பாட்டாலே புத்தி சொல்வோம்! பாட்டாலே
யுக்தி சொல்வோம்!
போன வாரம் வீடியோ பாடம் நடந்தது.
இந்த வாரம் வித்தியாசமா பாட்டு வகுப்பு.
(பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு பதிவில் நாமக்கல் சிபி
வகுப்பில் மாணவன் பாடுவாரான்னு கேட்டிருக்காரு.
இந்த வகுப்பில் மாணவர்களும் பாடலாம்.) உங்களுக்காகவே
இந்த வாரம் வகுப்பு பாட்டு வகுப்பாக....
நான் சொல்லிக்கொடுக்கற மெட்டில் பாடுங்க,
(கீழே கொடுத்திருக்கும் வரிகளை
"பேசக்கூடாது! வெறும் பேச்சில் சுகம்
ஏதுமில்லை" எனும் பாடல் மெட்டில்
பாடிக்கோங்க)
'நம்பக் கூடாது...
நம்பக் கூடாது இந்த கிட்டு மணிகளை ஹோய்
பாசம் போயிடும் பரிவும் போயிடும்
ரங்கமணி ஆனாலே...
ஆசை கூடாது அடி தங்கமணி ஹோய்
ஆரம்ப கனிவும்அன்பும் தொடருமென்று..
கனவுகள் ஆகாது...'
சென்ற வகுப்பில் நீங்க பார்த்த வீடியோ மாதிரிதான் ஆயிடும்.
அன்பா, அரவணைப்பா இருந்தவங்க அப்படியே
”அந்தர் பல்டி” அடிச்சு ஆளே மாறிடுவாங்க.
ஆரம்ப ஜோர் எப்பவுமே அமர்க்களம்தானே.
(ஆரம்ப சூரப்புலின்னு சொல்லலாம்)
சினிமா என்ன பூங்கா என்ன என்று.
அப்படிப் அப்போ பூங்காவுக்கு போனதை
நினைச்சு பார்க்கிறார்
ஒரு தங்கமணி:
(இதுக்கு மெட்டு உங்களுக்கு
தோணுறதுதான். கொஞ்சம் ஆனந்தம்,
கொஞ்சம் சோகம் கலந்த மெட்டு
ஒண்ணை தேர்ந்தெடுத்துக்கோங்க)
'முள்ளொன்று குத்தியது
சுண்டுவிரல் நுனியிலே
உள்ளம் பதறி
கிழித்திட்டார் அன்று
காயத்தில் சுற்றிட
தன் கைக்குட்டையை
அந்த ஒரு செயலால்
வந்த வலி பறந்தது.
அதுவே கல்யாணத்துக்கப்புறம்
ரங்கமணி.
முள்ளங்கி வெட்டுகையில் இன்று
மோதிர விரலில் பட்டது காயம்
பதறி நான் கத்திட
சுள்ளென்று வருகிறது வார்த்தை
இருந்த இடத்தில் இருந்து
'பாத்துப் பண்றதுக்கென்ன'
வந்த வலி மனசிலே நின்றது
இந்த ஒரு சொல்லிலே'.
"என்ன பொருத்தம் இந்தக் கைக்குட்டை
என்ன பொருத்தம்" அப்படின்னு ரங்கமணிகள் பாடியது
கல்யாணத்துக்கு முன்னாடியோ கல்யாணம் ஆன
புதிதிலோதான் இருக்கும். (அப்ப கையில இருக்குற
கைக்குட்டையைக் கூட ரசிச்சவங்க..
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு
வைத்து நின்றிருந்தாலும் ஏறெடுத்தும்
பாராது தொலைந்திடுவார்கள் வசதியாக
தொலைக் காட்சிப் பெட்டிக்குள்.
'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்...'
இந்தப் பாட்டு ஞாபகம் இருக்கா?
(அழகன் படத்தில் வரும்)
-எனப் பேச வைத்து மகிழ்ந்தவர்கள்
இன்று பேச வாய் திறக்கும் முன்னர்
பெரிதாக விடுவாங்க கொட்டாவி.
இதுவே ரங்கமணி ஒன்றைச் சொல்லுகையில்
வேறு கவனத்தில் குழந்தை அல்லது வேலை
என தங்கமணி காதில் வாங்காது இருந்து
விட்டால் துர்வாசரின் கோபம்
தலைக்கேறி தாண்டவமாடும்.
"புருஷங்கற மதிப்பே இல்லை! "
” இங்க ஒருத்தன் கரடியா கத்திகிட்டு இருக்கேன்!!
