Tuesday, October 14, 2008

அவள் (ஒரு தொடர்கதை)-நிறைவுப் பகுதி

முன் கதை சுருக்கத்திற்கு இங்கே.

"யெஸ் உள்ளே வாங்க மிஸ்டர் திவாகர்.”

”குட் மார்னிங் டாக்டர்!”
என்றான் திவாகர்.

”குட் மார்னிங்! ஆமாம் உள்ளே வராம ஏன்
வெளியேவே உட்கார்ந்துட்டீங்க? நந்தினி உங்க
மனைவித்தானே! அப்புறம் உள்ளே வர என்ன தயக்கம்?
போனைவிட மனைவியும் முக்கியம் மிஸ்டர். திவாகர்!”

என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்தான் திவாகர்.

கடந்த சில மாதங்களாகவே அலுவலகத்தில்
வேலைப்பளு அதிகம். நந்தினியிடமும் நிறைய
மாற்றம். அதிகம் சிடுசிடுக்கிறாள். அவளும்
வேலைக்கு போவதால் அதிகம் பேசிக்கொள்ளக்
கூட நேரமில்லாமல் போனது மனதில் ஒரு
வெறுமையை ஏற்படுத்தி இருந்தது.
டாக்டர் என்ன சொல்ல அழைத்தார்? என்று
புரியாமல்,”எதுக்கு வரச்சொன்னீங்க மேடம்!?”என்றான்.

”நந்தினிக்கு என்ன பிரச்சனைன்னு தெரியுமா?”

பிரச்சனை என்ன மேடம்? எல்லா பெண்களுக்கும்
இருக்கும் மாதாந்திர தொந்திரவு தான்! அதனால்
இருக்கும் வயிற்றுவலி. அவ்ளோதான்.”

கோபம் வந்தாலும் முகத்தில் ஒரு புன்னகையோடு
“ஓ! நந்தினி கிட்ட ஏதும் மாற்றங்கள் தெரியுதா?”
என்றார்.

”மாற்றம்னா!!?? ஆமாம் டாக்டர் கடந்த சில மாதங்களா
ரொம்ப கோபப்படரா? எடுத்துததுக்கெல்லாம் சண்டை,
கத்தல், பிள்ளைகள் கிட்ட கூட பொறுமை இலலாம
பேசுறா! வீட்டுல அவளால நிம்மதி இல்லாம போகுது”
என்றவனை பார்த்து,”நந்தினி இஸ் சஃபரிங் ஃப்ரம்
பி.எம்.எஸ்(P.M.S). டூ யூ நோ தட்? அதைச் சொல்லத்தான்
உங்களை உள்ளே அழைத்தேன்”, என்றார்.


”பி.எம்.எஸ்(P.M.S)அப்படின்னா என்ன மேடம்?” என்றவனுக்கு
பதில் சொல்லத்துவங்கினார் டாக்டர்,
”PRE MENSTURAL SYNDROME- என்பதை சுருக்கமா பி.எம்.எஸ்(P.M.S)
என்போம். எல்லா பெண்களுக்கும் வரும் என்பது இல்லை.
ஆனால் பல பெண்கள் தங்களுக்கு இது இருப்பது தெரியாமாலேயே
இருக்கிறார்கள். 25யைத் தாண்டிய பலபெண்கள் இந்த
அவஸ்தைகளுடன் தான் தனது பீரியட்ஸை எதிர் கொள்கிறார்கள்.

பீரியட்ஸ் வரக்கூடிய தேதியிலிருந்து 1 வாரம் அல்லது
10 நாள் முன்பிருந்தே அவஸ்தைகள் துவங்கும். சில
பெண்களுக்கு பீரியட்ஸ் முடிந்த பிறகு 1 வாரக் காலத்திற்கு
அவதிப்படுவார்கள்.

இது வியாதியல்ல. உடலில் ஒரு மாற்றம். பீரியட்ஸிற்கு
முன்னாடி அவங்க உடலில் ஏற்படும் மாற்றம் சிலருக்கு
அதிக அளவில் இருக்கும். (கிராஃப் மேலே ஏறி இறங்குவது
போல்) கிராஃப் மேலே ஏறும் போது சில பெண்களின்
உடல் அந்த மாற்றத்தை தாங்கும். அதிக வேலைப்பளு,
குறைந்த ரத்த அழுத்தம், மனச்சுமை, நிம்மதி இல்லாத
வாழ்க்கை கொண்ட பெண்களுக்கு கிராஃப் மேலே ஏறும்
போது ஏற்படும் மாற்றத்தை தாங்க முடியாமல் இருக்கும்.

அந்த நேரத்தில் அடிவயிற்றில் அதிகமான வலி,மார்பு கனத்து போதல்,
ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை(சிலருக்கு அதிகமான தூக்கம்)
ஜாயிண்ட்களில் அதீதமான வலி, மைக்ரேன் தலைவலி,
ஜலதோஷம்(அந்த நேரத்தில் மட்டும்), மூடு மாறுதல்,
அலர்ஜி, கண் எரிச்சல், பசியின்மை
இவை எல்லாமோ, ஏதோ ஒன்றோ
ஏற்படும்.

