Wednesday, November 05, 2008

வாக்கினிலே இனிமை வேண்டும்

”நீதான் பேய்!,” என்று கத்திக்கொண்டே

ஓடி வந்து என்னிடம் ஒளிந்துக்கொண்ட
தம்பி் நவீனை துரத்திக்கொண்டே ஓடிவந்தாள்
என் பெரிய மகள் நீலிமா.

பொழுது விடிந்து பொழுது போவதற்குள்
வீட்டில் ஒரே களேபரம்தான். இவர்கள்
இருவரும் பள்ளிக்கு சென்றிருக்கு நேரம்தான்
வீடு நிசப்தமாக இருக்கும்.

”இப்ப என்ன பிரச்சனை?” என்று கேட்டேன்.

”அக்கா! என்னைத் திட்டறாங்க. தலையில
கூட கொட்டிட்டாங்க பாருங்கம்மா வலிக்குது!”என்றான்
மகன் நவீன்.

“திட்டனதையும், கொட்டினதையும் மட்டும் சொல்லு!”
நீ செஞ்சதைச் சொல்லாத, என்ற பெரி்ய மகள்
நீலிமாவிடம்,”என்ன நடந்தது? ப்ரச்சன்னை என்னன்னு?
நீதான் சொல்லு” என்றேன்.

”பாத்துட்டு தர்றேன்னு சொல்லி என் ஃபரெண்டு
கொடுத்த கீ செயினை உடைச்சிட்டான்! என்
பெஸ்ட் ப்ரெண்ட் என் பர்த்டேக்காக கொடுதது
அது”, என்று வருத்தத்தோடு சொன்னாள்.

”அதுக்கு அக்கா என்னை கோட்டான், நாய்
அப்படின்னு திட்டி்னாங்கம்மா!” என்றான்.

”எதுக்கு தலையில கொட்டின?,” என்றதும்
”வெவ்வேன்னு அழகு காட்டினான் தம்பி”,
என்றாள்.

அலுப்பாக வந்தது எனக்கு. எப்போதும் இதே
நிலைதான். அடிதடி சண்டை நடக்கும்.
இவள் முடியைப்பிடித்து் இழுப்பான், அவள்
அடிக்க என்று பெரிய யுத்தமே நடக்கும்.

தாளமுடியாமால் இருவருக்கும் 2 போட்டு
விட்டு வருவேன். ஆளுக்கொரு மூலையில்
உட்கார்ந்து அழுவார்கள். இதுதான் இவர்களின்
சண்டையின் முடிவாக இருக்கும்.
பிள்ளைகளை அடித்துவிட்டு அந்த
வருத்தத்தில் சாப்பிடமால் இருப்பேன்.
இந்த நிலமை தொடரக்கூடாது.
புரிய வைக்கவேண்டும்
என்று முடிவு செய்தேன்.

”என் கூட வாங்க ரெண்டு பேரும்”, என்றேன்.
அடிக்காமல் அழைத்த அம்மாவை ஆச்சரியமாக
பார்த்தனர் பிள்ளைகள்.
” இப்படி உட்காருங்க” என்று டைனிங் டேபிளு்ருகில்
அமர்த்தி விட்டு உள்ளே சென்றேன்.








தலையைத் தடவிக்கொண்டே மகனும்,
முனுமுனுத்துக்கொண்டே மகளும் உட்கார்ந்திருந்தனர்.

“ம்ம். ரெண்டு பேரும் இதை சாப்பிடுங்க”, என்று
அவர்களிடம் நீட்டிய தட்டை பார்த்து முகம்
சுளித்தனர்.

“என்னம்மா! வாழைக்காயைக் கொடுக்கறீங்க.
காயை பச்சையா சாப்பிட்டா பல் கறுப்பாயிடும்னு
சொல்வீங்களே!” என்று கேட்டாள் மகள்.

”பரவாயில்லை சாப்பிடுங்க” என்றேன்.
“காயைச் சாப்பிட்டா நல்லா இருக்காதும்மா.
பழம் தான் சுவையா இருக்கும், இருங்க
நான் போய் வாழப்பழத்தை எடுத்துகிட்டு
வர்றேன்”! என்று எழுந்த மகனை
உட்கார வைத்தேன்.

”வாழைக்காய், வாழைப்பழம் ரெண்டும்
ஒரே மரத்திலேர்ந்துதானே வருது.
அப்ப ஏன் வாழைப்பழத்தை மட்டும்
விரும்பி சாப்பிடற? என்றதும் மகள்
அதான் தம்பி சொன்னானே அம்மா,
“ பழம் சுவையா இருக்கும்னு. அதான்!”
என்றாள் மகள்.

”சரியா சொன்ன! சுவையான பழம் இருக்க
காயைச் சாப்பிட யாருக்குத்தான்
விருப்பம் இருக்கும்?” அதே போல
அன்பான கனிவான வார்த்தைகள்
இருக்க ரெண்டுபேரும் கடுமையான
வார்த்தைகளை உபயோகிக்கலாமா??”
என்றேன்.


என்னை ஏறிட்ட மகளிடம்,”தம்பி
கீழே போட்டு உடைச்சது தப்பு. என்னிடம்
வந்து சொல்லியிருக்கணும். இல்ல
இப்படி செய்யலாமான்னு மென்மையா
கண்டிக்கணும். அதைவிட்டு
கோட்டான், நாய்னு சொல்லலாமா,”என்றேன்.

”தப்புதாம்மா!” என்றாள் மகள்.

