Wednesday, July 02, 2008

புதுகையில் ஹிந்தி!!!!!

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்ததா என்பதே எனக்குத் தெரியாது.
பிச்சை சார் தான் ஆனந்தமாக ஹிந்தி வகுப்புக்கள் நடத்திக்கொண்டிருந்தாரே.

தக்‌ஷிண பாரத ஹிந்தி பிரசார் சபா புதுகைக்கு மிகவும்
கடமை பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக
திரு.பிச்சை சாஸ்திரிகள் அவர்களுக்கு. கெச்சலான உருவம்,
குடுமி, யார் கிண்டலடித்தாலும் அசராமல் பஞ்சகச்சம்
கட்டி வருவார். ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டிருந்தார்.

கீழ3ஆம் வீதியில் சுப்பராமய்யர் நடுநிலைப்பள்ளி 4 மணிக்கு
முடிந்ததும் ஆரம்பிக்கும் இவரது அரசாட்சி.
ஹிந்தி வகுப்புக்கள். மிக கண்டிப்பு. ஒரு ஸ்கூல் போலவே
வகுப்புக்கள் நடக்கும். கூட்டமும் அதிகம். பிராத்மிக்கிற்கே
3 கிளாஸ் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மைதிலி டீச்சர் கிளாஸ், மாமி டீச்சர் கிளாஸ் என்று பேர்.


பிச்சை சாரிடம் ஹிந்தி பயின்று பண்டிட் கோர்ஸ் முடித்தவர்களை
வைத்து வகுப்புக்கள் நடக்கும். பெரிய வகுப்புக்களை
பிச்சை சாரே எடுப்பார். ஆஹா சரளமாக அவர் பேசும்
ஹிந்தி!! சிம்பிளி சூப்பர்ப்.

காலை நேரங்களில் மார்க்கெட்டுக்கு போகும் போது
ஸ்கூலை கடந்து தான் பெருமாள் கோவில் மார்கெட்டிற்கு
போவேன்.அப்போது ”கவிதா” வகுப்பு எடுத்துக்கொண்டிருபார்.

கணீரென்ற குரலில் அவர் ஹிந்தி கவிதை வாசித்து அதை
கேட்க நன்றாக இருக்கும். ஹிந்தி வகுப்பு போகாவிட்டால்
ஏதோ தவறு செய்தது போல் எல்லோரும்” உன் பொண்ணை
ஹிந்தி கிளாஸ்ல சேர்க்கலியா” என்று கேட்பார்கள்.


பிள்ளைகள் கூட நான் ஹிந்தி கிளாஸ் போறேன் என்று
செம பில்டப் கொடுப்பார்கள். 6 மாதத்தில் ஒரு வகுப்பு
பாஸ் செய்துவிடலாம் என்பது கூடுதல் அட்ராக்‌ஷன். :)

இரவு 8 மணி வரை வகுப்புக்கள் நடக்கும். பிரசார் சபா
பரிட்சைக்கு முன்னால் டெஸ்ட் எல்லாம் பக்காவாக
நடக்கும். ஒரு ஸ்கூல் தோத்தது போங்க.வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்களின் எண்ணிக்கைச்
சொல்லும் எத்தனை பேர் ஹிந்தி கற்றுக்கொண்டார்கள்
என்று.


என் சித்தியும் அங்கே ஹிந்தி கற்றுக்கொண்டார்.
அவருக்கு குஜராத் மாநிலத்தில் இருக்கும் “வாபி”யில்
வேலைக்கிடைத்து விட, எனக்கு ஆப்பு வைத்தார்கள்.

அதாவது ஹிந்தி கிளாஸில் சேர்த்தார்கள். பிராத்மிக்,
மத்யமா பாஸ் செய்துவிட்டேன். ராஷ்டிர பாஷா
எக்ஸாம் புட்டுகிச்சு. :(

அவமான போச்சு. நான் இனி ஹிந்தி கிளாஸ்
போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.
வாபியில இருக்கற சித்தி விடுவாங்களா?

என்னை வளர்த்தது சித்திதான். வெள்ளிவிழா
திரைப்படம் போல் கடிதத்திலேயே என்னை
வளர்த்தவர் சித்தி. அவங்க சொல்லி தட்டிட
முடியுமா? அப்படி என்ன சொன்னாங்க?
நான் ஹிந்தி கத்துகிட்டேனா?

அடுத்த பதிவுல சொல்றேன்..............

14 comments:

நிஜமா நல்லவன் said...

முதலில் வந்தது நான் தான்!

நிஜமா நல்லவன் said...

கொஞ்சநாளா தொடரும் போடாம இருந்தீங்க. மறுபடியும் ஆரம்பிச்சாச்சா?

