Thursday, November 13, 2008

இது ஒரு அவசர அதே சமயம் அத்தியாவசியமான பதிவு.

நேற்று பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
எப்போதும் இல்லாமல் பல பெற்றோர்கள் அங்கே
சேர்ந்து தங்களின் பல தரப்பட்ட கருத்துக்களைச்
சொல்லியிருந்தார்கள். வீட்டுப்பாடம் குறித்த
பதிவு அது.



அந்தப் பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்.
நந்து.


சைக்யாட்ரிஸ்டிடம் ட்ரீட்மெண்ட் போய் இன்னும் 5 வருடத்துக்கு படிப்பு என்ற பேச்சையே எடுக்க கூடாது என்ற அளவுக்கு ஆன குழந்தைகளின் சதவீதம் பற்றி வெளியில் வருவதில்லை. :(


நந்து பல வி்டயங்கள் வெளியே தெரிவதில்லை.

இங்கே ஆந்திராவில் இருக்கும் விசயத்தை உங்கள் அனைவரிடமும்
பகிர்ந்துக் கொள்கிறேன். 10த் முடிச்சது இங்கே பீயூசி ஸ்டைல்
கல்விதான்னு சொல்லியிருக்கேன்.

இங்கே சில கல்லூரிகள் முளைத்திருக்கின்றன். அவை
இஞ்சினியரிங் பரிட்சைக்கும் பிள்ளைகளைத் தயார் படுத்தும்
பள்ளிகள்.

8 ஆம் வகுப்பு முதல் இந்த பள்ளியில் உங்கள் பிள்ளைகளைச்
சேர்த்துவிட்டீர்களானால் அவர்கள் உங்கள் பிள்ளைகள்
இஞ்சினியரிங் எண்ட்ரெண்ஸ் பாசகி, வருவது போல்
படிப்பில் தயார் செய்துவிடுகிறார்கள்.

ஹாஸ்டல் போல் ரெசிடெஞ்சியல் பள்ளியிலே தங்கி
படிக்கலாம். ஹைதராபாத்தில் இருக்கும் இதன்
கிளைகளில் லோக்க்ல் மாணவர்கள் டேஸ்காலராகவும்
போய் படிக்கலாம்.

சரி இதில் என்ன இருக்கிறதுன்னு கேக்கறீங்களா?
இருக்குங்க. இவங்க இந்த 4 வருஷமும் புத்தகத்தைத்
தவிர வேற எதுவும் நினைச்சுப் பார்க்க முடியாது.

kotha bangaru lokam திரைப்படத்தில் பிரின்சிபலாக
வரும் பிரம்மானந்தம் ஒரு டயலாக் சொல்வார்.
“மீ்னை மசலா ஊறவைத்து ஊறவைத்து
மீனில் மசாலாவைத் தேய்த்து தேய்த்து சமைப்பது
போல் இங்கே உங்களை படிக்க வைக்கிறோம்” என்பார்.

அப்படித்தான் படிப்பு அங்கே. டேஸ்காலர்கள்
விடுமுறையே எடுக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை என்றாலும் ஷ்ட்டர்களை மூடிக்கொண்டு
வகுப்பெடுக்கிறார்கள். பெற்றோர்கள் லீவு வேண்டுமென்று
கேட்டாள்,” இப்படி அடிக்கடி லீவு எடுங்க. நாளைக்கு
பிள்ளைக்கு இஞ்சினியரிங்கில் அட்மிஷன் கிடைக்காட்டி
எங்களைத் திட்டுங்க” என்பார்களாம்.

இங்கு படிக்கும் அனைவருக்கும் இஞ்சினியரிங்கில் சீட்
நிச்சயம். இப்படி ஒரு குரூப்பாக சில கல்லூரிகள்
திறந்திருக்கிறார்கள். (விவரம் தெரியம்னு விரும்புறவங்க
எனக்கு தனி மெயில் அனுப்புங்க. லிங்க் அனுப்புறேன்)

இந்திய பாடத்திட்டத்தில் படித்திராத என் மகனுக்காக
தற்போது வீட்டில் வந்து ட்யூஷன் எடுக்க டீச்சரை
ஏற்பாடு செய்த போது கூட அவர் சொன்ன வார்த்தை
“8த் லிருந்து எண்ட்ரண்ஸ் கோச்சிங் கொடுக்கிறேன்”
என்பதுதான். உடன் நான் சொன்னது. அதெல்லாம்
அப்புறம் பார்த்துக்கலாம். அவனுக்கு என்ன விருப்பமோ,
அவனால் எது முடியுமோ அந்தச் சூழ்நிலையில்
பாத்துக்கொள்ளாலாம் என்பதுதான்.

