Monday, December 15, 2008

குத்தாட்டம், கோலாட்டம், கொண்டாட்டம்!!

குத்தாட்டம், கோலாட்டம், கொண்டாட்டம்!!
இப்படித்தான் இருக்கு இப்ப வீடு!!!

டிசம்பர் துவங்கியதிலிருந்து கவுண்டவுன்
ஸ்டார்ட் ஆகிடுச்சு. தங்களோட ரூமில்
செட்டிங் எல்லாம் மாத்திட்டாங்க.


என் தங்கை(கசின்) எங்ககூடத்தான் இருக்காங்க.
வேலைக்குபோறவங்க. என் பிள்ளைகளுடன் தான்
படுத்துக்கொள்வார். மூவரும் கதை பேசி, சிரித்து
மகிழ்ந்து கிடப்பார்கள்.

"சித்தி, டிசம்பர் 20 - 25 தேதி வரை உங்களுக்கு
இந்த ரூமில் நோ எண்ட்ரி தான்!! இது ஆஷிஷ்.

"எங்கடா போகச் சொல்றத் தம்பி?"
கம்ப்யூட்டர் ரூமில் படுத்துக்கவா? இது தங்கை

"அங்கையும் புக் செஞ்சாச்சு" இது அம்ருதா.

"என்னக்கா ஆச்சு இவங்களுக்கு?"ன்னு என்னிடம்
கேட்டாள், பதிலும் பசங்களே சொல்லிட்டாங்க.

"எங்க ஃப்ரெண்டு வர்றாங்க. அவங்க வந்தா
இந்த ரூமுக்குள்ள அம்மா, அப்பாவுக்கே
எண்ட்ரி இல்ல."

மிக மிக ஆவலுடன் தன்னுடைய நட்பைச்
சந்திக்க காத்துக்கிடக்காங்க.

எங்கெல்லாம் போகணும்? என்னென்ன
செய்யப்போறாங்க, பிரதம மந்திரியின்
டூர் போல் பக்காவா ப்ளானிங் செஞ்சுட்டாங்க.

இப்ப மட்டுமா?

கொஞ்சமா கொசுவத்தி சுத்திக்கறேன்.

அயித்தான் மட்டும் இலங்கையில் இருந்த
நாட்களில் பழக்கமானவர் பாலகிருஷ்ணா.
அவரது மனைவி அண்ணபூர்ணா.
அவர்களுக்கு இரண்டு மகள்கள். பெரியவள் பானு
ஆஷிஷைவிட 1 வயது மூத்தவள், சின்னவள்
தேஜு அம்ருதாவைவிட இரண்டு மாதமே பெரியவள்.
(நான் அம்ருதாவை அம்மா என்று அழைப்பதாள்
தேஜுவை பெரியம்மா என்றுதான் அழைப்பேன்.
அப்படி அழைத்தாள் அவளும் மிக மகிழ்வாள்)

நாங்களும் இலங்கைச் சென்ற பிறகு எனக்கும்
அண்ணபூர்ணாவுக்கும் நல்ல நட்பு. அடிக்கடி
சந்திப்போம். பல இடங்களுக்கு இரு குடும்பங்களும்
சேர்ந்தே செல்வோம். பிள்ளைகளுக்குள்ளும்
நல்ல நட்பாகிவிட்டது.

ஹோட்டலில் விருந்து உண்வதற்குள்
4 பெரியவர்கள்(அதாங்க எங்க வீட்டு
குட்டீஸுகள்) மாநாடு போட்டு
யார்வீட்டுக்கு யார் போவதுன்னு
முடிவு செய்வார்கள்.


SLEEP OVER NIGHTS எங்கே என்பது
முடிவாகிவிடும். அந்த பிள்ளைகள் எங்கள்
வீட்டிற்கோ, இவர்கள் அங்கேயோ போய்
வார இறுதியை கழிப்பார்கள்.

இல்லாட்டி
போன் போட்டு "ஆஷிஷ் எங்க வீட்டுக்கு
வா" என்பாள் பானு. அங்கேயிருந்து போன்
வராவிடில் ஆஷிஷ் போன் போட்டு
பானுவையும், தேஜுவையும் எங்கள் வீட்டிற்கு
வரவழைத்துவிடுவான்.

விளையாட்டு, இஷ்டமான உணவு
என ஜாலியாக இருக்கும். 4 பேரும் ஒரே
அறையில் தூங்குவார்கள். இரவு முழுதும்
பேசிப்பேசி களைத்து நடு நசிக்கு மேல்தான்
தூங்குவார்கள். :) அப்படிப்பட்ட தோழிகள்
வரப்போகிறார்கள் என்பதால்தான் மேற்சொன்ன
ஆட்டமெல்லாம்.

