Thursday, November 20, 2008

இதுவும் பராமரிக்கப்பட வேண்டிய இடம் தான் - 2

முந்தைய பதிவிற்கு இங்கே.

முறையாக பராமரிக்க டிப்ஸ் இதோ:

1. தினமும் குளித்து முடித்தபின் பாத்ரூமை சுத்தமாக கழுவிவிட்டு
ஈரம் போக துடைத்தல் அவசியம்.
ஈரப்பதம் துர்வாசனை உண்டாக ஏதுவாக இருக்கும்.
(ஒவ்வொருவரும் தான் குளித்த பின்னர் பாத்ரூம் கீளின்
செய்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று சட்டமே
போட்டுவிடுங்கள்)

2. காலடி தடங்கள், குளித்த சோப்பின்
நுரை, தலைமுடி, காலியான ஷாம்பு சாஷேக்கள்,
இவை அழகான பாத்ரூமின் எதிரிகள். இவைகளை
அன்றாடம் சுத்தம் செய்தாலே இடம் அழகாகிவிடும்.

(ஒரு சின்ன குப்பைத் தொட்டி வாங்கி அதில்
பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டுவைத்து
உபயோகித்தவைகளையும், குப்பைகளையும்
அதில் போட பழக்கப்படுத்தலாம். வாரம்
ஒருமுறை கவரை எடுத்துபோட்டுவிட்டு
வேறு கவர் போடலாம்.)

3. ஒவ்வொரு முறை கழிவறையை உபயோகப்படுத்திய
பிறகும் பாத்ரூமை ஈரம் போக துடைப்பது அவசியம்.
உலர்ந்த அறையை பராமாரிப்பது எளிது.

4. வாரம் ஒருமுறை கண்டிப்பாக டாய்லட் பவுல்,
பாத்ரூம் டைல்ஸ் கழுவுவது அவசியம். பவுலின்
உள்ளே மட்டும் தேய்த்து கழுவினால் போதாது,
வெளியேயும் சுத்தமாக தேய்த்து கழுவுதல் அவசியம்.






வாஷ்பேசினுக்கு அருகில் சின்ன அலங்காரம் செய்தால்
இடமே ரம்மியமாகும். வாரம் ஒரு முறை வாஷ்பேசினையும்,
கண்ணாடியையும் கழுவுதல் அவசியம்.

வாஷ் பேசின் அருகே ஒரு உலர்ந்த துண்டு எப்போதும்
இருக்கட்டும்.(கை, முகம் கழுவிய பின்னர் துடைத்துக்கொள்ள
ஏதுவாக இருக்கும். இதனால் வீடு முழுதும் தண்ணீர்
சிந்தாமலும் இருக்கும்.)



பாத்ரூமில் மணம் தரும் மெழுகுவர்த்தி,
பாட்ப்யூரி ஒரு சின்ன கப்பில் போட்டுவைத்தால்
நல்ல மணத்துடன் அறை இருக்கும்.
ஸ்பா எஃபக்ட்டில் ஆனந்தமாக குளிக்கலாம்.

சின்ன பொம்மை, மணி ப்ளாண்ட்,
இல்லாவிட்டால் ஃபளவர் வாஷ் ஒன்றில்
செயற்கை மலர்கள் வைத்தும் அழகு
படுத்தலாம்.


இடப் பற்றாக்குறை காரணமாக அட்டாச்ட் பாத்ரூம்
கட்டுகிறோம். ஆக கழிப்பறை என்பதை விட
குளியலறை என்று சொல்லும் விதத்தில்
இருக்க வேண்டும்.

குளிக்கும் பகுதியில் ஒரு தடுப்பு போல்(கீழே
படத்தில் இருக்கிறது) டைல்ஸில் செய்துகொண்டு
ஷ்வர் கர்ட்டன் போட்டால் பாத்ரூம்
ஈரமாகாமல் அழகாக இருக்கும்.

வாரம் ஒரு முறை ஷவர் கர்ட்டன்களை
எடுத்து துவைத்தல் அவசியம். ஈரத்தினால்
ஏற்படும் பூஞ்சை, காளான் நம் உடம்பிலும்
தொற்ற வாய்ப்புக்கள் உண்டு.

