Tuesday, September 30, 2008

கோதாவரி தரிசனம்.

காலையில் எழுந்து கோதாவரியைப் பார்க்கப் போகலாம் என்று
அயித்தான் அழைத்துச் சென்றார். நாங்கள் இருந்த இடத்திலிருந்து
2 நிமிட நடையில் படியேறி சென்றால் கோதாவரி.






கோதாவரி படகுப் பயண பதிவுக்கு.

பத்ராசலம் கோவிலின் கோபுர தரிசனம்.




எதிரில் ஒரு கடையில் இருந்த பெண்,”இதை வாங்கிக்
கொண்டு கோதாவரியில் போடுங்கள்”, என்றார்.
இன்னமும் குளிக்கவில்லை. நதியில் குளிக்கும்
உத்தேசமும் இல்லை என்றேன்.

போட்டுவிட்டு நீர் எடுத்து தெளித்துக்கொள்ளுங்கள்
என்றார். சரி என்று வாங்கிப் போனேன்.




சீதாதேவி இந்த நதிக்கரையோரம் கொளரி பூஜை
செய்திருக்கிறார். அதனால் இந்த நதியில் பூஜை
செய்வது நலமென்று (சில காசு பிடுங்கும் கூட்டம்
அலைகிறது ஜாக்கிரதை) சொன்னார்கள். நான்
வருடம் தவறாமல் கொளரி பூஜை செய்கிறேன்.
இந்த விளக்கை விடுகிறேன் போது என்று சொல்லி
விட்டு, விளக்கை ஏற்றி, மனமார எல்லோருக்காகவும்
பிரார்த்தித்து மங்கலப் பொருட்களை நதியில்
நீர் எடுத்து அனைவரும் தலையில் தெளித்துக்
கொண்டோம்.


(நதி தீரத்திறக்கு சென்று குளிக்காமல் வரக்கூடாது.
தீர்த்தக் கரை பாவி ஆகிவிடுவோம் என்று
அம்மம்மா சொல்வார்கள். ஆனால் கோதாவரியில்
கால் வைக்கும் போதே களிமண் தான். சேறாக
இருக்கும். நதியின் நீரும் கலங்கலாக இருக்கும்.
அதான் ஒன்லி ப்ரோட்சனம் :) )

கோதாவரி நதியின் சிறப்பு என்ன?
அதை கொஞ்சம் பார்க்கலாமா?
இந்தியாவின் மேற்கு பகுதியிலிருந்து தெற்கு
நோக்கி பாயும் நதி கோதாவரி. மஹாராஷ்டிரா
மாநிலத்தில் இருக்கிறது நாசிக் (பணம் அச்சடிக்கப்படுவது
இங்கே தான்) நாசிக்கில் இருக்கும் த்ரையம்பக் எனும்
இடத்தில் உற்பத்தி ஆகிறது கோதாவரி.




மஹாராஷ்டிரத்தில் உற்பத்தி ஆகி, ஆந்திராவில்
பாய்ந்து ராஜமுந்திரியில் வங்காள விரிகுடாவில்
கலக்கிறது இந்த நதி.

இது மிக புனிதமான நதியாக கருதப் படுகிறது.பல
புண்ணிய தலங்கள் இதன் நதிக்கரையில் அமைந்துள்ளன.

ராஜமுந்திரியில் கோதாவரியின் மேல் அமைக்கப்பட்டிருக்கும்

பாலம் தான் மிகப் பெரியது.



கோவுரையும் ராஜமுந்திரியையும் இணைக்கும் இப்பாலம் தான்
ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய ரயில் * சாலை பாதை
பாலம். மேலே ரயில்பாதை, கீழே கார், பஸ் செல்ல சாலை.

இந்த பாலத்திலிருந்து கோதாவரியைப் பார்ப்பது எனக்கு மிகவும்
பிடிக்கும். :)




கோதாவரி தரிசனம் முடிந்தது.
அடுத்து??????

தொடரும்.....

8 comments:

புதுகை.அப்துல்லா said...

யக்கோவ்...மீ த ஃபர்ஸ்டு?

புதுகை.அப்துல்லா said...

கோதாவரி தரிசனம் முடிந்தது.
அடுத்து??????
//

அடுத்து?? சீக்கிரம் சொல்லுங்க...

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் விளக்கங்கள் அருமை. பாலத்தின் உயரம் என்னவோ? படத்தில் பார்க்கையிலேயே மேலிருந்து கீழ் பார்த்தாற் போல தலை சுத்தறா மாதிரி ஒரு ஃபீலிங். ஹி ஹி.

அமுதா said...

சுவாரசியமாகக் கூறி உள்ளீர்கள். நடுவில் பயன் தரும் தகவல்களும் சேர்ந்து நன்றாக உள்ளது. படங்கள் மூலம், எங்களுக்கும் கோதாவரி தரிசனம் காட்டியதற்கு நன்றி...

pudugaithendral said...

ஆஹா மங்களூர் சிவா, நிஜமா நல்லவனுக்கு அடுத்து மீ தெ ஃபர்ஸ்டு அப்படின்னு போட்டுக்க வந்திருக்கும் அப்துல்லாவுக்கு ஒரு ஓ.

pudugaithendral said...

அடுத்து?? சீக்கிரம் சொல்லுங்க...//
கதை கேக்க எம்புட்டு ஆசை. இதோ அடுத்த பதிவு போடப்போறேன்.

pudugaithendral said...

படங்களுடன் விளக்கங்கள் அருமை.//

நன்றி.
பாலத்தின் உயரம் என்னவோ?//

தெரியவில்லை. விசாரிச்சு சொல்றேன்.

pudugaithendral said...

வாங்க அமுதா,

பகிர்தலில் இருக்கும் சுகமே தனி அல்லவா. அதான் எனக்குத் தெரிந்த (நெட்டில் குடைந்து, புத்தகங்களைப் படித்து, அயித்தானை கேள்விக்களைகளால் துளைத்துன்னு சேகரிச்ச விசயங்கள் :) )
தகவல்களை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி.