Thursday, August 28, 2008

எனது பெயர்.

தமிழ்ப்ரியனின் இந்தப் பதிவை படிச்சேன்.

அங்கே ராமலக்‌ஷ்மியின் பின்னூட்டத்தில் ஒரு பகுதி இது.

எங்கள் குடும்பங்களில் தாத்தா பாட்டி பெயர்கள்தான் பேரக் குழந்தைகளுக்கு வைப்பார்கள் முதலில் அப்பா வழியில் பின் அம்மா வழியில். இப்போது அந்தப் பழக்கமும் வழக்கொழிந்து வருகிறது பெயர்கள் மாடர்னாக இல்லையென! எனக்கு என் அப்பா வழி பாட்டியின் பெயர்:))!

இது எனக்குள் பெரிய கொசுவத்தியை சுத்தி விட்டது.

என் அப்பாவிற்கு தனது இரண்டுவயதில் காலமான
தந்தையின் பெயரை தன் மகனுக்கு வைக்க வேண்டும்
என்று ஆசை.


பெண்குழந்தை பிறந்ததில் ஏமாற்றம். அந்தப்
பெயர் வைக்க முடியாமல் போகுமே என்று.
ஆனாலும் விடவில்லை. என் பெயரில் முதல்
பெயராக தன் தந்தையின் பெயரிலிருந்து பாதியைச்
சேர்த்து வைத்துவிட்டார்.


அப்பாவைத் தவிர யாரும் அந்தப் பெயரில்
என்னை அழைத்ததில்லை. மீதி பாதி பெயரில்
தான் நான் அனைவருக்கும் பரிச்சயம்.

அப்பா அழைக்கும் அந்தப் பெயர் ஆண்பிள்ளைத்தனமாக
இருக்கும். அந்தப் பெயருக்கான பொருள்(கருப்பு நிறத்தை
குறிக்கும் சொல்)
என்னை அனைவரும் கிண்டல் செய்தனர்.

எனது தோழிகள் அனைவருக்கும் என்னை
முழுப்பெயருடன் சொன்னால்தான் தெரியும்.
இப்போது இருக்கும் பெயர் சொன்னால்
யாரது? என்று கேட்பார்கள். :)))


அப்படியே 21 வருடங்கள் ஓட்டினேன்.
திருமணத்திலும் பெரிய கலாட்டா ஆகிவிட்டது.

வாசலில் வைத்திருக்கும் பெயர்பலகையினால்
பெரிய கூத்தாக போய்விட்டது.

______ ______ weds Sriram.

இப்படி நினைத்து எழுதிய பெயர்பலகை
இப்படி பொருள் ஆகிவிட்டது.

-------- weds--------
Sriram :)

கணவரின் அண்ணன் மகன் பெயர் என் அப்பா
என்னை அழைக்கும் பெயர். :)

திருமணம் யாருக்கு யாருடன் என்று
குழம்பும் அளவுக்கு ஆகிவிட்டது. :))))))


இதற்கப்புறம் ரொம்ப யோசித்து
அரசாங்க ரீதியின் மட்டும் அந்தப் பெயர்,
பொதுவாக எனது பெயரின் மறுபாதிப் பெயருடன்
கணவரின் பெயரையும் இணைத்து
ஷார்ட்டாக்கிக்கொண்டேன்.


பாஸ்போர்ட் விண்ணப்பித்த போது திருமணத்திற்கு
பிறகு இருக்கும் பெயரில் வேண்டும் என்று
நினைத்து கெஜெட்டில் எனது பழைய பெயரை
நீக்கி எல்லோரும் அறிந்த பெயரை மாத்திரம்
வைத்துக்கொண்டேன்.

”நான் வைத்த பெயரை நீக்கிவிட்டாய்” என்று
இன்றளவும் அப்பாவுக்கு என் மேல் இந்த
விடயத்தில் கோபம் தான்.

அப்பா மட்டுமே அந்தப் பெயரில் அழைத்ததால்
அந்தப் பெயர் எனக்கு மிக மிக ஸ்பெஷல்.
அப்பாவைத் தவிர என்னை வேறு யாரும்
அந்தப் பெயரில் அழைக்கக்கூடாது என்பதில்
மிக உறுதியாக இருந்தேன்.

