இந்த வாரப் பாடம் என்னன்னு பாப்போமா?
சில ரங்கமணிகளுக்கு தான் எது செஞ்சாலும் கரீக்டா
செய்வோம்னு ஒரு ஓவர் கான்பிடன்ஸ்.
அதனால் தங்கமணிகள் எது செஞ்சாலும் குத்தம்.
சில ரங்கமணிகள் தான் சமைக்காவிட்டாலும்
அரிசி, பருப்பு, எல்லாம் அளந்து கொடுத்து
இன்னைக்கு இதுதான் சமையல்னு முடிவும்
அவங்க செஞ்சு கொடுக்கறதை பாவம் தங்கமணிகள்
செய்யணும்.
கடைவீதிக்கே அனுப்பறதில்லை என் பொண்டாட்டியை”!
அப்படின்னு சொல்லிகிட்டு ரங்கமணிகள் தானே
எல்லாம் வாங்கிகிட்டு வந்து கொடுத்திடுவாங்க.
அவங்க இஷ்டப்படிதான் சமைக்கணும்.
சில பேர் சமைக்கும் போது பக்கத்துல வந்து
நின்னுகிட்டு ,”கடுகு கொஞ்சமா போடு!”
“இம்புட்டு எண்ணையா?!”
”காயை இப்படி வதக்கு!!” அப்படி இப்படின்னு
சர்க்கஸ் ரிங்க் மாஸ்டர் மாதிரி செய்வாங்க.
இப்ப சமைக்கவா? வேணாமா?ன்னு தங்கமணிகள்
அழுகற அளவுக்கு நிலமை மோசமாயிடும்.
(இதுக்கு என்ன டீரிட் மெண்டுன்னு பாடத்தின்
கடைசில் சொல்றேன். :) )
சரி ரங்கமணிகள் இப்படி சதாய்க்க என்ன
காரணம்னு பாத்தீங்கன்னா?
கிட்டுமணியா இருந்த போது பெரும்பாலும்
வேலைக்காக வெளியூரோ, வெளிநாட்டிலோ
போய் இருக்காங்க.
ஊருல அம்மா அருமையா சமைச்சு போட்டாலும்
ஹோட்டலுக்கு போனவங்க கூட தனியா
இருக்கும் போது ”சுயபாகம்” தான்.(எல்லாம்
சிக்கன நடவடிக்கை.) இதுனால ஏதோ சுமாரா
சமைக்க வந்திருக்கறாதால!!!!! தன்னை
சமையலில் நளச்சக்கரவர்த்தி ரேஞ்சுக்கு
நினைச்சுகிட்டு இருப்பாங்க.
கல்யாணத்துக்கப்புறம் தங்கமணி என்ன சமைச்சாலும்
அவங்களுக்கு பிடிக்காக போவது இதனாலதான்.
'இப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்'
இன்னொரு தங்கமணி அலுத்துக்கிறார் கேளுங்க:
’தேனே தென் பாண்டி மீனே
இசைத் தேனே மானே இளம்மானே’
-என்றெல்லாம் அன்று இசைத்து விட்டு இன்று
நொந்து நூடுல்ஸ் ஆனாப்ல பாடுகிறாராம்:
’கைதியானேன் உன்னாலே நானே
இழந்தேனே சுதந்திரம் இழந்தேனே
மறந்தேனே நண்பர்களை மறந்தேனே.’
-இன்னா விஷயம்னு கேட்டால் கிட்டுமணியா
இருந்தப்போ ” முடிஞ்ச்சா சமைக்கறது
இல்லாட்டி நாளொரு ஹோட்டல் தான்.
பொழுதொரு பார் தான்!”
இது ரங்கமணி ஆனதுக்கப்புறம் முடியலையாம்.
முடியுதோ முடியலையோ தங்கமணி
சமைச்சுத்தானே ஆகணும்.
