2003 வெளிவந்த நான் பார்க்காமல் விட்ட திரைப்படம் இது.
கடந்தமுறை இந்தியா வந்திருந்த போது டீவியில்
ஒளிபரப்பிய போது பார்த்த்தேன். என்னை மிகவும் கவர்ந்த படம்.
அமிதாப் பச்சன், ஹேமாமாலினி ஜோடியாக
நடித்து வெளிவந்த இத்திரைப்படம்
ஓய்வுகாலத்தில் தன் பிள்ளைகளுடன் இருக்க
விரும்பும் பெற்றோர் சந்திக்கும் பிரச்சனைகளை
பற்றியது.
பிள்ளைகளுடன் காலத்தைக்கழிக்க விரும்புகிறார்கள்
அமிதாப்பும், ஹேமமாலினியும். ஆனால் பிள்ளைகள்
அதை விரும்ப வில்லை.
இருவரையும் ஒரேவீட்டில் வைத்துக்கொள்வதை விட
6 மாதம் அப்பா ஒரு இடம், 6 மாதம் அம்மா
ஒரு இடம் என்று முடிவு செய்கிறார்கள்.
வயதான காலத்தில் தன் துணையை விட்டு
பிரிவதை தாங்க முடியாத பெற்றோராகவும்,
பிள்ளைகளால் மரியாதைக்குறைவாக
நடத்தப்படுவதையும் சித்தரிக்கும் காட்சிகளில்
அமிதாப், ஹேமாவின் நடிப்பு சொல்ல வார்தைகளே இல்லை.
தன் துணையைப் பிரிந்த சோகத்தையும், பிள்ளைகளிடம்
படும் அவஸ்தையையும் ஒரு புத்தமாக
(பாக்பன் - தோட்டக்காரன்) எழுதுகிறார் அமிதாப்.
அந்தப் புத்தகம் பணப்பரிசையும், அவார்டையும்
பெற்ற உடன் பணத்திற்காக திரும்ப வருகிறார்கள்
பிள்ளைகள்.
அலோக் (சல்மான் கான்) எனும் அனாதை சிறுவனுக்கு
அமிதாப் படிக்கவும், பொருளுதவியும் செய்திருக்கிறார்.
அலோக் அமிதாப்பின் தத்துப்பிள்ளையாகிறார்.
நல்ல நிலையில் இருக்கும் சல்மான் அமிதாப்பை
தெய்வாம பூஜிக்கிறார்.
பணத்திற்காக திரும்ப வரும் பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு
மனைவியுடன், அலோக் வீட்டிற்கு செல்கிறார் அமிதாப்.
இது பாக்பன் திரைப்படத்தில் ஒரு காட்சி (ஆரம்பம்)
முழு படத்தையும் யூ ட்யூபில் பார்க்க இந்த லிங்கில்.
(ஒவ்வொரு பார்டாக போட்டிருக்கிறார்கள்)
10 comments:
மீ த பர்ஸ்ட்டு?
vaanga nijama nallavan
vaanga
namma Visu padam onu irukey idhey style-la.. adhulayum almost idhey kadhai thaan. .
nann 2nd da akka
வாங்க யாத்ரிகன்,
விசு படத்தில் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக இருக்கமாட்டாங்க.
இதில் அந்த வயதான தம்பதிகளின் பிரிவு உருக்கத்தை உண்டாக்கும்.
கட்டாயம் பாருங்கள்.
ஆஹா புதுகைச் சாரல்,
நீங்க 3ஆவதா வந்திருக்கீங்க.
வருகைக்கு நன்றி.
இதே மாதிரி தமிழில் சிவாஜி,பத்மினி, பாண்டியராஜன் படம் ஒன்னு வந்திருக்கில்ல! (கிட்டத்தட்ட இந்த மாதிரி கதை)
தாய்க்கு ஒரு தாலாட்டு மாதிரி இல்லை!?
நல்லா சொல்லியிருக்கீங்க !
ஜமாய்ங்க!
நெகிழ்வூட்டும் கதை. இதையொத்த கன்செப்டை விசுவின் படமொன்றில் கண்டதாக நினைவு. சுட்டிகளுக்கு நன்றிகள்:)
ஆஹா ''புதுகைச் சாரல்''
அக்கா
இன்றைய மறுமொழியாளர்கள்
bold
1புதுகை.எம்.எம்.அப்துல்லா
2புதுகைத் தென்றல்
3புதுகைச் சாரல்
வாழ்த்துக்கள்...
வாங்க
அடித்து தூள் கிளப்ப என் வாழ்த்துக்கள் :-)
Post a Comment