நான் வலைப்பூத் தொடங்கி எழுத ஆரம்பித்த உடன்
சந்தித்த முதல் நண்பர் எங்கள் புதுகை ப்ளாகர்களின்
தானைத் தலைவர் சுரேகா அவர்கள்தான். புதுகையில்
அம்மா வீட்டிற்கு சென்றருந்த பொழ்து 30 நிமிடம்
தான் நேரம் இருக்கிறது. வந்து பார்க்கிறேன்
என்றார். மழையால் 1 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அதன் பிறகு தம்பி அப்துல்லாவுடனான சந்திப்பு நிகழ்ந்தது.
ஆங்காங்கே பதிவர் சந்திப்பு நடந்ததுன்னு பதிவு போட்டு
வயிற்றெரிச்சல் கிளப்பி விட்டுக்கொண்டிருப்பார்கள்.
நாம இருக்கற ஊருல சந்திப்பு ந்டக்க மாட்டேங்குதே!ன்னு
நினைப்பேன்.
இன்று மதியம் அப்துல்லாவிடமிருந்து ஒரு போன்.
அக்கா நம்ம தாமிரா ஹைதை வந்திருக்கிறார். அவரும்
கார்க்கியும் உங்களை சந்திக்க விரும்புகிறார்கள்?
அப்படின்னு சொன்னார். உடனே போன் நம்பர் கொடுங்கன்னு
சொன்னேன். தாமிரா பேசினார் முதலில். அடுத்து
கார்க்கியிடம் பேசினேன். பாரடைஸில் ஒரு
ஹோட்டலில் தங்கி இருப்பதாகச் சொன்னார்.
அட கிட்டத்துல தான் இருக்கீங்க, வாங்கன்னு
அட்ரஸ் சொன்னேன்.
30 நிமிடத்தில் வந்தார்கள். தாமிரா தங்கமணிகளைத்
திட்டி பதிவிடுபவர்.:) காரசாரமாக இந்த சந்திப்பு இருக்கப்போகிறது
என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எதிரும் புதிருமான
இந்த சந்திப்பு (அதாங்க ஹஸ்பண்டாலஜி பேராசிரியர்/
ரங்கமணிகள் சங்க உறுப்பினர்) எதிர் பாராதவிதமாக
நான் எதிர் பார்த்ததற்கு எதிரும் புதிருமாக நடந்தது.
(வலைப்பூவில் கலக்கும் தாமிரா நேரில்
மிக மிக பவ்யமாக இருந்ததன் காரணம் என்ன
தாமிரா?)
கார்க்கி முதலில் சந்தித்தாலும் நன்றாக பேசினார்.
பரிசல்காரனின் சமீபத்திய பதிவான ஓண்டிக்கட்டை
உலகம் புத்தக விமர்சனம் போல் தனிமை கொடுமையைச்
சொன்னார். தனிமை ரொம்ப கொடுமைதான்
கார்க்கி. நாங்கல்ளாம் இருக்கோம்.
பயந்து பயந்துக்கொண்டே நான் கொடுத்த டீயை
சாப்பிட்டார்கள். எப்படி இருந்தது என்றும் நானும்
கேட்கவில்லை (நல்லா இருக்கும்னு எனக்குத்
தெரியும்!!! :)) ) அவங்க பயந்த பயத்துக்கு நான்
வேற கேள்வி கேட்டு அதுக்கும் இன்னும் பயப்படுவாங்களோனு
கேக்கவே இல்லை.
எப்படியோ என் ஆசை நிறைவேறியது. எல்லோரும்
கவனிச்சுக்கோங்கப்பா!! ஹைதையிலும் வலைப்பதிவர்
சந்திப்பு நடந்திடுச்சு. நாங்களும் ப்ளாக்கர்ஸ்தான்.
:)))))))))
45 comments:
//எதிர் பாராதவிதமாக
நான் எதிர் பார்த்ததற்கு எதிரும் புதிருமாக நடந்தது.
(வலைப்பூவில் கலக்கும் தாமிரா நேரில்
மிக மிக பவ்யமாக இருந்ததன் காரணம் என்ன
தாமிரா?)//
மறைந்திருந்து தாக்கும் ஸ்ட்ராட்ர்ஜி போல!!
விவரமா என்ன பேசினீங்கன்னு போடுங்க
மீ த பர்ஸ்ட்?
செம்ம .:பாஸ்ட்டுதான் நீங்க.. டோண்டு சாரைவிடவும் மிக வேகமாக சந்திப்பை பற்றி பதிவிட்டு சாதனை படைத்துள்ளீர்கள்.
அப்புறம்..
சந்திப்பில் நடந்த காரசாரமான உரையாடல்களை நீங்கள் சாதுர்யமாக மறைத்துவிட்டதால் பதிவர் சந்திப்பு உப்பு சப்பில்லாமல் நிகழ்ந்திருப்பதாக அனைவரும் நினைத்துக்கொள்ளப்போகிறார்கள்.. போங்கள்.!