வந்தலும் தொத்தலுமாக இருந்த ரங்கமணிகள்
தங்கமணிகளின் கைமணத்தில்+ கல்யாணத்துக்கப்புறம்
வீட்டு வேலை செய்ய தங்கமணி இருக்கறாதால
எந்த வேலையும் செய்யாம இருக்கறாதாலையும்
தொந்தியும் தொப்பையுமாய் உடம்பைத்
தேற்றிக் கொண்டு அப்படியே ப்ளேட்டைத் திருப்பிடுவாங்க:
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'!
இது எப்படி இருக்கு? யாரை யார்
கைதியாக்கி வைத்திருப்பது?
யாரு நூடுல்ஸா நொந்து கிடக்கிறது?
யாரு செல்லமா வளர்த்த
அம்மா,அப்பா குடும்பத்தை மறந்து வந்திருப்பது?
எல்லா ரங்கமணியும் இப்படித்தான்னோ
எல்லா தங்கமணியும் சொக்கத்
தங்கமுன்னோ சொல்ல வரலீங்கோ.
ஆனா இங்கிட்டு சொல்லியிருக்கும் விசயத்தில்
ஏதாவது ஒண்ணையாவது நீங்க
செஞ்சிருந்தீங்கன்னா அப்போ
வரப் போற வாரத்துப் பாடங்கள்.
உங்களுக்குதாங்கோ மிஸ்டர். ரங்கு.
வர்ற்டா. அடுத்த வாரம் சந்திக்கலாம்.
*************************************************
டிஸ்கி:
ரங்கமணிகள் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போல்
நடத்தினால் செய்ய வேண்டியது இதுதான்.
ரங்கமணிகள் டூவிலர் அல்லது கார் வெச்சிருந்தாங்கன்னா
அவங்களோட நீங்க வண்டியல போகும் போது,
முன்னால பாத்து ஓட்டுங்க,
”லெஃப்ட்ல வண்டி வருதுங்க,”
முன்னாடி ஸ்பீடு ப்ரேக்கர் இருக்குங்க!”
இப்படி இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துகிட்டு வந்தீங்கன்னா
டென்ஷனாகி “இப்ப நான் வண்டி ஓட்டட்டுமா
வேணாமான்னு” கத்துவாங்க பாருங்க! அப்ப
கேளுங்க,” கிச்சன்ல சமைக்கும் போது நீங்க
இப்படித்தானே செய்யறீங்க.! எங்களுக்கு மட்டும்
டென்ஷன் இருக்காதான்னு”.
இந்த ட்ரீட்மெண்டை விடாம செஞ்சீங்கன்னா
நல்ல பலன் இருக்கும்.
**************************************
சென்ற வார மற்றும் இந்த வார பாடத்திட்டத்திற்காக
கவிதைகள் எழுதி தந்த நம்ம வலையுல
கவிக்குயி்லுக்கு மனமார்ந்த நன்றிகள்.
16 comments:
\\இப்படி இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துகிட்டு வந்தீங்கன்னா
டென்ஷனாகி “இப்ப நான் வண்டி ஓட்டட்டுமா
வேணாமான்னு” கத்துவாங்க பாருங்க! அப்ப
கேளுங்க,” கிச்சன்ல சமைக்கும் போது நீங்க
இப்படித்தானே செய்யறீங்க.! எங்களுக்கு மட்டும்
டென்ஷன் இருக்காதான்னு”.\\
இது எங்கையோ பார்த்த/படித்த ஞாபகம்.
அது ஆம்லெட் செய்யும் மனைவி, தொந்தரவு கொடுத்த கணவன்.
மனைவிக்கு பாடம் அதில்.
ஹும்ம்ம் ... ஒரே மாதிரி ஏழ்வர் இருக்கு போது, ஒரே மாதிரி சிந்திக்கூடாதா ...
அப்பாடா காப்பாத்திட்டேன்.
அப்பாடா காப்பாத்திட்டேன்.//
நீங்க ரங்கமணி கட்சியா? இல்ல தங்கமணி கட்சியா?
