Friday, January 09, 2009

மருந்தாகும் உணவு!

டாக்டர் பாக்கச் சொன்னபடி ந்யூட்ரீஷயனைப் பார்த்தோம்.
ரொம்ப சின்ன பொண்ணாக தெரிந்தார்!!
(உன்னைவிட எனக்கு 4 வயது அதிகம்னு அவர்
சொன்ன போது மயக்கம் வராத குறை எனக்கு!
சும்மா சிக்னு இருந்தார்.)

“எது உன்னை என்னிடம் வரவழைத்ததுன்னு”,
அழகா கேட்டார். மிக நட்புடன் பேசிய அவரது
பேச்சும் பி்டித்திருந்தது.

விவரங்கள் சொன்னேன். அவரும் என் உடலில்
நடக்கும் நிகழ்வுகளைச் சொன்னார். இந்த
நேரத்தில் உணவு, உடற்பயிற்சி மிக அவசியம்.
அப்படின்னு சொல்லிட்டு என் உணவுப் பழக்க
வழக்கங்கள், உடற்பயிற்சி ஏதும் செய்கிறேனா?
எல்லாம் கேட்டார்.

“ம்ம்! நல்ல அவேர்ன்ஸுடன் தான் இருக்கீங்க”ன்னு
பாராட்டுதல் வேற கிடைச்சது. ( வெக்கம் வெக்கமா
இருக்கு!!) ஆனால் சில மாற்றம் செய்யணும்னு
சொல்லிட்டு டயடில் சிறு மாற்றம், காலையில்
வாக்கிங்கிற்கு பதில் யோகா, மாலையில் வாக்கிங்
என்று மாற்றினார்.

உணவில் கார்போஹைட்ரேட் குறைவு,
காய்கறி, பழங்கள் அதிகம், தயிர்
3 வேளையும் கட்டாயம் எடுத்தல் என
சின்ன மாற்றம் தான். ( இரவு நான் சாப்பிடுவதே
3 ரொட்டி. அதையும் 1 ரொட்டியா மாத்தினது
மட்டும்தான் குறை.:( )

எனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கண்டிப்பா
செய்யணும்னு சொன்னார். இரவு தூங்குமுன்
சூடா பால் கொஞ்சம் குடிக்கணும் என்பது தான்.
அது தான் எனக்கு தூக்கத்தைக் கொடுக்கும்னு
சொன்னார். ஆனா அந்த நேரத்தில் பாலா!
நம்மால அவாதே! (இதுக்கு மட்டும் தினமும்
அயித்தான் திட்டிகிட்டே இருக்காரு :( )

( சொல்ற எல்லாத்தையும் கேட்டுப்புட்டாலும்
தப்பாயிடும்ல! :)))) )

ஹோம் மேக்கர்களைத் தான் இந்த நோய்
அதிகம் தாக்குதுன்னு சொன்ன்வர் எனக்கு
சில டிப்ஸ்களைச் சொன்னார். அதை
உங்களுக்கும் சொல்றேன். வருமுன் காப்பது
நல்லதாச்சே!

1. வீட்டு வேலைகளை முடித்தோ, முடிக்குமுன்னரோ
வாக்கிங் செல்ல வேண்டாம். ( டயர்டாகி விடுவோம்)
ஸ்டெமினாவை பேலன்ஸ் செய்ய யோகா போன்றவைகளை
காலையில் செய்ய வேண்டும்.

2. காலை உணவு அவசியம் சாப்பிடணும்
(2 இட்லி போதும். தேங்காய்ச் சட்னி நோ சொல்லிடுங்க.
காபி டீக்கு பதில் திக் மோர் 1 டம்பளர் வரை
சாப்பிடணும்.


