Tuesday, August 26, 2008
பன்னீர் சோடா
பன்னீர் சோடா. இது எங்க ஊரில் ரொம்ப
நல்லா இருக்கும். காளீஸ்வரி கம்பெனிகாரர்கள்
போடுவாங்க. மற்ற சோடாக்களை போல்
காட்டமாக இருக்காது.
பன்னீர் சுவையுடன் ருசியாக நன்றாக இருக்கும்.
பாட்டிக்கு மிகவும் பிடித்தது பன்னீர் சோடா.
பாட்டிக்கு வயதாகிவிட்டதால் செரிமானம்
ஆகாது. ராவாக ஜெலுஸில் குடித்தும்
முடியாத நாட்களில் பன்னீர் சோடா வாங்கிவரச்சொல்வார்.
மெயின் ரோடை தாண்டினால் பாய்கடை.
மஞ்சள் பையில் போட்டு தம்பிதான் வாங்கி
வருவான். பாட்டி தான் மட்டும் குடிக்காமல்
எங்களுக்கும் சேர்த்துதான் பன்னீர் சோடா
வாங்கிவரச் சொல்வார்.
சிலசமயங்களில் நான் வாங்கி வந்தால்
பாட்டிலை தம்பி கொண்டுபோய் கொடுப்பான்.
அப்படி ஒரு முறை கொண்டு போகும்போது
மெயின் ரோட்டைக் கிராஸ் செய்வதற்கு முன்
சோடாவின் கேஸ் தலைவரை போய்
புரைக்கேறிவிட்டது. நல்ல வேளை
பஸ், காரில் மாட்டவில்லை.
இன்றும் ஊருக்கு போகும்போதெல்லாம்
பன்னீர் சோடா வாங்கி குடிக்காமல்
வருவதில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அக்கா! இங்க சென்னையிலயும் பன்னீர் சோடா கிடைக்குது.ஆனா நம்ம ஊரு ருசி மாதிரி இல்ல. உங்கள மாதிரிதான் நானும் ஊருக்குப் போனா பன்னீர் சோடா குடிக்காம வர்றதில்லை.
வாங்க அப்துல்லா,
நம் ஊரு ருசியே ருசி.
ம்ம் நானும் கூட திருட்டுதனமாக போய் தாத்தா கடையில் பன்னீர் கணக்கு வைச்சு குடிச்சதும் அது பிறகு வீட்டுக்கு தெரிஞ்சு பய இந்த வயசுலேயே கடன்காரனகிட்டானேனு போட்டு கும்மிய சம்பவத்தையும் நினைச்சுக்கிட்டேன் :)
கொசுவத்தி சுத்தி உங்களுக்கு கொசுவத்தியை கிளப்பி விட்டுடுச்சா ஆயில்யன். :)
ரீசண்ட்டா மயிலாடுதுறைலயோ இல்ல திருவாரூர்ல சுரேகா , நான், சஞ்சய் எல்லாரும் பன்னீர் சோடா குடிச்சோம் என்ன ப்ராண்டுன்னு தெரியலை மறந்துடுச்சு!!
// புதுகைத் தென்றல் said...
வாங்க அப்துல்லா,
நம் ஊரு ருசியே ருசி. //
உங்க ஊரவிட எங்க ஊரு பன்னீர் சோடாவுக்குத்தான் ருசி அதிகம்!!!
உங்க ஊரவிட எங்க ஊரு பன்னீர் சோடாவுக்குத்தான் ருசி அதிகம்!!!
அப்படியா! எந்த ஊருங்க உங்களது?
எங்க பக்கத்து ஊருதான் உங்க ஊரு..
கடலூர்...
முதலில் ஊறுகாய்,இப்ப சோடா, அடுத்தது ஆம்லெட்?
Post a Comment