உங்க ஸ்டைல் நல்லா இருக்கு. உங்க பேக் சீட் ட்ரிவிங் ஐடியாவும் சூப்பர்!
<== இப்படி இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துகிட்டு வந்தீங்கன்னா
டென்ஷனாகி “இப்ப நான் வண்டி ஓட்டட்டுமா
வேணாமான்னு” கத்துவாங்க பாருங்க! ====>
ரோட்டில் டூவீலர் கீழே விழுந்துகிடக்க....
த.மணியும்,ர.மணியும் கீழே விழுந்து காயங்களுடன் கஷ்டப்பட்டு எழுந்திருக்கிறார்கள்.
த.மணி : என்னங்க . இப்படியா வண்டிய ஓட்றது? சரியா பார்த்து ஓட்ட வேணாமா?
ர.மணி : சரியா பார்த்துதான் ஓட்னேன். இன்னைக்கு, நீ, லெப்ட் ரைட்னு டைரக்சன் கொடுத்தியா , இப்படி ஆயிட்டது.இல்லைன்னா இந்த மாதிரி ஆயிருக்காது.
த.மணி:இல்லைங்க. பு.தென்றல் ஐடியாபடி அப்படி செஞ்சேன்.அதான்.....
ர.மணி : அவங்க ஐடியாவா...?! நல்லா வேளை எதிர்த்தாப்புல லாரியோ/பஸ்ஸோ வரலே. பிழைச்சோம்.
த./ர.மணிகள் இப்போது டாக்டரிடம் ட்ரீட்மெண்ட் எடுது, பஸ்ஸிலோ ஆட்டோவிலோ போகிறார்கள் =))).
வீட்டு வேலை செய்ய தங்கமணி இருக்கறாதால
எந்த வேலையும் செய்யாம இருக்கறாதாலையும்
தொந்தியும் தொப்பையுமாய் உடம்பைத்
தேற்றிக் கொண்டு
//
நம்ப வெண்பூ, தாமிரா மாதிரி
( நாங்க்கெல்லாம் ஃபிட்டுல்ல ஹி...ஹி...ஹி..)
வாங்க சுந்தர்,
உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
உங்க அதீத கற்பனை நல்லா இருக்கு
சாமான்யன்.
நாங்க்கெல்லாம் ஃபிட்டுல்ல ஹி...ஹி...ஹி..)//
:)))
:) நல்ல ஐடியா மாதிரி இருந்தது..பின்னூட்டத்தில் சாமான்யன் சொன்னதப்பார்த்தா பயம்மா இருக்குதே.. ஆனா எனக்கு உபயோகமில்லை.. எங்க வீட்டு ரங்கமணி தட்டை கழுவப்போடவும் வெந்நீர்ப்பாத்திரத்தை அடுப்பில் ஏத்தவும் மட்டும் தான் கிச்சனுக்குள்ள வர்ராங்க..
பின்னூட்டத்தில் சாமான்யன் சொன்னதப்பார்த்தா பயம்மா இருக்குதே//
இப்படித்தான் ஏடாகூடமா பேசி திசை திருப்ப பாப்பாங்க முத்துலெட்சுமி,
(இது ரங்கமணிகளின் சதி வேலை)
நாம சாக்கிரதையா இருந்துக்கணும்.
<==
முத்துலெட்சுமி-கயல்விழி said...
:) நல்ல ஐடியா மாதிரி இருந்தது..பின்னூட்டத்தில் சாமான்யன் சொன்னதப்பார்த்தா பயம்மா இருக்குதே..
==>
ராமலக்ஷி,இந்த மாதிரி யோசனைகளையெல்லாம் அனாசின்,க்ரோசின் மாதிரி இஷ்டத்து எடுத்துக்க முடியாது. இதெல்லாம் ஸ்பெஷல் மருந்து. யோசனை கண்டுபிடிச்சவங்களூக்கு மட்டும்தான் பொருந்தும். உயிரோட விளையாடாதீங்க தாயி.சொல்லிபுட்டேன்.அப்புறம் உங்க இஷ்டம்.....