இதுதான் அறிகுறி. இந்த கஷ்டங்கள் படறதனாலத்தான்
நந்தினிகிட்ட நீங்க சொன்ன மாறுதல்கள். கோபம்,படபடப்பு எல்லாம்.
கோபத்தில உங்களை அடிச்சாலும் சொல்வதற்கு இல்லை!”
என்ற டாக்டரை ஆச்சரியமாக பார்த்தான் திவாகர்.

”இதுக்கு மருந்து என்ன டாக்டர்?” என்றவனைப் பார்த்து
சிரித்துக்கொண்டே, ”நீங்கதான் மருந்து!,” என்றார்.
புரியாமல் குழம்பினான். மிஸ்டர்.திவாகர், உங்க மனைவியிடம்
ஏற்படும் மாறுதல்களை புரிந்துக்கொண்டு அன்பாக நடந்து
கொண்டு, அணுசரனையாக பார்த்துக்கொள்வதுதான் மிகச்
சிறந்த மருந்து. உங்க வீட்டில் வேறு யாரும் இருந்தாலும்
அவங்களுக்கும் இதைப் பத்தி எடுத்துச் சொல்லி நந்தினிக்கு
சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கி கொடுதீங்கன்னாவே
ப்ராப்ளம் சால்வ்ட்.

சத்தான உணவு, ஆரோக்கியமான மனநிலை, அன்பான
கவனிப்பு இவை போதும் நந்தினிக்கு. வாக்கிங் போகச்சொல்லுங்க,
இசை கேட்க சொல்லுங்க, காபி, சர்க்கரை கொஞ்சம் அந்த
நேரத்தில் குறைவா எடுத்துக்கணும்.

இதைத்தவிர நான் கொடுக்கிற மல்டி விட்டமின் மாத்திரைகளை
தினமும் எடுத்துக்கச்சொல்லுங்க. நான் கொடுக்கற மாத்திரைகள்
முக்கியமில்லை. அதுக்குமுன்ன நான் சொன்ன உங்கள்
அன்பும் அரவணைப்பும் தான் மிக முக்கியம். டேக் கேர்,”
என்று சொல்லி மருந்து எழுதிக்கொடுத்தார் டாக்டர்.


பிரிஸ்கிரிஷனை வாங்கிக்கொண்டு கன்சல்டேஷன்
ஃபீஸ் கட்டிவிட்டு திரும்பினால் நந்தினி வந்து
கொண்டிருந்தாள். இப்போது அவளைப் பார்க்கும்போது
கண்ணில் அன்பு தெரிந்தது. கைத்தாங்கலாக
வீட்டிற்கு அழைத்து சென்று,”ஹார்லிக்ஸ் குடிக்கிறியாம்மா?”
என்றவன் தலையாட்டிய நந்தினிக்கு சூடாக ஹார்லிக்ஸ்
கலந்துகொடுத்துவிட்டு அறையில் இருந்த டேப்ரிக்கார்டரில்
மெல்லிசையை தவழவிட்டான்.

புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே! இனி நந்தினியின்
வாழ்வு அன்பு நிறைந்ததாக இருக்கும்.

28 comments:

நிஜமா நல்லவன் said...

/புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே!/

அதே...:)

அமுதா said...

/*புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே*/
ரொம்ப உண்மை...கதை சூப்பர்...

pudugaithendral said...

அதே...:)


பராவாயில்லை. ஸ்மைலியுடன் இரண்டு எழுத்து சேர்த்து அடிக்கும் அளவுக்கு நல்ல முன்னேற்றம் தம்பி.

:)

pudugaithendral said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்.

pudugaithendral said...

கதை சூப்பர்...//

பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி அமுதா.

பரிசல்காரன் said...

கதையல்ல நிஜம்.

எனக்கு உறைத்தது!

நன்றிக்கா!

pudugaithendral said...

வாங்க பரிசல் தம்பி,

எனக்கு உறைத்தது!//

இந்த வார்த்தையைப் படித்தபோது நிஜமாக என் கண்களில் கண்ணீர். அது ஆனந்தக் கண்ணீர்.

pudugaithendral said...

எந்த நோக்கத்திற்காக இந்தக் கதையை எழுதினேனோ அந்த நோக்கம் வெற்றி அடைந்துள்ளது.
மிகச் சரியாக புரிந்துகொண்டுள்ளீர்கள்.

நன்றி பரிசல் தம்பி.

ராமலக்ஷ்மி said...

அன்பும் அனுசரணையும் ஒரு பெண்ணுக்கு எத்துணை அத்யாவசியமானது என்பதை கவிதையாக சொல்கிறது கதை. வாழ்த்துக்கள்!

