அப்படியே துள்ளி குதிக்கும். அம்புட்டு சந்தோஷமா
இருக்கும்.
இப்போ வலைப்பூக்களில் எங்க ஊர்க்காரவுகளும்
சில பேரு எழுத ஆரம்பிச்சிருக்காங்க..
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
சீக்கிரமே மதுரைக்காரவுக மாதிரி ஒரு
கூட்டணி ஆரம்பிச்சிட வேண்டியது தான் :)
புதுகை என்று செல்லமாக அழைக்கப்படும் புதுக்கோட்டையைப் பத்தி
என் முந்தைய பதிவுகள் இவை.
இதுவும் தான்.
இந்தப் பதிவு எங்க ஊர்க்காரவுக வலைப்பூக்களுக்கு
ஒரு சுட்டி கொடுக்கலாமே என்பதற்காகத்தான்.
முதலில் நண்பர் சுரேகா.
இவருக்கு அறிமுகம் தேவையில்லை.
அஷ்டாவதானி மாதிரி.
இவரைப்பற்றி உங்களுகுத்தெரியாத ஒரு
விடயம் எங்கள் ஊருக்கு பெரிதும்
புகழ் சேர்த்த ஓவியர் ராஜாவின் (ஆர்டிஸ்ட் ராஜான்னு
சொல்லுவோம்) அவரது மாணவர் நம்ம சுரேகா..
அடுத்து அப்துல்லா.இப்பத்தான் வலைப்பூ ஆரம்பிச்சிருக்காரு.
போய் பாருங்க.
இவரின் உண்மையான பெயர் மொஹைதின்.
ஆனால் தர்மத்தின் தலைவன் ரஜினி
ஸ்டைலில் தமிழகத்தின் தலைவன்னு வெச்சிருக்காரு. எங்க ஊர்காரர்தான்.
இவர் நம்ம ஆயில்யனில் அண்ணன்.
புதுகைக்கு அடிக்கடி வந்து போனவுங்க
மாறிப்போன புதுகையை பத்தி
ஒரு பதிவு போட்டிருக்காரு
அதையும் பாருங்க.
இதுதான் எங்க ஊரு ஆர்ச். விக்டோரியா மகாராணியின் வெள்ளிவிழா
நினைவாகக் கட்டப்பட்டது.
(தகவல் மற்றும் புகைப்பட உதவி தமிழகத்தின் தலைவன். அவரது
பிளாக்கிலிருந்து சுட்டது)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCb7u6aRhyphenhyphenjvkLxiTSuxN3vedd4g5b7Zi_CMpTsY2NBSkXNMW4kwTHnySpkic8Ys1ZVMcH9ovlqNS1pUnDt5TXFWaR4aSHayoxdNMtOvUUkfQ3jvJnXoYv0pAhVmD0gN22sHuOaprMb9VL/s320/aarch.jpg)
இது மாட்சிமை தாங்கிய கலெக்டர் அலுவலகம் முகப்பு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCUpzr8-XUqH56Ywlel5kNCc7eDE_u-caFb6fwGvLxH53fl2wdMl-Y9jpQ8V0Xcg9oV4ipCtgxka0sbgvP-NtEAzl5nFRhnJtp4Rael4Grskn-S7tRde9pnIkSSuXg1q2diyatzAJuB8jQ/s320/45183992.jpg)
இந்தப்படமும் த.தலைவன் பிளாக்கிலிருந்து சுட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjguO5ohUJv4fZmWxZ9ZZWel9Fnx2PU8UGpnbrvO4JrWHkbi6iNe-W4ICxZKzjOZ-G7CVgmRgBXb8gOAYb6MVFVNFZ8aj7vdCjdiIq2RR1DQInU949dAr9f4pnj8ucvts6Ce1Qpa0uMHgc3/s320/OLD%252520BUS%252520STAND%252520ROUNDANA.jpg)
இதோ வலது பக்கம் இருக்கறது தான் எங்க
அப்பா வேலைப்பார்த்த பேங்க்.
