Tuesday, September 16, 2008

அகிலன் - சிறந்த எழுத்தாளர்.

அகிலன் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். பல புகழ்பெற்ற
சரித்திர நாவல்கள் எழுதியிருக்கிறார். கரூரில் பிறந்த இவர்
வாழ்ந்தது புதுகையில்.
என் அம்மா வேலை பார்த்த பள்ளியில்
இவரது மகள் திருமதி.அங்கயற்கண்ணி அவர்கள்
ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார்.

தனது கதைகளுடன் தனது புகைப்படங்களை அவர்
வெளியிட்டதே இல்லை. தன் படைப்புகளால் தன்னை
மக்கள் அடையாளம் காணவேண்டும் என்றே விரும்பினார்.


அகிலன் என்கின்ற பெயரை உபயோகித்து வேறொருவர்
மீடியாக்களிடமிருந்தும், பத்திரிகைகளிலும் பணம்
பெருகிறார் அதை தடுக்க வேண்டும் என்பதற்காக
கலைமகள் நிறுவனத்தினரின் வேண்டுகோளுக்காக
தனது புகைப்படத்தை வெளியிட சம்மதித்தார்.



சித்திரப் பாவை 1975 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதை
இவருக்கு பெற்றுத்தந்தது. டீவியில் நாடகமாக
ஒளிபரப்பட்டது.

இவரது ஆக்கங்கள் பல இந்திய மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளது.


இவரது வேங்கையின் மைந்தன் நாவலுக்கு சாகித்திய அகாடமி
விருது கிடைத்துள்ளது.

பாவைவிளக்கு சிவாஜி கணேசன் அவர்களால் திரைப்படமாக்கப்பட்டது.
அழ.வள்ளியப்பா போல் பிள்ளைகளூக்கும்
கதை எழுதியிருக்கிறார். தங்க நகரம், கண்ணான கண்ணன்,
நல்ல பையன்.

இவரது கயல்விழி எனும் கதைதான்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எனும் பெயரில்
எம்.ஜி.ஆர் அவர்களால் திரைப்படமாக்கப்பட்டது.

நாவல்களைத் தவிர சில சிறுகதைகளையும்
எழுதியிருக்கிறார்.

அகிலன் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்
மட்டுமல்ல, பத்திரிகையாளர், பயணகட்டுரை
எழுத்தாளர்,நாடக ஆசிரியர்,விமர்சகர்.இப்படி
பன்முகம் கொண்டவர்.

பல தமிழர்களின் விருப்பமான காதாசிரியராக
இருந்திருக்கிறார். அவரது எழுத்து நடைக்கும்,
கற்பனை வளத்திற்கும் பலர் ரசிகர்கள்.

ஒரு எழுத்தாளன் வாசகர் கேட்பதை மட்டும்
எழுதக்கூடாது.. வாசகர் அறிந்து கொள்ள
வேண்டியதையும் எழுத வேண்டும் என்பாராம்.

அகிலன் அவர்களின் பேச்சு

சித்திரப்பாவை புத்தகம் பற்றிய ஒரு ஆடியோ.

Boomp3.com

14 comments:

புதுகை.அப்துல்லா said...

கரூரில் பிறந்த இவர்
வாழ்ந்தது புதுகையில்.
//


இவரது தந்தையின் சொந்த ஊர் புதுகை அருகில் உள்ள பெருங்களூர். அவரது தாயாரின் ஊர் கரூர்.

இவருக்குப் பின் அந்த விருதைப் பெற்றது பிரபஞ்சன் மட்டுமே என நினைக்கிறேன்.

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

தகவலுக்கு நன்றி.

rapp said...

அருமையான எழுத்தாளர். ஆனால் நாவலை படித்துவிட்டு பாவைவிளக்கு படத்தைப் பார்த்தபொழுது, எனக்கு ஏமாற்றம்தான்.

கானா பிரபா said...

சிறுவனாக இருக்கும் போது அகிலனின் கதைகளை வாசிக்க அப்பா தூண்டுவார். பால்மரக்காட்டினிலே, வேங்கையின் மைந்தன் என்று பல படைப்புக்களை வாசித்திருக்கின்றேன். அருமையான படைப்பாளி

pudugaithendral said...

வாங்க ராப்,
நான் அந்தப் படம் பார்க்கவில்லை.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க பிரபா,

அப்படியா?

ராமலக்ஷ்மி said...

தலை சிறந்த எழுத்தாளர்.


//ஒரு எழுத்தாளன் வாசகர் கேட்பதை மட்டும்
எழுதக்கூடாது.. வாசகர் அறிந்து கொள்ள
வேண்டியதையும் எழுத வேண்டும் என்பாராம்.//

சிறந்த கருத்து.

நல்ல பதிவுக்கு நன்றி தென்றல்.

வெட்டிப்பயல் said...

வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர் ரெண்டும் படிச்சிருக்கேன்...

வே.மை - அருமையான புத்தகம். பொன்னியின் செல்வனுக்கு அடுத்து நான் ரசித்து படித்த புத்தகம் :)

சுரேகா.. said...

ஆஹா..
அகிலனைப்பற்றி எழுதி...
ஒரு சிறந்த பதிவர் என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீங்களே!

வாழ்த்துக்கள்!

ஒரு முழுமையான biograhpy படித்த உணர்வு
சில வினாடிகளில் கிடைத்தது.

pudugaithendral said...

வாங்க ராமலட்சுமி,

தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க வெட்டிப்பயல்,

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

நம்ம ஊரு எழுத்தாளர் பற்றி நாமதானே எழுதணும். மிகச் சிறிய வயதில் அம்மாவோடு அங்கயற்கண்ணி டீச்சர் வீட்டுக்கு போகும்போது அகிலன் அவர்களை அங்கே கண்டதுண்டு.
இனிமையாக பேசுவார்.

வளர்ந்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்று புரிந்து பிரமித்துப்போனேன்.

வல்லிசிம்ஹன் said...

அகிலனின் எல்லா நாவல்களிலும் ஒரு கருத்து இருக்கும்
கதையோடு நாம் போகும்போது, நம் மனதும் இசைந்து அவர் வழியில்
ஒன்றிவிடுவோம்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வல்லிம்மா