3)வேலை வேலைன்னே எப்போதும் ஓடாமல்
வேலைகளை முடித்துவிட்டு அதிகம் அவைப்
பற்றி நினைக்காமல் இருக்கணுமாம்.
(உதாரணத்திற்கு: ஒரு அறையை சுத்தம்
செய்வதானால் சுத்தம் செய்து விட்டு அதை
பூட்டி வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டே
நகர்ந்து போய் விட வேண்டும். மறுபடி
மறுபடி அந்த அறையேயே பார்த்துக்கொண்டிருந்தால்
மனமும் க்ளீனிங்க் செய்வதைப் பத்தியே
ஓடுமாம்)

3அ. திட்டமிட்டு வேலைகளை முடித்து விட்டு
கண்டிப்பாக புத்தகம் படித்தல், பாடல் கேட்டல்
போன்றவைகளைச் செய்ய வேண்டும்.
(காலை 10- 11 சரியான நேரம் இதற்கு)
கொறிக்க பழங்களை பக்கத்துல வெச்சுக்கணும்
:), வாழைப்பழம் சாப்பிட்டா வெயிட்
அதிகமாகிடும்.


4. 3 வேளையும் தயிர் கண்டிப்பாக உணவில்
சேர்க்கபடணும். உடலில் ஏற்படும் மாற்றங்களை
மட்டுப்படு்த்த உதவும்.

5. சிறு அளவில் நாளைக்கு 5 முறை உண்ண வேண்டும்.
அதில் 2 முறை வெறும் பழங்கள் மட்டுமே!

6. காபி/ டீ குடிக்காமல் இருந்தால் நல்லதாம்.
(அதிலும் பீ.எம்.எஸ் இருக்கிறவங்க காபியை
தவிர்த்தல் நலம்.) சோயாமில்க் சாப்பிடலாம்.

7. தினம் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாக்காய்,
பப்பாளி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

8. உணவில் பருப்பு, காய்கறி, தானிய வகைகள்
இருத்தல் அவசியம்.

மொத்தத்துல உடம்புக்கு நல்லதில்லைன்ன
அதை வாயில போடாம இருக்கறது நல்லதாம்!

அதைவிடவும் அவசியம் உடற்பயிற்சி.

இங்கே எனக்கொரு விஷயம் பேசணும்?

எத்தனை பேரு விட்டில் பெண்கள் உடற்பயிற்சி
செய்யறாங்க?

இதுல நிறையபாயின்ட்ஸ் இருக்கு!!

1. நேரமில்லை.
2. அவசியமென்று சிலருக்கு தோணாது.
3. அப்படியே செய்ய நினைத்தாலும்
“காலங்கார்த்தால் வேலை செய்யறதை
விட்டுட்டு எக்சஸைஸ் என்ன வேண்டியிருக்கு”!
என பேச்சுக் கேட்க நேருமே என்கிற பயம்.
4 வீட்டு வேலை செஞ்சாலே பெரிய எக்சஸைஸ்
தான்” எனும் தவறான நினைப்பு.
5. மாலையில் பள்ளியிலிருந்து திரும்பும்
பி்ள்ளைகளை கவனிக்க, கணவனுக்கு காபி
போட என போய் விடும்.

ஆனால் இதற்கிடையிலும் அவர்கெளுக்கென
ஒரு நேரத்தை ஒதுக்கி (வீட்டுல இருக்கற
மத்தவங்க ஒதுக்கி கொடுத்தாத்தான் உண்டு!!:( )
உடற்பயிற்சி செய்வதை அவசியாமாக்கிகணும்.

30 நிமிட நடை போதும். முடிந்தால் தெரிந்தால்
யோகா செய்வது மனதை அமைதிப் படுத்தும்.

பெரிய நோயா இல்லாட்டி போனாலும்
முறையா கவனிக்கப் படாவிட்டால்
மனநோயாக மாறும் அபாயம் இருக்கு.
அதனால் உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க!

(நான் என்னைய நல்லா கவனிச்சிக்க
ஆரம்பிச்சாச்சு! :) )

22 comments:

நிஜமா நல்லவன் said...