சாமான்யன் அந்த கமெண்ட் போட்டது நான் நீங்க ராமலக்ஷ்மிக்கு பதில் சொல்லி இருக்கீங்க..
அப்பறம் நல்லா கவனிங்க..அந்த யோசனையை என்னைக்குமே நான் உபயோகிக்க அவசியமில்லைன்னு டிஸ்கி போட்டிருக்கேனே.. எனக்கு உயிருன்னா பயம்.. விளையாடமாட்டேன்.. :)
//சில பேர் சமைக்கும் போது பக்கத்துல வந்து
நின்னுகிட்டு ,”கடுகு கொஞ்சமா போடு!”
“இம்புட்டு எண்ணையா?!”
”காயை இப்படி வதக்கு!!” அப்படி இப்படின்னு
சர்க்கஸ் ரிங்க் மாஸ்டர் மாதிரி செய்வாங்க.//
ஹய்யோ....கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இது daily எங்க வீட்டில நடந்தது......இப்போ அப்பப்போதான் :-))))))))))))
//ரங்கமணிகள் டூவிலர் அல்லது கார் வெச்சிருந்தாங்கன்னா
அவங்களோட நீங்க வண்டியல போகும் போது,
முன்னால பாத்து ஓட்டுங்க,
”லெஃப்ட்ல வண்டி வருதுங்க,”
முன்னாடி ஸ்பீடு ப்ரேக்கர் இருக்குங்க!”
இப்படி இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துகிட்டு வந்தீங்கன்னா
டென்ஷனாகி “இப்ப நான் வண்டி ஓட்டட்டுமா
வேணாமான்னு” கத்துவாங்க பாருங்க! அப்ப
கேளுங்க,” கிச்சன்ல சமைக்கும் போது நீங்க
இப்படித்தானே செய்யறீங்க.! எங்களுக்கு மட்டும்
டென்ஷன் இருக்காதான்னு”.//
நல்ல solution.... thanks'kka :-))))
சாமான்யன் சிவா,
எந்த பெண்ணும் தன் கணவன் விபத்துக்குள்ளாக வேண்டுமென நினைக்க மாட்டாள்.
நான் சொல்லியிருக்கும் ட்ரீட்மெண்டைபடித்து அதை கற்பனை செய்து பார்த்து, நடந்தால் என்னவாகும் என்று எழுதியிருக்கிறீர்கள்!
சமையற்கட்டும் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய இடம். ஆக்ஸிடண்டுகள் நடக்கக்கூடிய இடம்.
அந்த இடத்தில் ஒரு கணவன் மனைவியின் கவனத்தைச் சிதைக்கும் வண்ணம் ஆர்டர் போட்டுக்கொண்டிருந்தால் அந்த பெண்ணின் நிலை????
அதை யாரும் நினைப்பதில்லை. அதற்காகத்தான் அப்படி ஒரு ட்ரீட்மெண்டைச் சொன்னேன்.
அதைப் படித்த பிறகாவது அப்படிச் செய்யும் ரங்கமணிகள் மாறுவார்கள் என்பதுதான் என் நோக்கம்.
வாங்க தேவதை வாங்க,
ஹய்யோ....கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இது daily எங்க வீட்டில நடந்தது......இப்போ அப்பப்போதான்//
இப்படி பல வீட்டுல நடக்கும் என்பது தெரிஞ்சுத்தானே புதுசா இந்த வருட பாடத்தில் இதைச் சேர்த்தது. :-))))))))))))
நான் சொல்லியிருக்கும் ட்ரீட்மெண்டை நீங்க செஞ்சா எப்படி இருக்கும்னு உங்க ரங்கமணியை கற்பனை மட்டும் செஞ்சு பாக்கச் சொல்லுங்க.
அது போதும்
:)))
Post a Comment