அந்தப் பெயரில் வேறுயாராவது அழைக்கப்பட்டாலும்
இன்றும் திரும்பிப் பார்ப்பேன். உடன் அப்பா
ஞாபகம் வந்து விடும். :((((

இதெல்லாம் மனதில் இருப்பதால் தான்
என் மகனுக்கு அவனது தாத்தா பெயரை
ஜாதக் பெயராக வைத்துவிட்டு
ஆஷிஷ் என்பதை ரெக்கார்டுகளில்
வைத்துவிட்டேன். இப்போது தாத்தாவின்
பெயரும் மாற்றப்படாது. நாங்கள் வைத்த
பெயரும் நிலைத்து நிற்கும்.

(ஆஷிஷ் - என்பதன் பொருள் ஆசிர்வாதம்,
விரும்புதல்)

ஆஷிஷ் கதை சரி. என் பெயரைச்
சொல்லிவிடுகிறேன்.

அப்பா வைத்த பெயர் கிருஷ்ணா.

இந்தப் பதிவை எழுத இன்னொரு காரணமும்
இருக்கிறது. பரிசல்காரன் என்ற பெயரில்
எழுதுபவரின் பெயரும் கிருஷ்ணா என்று
சமீபத்தில் அறிந்தேன். அந்தப் பெயரை
படிக்கும்போது அப்பா ஞாபகம் வந்து விடுகிறது.

18 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) அடுத்தடுத்து மலரும் நினைவுகள் போட்டுத்தள்ளறீங்க.. .. தினம் ஹோம் ஒர்க் குடுக்கறீங்க எனக்கு..

நிஜமா நல்லவன் said...

me the first?

மங்களூர் சிவா said...

ஹாஹா

அபி அம்மா பேரு கூட 'கிருஷ்ணா'தான் அவங்களுக்குள்ள என்ன கொசுவத்தி இருக்கோ!?

:))))

pudugaithendral said...

:) அடுத்தடுத்து மலரும் நினைவுகள் போட்டுத்தள்ளறீங்க.. //

விட மாட்டேங்கறாங்க :))))

pudugaithendral said...

தினம் ஹோம் ஒர்க் குடுக்கறீங்க எனக்கு..//

நேற்றைய ஹோம் வொர்க் எங்கே?

:)))))))))))))))

pudugaithendral said...

ஜஸ்ட் மிஸ்டு தம்பி,

கயலக்கா முந்திகிட்டாங்க.

pudugaithendral said...

அபி அம்மா பேரு கூட 'கிருஷ்ணா'தான் அவங்களுக்குள்ள என்ன கொசுவத்தி இருக்கோ!?

:))))


அடுத்த பதிவில் அந்தக் கொசுவத்திதான் வரும்னு நினைக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

பின்னூட்டமே ஏத்திடுச்சா கொசுவத்தி பலே பலே.

பதிவாகத்தான் போடணுமா என்ன? இங்கேயே தொடருகிறேன்.

//என் அப்பாவிற்கு தனது இரண்டுவயதில் காலமான
தந்தையின் பெயரை தன் மகனுக்கு வைக்க வேண்டும்
என்று ஆசை.//

இதே போல எனது மாமனாருக்கு தனது இரண்டு வயதில் காலமான தன் தாயாரின் பெயரை மூன்றாவது மகளாகப் பிறக்கும் என நினைத்து ஏமாந்து மகனானப் பிறந்த என் கணவருக்கு வைக்க ஆசைப் பட்டு வைத்தும் விட்டார். முதல் பாதி பாட்டியின் பெயர்.

இரண்டு வழிப் பாட்டி, தாத்தா பெயர்களுக்குப் பின் குலதெய்வங்கள் பெயர் ஸ்டார்ட் ஆகும். [ஹி ஹி இப்பல்லாம் அதுக்கு சான்ஸே இல்ல.இல்ல?] என் இரண்டாவது தங்கைக்கு அம்மாளின் பெயர். இரண்டு தங்கைகளும் திருமணத்துக்குப் பின் பெயரைச் சுருக்கிக் கொண்டார்கள். என்னை வீட்டில் எல்லோரும் அழைப்பது வேறு பெயர். ஆனால் எனக்கென்னவோ என் பாட்டி பெயர்தான் பிடித்திருக்கிறது. நீங்கள் செய்திருப்பது போலத்தான் பலரும் ரொம்ப சேஃப்பா பின்னால் மாற்றும் பிரச்சனை வேண்டாமென ஜாதகப் பெயரா பெற்றவர்களின் பெயரும், ரிஜிஸ்டரில் விரும்பிக் கூப்பிடும் பெயரையும் வைத்து விடுகிறார்கள். ஜாதகப் பெயர் மறுபடி கல்யாணப் பத்திரிகையில் மட்டும் வெளிவரும், அதுவும் உறவினருக்கு கொடுக்க அடிக்கும் பத்திரிகையில்:)))! நண்பர்களுக்கு அடிப்பதில் இருக்காது:)! என் மகனுக்கு அவனது ஜாதகப் பெயரைப் பள்ளியிலும் ரெஜிஸ்டர் பண்ணியதில் வருத்தம்தான். வீட்டில் கூப்பிடும் பெயர்தான் அவனுக்குப் பிடித்திருக்கிறது. சரி பார்க்கலாம். உங்களைப் போல 21 வயது ஆகையில் அவன் என்ன செய்யப் போகிறான் என:)))!?!