நிஜமா நல்லவன் said...

நான் நேத்து ஆயில்யன் பதிவு பார்த்துட்டு ஹிந்தி கத்துக்காம போயிட்டேன்னு வருத்தத்துல இருந்தா நீங்களும் உங்க பங்குக்கு பதிவு போட்டு என்ன ரொம்ப வருத்தப்பட வச்சிட்டீங்களே. எப்படியாவது கத்துக்கிட்டே ஆகணும்:)

புதுகைத் தென்றல் said...

முதலில் வந்த நி.நல்லவனுக்கு
வாழ்த்துக்கள். வருகைக்கும் நன்றி.

தொடரும் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சுன்னு நீங்களே சொல்லிட்டீங்களே! அதான் :)

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அவர் பதிவுல நீங்க சொல்லியிருந்த பின்னூட்டம் சத்தியமான உண்மை.

ஹிந்தி வேண்டாம்னு சொன்னவங்க வீட்டு பிள்ளைகளெல்லாம் ஹிந்தி பேசுறாங்க. ஆனா கஷ்டப்படுறது நம்மளை மாதிரி ஆட்கள் தான்.

கானா பிரபா said...

//கொஞ்சநாளா தொடரும் போடாம இருந்தீங்க. மறுபடியும் ஆரம்பிச்சாச்சா?//


repeatu ;)

தமிழ் பிரியன் said...

பு. தென்றல் ஆன்ட்டி, செம ஃபீலிங்... நானும் பிரவீன் வரை கஷ்டப்பட்டு படிச்சேன்... எனக்கும் ஒரு ஹிந்தி ஆசிரியை இருந்தாங்க ஆனந்தி அக்கான்னு.. உங்க பதிவை படிச்சதும் அவங்க ஞாபகம் வந்திடுச்சு... ஒரு ஆசிரியைக்கான அத்தனை தகுதிகளையும் பார்த்தது அவங்களிடம் மட்டும் தான்... அவங்களுக்கு நிறைய கடமைப் பட்டிருக்கேன்... :)

புதுகைத் தென்றல் said...

தமிழ் பிரியன் என்னை ஆண்ட்டின்னு சொல்லிக்கிடறதனால நீங்க உங்க வயசைக் குறைச்சு காட்டிக்கறீங்களாக்கும். :))))))))))

( இந்த வலையுலக ஆண்கள் ஏன்ப்பா இப்படி இருக்காங்க?!!!.)

:)))))))))))))))))))))))))))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அக்கா நான் நான் நேற்று தமிழ் பிரியனிடம் மெக்காவில் இருந்து போனில் பேசினேன்.அவர் குரல் எனக்கே அங்கிள் போல இருந்தது.
:))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா

//அக்கா நான் நான் நேற்று தமிழ் பிரியனிடம் மெக்காவில் இருந்து போனில் பேசினேன்.அவர் குரல் எனக்கே அங்கிள் போல இருந்தது.//


:))))))

வல்லிசிம்ஹன் said...

தென்றல், இப்போ ஹிந்தித் திரைப்படத்தில் வரும் டயாக் எல்லாம் புரியுமா உங்களுக்கு:)
எனக்கு அதுக்காகவே கத்துக்கணும்னு ஆசை. என் பள்ளிக்கூட இந்தியெல்லாம் அதற்குப் போதாது.:0)

தமிழ் பிரியன் said...

/// புதுகைத் தென்றல் said...
வாங்க அப்துல்லா

//அக்கா நான் நான் நேற்று தமிழ் பிரியனிடம் மெக்காவில் இருந்து போனில் பேசினேன்.அவர் குரல் எனக்கே அங்கிள் போல இருந்தது.
:)))))) ///
என்ன இதெல்லாம் ஆள் சின்ன பையன் என்பதால் ஆளாளுக்கு கலாய்க்கலாம்ன்னு நினைக்காதீங்க... :(

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிசிம்ஹன் அம்மா,

ஹிந்தி இப்ப சரளமா பேச, புரிஞ்சிக்க முடியும்.

ஒரு அருமையான மொழியை அனு அனுவாக ரசித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் மிகையாகாது.

புதுகைத் தென்றல் said...

என்ன இதெல்லாம் ஆள் சின்ன பையன் என்பதால் ஆளாளுக்கு கலாய்க்கலாம்ன்னு நினைக்காதீங்க... :(
ஹா ஹா

அப்ப நீங்க உங்களை ரொம்பச் சின்னப் பையனா நினைச்சு அடுத்தவங்களை வயசு வித்தியாசம் இல்லாமல் ஆண்டின்னு கூப்பிடுவதை நிப்பாட்டிடுஙளேன்.