வீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை!
என்ன சாமான் இருக்கு? என்ன சாமான் வேணும்?
இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா!
இருக்கற பருப்பையே வாங்கி வந்திருப்போம், இல்லாட்டி
வாங்க வேண்டிய பொடி்யை மறந்து போயிருப்போம்.
திட்டமிடுதல் சாமான் வாங்குவதிலும் அவசியமாச்சே!
1. முதல்ல சாமான் லிஸ்ட் 1 ரெடி செஞ்சுக்கணும்.
அதில் ஒரு மாசத்துக்கு நமக்கு எவ்வளவு பருப்பு,
எண்ணெய் மத்த சாமான், பேஸ்ட், ப்ரஷ்,
ஷேவிங் க்ரீம் எல்லாம் என்னென்ன
தேவைப்படும்னு எழுதி சமையக்கட்டுல
ஒட்டி வெச்சுக்கணும்.
இது மாஸ்டர் லிஸ்ட்.
(விருந்தாளிங்க வந்தா/பண்டிகை
மாசம் தவிர இந்த அளவு மாறாது.)
2. ஒவ்வொரு மாதமும் இன்னொரு லிஸ்டில்
மாஸ்டர் லிஸ்டில் இருக்கும் அளவுகளை
மட்டும் குறிச்சிட்டா லிஸ்ட் ரெடி.
3. இதனால மறக்காம எல்லா சாமானும்
வாங்கிடலாம்.
4. ஒரே தடவையில் எல்லா சாமானும்
கொண்டு வந்து வெச்சிடறதால அலைச்சல்
மிச்சம், தவிர பணமும் சேமிப்பாகும்.
(அதெப்படி்ன்னு கேட்டா மஞ்சள் தூள்
வாங்கக் கடைக்கு போவோம், அங்க போயிட்டு
வேற ஏதாவது சேத்து வாங்கிடுவோம். அது
குறையுமில்ல!! :)) )
3. கடைக்கு போ்றதுக்கு முன்னாடி போன மாதம்
வாங்கிய சாமான் ஏதும் மிச்சம் இருக்கான்னு
பாத்திட்டு, இந்த மாசத்து லிஸ்டில் அதை குறைச்சு
லிஸ்ட் தயார் செஞ்சுக்கணும்.
லிஸ்டெல்லாம் யாருங்க உக்காந்து எழுதறதுன்னு
கவலைப்படாதீங்க நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக
PROVISION LIST ரெடி.
எனக்கு மெயில் அனுப்புங்க.
லிஸ்டை நான் அனுப்பி வைக்கிறேன்.
ஆங்கிலத்தில் இருக்கும். அதை ப்ரிண்ட் எடுத்து
அதை 13 ஜெராக்ஸ் காப்பி போட்டு வெச்சுக்கோங்க.
1 லிஸ்டை மாஸ்டர் லிஸ்டாக்கி கிச்சனில்
வெச்சுக்கிட்டா, மத்த காப்பிக்களை ஒவ்வொரு
மாதமும் எடுத்து உபயோகிச்சுக்கலாமே!
ஹேப்பி ஷாப்பிங். :))))))))
49 comments:
கலக்கல் ஐடியா, ஆனா இதேமாதிரி என் சரிபாதி (அதாங்க, தாமிரா மொழியில தங்கமணி), ஒவ்வொரு மாதமும், ஸ்டாக் செக்கிங் பண்ணிகிட்டு லிஸ்ட் போடுவாங்க.
நல்ல ஐடியாதான்.
ஒரு அம்பது அறுபது வருசத்துக்கு முந்தி,
ஒரு அம்மா இதேமாதிரி சிந்திச்சுத் தயார் செஞ்ச லிஸ்டை வச்சு லக்ஷக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துருக்கு.
நானும் அந்தம்மா லிஸ்டைப் பயன்படுத்துனவதான். ஆனா அவுங்க சொன்ன அளவில் பாதிதான் நமக்கு வேண்டி இருந்துச்சு. அந்தக் கால ஆட்கள் கொஞ்சம் கூடுதலாச் சாப்புட்டுருப்பாங்க. உடல் உழைப்பு அதிகமா இருந்த காலக் கட்டம்.
அந்தம்மா பெயர் மீனாட்சி அம்மாள்.
'சமைத்துப்பார்' புத்தகப் புகழ்.
சூப்பரூ!
ரொம்ப சிம்பிள் மேட்டர்ன்னு நினைக்கிறதுதான் சில சமயங்களில் அதிகமாக செலவினை செய்ய வைக்கும் அல்லது பல பொருட்களை மறக்கடிக்கும்!
லிஸ்ட் நல்ல எபெக்டிவா இருக்கும்ன்னு நினைக்கிறேன்!
கிச்சன் மாஸ்டர்ஸெல்லாம் மாஸ்டர் லிஸ்ட் வாங்கி வைச்சுக்கோங்கப்பா!