இந்தச் சுட்டியை ஆயில்யன் கொடுத்த
அன்றைக்கு அப்பா அருகில் இருந்து
பார்த்துக்கொண்டிருந்தார்.
வங்கியின் புகைப்படத்தைப் பாத்து
சந்தோஷத்தில் கண்ணீரே வந்து விட்டது
அவருக்கு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyTozrlNjkqM5QU8kVoLc04se0IFtgCo19O7DQSBunQ6BA7NIwmFZu_xjK_qa8olBAXR_BdejyHSsASjXlF0Cy8bcJ_JJYlNv9c93macKBkpSd0BGiUmwrYBMSAgkMOk_tNFommmeBTQjK/s320/pc+c+bank.jpg)
ஊர்க்காரவுக எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
சரி. ஒரு 10 நாளைக்கு லீவு சொல்லிக்கறேன்.
விருந்தினர் வருகை.. அதனால தான் லீவு.
வர்ட்டா...........
42 comments:
நானும் கூட ஏப்ரல் மே மாத காலங்களில் புதுகை மண்ணில் வாழ்ந்தவானக்கும்!
ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ;)))
எனக்கும் கூட நிறைய ஞாபகங்கள் உண்டு புதுகை பற்றி !
நல்லா இருக்கு!
ஆஹா,
வாங்க ஆயில்யன்,
வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.
வீசும் போது நான் தென்றல் காற்று.
in sleeping time are you which Air?
காற்றுக்கென்ன வேலி?
use Glass Door so Air will stop!!
now the room is no air :'/'
நான் இரண்டாவது பின்னூட்டம் போடுறேன். :-)
//சீக்கிரமே மதுரைக்காரவுக மாதிரி ஒரு
கூட்டணி ஆரம்பிச்சிட வேண்டியது தான் :)
//
அப்படியே அரசியல்கட்சி ஒன்றையும் தொடங்கியிருங்க.
*முந்தைய பதிவுகள் நன்றாக இருந்தன.
hey, I'm too from Pudukkottai.
//ஊர்க்காரவுகளை எங்கயாவது கண்டா மனசு
அப்படியே துள்ளி குதிக்கும். அம்புட்டு சந்தோஷமா
இருக்கும்.
இப்போ வலைப்பூக்களில் எங்க ஊர்க்காரவுகளும்
சில பேரு எழுத ஆரம்பிச்சிருக்காங்க..
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
சீக்கிரமே மதுரைக்காரவுக மாதிரி ஒரு
கூட்டணி ஆரம்பிச்சிட வேண்டியது தான் :)//
100% agree with you.
Pudukulam Photo
Pudukulam
மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். சீக்கிரம் கூட்டணிய ஆரம்பிங்க.
வீசும் போது நான் தென்றல் காற்று.
in sleeping time are you which Air?
காற்றுக்கென்ன வேலி?
use Glass Door so Air will stop!!
now the room is no air :'/'//\
ஏன் இப்படி?
முதல் வருகையே சரியில்லையே.
எதற்குத்தான் கமெண்ட் போடுவது என்று இல்லையா? :(
வாங்க விக்னேஸ்வரன்,
வருகைக்கு நன்றி.
வாங்க நிர்ஷான்,
வருகைக்கு நன்றி.
அரசியல் கட்சி ஆரம்பிக்கறதைப் பத்தி அப்புறம் யோசிக்கலாம்.
மொதல்ல கூட்டணியை ஆரம்பிக்க பார்ப்போம். :)))
ஆஹா வாங்க தியாகராஜன்,
நம்ம ஊரா? எந்த ஏரியா?
விவரமா சொல்லுங்க.
புதுக்குளம் போட்டோவுக்கு நன்றி.
வாங்க நிஜமா நல்லவன்,
இது வரைக்கும் 4 பேர் இருந்தோம்
இப்ப புதுசா இன்னொருத்தர் கிடைச்சிருக்காரு.