”மனுஷனாவே மதிக்கறதில்லை”
அப்படின்னு ருத்ர தாண்டவம்
(சிவன் கோபமா இருக்கும் போது
ஆடும் நடனம் ருத்ர தாண்டவம்)
ஆடுவாங்க.
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பிரபல
வாரப் பத்திரிககயில் சொல்லியிருந்த கதை
இது.
கடற்கரையில் ஒரு பெண், கூழாங்கல்
ஒன்றைக் கண்டெடுத்தாள்.
சுத்தம் செய்ய அதைத்தேய்த்தாள்.
எதிரில் ஒரு பூதம் தோன்றியது.
"என்னை விடுவித்தற்க்காக் உன் விருப்பம்
ஒன்றை நிறைவேற்றுகிறேன்.
என்ன வேண்டும்?" என்று கேட்டது.
"என் நாய்க்குட்டி பேசவேண்டும்,
பாட வேண்டும், பரத நாட்டியம் ஆட
வேண்டும்", என்றாள் அந்தப்பெண்.
பூதம் உதட்டை பிதுக்கியது. "அத்தனை
சக்தி எனக்கு இல்லை. வேறு ஏதாவது
கேள்!" என்றது.
"அப்படியானால் அன்பானவனாக,
நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவனாக,
வீட்டு வேலைகளில் உதவி செய்பவனாக,
என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக,
என்னிடம் பொய்யே சொல்லாதவனாக ஓர் ஆண்மகனை
எனக்குக் கணவனாகக் கண்டுபிடித்துக் கொடு!" எனக் கேட்டாள்.
பூதம் பெருமூச்சுவிட்டது...
"முதல் ஆசையே பரவாயில்லை.
உன் நாய்க் குட்டி எங்கே என்று கேட்டதாம். :(
அங்கே என்ன ஒரு வெடிச்சத்தம்?
இதயம் வெடிச்சதா? கற்பனை நீர்க்குமிழி
உடஞ்சிடிச்சா? இது தாங்க நிசம்.
சினிமால காட்ற மாதிரி உருகி உருகி
காதலிக்கிறது, அன்பாக, அனுசரணையாக
பார்த்துக் கொள்வது, "நீயில்லையேல், நானில்லையே",
இதெல்லாம் நிசத்தில சாத்தியம் இல்லீங்கோ!
யாரோ கோடில (கோடி வீட்டுல இல்ல)
ஒருத்தர் வேணாம் இருக்கலாம்.
பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு
கேட்கற பெத்தவங்க ரொம்ப குறைவு.
" மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம்.
அதிர்ஷ்டக்காரி!!!!!!!!!!", "பெரியவங்களுக்கு
தெரியாதா? பொண்ண என்ன கேட்டுகிட்டு" ங்கிற
டயலாக்குகள் சர்வ சாதாரணம்.
பல திருமணங்கள் "லொளகீக" சமாசாரங்கள்
ஒத்துப்போகிற காரணங்களால் மட்டுமே
நடக்கிறது. அதுதான் உண்மை.
அதனால் தங்கமணிகள் எதிர்பார்ப்புகளை
தவிர்த்துவிட்டு, மனதை
தேற்றிக்கொண்டு, " இது இப்படித்தான்"
என்பதை புரிந்துகொள்வது மிகமுக்கியமுங்க.
நான் வாழ்க்கையை மட்டும்தான் சொன்னேன்.
நீங்க ஏதும் தப்பா புரிஞ்சிகிட்டா
அதுக்கு நான் பொறுப்பில்ல. :))
ஆனது ஆகிப்போச்சு, வருத்தப்படாம விவரமா
இருங்க.அடுத்தவாரங்கள்ள
எப்படி சமாளிக்கிறதுங்க்ற பாடங்களோட வர்ரேன்.
இப்போதைக்கு இந்த படதில் வர்ற மாதிரியும்
சமாளிக்கலாம்.
48 comments:
ஹா ஹா ஹா. நல்லாயிருக்கு பாடம். சரி படிக்க வரும் மாணவ மணிகள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்:)))!
பெண்களுக்கு இத்தனை கொடுமைகளா!!!!!
ஆமாங்க ஆனது ஆகிப்போச்சு.. சொல்லுங்க.. மேல.. :))
தற்பாதுகாப்பு பற்றியும் பாடத்தில் சொல்ல வேண்டும்..