சரி அம்புட்டு கஷ்டப்பட்டு இஞ்சினியரிங் கல்லூரியில்
அட்மிஷ்ன் வாங்கி்யப்பிறகு அந்த மாணவர்களின்
நிலை என்னத் தெரியுமா?
நந்து சொல்லியிருப்பது போல் மன நோய்க்கு
ஆளாகிறார்கள். ப்ரஷ்ர், ஸ்ட்ரெஸ்ஸினால் இஞ்சினியரிங்
சீட் கிடைத்த பிறகும் அந்த சீட்டைக் கோட்டைவிட்டு
வேறெந்த கல்லூரியிலும் படிக்க முடியாமல்
போய் இருக்கும் அவர்களைப் பார்க்க பரிதாபமாக
இருக்கிறது.

அதற்காக பெற்றோர்கள் செல்வழித்த பணத்திற்கு மேலும்
இவர்களின் சிகிச்சைக்கு செலவு செய்ய நேருகிறது.

ப்ரொபஷன் கோர்ஸ்கள் தான் பணம் சம்பாதிக்க வழி
என்று பெற்றோர்கள் என்ணுவதுதான் இதற்கெல்லாம்
காரணம்.

இங்கே என் உறவினர் ஒருவரைப்பத்தி சொல்லியே
ஆகணும். அவருக்கு இரண்டு மகன்கள்.
மூத்தவனுக்கு விருப்பமில்லை ஆனாலும் அவனது
தந்தை வற்புருத்தி இஞ்சினியரிங்கில் சேர்த்தார்.
அவனும் வகுப்புக்கு போய்வருகிறான். பெரிதாக
ஆர்வம் ஏதும் இல்லை.

இரண்டாமவன் “கேட்டரிங்தான் படிப்பேன்”! என்று
சொல்ல அவன் விருப்பபடி சேர்த்தார். இன்று
அவன் நன்றாகப் படித்துக்கொண்டிருக்கிறான்.
ஹோட்டல்களில் பார்ட்டைம் வேலை அவர்களாகவே
அழைத்துச் செல்கிறார்களாம். அதற்கான சம்பளம்
மொத்தத்தையும் கணக்கிட்டு கல்லூரிக்கு கொடுத்து
விடுவார்கள். அடுத்த வருடக் கல்லூரிக் கட்டணம்
போக மீதிப் பணத்தை கல்லூரி மாணவனிடம் கொடுக்கிறது.

இப்படி எல்லாம் கூட இருக்கிறது என்று பலருக்குத்
தெரியவில்லை. நாம் விரும்புவதை பிள்ளைகள்
படிப்பதை விட பிள்ளைகள் விரும்புவதை மட்டும்
படிக்கட்டும். கிளாஸ் பர்ஸ்டுதான் வரவேண்டும்
என்பதில்லை. என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

24 comments:

வால்பையன் said...

முதலில் காசு கொடுத்து கல்வியை விலைக்கு வாங்கும் முறையை ஒழிக்கவேண்டும்.

நந்து f/o நிலா said...

அட போங்க. ஆயாசமா இருக்கு அவனவன் புள்ளய அவனவன் பாத்துக்க வேண்டியதான். வேற ஒரு மண்ணும் பண்ண முடியாது.

எல்லாருக்கும் நடக்கிறதால நம்ம புள்ளைக்கும் ப்ரச்சனை வரும்தான்னா.......


சகிப்புத்தன்மைய வளத்துக்க சொல்வோம்.நாமளும் வளத்துக்குவோம்.

அப்படியும் முடியலயா. ஃப்ரீயா கெடச்ச ப்ளாக் இருக்கே அதுல நேத்துமாதிரி பொலம்பிகிட்டும் திட்டிகிட்டும் ஆத்திரத்த தீத்துகிட்டு போயிடலாம்.


எவன் புள்ளயோ எக்கேடோ கெட்டு போவட்டும்.

வாழ்க பெற்றோர். வாழ்க வாத்தியார்ஸ்.

எதாச்சும் நல்ல கும்மி போஸ்ட் போடுங்க. நல்லா கும்மியடிச்சு நாளாச்சு.

புதுகை.அப்துல்லா said...

அக்கா விரைவில் பேரண்ட்ஸ் கிளப்பில் இதை ஒட்டி ஒரு பதிவு போடப்போறேன்.

புதுகை.அப்துல்லா said...

இவங்க இந்த 4 வருஷமும் புத்தகத்தைத்
தவிர வேற எதுவும் நினைச்சுப் பார்க்க முடியாது.
//

இங்கயும் நாமக்கல் ராசிபுரம் போன்ற ஊர்களில் இந்தக் கொடுமைதான் நடக்குது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னமோ போங்க..நாளைக்கு கோச்சிங்கில்லேல்லாம் என்ன சேர்க்காம விட்டுட்ட அதனால் என்னால அதுல படிக்க முடியல இதுலபடிக்க முடியலன்னு திட்டாம இருந்தா சரி... :)

pudugaithendral said...

முதலில் காசு கொடுத்து கல்வியை விலைக்கு வாங்கும் முறையை ஒழிக்கவேண்டும்.