pudugaithendral said...

ஜாதகப் பெயர் மறுபடி கல்யாணப் பத்திரிகையில் மட்டும் வெளிவரும்,//

அபிவாதயேக்கு ஜாதகப் பெயர் தானே.
அதில் மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பேன். :)

pudugaithendral said...

அப்பா வைத்த பெயரால் பிரச்சனைகளை சந்தித்திராவிட்டால் மாற்றி இருக்க மாட்டேன்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் பிரச்சனை வேறு தென்றல். மாடர்னாக இருக்கணும் என்பதால் மாற்றிக் கொள்பவர்களைத்தான் கூறியிருக்கிறேன். 21 வயதுக்குப் பிறகுதான் மாற்ற இயலும் என்பதால்தான் அந்தக் கடைசி வரிகள்!

//அப்பா வைத்த பெயரால்//

நீங்க சொன்ன அதே அதே காரணம்தான் எனக்கும். நம் அப்பா அம்மா ஆசைப்பட்டு வைத்த பெயரை மாற்றிக் கொள்ள வேண்டாமென. இவை அவரவர் தனிப் பட்ட விருப்பங்கள் என்பதையும் மனதில் கொள்ளத்தான் வேண்டும்.

pudugaithendral said...

நீங்கள் சொல்வது சரிதான்.

எங்கப்பா தன் பெயரையே மாற்றிக்கொண்டது தனிக் கதை.
ஆனால் நான் அவர் பெயர் வைத்த
பெயரை மாற்றிக்கொண்டது மட்டும் கோபம். :)

அப்பப்போ சொல்லிக்காட்டுவார்.
சிரித்துக்கொண்டு சென்று விடுவேன்.

Thamiz Priyan said...

ஆகா... இப்படி கொசுவர்த்தி சுத்த விட்டுட்டேனா?.. பரவாயில்லை... எங்க அப்பாவுக்கும், அப்பாவின் தாத்தாவுக்கும் ஒரே பெயர் தான்....

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

me the first?///
அண்ணே! ஏதாவது சொல்லிட்டுப் போங்க... மீ த பர்ஸ்ட்டு மட்டும் சொன்னா என்ன அர்த்தம்?.. கிருஷ்ண*** அக்கா நிறைய எழுதி இருக்க்காங்கல்ல.....

புதுகை.அப்துல்லா said...

akkaa i know many women in the name of krishna.
:))

நானானி said...

இந்த கொசுவத்தி நல்ல மணமாயிருக்கே!!
நானும் இதிலே குதிக்கட்டுமா?
என் அத்தையின் இரண்டாவது மகன் தன் மூன்று ஆண்பிள்ளைகளுக்கும்
முறையே அப்பா தாத்தா, அம்மா தாத்தா,அப்பா ஆச்சி பெயர்களை அழகாக வைத்துவிட்டு, பின் பள்ளியில் சேர்க்கும் போது மார்டனாக பெயர்கள்
வைத்து ரெஜிஸ்டர் பண்ணிவிட்டு.....கடைசியில் என்னவாயிற்று...?பிள்ளைகளின் தாய் தன் சௌகர்யத்துக்கு வைத்த, 'பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டித்தம்பி' என்று அழைத்த பெயரே
குடும்பத்துக்குள் நிலைத்தது!!!

Thamira said...

என்ன சமாதானம் சொன்னாலும் அப்பா வைத்த பெயரை கெஸட்டில் நீங்கள் மாற்றியது எனக்கு பிடிக்கவில்லை. அதுவும் 'கிருஷ்ணா' என்ற அழகான பெயரை. பெயரின் பின்பாதியை சொல்லவில்லையே.?

pudugaithendral said...

பெயரின் பின்பாதியை சொல்லவில்லையே//

உங்களுக்குத் தெரியாதா?

கலா

நான் இப்பொழுது கலா ஸ்ரீராம்