//
'முள்ளொன்று குத்தியது
சுண்டுவிரல் நுனியிலே
உள்ளம் பதறி
கிழித்திட்டார் அன்று
காயத்தில் சுற்றிட
தன் கைக்குட்டையை
அந்த ஒரு செயலால்
வந்த வலி பறந்தது.
அதுவே கல்யாணத்துக்கப்புறம்
ரங்கமணி.
முள்ளங்கி வெட்டுகையில் இன்று
மோதிர விரலில் பட்டது காயம்
பதறி நான் கத்திட
சுள்ளென்று வருகிறது வார்த்தை
இருந்த இடத்தில் இருந்து
'பாத்துப் பண்றதுக்கென்ன'
வந்த வலி மனசிலே நின்றது
இந்த ஒரு சொல்லிலே'.//
logic சரியில்ல..
முள்ளு குத்துறது முள்ளு இருக்கிறது தெரியாம பட்டு வரும் ரத்தம். அப்போ கைக்குட்டைல கட்டுப் போடறது சரி
சீரியல்ல கோலங்கள் பாத்துக்கிட்டே முள்ளங்கி வெட்டி கைய காயப்படுத்திக்கிட்டா, ஏற்கனவே சீர்யல் பாக்காதேன்னு கத்திட்டு இருக்கிற ரங்கமணிக்கு கோவம் வருமா வராதா ? இதை எல்லா நடுநிலையாளர்களும் யோசிக்கவேண்டும்.
//'நம்பக் கூடாது...
நம்பக் கூடாது இந்த கிட்டு மணிகளை ஹோய்
பாசம் போயிடும் பரிவும் போயிடும்
ரங்கமணி ஆனாலே...
ஆசை கூடாது அடி தங்கமணி ஹோய்
ஆரம்ப கனிவும்அன்பும் தொடருமென்று..
கனவுகள் ஆகாது...' //
கல்யாணத்துக்கு முன்னாடி .. "அன்பே ஆருயிரே அத்தான்"
கல்யாணம் ஆனப்பின்னாடி ...
" என்ன சொம்மா தொண தொணத்துக்கிட்டு... ஒரு சீரியல் நிம்மதியா பாக்க விடுறீங்களா.. இதுல வேற இந்தக் குட்டிச் சாத்தான் அதைப் பாத்துக்கிறதை விட வேறென்ன வேலை " அப்படின்னு சிடுசிடுக்கும் தங்கமனிகளிடம் எப்படி அன்புக் காட்டி வழிக்குக் கொண்டுவருவதென்று ஃப்ரொஃபஸர் சொல்லித் தருதலும் நலம் பயக்கும்.
././/
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு
வைத்து நின்றிருந்தாலும் ஏறெடுத்தும்
பாராது தொலைந்திடுவார்கள் வசதியாக
தொலைக் காட்சிப் பெட்டிக்குள்.//
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். உண்மையில டீவிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவது யார்னு மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்க ?
//-எனப் பேச வைத்து மகிழ்ந்தவர்கள்
இன்று பேச வாய் திறக்கும் முன்னர்
பெரிதாக விடுவாங்க கொட்டாவி.//
அதே தாங்க.. இப்படி தங்கமணிகள் இருந்தா என்ன செய்யறது சொல்லுங்க ?
லாஜிக்கே இல்லாத இது மாதிரி ஓட்டைகள் நிறைந்த இந்தப் பதிவை மற்ற ரங்கமணிகளின் சார்பில் நானும் சேர்ந்து புறக்கணிக்கிறேன்
( அப்பாடா இன்னைக்கு நிறைய ரங்கமணிகள் பாராட்டி எனக்கு கடிதம் போடுவாங்க )
வாங்க ராமலக்ஷ்மி,
மாணவமணிகளில் ரங்கமணிகள் கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள்.
:))))))))))))))))))
பெண்களுக்கு இத்தனை கொடுமைகளா!!!!!//
தூயா இது ஜஸ்ட் த பிகினிங்க்.
இன்னும் நிறைய இருக்கு. :(
ஆமாங்க ஆனது ஆகிப்போச்சு.. சொல்லுங்க..//
மேல.
அடுத்த வாரம் :))
தற்பாதுகாப்பு பற்றியும் பாடத்தில் சொல்ல வேண்டும்..//
தற்பாதுகாப்பா???!! ஐய்யோ ஐயோ!
தற்பாதுகாப்பு கற்க வேண்டியது ரங்கமணிகள் தான் தூயா!!!