கூட்டம் சேரட்டும் பார்ப்போம்.
:)))))))))))))
புதுக்கோட்டை ஃபுலோகர்ஸ் முன்னேற்ற கூட்டணி....
அக்கா பேரு நான் வச்சிட்டேன்,கொடியை(அதாங்க நம்ம புது கூட்டணியோட blog)நீங்க design செய்யுங்க
ஊர்காரவுக அத்தனை பேருக்கும் வாம் வெல்கம்!!!!!!!!!!!
புதுக்கோட்டை ஃபுலோகர்ஸ் முன்னேற்ற கூட்டணி....//
அப்துல்லா பிளாக் பேரே அரசியல் கட்சி பேரு மாதிரி இருக்கே :)
ஆதன்க்கோட்டைன்னு சொன்னதும் முந்திரி ஞாபகம் வர்ற மாத்ரி நம்ம ஊர் ஞாபகம் வர்ற மாதிரி ஒரு பேரு செலக்ட் செய்ங்க.
அக்கா அந்த பேரு ச்சும்மா நக்கலுக்கு சொன்னேன். நல்ல பேரா எல்லாரும் சேர்ந்தே வைப்போம்.
தங்கள் வருகைக்கு நன்றி.
நன்றி மீண்டும் வருக
மறுபடியும் சந்திப்போம்
அடிக்கடி வாருங்கள்
AIADMK DMK MMK PMK ..........................................................................................................P.B.M.K !!!!!!!!!!
புதுக்கோட்டை புலோகர்ஸ் முன்னேற்ற களம்
நல்ல தொகுப்பு!
ஒரு சில நாட்களாகவே பதிவுகளைப் படிக்க நேரமில்லை.
விடுபட்ட அனைத்தையும் இன்று படித்தேன்.
எல்லாமே நல்லாயிருந்தது.
புதிய தளங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
அடடே...
இது கூட நல்லா இருக்கே!
தலைவிக்கு வணக்கங்கள்!!!!
:)
அதுக்காக ஆஷிஷ் , அம்ருதாவுக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர் பதவி குடுத்து சங்கத்தை
நம்ம மாநிலக்கட்சி மாதிரி ஆக்கக்கூடாது ஆமா!! :)
கூட்டுப்பதிவோட பேரு.....!
1. புதுக்குளக்கரை..!
அல்லது (புதுக்குளம்)
2. புதுக்கோட்டையார்கள்
3. சின்னப்பா பூங்கா
4. புதுகைப்பதிவர்கள்
5. புதுகைப்பொய்கை
6. புகழ்க்கோட்டை
7. கீழராஜவீதி
8. தொண்டைமான் பூமி!
முடிஞ்சவரைக்கும் உடனே ஆரம்பிச்சுருவோம். அப்புறமா கூட்டம் சேந்துரும்.
நம்ம டி.ஆரெல்லாம் தன்னை மட்டும் நம்பி கட்சி நடத்தல? :)
அதுமாதிரி எதாவது பண்ணுவோம்.
:))
நானும் சும்மாத்தான் சொன்னேன்
அப்துல்லா.
வாங்க த.தலைவன்/ அப்துல்லா
சுரேகா சில பேருகளை கொடுத்திருக்கிறாரு பாருங்க.
இதுல எதுனாவது ஒண்ணை செல்க்ட் செஞ்சு சொல்லுங்க
ஆரம்பிச்சுடுவோம்.
வாங்க சிவா,
வருகைக்கு நன்றி.
தலைவிக்கு வணக்கங்கள்!!!!
:)
//
ஏன் இந்த மர்டர் வெறி சுரேகா!!!!!!!!!!
:)))))))))))))))
வாங்க புகழன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அதுக்காக ஆஷிஷ் , அம்ருதாவுக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர் பதவி குடுத்து சங்கத்தை
நம்ம மாநிலக்கட்சி மாதிரி ஆக்கக்கூடாது ஆமா!! :)//
ஆஹா!!!