பிள்ளைகளுக்கு என்று தனி அறையும்
பாத்ரூமும் இருந்தால் அதை பிள்ளைகளூக்கு
பிடித்த விதத்தில் மிக்கி, டொனால்ட், டாம்
படங்களுடன் அலங்கரிக்கலாம்.
ஷவர் கர்ட்டன்கள் கூட இந்த பொம்மைகளுடன்
கிடைக்கின்றன்.





சிலருக்கு பாத்ரூமில் படிக்கும் பழக்கம் இருக்கும்.
அதனால் புத்தகங்களும், பேப்பரும் அங்கங்கே
கிடக்கும். கதவில் லெட்டர் ஹோல்டர் போன்ற
ஒரு பேக் மாட்டிவிட்டால், அதில் அழகாக
புத்தகம், பேப்பரை வைத்துக்கொள்ளலாம்.

பாத்ரூம் சுவர்களில் மனதிற்கு இதம் தரும்
இயற்கை காட்சிகள், பூக்கள் போன்ற
படங்கள் அல்லது போஸ்டர்கள் ஒட்டலாம்.

பாத்ரூம்களில் ஷாம்பு, சோப்கள்,
வைக்க இடம் வைத்து கட்டியிருக்காவிட்டால்
பிளாஸ்டிக் செல்ஃபுகள் வாங்கிவந்து
அதில் அழகாக அடுக்கி வைத்தால்
எடுக்கவும் பராமரிக்கவும் வசதி, பார்க்கவும் அழகு.



சுத்தம் செய்த பிறகு அதை முறையாக்
பராமரித்தல் அவசியம்.

ஒரு லாண்டரி பேக் அல்லது் பிளாஸ்டிக் கூடை
ஒன்றை பாத்ரூம் கதவிற்கு வெளியே (அறையினுள்)
வைத்துவிட்டால் துவைக்கப்போட வேண்டிய
உடைகளை அதில் போடலாம். இதனால்
பாத்ரூம் முழுவதும் துணிகள் கிடக்காது.

விருந்தினர்கள் வருவதற்கு முன்னரே
பாத்ரூமை சுத்தமாக கழுவி, சாமான்களை
சரியாக அடுக்கி வைத்துவிட்டால்
பராமரிப்பது எளிது.

வாஷ் பேசினுக்கு அடியில் ஒரு மிதியடி
போட்டு வைத்துக்கொ்ள்வதால் சிந்தும்
நீரால் தரை ஈரமாகி, காலடி தடங்கள்
ஏற்படுவதை தவிர்க்கலாம்.

குளியலறை சுத்தமாக இருந்தாகவேண்டிய
கட்டாயம் என்ன?

கழிவறை/குளியலறைகளில் பாக்டீரியாக்கள்
பல இருக்கின்றன. அவை வீட்டின்
மற்ற அறைகளுக்கு பரவ விடாமல் தடுக்க
சுத்தம் செய்தல் அவசியமாகிறது.

சுத்தம் செய்தல் என்பது ”டீப் கீளினிங்”
என்று சொல்வார்களே அப்படி சுத்தமாக
இருத்தல் அவசியம். அறையின் மூலை,முடுக்குகள்
கூட சுத்தமாக்கப்படவேண்டும்.

ஆண்ட்டி பாக்டீரியா கீளீனர்கள் கடைகளில்
கிடைக்கின்றன். அவை கொண்டு சுத்தம்
செய்வதால் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.

எதற்காகவும், எந்த இடத்திலும் பினாயில் கொண்டு
சுத்தம் செய்யாதீர்கள். பினாயில் உடலுக்கு
ஊரு விளைவிக்கக் கூடியது.


கழிவறையை உபயோ்கிக்கும் முன்பு, பின்பும்
ஹேண்ட்வாஷ் கொண்டு கை கழுவுதல்
அவசியம்.

17 comments:

நந்து f/o நிலா said...

ஏனுங்க ஹஸ்பண்ட் கேர் டிப்ஸ் எதுவும் போட முடியுங்களா?

Anonymous said...

நல்ல சுத்தமான பதிவு..

pudugaithendral said...

