வெத்தலை வெத்தலையோ சின்ன சின்ன கொழுந்து
வெத்தலையோஎன்று ஒரு பாடல்
சிறுவயதில் கேட்ட ஞாபகம்.
திருமண வீடுகளில் கும்பகோணம் வெற்றிலை,
ஏ.ஆர்.ஆர் சீவல்,(எங்க ஊரு நிஜாம் பாக்கும் தான்)
சுண்ணாம்பு வைத்திருக்கும் தாம்பளத்தை
பெரியவர்கள்வைத்துக்கொண்டு வெற்றிலை
மடித்து போடும் அழகேதனி.
சின்னப் பிள்ளைகளுக்கு வெற்றிலை
தரமாட்டார்கள்.கிள்ளிப்போடும் வெற்றிலைக்
காம்பை எடுத்துக்கொள்ளபிள்ளைகளிடம் போட்டி நடக்கும்.
வெற்றிலை ஏன் போட்டுக்கொள்கிறோம்?
வெற்றிலை மருத்துவ குணமுள்ளது.
வெற்றிலை கபத்தைகுறைக்கும்,
செரிமாணத்திற்கு உதவும்.
சளிக்கு வெற்றிலை சேர்த்த கஷாயம்
தொண்டைக்குஇதமாக இருக்கும்.
2 மிளகு, 1 சிட்டிகை சீரகம், 1 பல் பூண்டு,
1 சிட்டிகை ஓமம் இவைகளை வெறும்
வாணலியில்வறுத்து வெடிக்க ஆரம்பித்ததும்
1 டம்பளர்தண்ணீர் சேர்த்து அது கொதிக்க
ஆரம்பித்ததும்வெற்றிலையை போட்டு
1/4 டம்பளாராசுண்டியதும் சிறிது தேன்
கலந்து கொடுத்தால்கபம் குறையும்.
இந்தியாவைத் தவிர இலங்கை, பர்மா,
நேபாள் மற்றும் தெற்கு ஆசியாவில்சில பகுதிகளில் போட்டுக்கொள்வார்கள்.
பெண்களின் கூந்தலுக்கு மணம் இருக்கிறதா?என்று பாண்டிய மன்னன் போட்டி வைத்தார் அன்று. இன்று அம்மன்னன் இருந்தால் வெற்றிலைப் போட்டு சிவந்த இதழ்கள் சிறந்ததா?லிப்ஸ்டிக் போட்டு சிவக்க வைக்கப்பட்டஇதழ்கள் சிறந்ததா? என்று சாலமன் பாப்பையாஅவர்களை அழைத்து பட்டி மண்டபம் வைத்திருப்பார்.
உணவு செரிக்கவும், Mouth Freshnerஆகவும்வெற்றிலை போடப்பட்டது.
தெந்நாட்டில் வெற்றிலைப் பாக்கைப் போன்றேவடநாட்டில் பான். பான் வாலாக்கள் பான் தயாரிக்கும் அழகை பார்த்துக்கொண்டிருக்கலாம்.
பான் வெற்றிலையைப் போன்றே இருக்கும் பான்இலைகளில் தயாரிக்கப்படுகிறது.மகாய், கல்கத்தா, பனாரசி ஆகிய பான் இலைகளை உபயோகிக்கிறார்கள்.மற்ற வகைகளை விட கல்கத்தா பான்தான் அதிகம் விற்பனை ஆகும்.
சாதா, மீடா (திதிப்பு) வகைகளுடன்120 160 300 600 மற்றும் புகையிலைசேர்க்கப்பட்ட போலா தம்பாக்குபோன்றவை பான் களின் வகைகளாகும்.
பானில் சேர்க்கப்படும் பொருட்கள் இவை:
மீடா பானில் என்னென்ன சேர்ப்பார்கள்?
Gulkand
Kharik
Munakka
Khopra (Grated Coconut)
Badam Powder (Almond)
Kaju Powder (Cashew)
Pista Powder (Pistachio)
Cherry
Special Salli Supari
Gulab Powder (Rose )
இவைகளைச் சேர்த்தால் சுவையான
மீடா பான் ரெடி.
பான் பனாரஸ்வாலா - டான் ஹிந்தி படத்திலிருந்து
இந்தப் பாடல்.
No comments:
Post a Comment