அண்ணபூர்ணா எனக்கு மிக மிக நெருங்கிய
தோழி.பிள்ளைகளுக்கு அவர்கள் தன் வேலையைச்
செய்தால், வீட்டில் உதவினால் என்று நான்
பாயிண்ட்ஸ் கொடுத்து பாக்கெட் மணி அளித்து
அதை வங்கியில் போடும் பழக்கத்தை எனக்குச்
சொல்லிக்கொடுத்தவர். தனக்குத் தெரிந்தவற்றை
நாங்கள் இருவரும் பகிர்ந்துக்கொள்வோம்.

முதல் முறையாக என்னைவிட்டு அம்ருதா
தைரியமாக இருந்தது அண்ணபூர்ணாவிடம்தான்.

அவர்கள் நால்வரும் எங்கள் நால்வருக்கும்
நல்ல நட்பு. நானும் பாலகிருஷ்ணா அவர்களுக்கு
பிடித்த வாழைக்காய் பொடி செய்ய
வேண்டும், அண்ணபூ்ர்ணாவுக்கு பிடித்த
வெள்ளரிக்காய் ஆவக்காய், புளிமிளகாய்
எல்லாம் ரெடியாக வைத்துக்கொண்டு
காத்திருக்கிறேன். :)

ஐமேக்ஸில் சினிமா,தோலாரி தனி, சட்னீசில் சிரஞ்சீவி தோசா,
மெக்டோனால்ட்ஸ் என பிள்ளைகளும் திட்டத்துடன்
காத்திருக்கிறார்கள்

அயித்தானும் அவர்கள் இங்கே வருவதற்குள்
தன் டூரை முடித்துக்கொண்டு அவர்கள் இங்கே
இருக்கும்போது தன்னை ஃப்ரீயாக வைத்துக்கொள்ள
திட்டமிட்டுள்ளார்.

இதோ இந்த வாரம் பிள்ளைகளுக்கு பரிட்சை முடிந்து
அவர்கள் நண்பர்கள் வரும்பொ்ழுது விடுமுறை.
"இன்னும் 4 நாள் தான் இருக்கு, அதுக்கப்புறம்
இங்க என்ன நடக்குதுன்னு மட்டும் நீங்க பாருங்க
சித்தி" என்று சித்திக்கு டெர்ரர் மெசெஜ் கொடுத்து
கிட்டு இருக்காங்க.

"அவங்க ஊருக்குபோனதும் நீங்க என் கிட்டத்தானே
வரணும்" என்ற சித்திக்கு " அது அப்ப பாத்துக்கலாம்
என்ன அண்ணா சொல்ற?!!" என்கிறாள் அம்ருதா.

11 comments:

மோனிபுவன் அம்மா said...

வரப்போற விடுமுறைகளை நாட்களை சந்தோஷமாக கழிக்க

என் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

என் வாழ்த்துக்கள்//

நன்றி மோனிபுவன் அம்மா.

நட்புடன் ஜமால் said...

ஆஹா வருட இருதி கொண்டாட்டமா

நட்புடன் ஜமால் said...

\\"அவங்க ஊருக்குபோனதும் நீங்க என் கிட்டத்தானே
வரணும்" என்ற சித்திக்கு " அது அப்ப பாத்துக்கலாம்
என்ன அண்ணா சொல்ற?!!" என்கிறாள் அம்ருதா.\\

அதுசரி

pudugaithendral said...

ஆஹா வருட இருதி கொண்டாட்டமா//

ஆமாங்க. :))))))))

நாகை சிவா said...

//"அவங்க ஊருக்குபோனதும் நீங்க என் கிட்டத்தானே
வரணும்" என்ற சித்திக்கு " அது அப்ப பாத்துக்கலாம்
என்ன அண்ணா சொல்ற?!!" என்கிறாள் அம்ருதா//

:)))

இனிமையாக அமையட்டும் :)

Thamira said...

அனைவரின் மீதுமான உங்கள் அன்பு பிரமிக்க வைக்கிறது தோழி.!

pudugaithendral said...

இனிமையாக அமையட்டும் :)//

நன்றி சிவா.

pudugaithendral said...

வாங்க தாமிரா,

போறப்போ எடுத்துக்கிட்டு போறது எதுவும் இல்லை. எனக்காக கண்ணீர் சிந்த என் உறவினர் தவிர 4 பேர் இருந்தார்கள் என்றால் அதுதான் என் சொத்து என நான் நினைக்கிறேன்.

SK said...

நல்லதொரு நட்பு.. :-)

குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் :-)

pudugaithendral said...

குழந்தைகளிடம் உங்களின் வாழ்த்தை தெரிவித்து விட்டேன்.