மிஸ்டர். ராம் போட்ட டீயை நீங்கள் போட்டது போலவே கொண்டுவந்து கொடுத்துவிட்டு அதை பதிவிலும் போட்ட உங்கள் அரசியலை மிகவும் ரசித்தேன்.
மறைந்திருந்து தாக்கும் ஸ்ட்ராட்ர்ஜி போல!!//
அதேதான் சந்தனமுல்லை நானும் நினைத்தேன்.
புலி பதுங்குவது பாயத்தான் என்பார்களே.
விவரமா என்ன பேசினீங்கன்னு போடுங்க//
விவரமா என்ன பேசினோம்,
பரஸ்பர அறிமுகம், பொதுவாக பேச்சு 1 மணிநேர சந்திப்பில் அவ்வளவுதான்.
இன்னும் விரிவா கார்க்கியோ/ தாமிரோவோ பதிவு போட்டாத்தான் உண்டும்.
(இந்த சந்திப்பை பத்தி அவங்க என்ன நினைக்கறாங்கன்னு அப்பத்தான் தெரியும்)
மீ த பர்ஸ்ட்?//
இல்லையே சந்தனமுல்லை முந்திக்கிட்டாங்க.
செம்ம .:பாஸ்ட்டுதான் நீங்க.. டோண்டு சாரைவிடவும் மிக வேகமாக சந்திப்பை பற்றி பதிவிட்டு சாதனை படைத்துள்ளீர்கள்.//
:)))))))))))))
உரையாடல்களை நீங்கள் சாதுர்யமாக மறைத்துவிட்டதால்//
:)))))))))))
சரி என்ன நடந்ததுன்னு நீங்க ஒரு பதிவு போ்டுங்க தாமிரா.
உங்கள் முந்தைய பதிவுகளை எளிதில் படிக்கும் வகையில் Archive பகுதியை மேலே வைக்கலாமே.. ஒவ்வொருவரும் ஒரு மாதிரி இருக்கலாம். நான் எப்போதும் Archive பயன்படுத்துகிறேன்.
மிஸ்டர். ராம் போட்ட டீயை நீங்கள் போட்டது போலவே கொண்டுவந்து கொடுத்துவிட்டு//
இப்படி பதிவில் மட்டும் எழுதுவது, பின்னூட்டமிடுவதுன்னு இருக்கீங்களே, நேரில் அயித்தான் கிட்ட அதிகம் பேசவேஇல்லையே நீங்க.
ஏவிஎம் அவர்கள் மாதிரி கையைக் கட்டி பவ்யமாக அமர்ந்திருந்த கார்க்கி நிறைய பேசினாரே!
:)))))))))
//ஏவிஎம் அவர்கள் மாதிரி கையைக் கட்டி பவ்யமாக அமர்ந்திருந்த கார்க்கி நிறைய பேசினாரே!
:))))))))//
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
/
கார்க்கி முதலில் சந்தித்தாலும் நன்றாக பேசினா//
ஹேய்ய்.. விசிலட்ங்கப்பா.. சோடா கொடுங்கப்பா..
ஒரு வித தயக்கத்துடன்தான் வந்தேன். ஆனால் உங்கள் குடும்பத்தினர் காட்டிய அன்பில் உங்களில் ஒருவனாகி விட்டேன். cute kids, good hubby கொடுத்து வைத்தவர் நீங்கள். அருமையான டீக்கு நன்றிக்கா. ஒரே ஒரு சின்ன நெருடல், கில்லியை சுமார்தான் என்று சொல்லி விட்டீர்கள். :)))
வலப்பதிவுக்கு நான் புதுசு..... உங்கள் அனைவருடனும் நான் எப்படி என்னை இணைத்துக்கொள்வது......
ஒருவேளை "வீட்ல எலி வெளில புலி ஸ்ட்ராட்ர்ஜியா" இருக்குமோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஹைதையிலும் வலைப்பதிவர்
சந்திப்பு நடந்திடுச்சு. நாங்களும் ப்ளாக்கர்ஸ்தான்
//
ஆமா...நீங்களும் ரவுடிதான்!நீங்களும் ரவுடிதான்!
:))
Archive பகுதியை மேலே வைக்கலாமே.. //
எனக்கு அது எப்படி செய்யவேண்டும் என்பது தெரியாதே! சொல்லிக்கொடுங்க.
கொடுத்து வைத்தவர் நீங்கள். //
ஆமாம். ஆண்டவன் என்னிடம் மிகுந்த கருணையுடன் இருக்கிறான்.
அருமையான டீக்கு நன்றிக்கா//
சந்தோஷமா இருக்கு. இன்னும் சூப்பரா மசாலா டீ போட்டுக் கொடுத்திருப்பேன். அன்று காலைதான் மசாலா தீர்ந்தது. (நானே செய்வேன்)
கில்லியை சுமார்தான் என்று சொல்லி விட்டீர்கள். :)))//
:))))))))))))))))))
வலப்பதிவுக்கு நான் புதுசு..... உங்கள் அனைவருடனும் நான் எப்படி என்னை இணைத்துக்கொள்வது....//
வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
எனது மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்க.
