மதுவா அது? என்று குழம்பிக்கொண்டிருந்தேன்.
கீதா! என்று ஓடிவந்து கட்டிக்கொண்டவள் என் மதுதான்.
நானும் மதுவும் கல்லூரித்
தோழிகள். திருமணம் என்னையும் என் தோழியையும்
பிரித்திருந்தது. கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து
இன்றுதான் அவளை சந்தித்தேன்.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த என் தோழி
நான் சந்தோஷமாக இல்லை, என்று சொல்ல
புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
6 வருடங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம்
நடந்தது. வரப்போகும் மனைவிக்காக அவள்
கணவன் ரேடியோ, டேப் ரிக்கார்டர்,
வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர் எல்லாம்
வாங்கி ரெடியாக வைத்திருந்தார்.
என்ன மது சொல்ற? உனக்காகத்தானே அவர்
எல்லாம் ரெடியா வெச்சிருந்தார். அப்புறம்
என்ன சந்தோஷமா இல்லைன்னு சொல்ற?
”என்னைப் பத்தி தெரிஞ்ச நீயுமா கீதா இப்படி
கேக்கற?! ”என்று கண்ணில் நீருடன் கேட்டாள்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த
பெண்தான். பணத்தை பெரிதாக
மதிப்பவளல்ல மது.
”பணம், நகை என்ன கீதா? அதுவா பெரிது?
அன்பு இல்லாமல் பணம் நகையை வைத்துக்
கொண்டு என்ன செய்வது? என்று சொல்வாள்.
அனைவரிடமும் அன்பாக இருப்பாள்.
தன்னலமற்ற அன்பு அவளது. அப்படிப்
பட்டவளுக்காக முன்பே எல்லாம் வாங்கி
வைத்திருக்கும் கணவன் அமைந்ததில்
நான் மிக மகிழ்ந்தேன்.
இன்று அவள் தான் சந்தோஷமாக இல்லை என்று
சொல்வது வருத்தமாக இருந்தது.
”ஏன் மது? என்ன பிரச்சனை”.
கீதா! ”என்னை சாப்பிட்டியான்னு ஒரு வார்த்தை?
இன்னை வரைக்கும் கேட்டதில்லை. வாஷிங்
மெஷினை வாங்கினவர் எனக்கு ஒரு முழம்
முல்லைப் பூ வாங்கிக் கொடுத்ததில்லை.
உண்டாகி இருந்த நேரத்தில் மசக்கையில்
அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தாலும்
என்ன செய்யுதுன்னு கேட்டதில்லை.
“முடியலையா! டிபன் வெளியில பார்த்துக்கறேன்”!
அப்படின்னூ சொல்லிட்டு போயிடுவார்.
அவர் வெளியில சாப்பிடலாம். நான்
என்ன செய்வேன்னு நினைச்சு
பார்த்ததில்லை, இப்படி எத்தனையோ!
சின்னச் சின்ன சந்தோஷங்களை கூட
தொலைத்துவிட்டேன்” என்று சொல்லி கதறினாள்.
மதுவின் திருமணத்திற்கு 1 வருடம் முன்பு
அவளது மாமியார் இறந்துவிட்டார்.
மாமனாரோ அதற்கும் 7 வருடங்கள் முன்பே
காலமாகிவிட்டார். திருமணமானது முதல்
தனிக்குடித்தனம்.
தனிக்குடித்தன வாழ்க்கை சந்தோஷமானது
என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது
அதிர்ச்சியாக இருந்தது.
”இத்தனை நாட்களாக அவர் வாங்கி
வைத்திருக்கும் சாமன்களுடன்
நானும் ஒரு சாமானகத்தான் இருந்திருக்கிறேன்”
என்று சொல்லி அழுபவளை தேற்ற வார்த்தை'
இல்லாமல் மொளனமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
******************************************************
யக்கோவ், கட்டுரையையே கொஞ்சம் உரைநடை சேர்த்து
எழுதினா கதைன்னு” வலையுலக தம்பி ஒருவர் சொல்லிக்கொடுக்க
(பேரு வேண்டாம் :))
இது என் கன்னி முயற்சி. கதையா வந்திருக்கான்னு
நீங்கதான் சொல்லணும்.
அதைவிட முக்கியம் எல்லா பெண்களுமே
நகையையும், ஆடம்பரமான வாழ்வை
மட்டுமே எதிர் பார்க்கிறார்களா? உன்னதமான
அன்பை எதிர் பார்க்கிறார்களா? சொல்லிட்டுப் போங்க.
வலது பக்க மூலையில் ஓட்டு போட மறந்துடாதீங்க.
25 comments:
பெண்ணின் மனம் உண்மையில் பெண்ணின் மனத்தை பிரதிபலிக்கின்றது.
அப்புறம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை. நகை, பணத்தை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை.... ஒவ்வொரு பெண்ணிலும் சதவிகித வித்தியாசத்தில் இரண்டு விடயங்களும் உள்ளன.
கன்னி முயற்சி இல்லை தென்றல்
கலக்கல் முயற்சி! இனி நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.
ஸோ வீட்டுல எதும் வேணாம் அம்பு ச்ச அன்பு மட்டும் இருந்தா போதும்கறீங்க குடித்தனம் நடத்த!