ஆஷிஷ் தான் புதுகைக்காரன்.
அம்ருதா பக்கா சென்னை.
முடிஞ்சவரைக்கும் உடனே ஆரம்பிச்சுருவோம். அப்புறமா கூட்டம் சேந்துரும்.
ஆமாம் சுரேகா!
நம்ம 4 பேரு இருக்கோம்ல.
நீங்க, அப்துல்லா, த.தலைவன்
எல்லோரும் சேர்ந்து பேரு முடிவு பண்ணுங்க.
சீக்கிரம் ஆரம்பிச்சிடலாம்.
தலைவிக்கு வணக்கம்
A. கீழராஜவீதி ..!
B. புதுக்குளக்கரை..!
C. தொண்டைமான் பூமி..!
////ஆஹா வாங்க தியாகராஜன்,
நம்ம ஊரா? எந்த ஏரியா?
விவரமா சொல்லுங்க.////
EAST 3RD ST????????
C.A??????????
தலைவிக்கு வணக்கம்//
ஏன்? ஒரு குருப்பா கிளம்ப்யிருக்கீங்க போல இருக்கே!!!
நான் தலைவி எல்லாம் இல்லீங்கோ.
அது தலைவலி பிடிச்ச வேலை.
:))))))))))))))
EAST 3RD ST????????
C.A??????????//
கீழ 3 ஆ. ஹை எங்க ஏரியா?
அங்க எங்க செட்டியார் கடைப் பக்கமா? ஐயர் குளம் பக்கமா? இல்லை புதுக்குளம் ஏரியாவா?
சொல்லுங்க.
தலைவிக்கு வணக்கம்!
இது புடிக்கலயா? ஓ.கே மாத்திக்றேன்..
தங்க தலைவிக்கு வணக்கம்!
சுரேகா சொன்ன புதுகைபதிவாளர்கள் நல்லா இருக்கே!
//நம்ம டி.ஆரெல்லாம் தன்னை மட்டும் நம்பி கட்சி நடத்தல? :)
அதுமாதிரி எதாவது பண்ணுவோம்.
:))
//
ரிப்பீட்ட்டொய்ய்ய்ய்ய்ய்ய்ய்
தங்க தலைவிக்கு வணக்கம்.
//ஆஹா வாங்க தியாகராஜன்,
நம்ம ஊரா? எந்த ஏரியா?
விவரமா சொல்லுங்க.
EAST 3RD ST????????
C.A??????????//
Nope, from NGO colony. Near Raja's college ground.
இப்ப பெங்களுருல பொட்டி தட்டிக்கிட்டு இருக்கேன்.
// சுரேகா சொன்ன புதுகைபதிவாளர்கள் நல்லா இருக்கே!//
I too agree with the above.
வாங்க தியாகராஜன்,
தகவலுக்கும் பெயர் செலக்ட் செஞ்சதுக்கும் நன்றி.
:)
ஐயா,
நானும் நம்ம ஊர்தாங்கோ.....................
நம்மலுக்கும் blog இருக்குங்கோ......
http://ragasiyasnekithan.blogspot.com/
நேரமிருந்தா படிச்சிப்பாருங்க மக்களே.......
அன்புடன்
ரகசிய சிநேகிதன்(பாலாஜி)
ஆஹா நம்ம ஊர்க்காரரா?
வாங்க வாங்க.
கண்டிப்பா வந்து படிக்கிரோம்.
எந்த ஏரியா எல்லாம் விவரமா சொல்லுங்க.
I am from Thiruvappur. (Maariammman koilukku paakkaththapla)
Aanaa naama irukkurathellam Rajagoplapuram Housing Unit.
வாங்க ரகசிய சிநேகிதன்,
திருவப்பூரா!! ஓகே.
ஹவுசிங் யூனிட் பக்கம் இருக்கறது தகவலுக்கு நன்றி.
வாங்க வந்து நம்ம புதுகை ஜோதியில ஐயிக்க்கியம் ஆகிக்கோங்க.
Post a Comment