பாஸ்...! எனக்கு லிஸ்ட்ல பொருட்கள் வாங்கி, அதுல ஸ்பெஷலா எதாச்சும் ஸ்வீட் ஐட்டம் செஞ்சு அதை மட்டும் அனுப்பினா போதும் ஒ.கே!
சிஸ்டர் நான் கூட இந்த மாதிரி தான் பண்றேன். ஆனா ஜெராக்ஸ் எல்லாம் எடுக்கறது இல்ல. இப்படி லிஸ்ட் எழுதி வாங்கினத கம்பேர் பண்ணிப்பார்த்தாதான் தெரியுது எவ்வளவு சேமிக்க முடியுதுன்னு:)
:-)))...
எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைங்க...
நன்றி!!!
who is the 1st in the list
ஆகா அருமையான விஷயம்.
எல்லா தங்கமணிகளுக்கும் (சில ரங்கமணிகளுக்கும்)
தேவையான தகவல்
\\திட்டமிடுதல் சாமான் வாங்குவதிலும் அவசியமாச்சே!\\
சரியாச்சொன்னீங்க
சரியானத - சொன்னீங்க
தாமிரா மொழியில தங்கமணி//
அது தாமிரா மொழியில் இல்லீங்க வலையுலக மொழியில். :)
ஸ்டாக் செக்கிங் பண்ணிகிட்டு லிஸ்ட் போடுவாங்க.//
பாராட்டுக்களை அவங்களுக்குச் சொல்லிடுங்க
அவுங்க சொன்ன அளவில் பாதிதான் நமக்கு வேண்டி இருந்துச்சு.//
வாங்க டீச்சர்,
அந்த அளவும் நமக்கு சில சமயம் மறந்திடறதனாலத்தான் இந்த லிஸ்ட்.
பாஸ்...! எனக்கு லிஸ்ட்ல பொருட்கள் வாங்கி, அதுல ஸ்பெஷலா எதாச்சும் ஸ்வீட் ஐட்டம் செஞ்சு அதை மட்டும் அனுப்பினா போதும் ஒ.கே!//
டிக்கெட் வாங்கிக் கொடுங்க நானே கொண்டு வந்து தந்திடறேன்.
:)))))))
ஹலோ ஹலோ வணக்கம் அக்கா,
ரொம்ப ரொம்ப முக்கியமானது
விட்டில் மளிகை சாமான் லிஸ்ட்
போடுவது.
நான் இதை செய்வதில்லை
என்று எங்க அவரு சொல்வாரு
இனிமேல் இதை நானும் கடைப்பிடிக்கிறேன்
லிஸ்ட் கொடுத்ததற்கு நன்றி
அக்காவே
இப்படி லிஸ்ட் எழுதி வாங்கினத கம்பேர் பண்ணிப்பார்த்தாதான் தெரியுது எவ்வளவு சேமிக்க முடியுதுன்னு//
அதேதாங்க. வருகைக்கு மிக்க நன்றி
அனுப்பிடறேன் விஜய்,
வாங்க ஜமால்,
இன்னைக்கு தராசு முந்திகிட்டாரு
\\உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக
PROVISION LIST ரெடி.
எனக்கு மெயில் அனுப்புங்க.
லிஸ்டை நான் அனுப்பி வைக்கிறேன்.
ஆங்கிலத்தில் இருக்கும். அதை ப்ரிண்ட் எடுத்து\\
நல்ல விஷயம்.
Management-ல கத்துகிட்டது போல.
சரி எனக்கு ஒரு லிஸ்ட் அனுப்புங்க
அதை நான் சிறு மென்-பொருளாக செய்து தருகிறேன். Excel-மூலம்.
எனக்கு தெரிந்தவரை.
//சரி எனக்கு ஒரு லிஸ்ட் அனுப்புங்க
அதை நான் சிறு மென்-பொருளாக செய்து தருகிறேன். Excel-மூலம்.
///
சூப்பர் ஜமால்! வெயிட்டிங்! புதுகை அனுப்பிடுங்க..ப்ளீஸ்..ஜமாலுக்கு!
list அனுப்பறேன் மோனிபுவன் அம்மா.
ஜமால் உங்க ஐடி தெரியாது.
pdkt2007@gmail.com
இதுக்கு ஒரு டெஸ்ட் மெசெஜ் அனுப்புங்க.
நல்ல விஷயம். எனக்கு ஒரு காப்பி அனுப்பி வைங்க. அப்படியே ஆயில்ஸ் சொன்ன மாதிரி :-))
/* எனக்கு லிஸ்ட்ல பொருட்கள் வாங்கி, அதுல ஸ்பெஷலா எதாச்சும் ஸ்வீட் ஐட்டம் செஞ்சு அதை மட்டும் அனுப்பினா போதும் ஒ.கே! */
லிஸ்ட் வேணும்னு சொல்லியிருக்கற பலரது மெயில் ஐடி எனக்குத் தெரியாது.
என்னுடைய ஐடி கொடுத்திருக்கேன்.
