Thursday, November 06, 2008

குட்டீஸ் சுட்டி

மாண்டிசோரி பயிற்சி முடித்து வேலை பார்த்த
அந்த நாட்கள் எனக்கு மிகவும் பிடித்த நாட்கள்.
குட்டிக் குட்டி குழந்தைகளுடன் அளவளா முடியுமே!
அவர்களின் குறும்புகள், பேச்சுக்கள், பிடிவாதங்கள்
அறிவுத்திறன் இப்படி ஒவ்வொன்றும் என்னை
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தின.

**********************************************

மாண்டிசோரியில் ஜியாமண்ட்ரி எல்லாம்
3 வயசுக்கே சொல்லிகொடுப்போம்.
அன்றைக்கு வட்டம் பத்தி சொல்லிகிட்டு இருந்தேன்.
மெடல் இன்ச்ட் பெட்டியிலிருந்து வட்டத்தை
எடுத்து அதை ட்ரேஸ் செய்ய கற்றுக்கொடுத்து,
உங்களுக்கு வட்ட வடிவில் என்னென்ன
தெரியும்?என்று பிள்ளைகளிடம் கேட்டேன்.
அவர்களுக்குத் தெரிந்ததை வரையச் சொன்னேன்.
இயலாதவர்களுக்கு வரைந்து கொடுத்தேன்.

நிலா, சூரியன், தட்டு, லட்டு, பந்து, ஹேப்பி பேஸ்
இப்படி பல வரைந்து தள்ளிவிட்டார்கள்.

வட்டமாக வெட்டிய அட்டைகள் என்று
அன்று வகுப்பே வட்டமாக இருந்தது.
(ஆமாம். டேபிள் செட்டிங்கூட வட்டம் :) )

அந்த பீரியட் முடிந்ததும் ப்ரேக் டைம்.
பி்ள்ளைகள் கை கழுவி தான் கொண்டு
வந்த உணவை வைத்து சாப்பிட துவங்கினார்கள்.

அதில் ஒரு பையன் வட்ட பிஸ்கெட் என்று
ஆரம்பிக்க, ப்ரேக் டைமிலும் வட்டம்
தொடர ஆரம்பித்தது. வட்ட டப்பா,
வட்ட மூடி என்று சொல்லி
கடைசியில் ஒரு பையன்
“மனீத்தின் தலைக்கூட வட்டம்”
என்று சொல்லிவிட்டான்.

மொட்டை அடித்த அந்தப்பையனின் தலை
வட்டமாக சரியாக தெரிந்தது. அனைவரும்
சிரித்து விட்டனர். எனக்கும் குபுக்கென்று
சிரிப்பு வந்தாலும் கட்டுபடுத்திக்கொண்டு
அழும் மனீத்தை சமாதானம் செய்தேன்.

***************************************

ஆஷிஷுக்கு 7 வயதிருக்கும்போது அவனுக்கு
SPACE பற்றி சில சந்தேகங்களை பெரிய
புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு விளக்கிக்
கொண்டிருந்தேன்.

“இதுதான் ஸ்பேஸ்,” என்று ஆரம்பித்த அடுத்த
நொடியில் 4 வயது அம்ருதா வந்து
“எங்கே ஸ்பேஸ்? எனக்கும் காட்டுங்கள்!!””
என்றாள். 4 வயது குழந்தைக்கு ஸ்பேஸைப்பத்தி
எப்படி சொல்வது என்று என்னை தயார் படுத்திக்கொண்டு
ஆரம்பிக்கையில்
”எங்க டீச்சர் ஸ்பேஸ் விட்டு எழுதுன்னு சொன்னாங்க,”
ஸ்பேஸைக்காட்டுங்க. நான் அது மாதிரி விட்டு
எழுதறேன்னு சொன்னதும், சிரிப்பு பொத்துக்கொண்டு
வந்தது ஆஷிஷ்ற்கு. வார்த்தைக்கு இடையில் விடும்
ஸ்பேஸிற்கு, சயின்ஸ் ஸ்பேஸும் ஒன்று
என்று நினைத்து கேட்டிருக்கிறாள் பாவம்.