:(

pudugaithendral said...

ஆஹா அதுக்குள்ளயே ஆயாசம்.

pudugaithendral said...

அக்கா விரைவில் பேரண்ட்ஸ் கிளப்பில் இதை ஒட்டி ஒரு பதிவு போடப்போறேன்.//

போடுங்க. அப்துல்லா.

pudugaithendral said...

நாளைக்கு கோச்சிங்கில்லேல்லாம் என்ன சேர்க்காம விட்டுட்ட அதனால் என்னால அதுல படிக்க முடியல இதுலபடிக்க முடியலன்னு திட்டாம இருந்தா சரி... :)//

கோச்சிங் இருக்கு. இஷ்டம் இருந்தா படின்னு சொல்லிடுவோம்ல. அவங்க விருப்பம் அவங்க படிப்பு, அவங்க வாழ்க்கை.

FunScribbler said...

// நாம் விரும்புவதை பிள்ளைகள்
படிப்பதை விட பிள்ளைகள் விரும்புவதை மட்டும்
படிக்கட்டும்//

இதை ஒவ்வொவரு பெற்றோரும் புரிந்து கொண்டால், நாளைய இளையர் சமுதாயம் கண்டிப்பாக சிகரத்தை அடையும்..

மங்களூர் சிவா said...

நல்ல வேளைடா ஆண்டவா நான் இப்பிடி எல்லாம் எதுலயும் மாட்டாம தப்பிச்சேன்.

ராமலக்ஷ்மி said...

பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் பாடங்களைப் புரிந்து படிக்க வேண்டும். விரும்பிப் படிக்க வேண்டும். ஹை ஸ்கூல் லெவல் வரும் வரை ட்யூஷன்களைத் தவிர்த்தல் நலம் அவர்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட பாடத்தில் பிரச்சனை இருந்தால் தவிர. ஹை ஸ்கூல் வந்த பிறகு சுற்றி நடக்கும் கோச்சிங்கள் பற்றி பிள்ளைகளே அறிவார்கள். அவர்களாக தேவை என நினைத்துக் கேட்டாலொழிய நாமாக திணிக்காமல் இருக்கலாம்.

அதே போல் உயர் கல்வி என்று வரும் போது நீங்க சொன்ன மாதிரி இந்த கோர்ஸ்தான் போகணும் என நாம் வற்புறுத்தக் கூடாது.

pudugaithendral said...

பெற்றோரின் புரிதல் மிக அவசியம் தமிழ் மாங்கனி்,

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

நல்ல வேளைடா ஆண்டவா நான் இப்பிடி எல்லாம் எதுலயும் மாட்டாம தப்பிச்சேன்.//

:)

pudugaithendral said...

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

Anonymous said...

//அப்படியும் முடியலயா. ஃப்ரீயா கெடச்ச ப்ளாக் இருக்கே அதுல நேத்துமாதிரி பொலம்பிகிட்டும் திட்டிகிட்டும் ஆத்திரத்த தீத்துகிட்டு போயிடலாம்.
//

நம்ம இப்படி புலம்ப வேண்டியதுதான். நல்ல பதிவு புதுகைத்தென்றல்

pudugaithendral said...

நல்ல பதிவு புதுகைத்தென்றல்//

மிக்க நன்றி சின்ன அம்மிணி

சந்தனமுல்லை said...

//நல்ல வேளைடா ஆண்டவா நான் இப்பிடி எல்லாம் எதுலயும் மாட்டாம தப்பிச்சேன்.//

சிவா மாதிரி சேம் பிளட்!! ;-))

சந்தனமுல்லை said...

அப்புறம் எப்படி எல்லாத்திலயும் 200/200 எடுக்கறாங்கன்னு நினைக்கறீங்க? ரெண்டு வருஷமா ஒரே சிலபஸ் படிப்பாங்க..கண்ணை கட்டிவிட்ட் மாதிரி! ஆனா இது எப்படி ஒரு நல்ல ஹெல்தி காம்படிஷன் ஆகும்?

pudugaithendral said...

என்னத்த ஹெல்தி காம்படிஷன்.

அதை படிச்சு சீடு கெடச்சு ஸ்ட்ரெஸ் தாங்காம படிப்பே வேணாம்னு வந்திடறாங்கள்ல.

Anonymous said...

நல்ல பதிவு இப்போது இருந்தே நான் உஷாராய்க்கனும் ஏனென்றால் என் மகன் அடுத்த வருசம்..+2. நல்ல தகவல்கள் வழங்கீயதற்க்கு நன்றி.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோவை ரவி.

உமா said...

நல்ல பதிவு, ஒரேமாதிரியாக சிந்திக்கும் பலருக்கு அதன் மறுபக்கமும் தெரியவேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வெற்றியல்ல. திறமையை சரியாகப் பயன் படுத்துவதே வெற்றி.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி உமா