ஒருவேளை "வீட்ல எலி வெளில புலி ஸ்ட்ராட்ர்ஜியா" இருக்குமோ?//
இருக்கலாம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ஏன் நீங்க மட்டும் தான் பதிவர் சந்திப்பு பதிவு போடுவீங்களோ!!!!!!
:))))))))))
//(வலைப்பூவில் கலக்கும் தாமிரா நேரில்
மிக மிக பவ்யமாக இருந்ததன் காரணம் என்ன
தாமிரா?)//
எல்லாம் அவங்க தங்கமணி டிரெய்னிங்கா இருக்கும்.
ஆமா, அக்கா வீட்டில் டீ(?) சாப்பிட்டு விட்டு தைரியமா பின்னூட்டமும் போடும் தாமிரா, கார்க்கி இருவரின் தைரியத்தையும் பாராட்டுகிறேன்.... ஒரு வேளை மாம்ஸ் டீ போட்டதால் இருக்குன்னு நினைக்கிறேன்.;)))
ம்ம்ம்...எங்க ஊரில் இதே மாதிரி பதிவர் சந்திப்பெல்லாம் எப்போ வைக்க முடியுமோ???
அன்புடன் அருணா
:))
மேடையில் ஏறியாச்சுல...
நானும் உங்க கூட சேர்ந்துக்கலாமா?
//எதிரும் புதிருமான
இந்த சந்திப்பு (அதாங்க ஹஸ்பண்டாலஜி பேராசிரியர்/
ரங்கமணிகள் சங்க உறுப்பினர்) எதிர் பாராதவிதமாக
நான் எதிர் பார்த்ததற்கு எதிரும் புதிருமாக நடந்தது.//
:)
உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதா:)? இன்னும் பல பதிவர் சந்திப்பு நிறைவேற வாழ்த்துக்கள்:)!
ஒரு வேளை மாம்ஸ் டீ போட்டதால் இருக்குன்னு நினைக்கிறேன்.;)))//
ஆஹா, இப்படி எத்தனி பேரு கிளப்பிருக்கீங்க தம்பி?
அவ்வ்
.எங்க ஊரில் இதே மாதிரி பதிவர் சந்திப்பெல்லாம் எப்போ வைக்க முடியுமோ???//
நாங்க ரெடி!!!
:)))))
மேடையில் ஏறியாச்சுல...//
:))))
நானும் உங்க கூட சேர்ந்துக்கலாமா?//
வாங்க ஹஸ்பண்டாலஜி வகுப்புக்கு வாங்க.
உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதா:)?
:)))))))))
தும்ப சந்தோஷா
சாலா பாக உந்தி பதிவுலு :-) யாருப்பா அது சால்னா நல்ல இருக்கான்னு கேக்குறது :-)
சாலா பாக உந்தி பதிவுலு :-) //
ஆஹா தன்யவாதாலு எஸ். கே.
தாமிரா விரிவா பதிவு போட்டிருக்காரு.:( :)
பாத்தேன்லு படிச்சேன்லு
என்னது இது காலைல அஞ்சு மணிக்கு ப்ளாக் பக்கம். அடப்பவாமே
என்னது இது காலைல அஞ்சு மணிக்கு ப்ளாக் பக்கம். //
அதிகாலையில் என் தோழி வரவிருந்த ட்ரையின் எங்கே இருக்கிறது என்று பார்க்க கணிணிக்கு வந்தேன். 10 நிமிடம் தாமதம் என்று தெரிந்ததும் மெயில் செக்கினால் உங்கள் பின்னூட்டம்.
பாத்துட்டு பதில் போடாட்டி மீ த பஸ்டு ஆண்டவர் குத்தமாயிடும்.
:)))))))
படங்கள் இல்லாத பதிவர் சந்திப்பா......
ஊஹ்ஹூம்.....
சீக்கிரம் படத்தைப் போடுங்க.
விவரம் பத்தாது.....
அக்கா அக்கா,எனக்கும் எப்படி மசாலா டி போடறதுன்னு சொல்லி குடுங்கக்கா...
படங்கள் இல்லாத பதிவர் சந்திப்பா......
ada! aamam teacher nanga photo edukave maranthu poitom.
:(((
அக்கா அக்கா,எனக்கும் எப்படி மசாலா டி போடறதுன்னு சொல்லி குடுங்கக்கா...//
sari oru pathiva pottudalam
:))))))
//பயந்து பயந்துக்கொண்டே நான் கொடுத்த டீயை
சாப்பிட்டார்கள். //
ஐ லைக் திஸ், உண்மையை கூட ஒத்துக்கிறீங்களே பேஷ் பேஷ் ;)
Post a Comment