***********************************************

சிறு குழந்தைகள் செய்யும் எழுத்துப்பிழை கூட
ஒரு வித்தியாசமான அனுபவம்.
20 வருடங்கள் ஆகிவிட்டது இந்த சம்ப்வத்திற்கு.
இன்றும் நான் மறக்காமல் நினைத்து
நினைத்து சிரிப்பேன். :)
(எனதருமை தம்பியின் கைவண்ணம்தான்
இது)

1 ஆம்வகுப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார்
ஐயா. கட்டுரை நோட் திருத்தி வீட்டுக்கு
வந்தது. எடுத்து படித்தது நாந்தான்.
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது
எனக்கு. என்னக்கா! சிரிக்கற என்று
கோபம் வந்தது அவனுக்கு.

அப்பா வந்ததும் காட்டினேன். அவரும்
படித்துவிட்டு,” நாளையிலிருந்து
பள்ளிக்கு ஜட்டி பனியன் மட்டும்
போட்டுகிட்டு போ போதும்.சரியா கண்ணா”
என்றார். ”ச்சே. அப்படில்லாம் போகக்கூடாதுப்பா”
என்றான்.

”அப்புறம் ஏன் நாங்கள் பள்ளிக்கு சீருடையில்
செல்வோம், என்பதற்கு பதில் சிறிய உடையில்
செல்வோம் என்று எழுதிருக்கிறாய்” என்று
கேட்டபின் தான் அவனுக்கு புரிந்தது.

அடுத்ததும் தம்பியின் புராணம்தான்.

விடுமுறை விண்ணப்பம் எழுதியிருக்கிறார்.
இவனின் தமிழைப்படித்து நொந்து
போன இவரது ஆசிரியை என்னை கூப்பிட்டு
அனுப்பியிருந்தார்.(தம்பிக்கு கேர் டேக்கர்
நான் தான் )

“உன் தம்பி லீவு கொடுக்காவிட்டால்
எங்களை கொன்றே விடுவான் போலிருக்கிறது”!!
இன்றிலிருந்து உன் தம்பி 30 நிமிடம் இங்கேயே
தமிழ் படித்துவிட்டு தாமதமாகத்தான் வருவான்.”
என்று சொல்லிவிட்டு கட்டுரை நோட்டை
தந்தார்.

பெரிய தவறு ஒன்றும் செய்து விடவில்லை.

விடுமுறை அளிக்குமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறேன் என்பதற்கு பதில்
“கேட்டுக்கொல்லுகிறேன்” என்று எழுதியிருந்தது.

:)))))))))))

14 comments:

ராமலக்ஷ்மி said...

ரசித்தேன்:))!

தம்பி செய்த எழுத்துப் பிழை:)சரி சின்னப் பையன். இதப் படிங்க:
"As I am suffering from my uncle's marriage please grant me leave for 2 days." பத்தாம் வகுப்பில் சக மாணவி கொடுத்த விடுமுறை விண்ணப்பம்:))!

pudugaithendral said...

As I am suffering from my uncle's marriage please grant me leave for 2 days."

LOL

புதுகை.அப்துல்லா said...

உங்க பதிவைப் படித்து சிரித்துவிட்டு பின்னூட்டமிட வந்தால் ராமலெஷ்மி அக்கா பின்னூட்டம் சிரிப்பைத் தொடரச் செய்கிறது.

புதுகை.அப்துல்லா said...

மாண்டிசோரி பயிற்சி முடித்து வேலை பார்த்த

//

மீன் குஞ்சு ஏன் நீச்சல் கத்துகிச்சு???

அமுதா said...

:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))))))))))))))
சூப்பர் காமெடிகள்..

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்ல .

pudugaithendral said...

மீன் குஞ்சு ஏன் நீச்சல் கத்துகிச்சு???//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

வாங்க அமுதா
வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

காமடிதான். அப்பப்போ நினைச்சு சிரிப்பேன். இப்ப உங்க எல்லோர் கிட்டயும் பகிர்ந்துகிட்டேன்.

மங்களூர் சிவா said...

அம்ருதாவுக்கு ஸ்பேஸ் பத்தி சொல்லிகுடுத்தீங்களா இல்லையா??

மங்களூர் சிவா said...

/
"As I am suffering from my uncle's marriage please grant me leave for 2 days."
/

அடடா இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த லீவெல்லாம் நானும் எடுத்திருப்பேனே!!

:))))

pudugaithendral said...

அம்ருதாவுக்கு ஸ்பேஸ் பத்தி சொல்லிகுடுத்தீங்களா இல்லையா??//

அதெல்லாம் சொல்லியாச்சு.

pudugaithendral said...

அடடா இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த லீவெல்லாம் நானும் எடுத்திருப்பேனே!!//

ஆஹா..........

:))))