“அக்காவோட சாமானை பாக்க எடுத்த சரி.
அதை பத்திரமாக கையாள வேண்டாமா?
அது உடஞ்சதுல அக்கா எவ்வளவு
வேதனைப்படறாங்க, வயசுல பெரியவங்களை
பேய்னு வேற சொல்வது சரியா நவீன்?
என்றதும் தலையைக் குனிந்து கொண்டு
”சாரி” என்றான்.

”சாரி, சொல்லவேண்டியது எனக்கில்லை”
என்றதும் அக்கா எழுந்து போய் தம்பிக்கு
முத்தம் கொடுத்து,”சாரிடா தம்பி! வலிக்குதா?
வா! ஐஸ் க்ப்யூஸ் வைக்கிறேன்,” என்றழைத்தாள்.

அவனும் பதிலுக்கு முத்தம் கொடுத்து
“இனிமே அப்படி எல்லாம் செய்யமாட்டேன்
அக்கா!”என்றபடி அக்காவுடன் சென்றான்.


இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்வர்ந்தற்று


என்ற திருக்குறளை படித்து அதன்
பொருள் அறிந்திருந்தாலும் பொறுமை
இன்மையால் பிள்ளைகளிடம் கடுமையாக
நடந்து கொண்டிருந்தேன். இன்று பிள்ளைகளை
அடிக்காமல் இதமாக புரியவைத்ததன் பலன்
அனைவருக்கும் மகிழ்ச்சி.

என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைதான்
ஞாபகம் வந்தது.”படித்தால் மட்டும் போதாது!”

*****************************************************

தொடர் பதிவாக வந்து கொண்டிருக்கும்
திருக்குறள் பதிவிற்காக இன்னொரு கதை இது.

17 comments:

வெண்பூ said...

அருமையான கதை.. இதை பேரண்ட்ஸ் கிளப்பில் போட்டிருக்கலாம். இன்னும் பொருத்தமாக இருக்கும்..

pudugaithendral said...

வாங்க வெண்பூ,

பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு கதை போட்டாச்சே. அதான் இங்கே இந்தக் கதையைப் போட்டேன்.

Iyappan Krishnan said...

nalla irukku :) parents club laiyum oru copy podunga

புதுகை.அப்துல்லா said...

அக்கா இந்தக் கதையை இங்க போட்டதுதான் சரி. காரணம் பேரண்ட்ஸ் கிளாப்பைவிட இங்க பார்வையாளர்கள் அதிகம். நல்ல கதை. :)

ராமலக்ஷ்மி said...

ஆஹா ஆஹா அருமை. முடியும் போதெல்லாம் தொடரலாம் குறள் கதையை, இல்லையா தென்றல்? நல்ல கருத்தை வாழைப் பழத்தைப் போலவே கனிவாக விளக்குகிறது கதை.

வெண்பூ, ஜீவ்ஸ் ஆலோசனைப் படி இன்னொரு copy அங்கும் பதிவிடுங்கள். பேரன்ட்ஸ் க்ளப்புக்கென்றே இருக்கும் வாசகர் வட்டத்தைச் சென்றடைய வேண்டாமா?

ராமலக்ஷ்மி said...

அப்துல்லா இருவரும் ஒரே சமயத்தில் வெவ்வேறு கருத்தைக் கூறியிருக்கிறோம்:)>

//பேரன்ட்ஸ் க்ளப்புக்கென்றே இருக்கும் வாசகர் வட்டத்தைச் சென்றடைய வேண்டாமா?//

சரி, இது உங்களுக்குச் சொல்லப் பட்டது:)!

pudugaithendral said...

வாங்க ஜீவ்ஸ்,

நன்றி.

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

முடியும் போதெல்லாம் தொடரலாம் குறள் கதையை//

ஆமாம் ராமலக்ஷ்மி,
எவ்வளவு முடியுமோ,விருப்பமோ நம்ம
இஷ்டம் போட்டுட்டு லிங்க் கொடுத்திருங்க. அம்புட்டுதான்

pudugaithendral said...

/பேரன்ட்ஸ் க்ளப்புக்கென்றே இருக்கும் வாசகர் வட்டத்தைச் சென்றடைய வேண்டாமா?//


நேயர் விருப்பமாக போட்டுடுவோம்.

pudugaithendral said...

பேரண்ட்ஸ் கிளப்பிலும் இந்தக் கதையை போட்டாச்சு.

பினாத்தல் சுரேஷ் said...

நல்லா இருக்கு...

ஷைலஜா said...

பாரதியின் பாடல்வரி கதைதலைப்பில்! அதுவெ ஈர்க்கிறது என்றால் உங்க கதையும்தான்! பாராட்டுக்கள்!

அன்புடன் அருணா said...

எல்லா அம்மாவும் இப்பிடி இருந்தால் எப்பிடி இருக்கும்??
அன்புடன் அருணா

pudugaithendral said...

ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம பிளாக் பக்கம் வந்ததற்கு நன்றி சுரேஷ் அண்ணா.
(அப்பாடி நானும் அண்ணான்னு கூப்பிட ஒரு அண்ணன் இருக்காருப்பா)

pudugaithendral said...

பாராட்டுக்களுக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி.

pudugaithendral said...

எல்லா அம்மாவும் இப்பிடி இருந்தால் எப்பிடி இருக்கும்??//

நல்லக் கேள்வி பதில் அம்மாக்களிடம் தான் இருக்கிறது.