:)))))))))))))
சீரியல்ல கோலங்கள் பாத்துக்கிட்டே முள்ளங்கி வெட்டி கைய காயப்படுத்திக்கிட்டா, //
தம்பி ஜீவ்ஸ்//
8 மணிக்கே சாப்பிட்டு விட்டு நீங்கதான் கோலங்கள் பார்ப்பதா உங்க தங்ஸ் சொன்னாங்களே!!!
கோலங்கள் பார்க்கும் வரை சமையல் முடிந்திருக்காது என்ற உங்கள் பாயிண்ட் ரெம்ப தப்பு தம்பி.
கத்திட்டு இருக்கிற ரங்கமணி் //
பாருங்க தங்கமணிகளே வாக்குமூலம் கொடுத்திட்டாரு ஒரு ரங்கமணி.
ரங்கமணி = துர்வாச முனிவர்னு
பாடத்தில் சொன்னது புரிஞ்சிடுச்சா?
கல்யாணத்துக்கு முன்னாடி .. "அன்பே ஆருயிரே அத்தான்"//
ஆமாம் வரும்போது நல்லவங்களாத்தான் வர்றாங்க ஜிவ்ஸ்.
ரங்கமணிகளின் நடவடிக்கைகள்தான் தங்கமணிகளை மாத்திடுது.
உலகம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி போலங்க. நீங்க சிரிச்சுகிட்டு பார்த்தா சிரிச்சா மாதிரிதான் தெரியும்.
உங்க உலகத்தில் உங்க பக்கத்திலேயே இருப்பது தங்கமணிதான். நீங்க எப்படி நடந்துக்கறீங்களோ அப்படித்தான் தங்கமணி நடந்துப்பாங்க/ நடந்துக்கணூம்.
உண்மையில டீவிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவது யார்னு மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்க ?//
அடுத்த சிலவாரங்களில் இது பத்திதாங்க பாடம்.
லாஜிக்கே இல்லாத இது மாதிரி ஓட்டைகள் நிறைந்த இந்தப் பதிவை//
உ ஒ க.
:))))))))))))))
(உலகம் ஒரு கண்ணாடி)
அப்பாடா இன்னைக்கு நிறைய ரங்கமணிகள் பாராட்டி எனக்கு கடிதம் போடுவாங்க )//
ரங்கமணி்கள் பாராட்டி என்னங்க ஆகப்போகுது. உங்க தங்கமணி பாராட்டுறாங்களா இல்லை......
பார்க்கலாம்.
:))))))))))))))
//
8 மணிக்கே சாப்பிட்டு விட்டு நீங்கதான் கோலங்கள் பார்ப்பதா உங்க தங்ஸ் சொன்னாங்களே!!!
கோலங்கள் பார்க்கும் வரை சமையல் முடிந்திருக்காது என்ற உங்கள் பாயிண்ட் ரெம்ப தப்பு தம்பி.//
kolangal eththanai maningarathe theriyathu. KOLANGAl - serial paththina oru adaiyalam. andha idaththil entha serial peraiyum pottu nirappik kollavum
//
பாருங்க தங்கமணிகளே வாக்குமூலம் கொடுத்திட்டாரு ஒரு ரங்கமணி.
ரங்கமணி = துர்வாச முனிவர்னு
பாடத்தில் சொன்னது புரிஞ்சிடுச்சா?//
கத்துதல் - உரத்துச் சொல்லுதல் என்றும் கொள்ளலாம்.
" கத்தும் குயிலோசை " என்று பாரதி சொல்லியிருப்பதை கேட்கவும். அங்கே குயில் கோபத்தில் கத்துவதில்லை ;)
அக்கா நான் ஆஜர்
'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்...'
இந்தப் பாட்டு ஞாபகம் இருக்கா?
(அழகன் படத்தில் வரும்)
-எனப் பேச வைத்து மகிழ்ந்தவர்கள்
இன்று பேச வாய் திறக்கும் முன்னர்
பெரிதாக விடுவாங்க கொட்டாவி.
:-)))))))))))))))))
புதுகைத் தென்றல் said...
//ரங்கமணி்கள் பாராட்டி என்னங்க ஆகப்போகுது. உங்க தங்கமணி பாராட்டுறாங்களா இல்லை......
பார்க்கலாம்.//
இது இது பாயின்ட்:))))!
//'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்...'
இந்தப் பாட்டு ஞாபகம் இருக்கா?
