used by another blogger. I opened that blog and found it is from Malaysia by someone else.

Have a look at it today.