Wednesday, October 29, 2008

புதிய கணக்கு

மார்வாடிகளுக்கு இன்று புத்தாண்டு. இன்றிலிருந்து
புதிய கணக்கு துவங்குவார்கள். நாமும் புதிய கணக்கு
துவங்கலாம் வாருங்கள்.




நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் போடுற பட்ஜெட்டில்
துண்டு, போர்வை எதுவேண்டுமானாலும் விழலாம்.
ஆனால் நாம் போடும் பட்ஜெட்டுகளில் டபுள் சைஸ்
போர்வை விழுகிறது. விலைவாசி கட்டுக்குள்
அடங்காது. அதனால் பட்ஜட் போடுவது
கட்டாய தேவை. பட்ஜெட் போடுவது எப்படின்னு
சுலபமா சொல்லப்போறேன்.

அன்றாட செலவுகளை எழுதுவதெல்லாம் ஆகாத
வேலை. கணக்கு எழுத மறந்து போகும்.
ஒரு மாசத்துக்கு எம்புட்டு செலவு ஆகும்னு
தோராயமா உங்களுக்குத் தெரியும்தானே. அது போதும்.
பட்ஜட் போடலாம் வாங்க.

ஒரு மாடல் பட்ஜெட்:

மளிகைச் சாமான் - 4000
பால் - 1400
காய்கறி - 750
பேப்பர், புத்தகம் - 200
ஸ்கூல் ஃபீஸ் - 1000
அயர்ன் - 500
ஹேர் கட்டிங் - 150
கரண்ட் - - 500
போன் பில் - 750
அபார்ட்மெண்ட்
மெயிண்டனென்ஸ் - 500
கேபிள் - 120
பள்ளி சம்பந்தபட்ட
செலவுகள் - 300
ரெக்கரிங் டெபாசிட் - 500

இந்த மாதிரி உங்கள் குடும்ப தேவை
செலவுகளுக்கு தகுந்த் மாதிரி ஒரு
பட்ஜெட் போடுங்கள்.

சம்பளம் வந்த உடன் ஒவ்வொரு மாதமும்
நம் பட்ஜட்டிற்கு தகுந்த அளவு பணம்
மட்டும் கையில் எடுத்துக்கொண்டு
மிச்சத்தை வங்கியிலேயே வைக்கலாம்(மிச்சமிருந்தால்
தானேன்னு! சண்டைக்கு வர்றாதீங்க.
100 ரூபாய் மிஞ்சினாலும் பெரிய தொகைங்க)

நான் பின்பற்றும் ஒரு முறையை இங்கே
சொல்ல விழைகிறேன்.

10 கவர் எடுத்து ஒவ்வொன்றிலும் பால்,
மளிகைச்சாமான், காய்கறி என்று எழுதி வைத்துக்கொள்வேன்.
அதில் அந்தந்த பட்ஜட் தொகையை வைத்துவிடுவேன்.
காய்கறி வாங்கிவிட்டு மிச்சமிருக்கும் தொகையை
அந்தக் கவருக்குள் திருப்பி வைத்துவிடவேண்டும்.
இது மாதிரி செய்வதனால் பட்ஜட்டிற்குள் சரியாக
செலவு செய்துகொள்ள முடியும்.

மொத்தமாக பணம் வைத்துக்கொண்டு எடுத்து
எடுத்து கொடுப்பதனால் அதிகம் செலவழித்து
விடுவோம். அததற்கு என்று ப்ரத்யேக
கவரினுள் பணம் வைப்பதனால் அந்தத் தொகை
அதற்கு மட்டுமே செலவழிப்பதுபோல் பார்த்துக்கொள்ளலாம்.

இது என் கண்டுபிடிப்பு இல்லை. அந்தக்காலத்து 3 கிளாஸ்
மட்டுமே படித்த என் பாட்டி இப்படித்தான் செய்வார்.
என்ன அவர் மாதாமாதம் பேப்பரில் சுருட்டி பெயர்
எழுதிவைத்ததை நான் கவரில் வைக்கிறேன். அம்புட்டுதான்.

FAILING TO PLANNING IS PLANNING TO FAILING என்பார்கள்முறையாகத் திட்டமிடுவோம்.
ஆனந்தமாக வாழ்வோம்.

3 comments:

வெண்பூ said...

//
10 கவர் எடுத்து ஒவ்வொன்றிலும் பால்,
மளிகைச்சாமான், காய்கறி என்று எழுதி வைத்துக்கொள்வேன்.
அதில் அந்தந்த பட்ஜட் தொகையை வைத்துவிடுவேன்.
காய்கறி வாங்கிவிட்டு மிச்சமிருக்கும் தொகையை
அந்தக் கவருக்குள் திருப்பி வைத்துவிடவேண்டும்.
இது மாதிரி செய்வதனால் பட்ஜட்டிற்குள் சரியாக
செலவு செய்துகொள்ள முடியும்.
//

அருமையான வழிமுறை.. நன்றி

//
பால் - 1400
//
உங்க வீட்ல இருக்குற நாலு பேருக்கு எதுக்கு தினமும் 2 லிட்டர் பால் வாங்குறீங்க? :)))

pudugaithendral said...

வாங்க வெண்பூ.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

உங்க வீட்டுல இருக்குற நாலு பேருக்கு எதுக்கு இரண்டு லிட்டர் பால்?//

நல்ல கேள்வி வெண்பூ.

பதிவில் நான் கொடுத்திருப்பது மாடல் பட்ஜட் தான். எங்க வீட்டு பட்ஜட் இல்லை.:(

அதுவும் போக வீட்டில் இருப்பது 5 பேர். பிள்ளைகளுக்கு தயிர் கட்டாயம் வேண்டும். ஹிந்தியில் கிண்டலாக சொல்வேன்.

“தஹி நஹி தோ சிந்தஹி நஹி” :) (தயிர் இல்லையேல் உயிர் இல்லை.)