சாரி நந்து,

இங்க ஹஸ்பண்டாலஜி வகுப்புக்கள் தற்சமயம் ஒவ்வொரு திங்களும் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன.

:)))))))))))))

pudugaithendral said...

ஆஹா,

மிக்க நன்றி தூயா.

நந்து f/o நிலா said...

ஏனுங்க அதுவும் பராமரிக்கப்பட வேண்டிய பாவப்பட்ட உயிரினம்தானுங்களே :(

நாமக்கல் சிபி said...

//ஏனுங்க ஹஸ்பண்ட் கேர் டிப்ஸ் எதுவும் போட முடியுங்களா?
//


சிலருக்கு பாத்ரூமில் படிக்கும் பழக்கம் இருக்கும்.
அதனால் புத்தகங்களும், பேப்பரும் அங்கங்கே
கிடக்கும். கதவில் லெட்டர் ஹோல்டர் போன்ற
ஒரு பேக் மாட்டிவிட்டால், அதில் அழகாக
புத்தகம், பேப்பரை வைத்துக்கொள்ளலாம்

:))

pudugaithendral said...

ஏனுங்க அதுவும் பராமரிக்கப்பட வேண்டிய பாவப்பட்ட உயிரினம்தானுங்களே//

நியாயம்தான். ஹஸ்பண்டாலஜியில் கணவனை ஹேண்டில் செய்வது எப்படின்னுதாங்க சொல்றோம்.

இதுவும் ஹஸ்பண்ட் கேரில் ஒரு பகுதிதான்.

:)))))))))))))

pudugaithendral said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் மிக்க நன்றி
சிபி.

Unknown said...

நல்ல பதிவு. ஆனா குளித்த பிறகு ஈரம் போக துடைப்பதுதான் இடிக்குது. அதுவும் காலையில் எல்லோரும் office- க்கும், school - க்கும் கிளம்பும்போது இதை எப்படிங்க கடைபிடிக்கறது? மற்றபடி வாரம் ஒரு முறை கழுவுதல், பாத்ரூமில் குப்பை தொட்டி, shower curtain, etc எல்லாமே super டிப்ஸ்!! உங்களோட அடுத்த பதிவுகளுக்கான எதிர்பார்ப்ப தூண்டிடீங்க!!! :))

வால்பையன் said...

பாத்ரூமை சுத்தமாக பராமரிக்க ஒரேவழி
அந்த பக்கமே போகாமலிருப்பது தான்

இது எப்படி இருக்கு
:)

பாச மலர் / Paasa Malar said...

நல்ல டிப்ஸ்...ரசித்து எழுதிருக்கீங்க..

pudugaithendral said...

வாங்க ஹேமா,

வருகைக்கு நன்றி.

எதுவும் இடிக்காது. மார்க்கெட்டில்
ஸ்க்வீசின்னு ஒரு வித மாப் ஸ்டிக் கிடைக்குது. அதில் நீரை இழுத்து பிழிந்துவிட்டால் சுலபம். இதில் சின்னச் சின்ன முடிகளும் வந்துவிடும் என்பது சிறப்பு.

பிள்ளைகளும் விரும்பிச் செய்வார்கள்.

வைப்பர் கூட உபயோகிக்கலாம்.

pudugaithendral said...

மற்றபடி வாரம் ஒரு முறை கழுவுதல், பாத்ரூமில் குப்பை தொட்டி, shower curtain, etc எல்லாமே super டிப்ஸ்!! உங்களோட அடுத்த பதிவுகளுக்கான எதிர்பார்ப்ப தூண்டிடீங்க!!! //

மிக்க நன்றி :))

pudugaithendral said...

அந்த பக்கமே போகாமலிருப்பது தான்

இது எப்படி இருக்கு?//

சூப்பர் டிப்ஸ் வால் பையன்.

நீங்க நடைமுறைப் படுத்தி பாத்துட்டு உங்க அனுபவத்தைப் பதிவா போடுங்களேன்
:)

pudugaithendral said...

வாங்க பாசமலர்,

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== நந்து f/o நிலா said...

ஏனுங்க அதுவும் பராமரிக்கப்பட வேண்டிய பாவப்பட்ட உயிரினம்தானுங்களே :(
==>
அதானே =)