மைண்ட்ல வெச்சிக்கிறேன்!!
பெண்ணின் மனம் உண்மையில் பெண்ணின் மனத்தை பிரதிபலிக்கின்றது//
நன்றிங்க.
அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை. நகை, பணத்தை மட்டுமே எதிர்பார்க்கும் பெண்களும் இல்லை.... ஒவ்வொரு பெண்ணிலும் சதவிகித வித்தியாசத்தில் இரண்டு விடயங்களும் உள்ளன.//
இதை அப்படியே பக்கத்துல ஓட்டா போட்டிடுங்களேன் தமிழ் பிரியன்.
கலக்கல் முயற்சி//
நன்றி ராமலக்ஷ்மி
இனி நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.//
என்னையும் நம்பறீங்க பாருங்க. உங்க அன்பை என்னன்னு சொல்ல. ரொம்ப டச் பண்ணிட்டீங்க.
கதை எழுத பெம்மா இருக்கும் :(
உங்க ஓட்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே ராமலக்ஷ்மி.
ஸோ வீட்டுல எதும் வேணாம்//
வேணாம்னு சொல்லவில்லை சிவா.(அதுக்காக நீங்க வாங்கறதை நிப்பாட்டிடாதீங்க. :) )
எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அன்பு வேண்டும். ஆதரவான வார்த்தைகள் வேண்டும்.
சிவா,
குடித்தனம் நடத்த! சாமான்.
குடும்பம் நடத்த அன்பு
//உங்க ஓட்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே ராமலக்ஷ்மி.//
ஹி. சொல்லிட்டுப் போகச் சொல்லியிருக்கீங்க. நான் பொட்டியில வோட்டைத் தட்டிட்டுப் போயிட்டேன்.
இரண்டாவதுகேதான். அன்பு அனுசரணை.
ரைட்டு!
தேவையான சங்கதிகளை நோட் பண்ணிக்கிட்டேன்! :)
நான் பொட்டியில வோட்டைத் தட்டிட்டுப் போயிட்டேன்.
பொட்டியல் போட்டாலும் சரிதானே.
எல்லோரும் மறக்காம ஓட்டு போட்டிருங்கப்பா.
தேவையான சங்கதிகளை நோட் பண்ணிக்கிட்டேன்!
ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா.
:)
கதை அருமை, தொடருங்கள்!!
வாங்க இசக்கி முத்து,
வருகைக்கு நன்றி.
பெண் மனம் முயற்சி நல்லமுயற்சி.
இரண்டு பெண்களும் வேறு வேறாக சிந்தித்திருக்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான ஆசை இருக்கலாம் இல்லையா..? பலர் சொல்ல நானும் கேட்டிருக்கிறேன்..அந்த பையன் எல்லாம் வாங்கி வச்சிருகான் வரப்போறவ கொடுத்துவைத்தவ என்று.. எனக்கு எதிர்ப்பதமா தோன்றும்.. அட எல்லாம் அவன் இஷ்டத்துக்கு வாங்கிவச்சிருக்கானே.. சேர்ந்து ரெண்டுபேருமா உனக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு ஷாப்பிங்க் செய்தா எவ்வளவு நல்லாருக்குன்னு ? எப்படி ? :)
சேர்ந்து ரெண்டுபேருமா உனக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு ஷாப்பிங்க் செய்தா எவ்வளவு நல்லாருக்குன்னு ? எப்படி ? //
நல்லாத்தான் இருக்கும் ஆனால் இதில்
ஒன்று யோசிக்க வேண்டும். கையில் மொத்தமாக பணம் வைத்துக்கொண்டு வாங்க இயலாது.
கையில் பணம் கிடைக்கும்போது வாங்கி வைப்பார்கள். திருமணம் எப்போது என்று நம்மால் சொல்ல முடியாதே!
நல்ல முயற்சி..வாழ்த்துக்கள் அக்கா ;))
/
யக்கோவ், கட்டுரையையே கொஞ்சம் உரைநடை சேர்த்து
எழுதினா கதைன்னு” வலையுலக தம்பி ஒருவர் சொல்லிக்கொடுக்க/
அடப்பாவி இதை கொஞ்சம் முன்னாடியே சொல்லிருந்தா ஒரு பத்து நல்ல கதையாவது தேறி இருக்குமே -
கலக்கல் முயற்சி.
Vote pottutten....Aanaa inga solla maatten:)
<==
முத்துலெட்சுமி-கயல்விழி said...
எனக்கு எதிர்ப்பதமா தோன்றும்.. அட எல்லாம் அவன் இஷ்டத்துக்கு வாங்கிவச்சிருக்கானே..
==>
கவலையே படாதீங்க.ஆண்கள் கட்டாயமா தட்சணை கொடுத்துதான் கல்யாணம் பண்ணனும்னு சட்டம் வந்துரும்.
ஒருத்தர மேல ஒருத்தர் அன்பு காட்டும் போது
வீட்டில் பொருள்கள் தானாக சேரும்
அன்பு இல்லாம பொருள் சேர்ந்து பொரோயஜனம் இல்லை!!!
அன்பு மட்டுமே வாழ்க்கை
வாங்க சாரதா,
அன்புதானே நிலையானது. :))
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment