Tuesday, August 26, 2008
WHO MOVED MY CHEESE?????????????????
முன்பு என் தோழி ஒருவர் படித்து பார் என்று
WHO MOVED MY CHEESE என்ற
புத்தகத்தை கொடுத்தார். படித்து முடித்தபின்
வாழ்க்கையின் தத்துவம் மிகத் தெளிவாகப் புரிந்தது.
வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இராது.
இருக்கவேண்டும் என்று நினைத்தால் சில
சமயம் அது நம் முன்னேற்றத்திற்கு ஒரு
தடையாக ஆகிவிடக்கூடும்.
நாடோடி கூட்டத்தில் ஒரு கூட்டம்
போல் குடிசையை தூக்கிக்கொண்டு
அலைபவர்களில் நானும் ஒருத்தி.
ஊர் மாறுகிறோம் என்றால் எனக்கு
ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
புது ஊரில் அட்ஜஸ்ட் செய்ய கஷ்டமாக
இருந்தாலும் அதில் கிடைக்கும் பயன்களை
நினைத்து பார்த்தால் நீங்களும் விரும்புவீர்கள்.
பல ஊர்களை பார்க்க, பலவித மனிதர்களுடன்
பழக, வேறு பாஷைகள் கற்க,
அந்த ஊரின் பாரம்பரியத்தை தெரிந்துக்கொள்ள,
ப்ரத்யேக சமையற்குறிப்புகளை கற்க...
இப்படி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.
இவைகளை நினைக்கும் போது குடிசையை
தூக்கிகொண்டு அலைவது கஷ்டமாக தெரியாது.
மாறுதலே இல்லாமல் இருந்துவிட்டால் வாழ்வில்
சுவை ஏது?
மாறுதல் ஏற்படும், மாற்றம் ஏற்படப்போவதை
புரிந்துகொள்ள வேண்டும், மாற்றம் ஏற்படுவதை
நாம் அவதானிக்க வேண்டும், மாற்றத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும், மாறவேண்டும்,
மாற்றத்தை அனுபவிக்க வேண்டும்,
மாறியபின் அதையே கடைசி என்று
நினைத்துக்கொண்டு இராமல் அடுத்த
மாறுதலுக்கு நம்மை தயார் செய்து கொள்ள
வேண்டும்.
இதுதான் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும்
விடயம். 2 எலி 2 மனிதர்களை கதாபாத்திரங்களாக
எடுத்துக்கொண்டு Spencer Johnson இந்தப்
புத்தகத்தை எழுதியுள்ளார். 1998 ஆம் ஆண்டு
வெளிவந்து 5 மில்லியன் பதிப்புகளைக் கண்ட
புத்தகம் இது. நமக்கு நல்ல ஊக்கத்தை
கொடுக்கும் புத்தகம் இது.
புத்தகம் வாசிக்க கிடைத்தால் வாசித்து
பாருங்கள்.
விக்கீபீடியாவில் இந்தப்புத்தகத்தை
பற்றிய தகவல்களுக்கு..
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இந்தப் புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மின்னஞ்சலில் சுற்றிக் கொண்டிருந்தது. கிடைத்தால் அனுப்புகிறேன். நல்லதொரு புத்தகம்
\\பல ஊர்களை பார்க்க, பலவித மனிதர்களுடன்
பழக, வேறு பாஷைகள் கற்க,
அந்த ஊரின் பாரம்பரியத்தை தெரிந்துக்கொள்ள,
ப்ரத்யேக சமையற்குறிப்புகளை கற்க...
இப்படி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.நீங்க கற்றுக்கொள்ளும் வேகத்தைப்பார்த்தால் கலைகள் காலியாகிவிடும் போலயே.. //
http://madippakkam.blogspot.com/2008/05/blog-post_22.html
இது பற்றி முன்பு லக்கி ஒரு பதிவு போட்டிருந்தார். தமிழில் மொழிபெயர்ப்பு வந்திருக்கிறதாம்.. பாருங்கள்.
மீ த ஃபர்ஸ்டு
வாங்க ஜீவ்ஸ்,
தமிழிலும் இருக்கிறதா?
கொடுங்கள் அனைவருக்கும் உதவியாய் இருக்கும்.
நீங்க கற்றுக்கொள்ளும் வேகத்தைப்பார்த்தால் கலைகள் காலியாகிவிடும் போலயே.. //
வாங்க கயல்விழி,
எப்பவும் கற்றது கைமண் அளவாச்சே.
மிஸ் பண்ணிட்டீங்க அப்துல்லா,
ஜீவ்ஸ்தான் ஃபர்ஸ்டு
மாறாதது மாற்றம் மட்டும் தானே அக்கா!!!!
படிக்க எடுத்தால், கீழே வைக்கத் தோன்றாத புத்தகம்! njoy reading!!
மாறாதது மாற்றம் மட்டும் தானே அக்கா!!!!
ஆமாம் அப்துல்லா, ஆனால் அதை உணரவேண்டும்.
படிக்க எடுத்தால், கீழே வைக்கத் தோன்றாத புத்தகம்//
ஆமாம் சந்தனமுல்லை. மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
நூல் அறிமுகத்திற்கு நன்றி அக்கா!
சாரம்சத்தினை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது இதே அல்லது இதைவிட உயர்ந்த நற்சிந்தனைகளினை நம் திருமுறைகளில் நீங்கள் நிச்சயம் - படித்தால் - கிரகித்துக்கொள்ளமுடியும்!
வாய்ப்புக்கள் இருக்கின்றன! முயற்சித்து பாருங்களேன்!
வாய்ப்புக்கள் இருக்கின்றன! முயற்சித்து பாருங்களேன்!//
அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போது கண்டிப்பாய் முயற்சிப்பேன்.
நீங்களும் படிச்சிட்டீங்களா எங்க அண்ணனிடமிருந்து சுட்டு படித்தேன் இந்த புத்தகத்தை!
ஜீவ்ஸ் தமிழ்ல இருந்தா எனக்கும் ஒரு காப்பி மெயிலுங்க!
Post a Comment