ஒரு மெயிலை தட்டி விடறது.
ஜமால் உங்க மெயிலுக்காக வெயிட்டிங்.
adiraijamal@gmail.com
//கடைக்கு போ்றதுக்கு முன்னாடி போன மாதம்
வாங்கிய சாமான் ஏதும் மிச்சம் இருக்கான்னு
பாத்திட்டு, இந்த மாசத்து லிஸ்டில் அதை குறைச்சு
லிஸ்ட் தயார் செஞ்சுக்கணும்.//
அதுனாலதான் பெட்ரோல் உற்பத்திய குறைக்கப் போராங்கலாம்
அதுனாலதான் பெட்ரோல் உற்பத்திய குறைக்கப் போராங்கலாம்//
:)
ஜமால்,
இன்னைக்கு நாந்தான் ப்ர்ஷ்டூடூடூ,
@ அதிரை ஜமால்,
//எல்லா தங்கமணிகளுக்கும் (சில ரங்கமணிகளுக்கும்)//
ரங்கமணிகளுக்கு எதுக்குன்னுதான் புரியல.
@ புதுகை தென்றல்
//பாராட்டுக்களை அவங்களுக்குச் சொல்லிடுங்க//
நாங்க என்னதான் பண்ணாலும் தங்கமணிகளைத்தான் பாராட்டச் சொல்றாய்ங்க,
தென்றலக்கா,
தங்கமணிக லிஸ்ட் போடறதோட சரி, அத போய் கடைல ஒரு மணி நேரம் நின்னு, தூக்கி சுமந்து வீட்டுக்கு கொண்டு வர்ரதென்னவோ அப்பவுமே ரங்ஸ் தான், அதிலேயும், வெள்ளைப்பூண்டு இந்தக்கடையில வாங்கு, பச்சரிசி அந்தக்கடையில வாங்கு, புளி செட்டியார் கடையில வாங்குனு, ஊர்ல இருக்கற அத்தனை கடையோட பேரும் நமக்கு மாத்திரம் சொல்வாங்க, ஆனா அவிங்க போனங்கன்னா எல்லாம் ஒரே கடையில OK,
இதுல தென்றலக்கா பாராட்டச் சொல்றாய்ங்க,
ரங்ஸ்களா கொஞ்சம் பக்கத்துல வந்து நின்னு ஆதரவு குடுங்கப்பா!!!
விஜய் ஆனந்த் said...
:-)))...
எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைங்க...
நன்றி!!!
ப்ரூவா...இல்ல பில்டரா..?
அக்கா எங்க வீட்டில் அடிக்கடி பூரிக்கட்டை விரும்பி வாங்கறாங்க....மளிகை செலவில் இதை குறைத்து மிச்சம் பன்ன எதாச்சும் வழியிருக்கா..?
pls send one copy to me also..
my id krishper@gmail.com
Thanks
ஜூப்பரு!
////சரி எனக்கு ஒரு லிஸ்ட் அனுப்புங்க
அதை நான் சிறு மென்-பொருளாக செய்து தருகிறேன். Excel-மூலம்.
///
சூப்பர் ஜமால்! வெயிட்டிங்! புதுகை அனுப்பிடுங்க..ப்ளீஸ்..ஜமாலுக்கு!
//
ப்ளீஸ் அனுப்பிடுங்க தென்றல் ...எனக்கும் சேர்த்து தான் .
எனக்கும் :)
லிஸ்ட் நல்ல கலக்கலா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
நல்ல ஐடியா.
எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைங்க.
நன்றி.
செமங்க!!!
Can you send me a copy of the Provision List.
Thanks
sorry uma i have deleted your email id. pls email me at pdkt2007@gmail.com
Hi,
Can you please share that list with me.
Thanks
மேலே இருக்கும் பின்னூட்டத்தில் என் மெயில் ஐடி இருக்கு. ஒரு மெயில் தட்டுங்க. அனுப்பிவைக்கிறேன்
Hi,
How are you?
I have sent mail. Yet to get reply from you.
Thanks
mail varla, please re send
hi
madam pls send me a copy of provision list i ve missed my old one. pls its urgent
with best regards,
mayu
kindly send me u r email id. thanks mayu
எனக்கு ஒரு காப்பி PLEASE - nakeeran@yahoo.com
எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைங்க...
எனக்கும் ஒரு காப்பி அனுப்பி வைங்க
vasmegh@gmail.com
எனக்கும் மளிகை பொருள்கள் லிஸ்ட் அனுப்பி வைப்பீர்களா?
kalyanii2002@gmail.com
இந்தப்பதிவு 2008ல எழுதினது. இப்ப அந்த லிஸ்ட் என்கிட்ட இல்லை. அதனால மளிகை சாமான் லிஸ்ட் கேட்பவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. மன்னிக்கவும்.
Please Monthly grocery list.
Thank you very much.
mail id : sakthivelg151186@gmail.com
Post a Comment