(அழகன் படத்தில் வரும்)
-எனப் பேச வைத்து மகிழ்ந்தவர்கள்
இன்று பேச வாய் திறக்கும் முன்னர்
பெரிதாக விடுவாங்க கொட்டாவி.//
அது சரி. கல்யாணத்துக்கு அப்புறம் ரங்கமணிகளைப் பேசவே ஐமீன் வாயைத் திறக்கவே விடாம லொட லொடன்னு தங்கமணிகள் பேசிட்டே இருந்தா..
தூக்கம் வருமா வராதா ? ஒரு நடுநிலையில் நின்னு யோசிக்கனும். என்ன நாஞ்சொல்றது ?
குயில் கோபத்தில் கத்துவதில்லை//
ஆமாங்க குயில் கத்தினா இனிமையா
இருக்கும்.
அந்தக் கத்தல் வேறு. இந்தக் கத்தல் வேற...
ரங்கமணி கத்தினா கொடுமையா இருக்கும். ;)
அப்து்ல்லாவுக்கு பிரசண்ட் போட்டாச்சு.
அமுதாவின் வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி.
இது இது பாயின்ட்//
நன்றி ராமலக்ஷ்மி
:))))!
//ஆமாங்க ஆனது ஆகிப்போச்சு.. சொல்லுங்க.. மேல.. :))//
முத்துலெட்சுமி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு!
//தற்பாதுகாப்பு பற்றியும் பாடத்தில் சொல்ல வேண்டும்.//
:-))
//
Thooya said...
பெண்களுக்கு இத்தனை கொடுமைகளா!!!!!
//
பாருங்க ஒரு பெண்ணே நம்ப மாட்டிக்கிறாங்க ஏன் இவ்ளோ கதை விடுறீங்க????
:))
//
Thooya said...
தற்பாதுகாப்பு பற்றியும் பாடத்தில் சொல்ல வேண்டும்..
//
பூரிக்கட்டைக்கு தற்காப்பு ஹெல்மெட்தான்.
:((((((
//
Jeeves said...
எல்லா நடுநிலையாளர்களும் யோசிக்கவேண்டும்.
//
என்னங்ணா நடுநிலைய பத்தி இங்க வந்து பேசிகிட்டு அதெல்லாம் எந்த தங்கமணிக்கும் தெரியாதுங்கிறது ஊரறிந்த ரகசியமாச்சே
:(((((
/
" என்ன சொம்மா தொண தொணத்துக்கிட்டு... ஒரு சீரியல் நிம்மதியா பாக்க விடுறீங்களா.. இதுல வேற இந்தக் குட்டிச் சாத்தான் அதைப் பாத்துக்கிறதை விட வேறென்ன வேலை " அப்படின்னு சிடுசிடுக்கும் தங்கமனிகளிடம் எப்படி அன்புக் காட்டி வழிக்குக் கொண்டுவருவதென்று ஃப்ரொஃபஸர் சொல்லித் தருதலும் நலம் பயக்கும்.
/
ரிப்பீட்டு
/
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். உண்மையில டீவிகளின் மேல் ஆதிக்கம் செலுத்துவது யார்னு மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்க ?
/
ரிப்பீட்டு
/
லாஜிக்கே இல்லாத இது மாதிரி ஓட்டைகள் நிறைந்த இந்தப் பதிவை மற்ற ரங்கமணிகளின் சார்பில் நானும் சேர்ந்து புறக்கணிக்கிறேன்
/
ரிப்பீட்டேய்
@ ஜீவ்ஸ்
அண்ணே பாராட்டுக்கள். ஜிங்கம்ணே நீங்க.
//
புதுகை.அப்துல்லா said...
அக்கா நான் ஆஜர்
//
ரொம்ப safe -ஆ கமெண்ட் போட்டிருக்கார். அண்ணே உங்களுக்கு கல்யாணம் பண்ண எல்லா தகுதியும் வந்தாச்சுன்னு இந்த ஒத்த கமெண்ட்லயே தெளிவாகிடுச்சு.
டிஸ்கி : தங்கமணி கவனத்திற்கு
மேலே போடப்பட்டுள்ள கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே!
வாங்க சந்தனமுல்லை,
தற்காப்பு பத்தியா? அதை ரங்கமணிகள் கத்துக்கட்டும்.
ஏன்ன்னு கேக்கறீங்களா? வரப்போகும் பாடங்கள் படிச்சிட்டு செய்முறை செஞ்சு பார்க்கணும். அப்ப அவங்களை காப்பாத்திக்கட்டும்.