வெண்பூ said...

பெரும்பாலான ஆண்களுக்கு இதுவரை தெரியாத, புரியாத (புரிந்துகொள்ள முயற்சியும் செய்யாத) விசயத்தை பதிவாக போடுவதற்கு பதில் கதையாக எழுதி புரிய வைத்துவிட்டீர்கள். நன்றி.

pudugaithendral said...

வாங்க ராமலக்ஷ்மி,

அன்பும் அனுசரணையும் ஒரு பெண்ணுக்கு எத்துணை அத்யாவசியமானது //


ஆமாம் அதுவும் பி.எம்.எஸ் தருணங்களிலும், மெனோபாஸ் காலங்களிலும் மிக மிக அவசியம்.
இதை அனைவருக்கும் சொல்ல முடிந்தது சந்தோஷம்

pudugaithendral said...

வாங்க வெண்பூ,

நீங்கள் சொல்லியிருப்பது சரி.

பலரும் புரிந்துகொள்ள முயற்சியும் செய்யாத ஒரு நிலைதான்.

தாங்களும் புரிந்து கொண்டது மிக்க சந்தோஷம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிறைவுப்பகுதி மிக நிறைவாக இருந்தது.. புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே அழகான வாசகம். .. வாழ்த்துக்கள்..

pudugaithendral said...

நிறைவுப்பகுதி மிக நிறைவாக இருந்தது.. //

Nandri

pudugaithendral said...

புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே அழகான வாசகம். .. வாழ்த்துக்கள்..//

வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி முத்துலட்சுமி

pudugaithendral said...

துர்கா said...
:)

Nandri

புதுகை.அப்துல்லா said...

கதையல்ல...எங்க முகத்தில் அறையும் உண்மை.

ஓர் சிக்கலான விஷயத்தை தெளிவாகச் சொன்ன அக்காவுக்கு வாழ்த்துகள்.(வாத்தியார் பரம்பரையில வந்த ஆளுங்கிறது சரியாத்தான் இருக்கு)

pudugaithendral said...

ஓர் சிக்கலான விஷயத்தை தெளிவாகச் சொன்ன அக்காவுக்கு வாழ்த்துகள்.//

நன்றி அப்துல்லா

pudugaithendral said...

.(வாத்தியார் பரம்பரை)இதை நான் மறந்தாலும் நீங்க மறக்கமாட்டேங்கறீங்களே அப்துல்லா.

:)))))))))))))))))))

சந்தனமுல்லை said...

நிறைய பேருக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லை! :( மெரும்பாலான வாக்குவாதங்கள் சண்டைகள் வந்தத்தற்கான காரணி இதுவாக கூட இருக்கும் சமயங்களில்...எல்லாம் ஹார்மோன்கள்..மூட் ஸ்விங்க்ஸ்!!
நல்ல கதை!!

புகழன் said...

/புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே!/
சரியாகச் சொன்னீர்கள்.

இந்த அன்பு காட்டல் எல்லாம் அந்த நேரத்தில் மட்டுமின்றி எல்லா நேரமும் தேவை.

தொடர்கதை ரெம்ப சின்னதா இருக்கு.

pudugaithendral said...

மெரும்பாலான வாக்குவாதங்கள் சண்டைகள் வந்தத்தற்கான காரணி இதுவாக கூட இருக்கும் சமயங்களில்...எல்லாம் ஹார்மோன்கள்..மூட் ஸ்விங்க்ஸ்!! //

ஆமாம் சரியா சொன்னீங்க சந்தனமுல்லை.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இந்த அன்பு காட்டல் எல்லாம் அந்த நேரத்தில் மட்டுமின்றி எல்லா நேரமும் தேவை.//

அதைவிட ஆனந்தம் அந்தப் பெண்ணுக்கு வேறு என்ன இருக்கக்கூடும்.

pudugaithendral said...

தொடர்கதை ரெம்ப சின்னதா இருக்கு.


கருத்து கந்தசாமியா கதை சொன்னதால சின்ன கதை ஆயிடுச்சு.

மூர்த்தி சிருசுன்னாலும் கதையின் மெசெஜ் பெருசுதானே

மங்களூர் சிவா said...

/புரிதல் ஏற்பட்டாலே அன்பு தானே!/

அதே...:)

மங்களூர் சிவா said...

SMS
MMS

மட்டுமே திரியாதீங்கய்யா PMS னா என்னன்னு தெரிஞ்சிக்குங்க!!

- - -

கதையில் நல்ல தகவல்.

pudugaithendral said...

லேட்டாக வந்ததுக்காக சிவாவை பெஞ்சுமேலதான் ஏத்தணும்

:)

pudugaithendral said...

தம்பிங்கறதனால மன்னிச்சு விட்டுப்புடறேன்.

வருகைக்கு நன்றி