பாருங்க ஒரு பெண்ணே நம்ப மாட்டிக்கிறாங்க ஏன் இவ்ளோ கதை விடுறீங்க????//
சில செல்லமணிக்ளுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க நியாயமில்லை.
:))
பூரிக்கட்டைக்கு தற்காப்பு ஹெல்மெட்தான்.
:((((((//
அனுபவம் பாடமா சிவா?
:))))))))))))))))))))))))
நடுநிலைய பத்தி எந்த தங்கமணிக்கும் தெரியாது//
ரங்கமணிகள் மட்டும் நடுநிலை வாதிங்கன்னு யாருங்க சொன்னாங்க.
ரங்கமணிகள் காரியவாதிங்கன்னு சொல்லலாம். அதுதான் ரொம்பச் சரியா இருக்கும்.
அண்ணே உங்களுக்கு கல்யாணம் பண்ண எல்லா தகுதியும் வந்தாச்சுன்னு இந்த ஒத்த கமெண்ட்லயே தெளிவாகிடுச்சு.//
அப்துல்லாவுக்கு கல்யாணமாகிடுச்சு சிவா.
:))))
தங்கமணி கவனத்திற்கு
மேலே போடப்பட்டுள்ள கமெண்டுகள் அனைத்தும் கற்பனையே!//
ஆஹா அப்படியே பயந்து கிடக்காறாம். இதை நாங்க நம்பணும்.
//
புதுகைத் தென்றல் said...
அண்ணே உங்களுக்கு கல்யாணம் பண்ண எல்லா தகுதியும் வந்தாச்சுன்னு இந்த ஒத்த கமெண்ட்லயே தெளிவாகிடுச்சு.//
அப்துல்லாவுக்கு கல்யாணமாகிடுச்சு சிவா.
:))))
//
ஓ அதுதானே பாத்தேன்!!
:)))
திரும்பவும் ரணகளமாக ஆரம்பிச்சுட்டீங்க போலயிருக்குது.. அப்பிடின்னா பதிலடி குடுக்க நான் தயாராகணுமே.. (பிரிஞ்சிருக்கிறதுனால கோபத்துக்கு பதிலா காதல்தான் வருது அதான் தங்கமணி சப்ஜெக்ட் கொஞ்ச நாளா வெயிட் இல்லாமல் இருக்குது)
திரும்பவும் ரணகளமாக ஆரம்பிச்சுட்டீங்க போலயிருக்குது.. அப்பிடின்னா பதிலடி குடுக்க நான் தயாராகணுமே.. //
யெஸ்ஸு வாங்க தாமிரா வாங்க.
(பிரிஞ்சிருக்கிறதுனால கோபத்துக்கு பதிலா காதல்தான் வருது அதான் தங்கமணி சப்ஜெக்ட் கொஞ்ச நாளா வெயிட் இல்லாமல் இருக்குது)//
இதைப் படிச்சதும் எனக்கு எப்பவோ படிச்ச கதை ஞாபகத்துக்கு வருது.
மனைவியை பிரிஞ்சிருந்த கணவன் அவள் இல்லாத நிலையை தாங்கவே முடியவில்லையாம். அவள் நினைவகவே இருக்க அலுவலகத்துக்கு கூட போகாமல் லீவு எடுத்துகிட்டு வீட்டுலேயே முடங்கிக் கிடக்காராம்.
அடுத்த நாள் மனைவி ஊரிலிருந்து வந்ததும்,” என்னிய விட்டுட்டு நல்லா இருந்தியா ஊருலன்னு.... ஆரம்பிச்சு பெரிய சண்டை போட்டாறாம்”.
:)))))))))))
என் போன்ற சிறுவர்கள் எல்லாம் வீட்டுல இருக்க அண்ணண் மற்றும் பெற்றோர்களை சமாளிக்க ப்ரதராலஜி & பேரண்டாலஜி வகுப்புகளை விரைவில் தொடங்குமாறு வலையுலக பாலகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
//சென்ற வகுப்பில் நீங்க பார்த்த வீடியோ மாதிரிதான் ஆயிடும்.
அன்பா, அரவணைப்பா இருந்தவங்க அப்படியே
”அந்தர் பல்டி” அடிச்சு ஆளே மாறிடுவாங்க//
இந்த வரிகள் பாட்டோட டியூனுக்கு கரெக்டாவே வர மாட்டேங்குதே!~
ஜீவ்ஸுக்கும்,ம.சிவாவுக்கும் பாராட்டுக்கள்.
Post a Comment