நான் படிச்சிட்டேன்...படிக்க சொல்லுறேன்...:)

ராமலக்ஷ்மி said...

நல்ல பயனுள்ள பதிவு. டயட்டில் இருக்கும் விஷயங்களை கண்டிப்பா பரீசலனை பண்ணுவார்கள் எல்லோரும் என நம்புகிறேன். உடற்பயிற்சி..முன்னரே உங்களிடம் சொன்ன மாதிரி ட்ரட்மில்தான் ஓட்டறேன். பார்க்கலாம், சம்மர் வந்ததும் வெளியில் நடக்கிறேன்:)!
அப்புறம் முன்னர் நீங்க வாசிப்புக்கென ஒரு நேரம் ஒதுக்குவதாக குறிப்பிட்டிருந்ததையும் கடைப் பிடிக்கிறேன். படிக்கணும்னு வாங்கி அடுக்கப் பட்டே இருந்தவற்றை இப்போது முடிக்க முடிகிறது. அதற்கு ஒரு தனி நன்றி.

சந்தனமுல்லை said...

very informative!

pudugaithendral said...

வாங்க நல்லவன்,

கண்டிப்பா படிக்கச் சொல்லுங்க.

pudugaithendral said...

ஆஹா வாங்க ராமலக்‌ஷ்மி,

அடுக்கப் பட்டே இருந்தவற்றை இப்போது முடிக்க முடிகிறது//

ரொம்ப சந்தோஷமா இருக்கு

வெண்பூ said...

//
பெரிய நோயா இல்லாட்டி போனாலும்
முறையா கவனிக்கப் படாவிட்டால்
மனநோயாக மாறும் அபாயம் இருக்கு.
அதனால் உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க!
//

நல்ல அறிவுறை தென்றல்.. உங்கள் அனுபவம் மட்டுமே கொடுத்திருந்தாலும் அதில் நாங்கள் அறிந்து / புரிந்து கொள்ள நிறைய விசயங்கள் இருக்கு..

//
கணவனுக்கு காபி
போட என போய் விடும்.
//
ஹி..ஹி.. ஐ லைக் திஸ்.. :)))

pudugaithendral said...

வாங்க வெண்பூ,

ரொம்..........ப நாளைக்கப்புறம்
வந்திருக்கீங்க.

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி
சந்தனமுல்லை

அமுதா said...

/*மொத்தத்துல உடம்புக்கு நல்லதில்லைன்ன
அதை வாயில போடாம இருக்கறது நல்லதாம்!*/
சொல்றது ஈசி. செய்வது :-((. இதுதானே எல்ல பிரச்னைகளின் ஆணிவேர்.

/*அதனால் உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க!*/
கண்டிப்பா.. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். மீண்டும் நன்றி, பகிர்ந்த விஷயங்களுக்கு

Kumky said...

எக்ஸைஸ் லிஸ்ட்ல முக்கியமான ஒன்னு விட்டுபோயிருக்காம்...இங்க ஒருத்தர் முனகறாங்க....அது..வந்து
மாமியார்களை பழிவாங்கும் சீரியல்களை எப்போ பார்ப்பதாம்.(அதுதான் முக்கியமான ட்யூஷன் நேரமாம்).

pudugaithendral said...

சொல்றது ஈசி. செய்வது :-((. இதுதானே எல்ல பிரச்னைகளின் ஆணிவேர்.//

வாங்க அமுதா.
அந்த டாக்டர் சொன்ன இன்னொரு விஷயம்.

“நம்ம இந்தியர்களுக்கு சாப்பிடும் உணவால்தான் பிரச்சினைன்னு சொன்னா ஏத்துக்க கூடிய மன்பக்குவம் இன்னமும் வரலை” என்பதுதான்.

வயிறு நிறைய சோறு சாப்பிடு என்பார்கள். சோறு மட்டும் அதிகம் சாப்பிட்டால்.....

எவ்வளவு பெரிய குடும்பமாக இருந்தாலும் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு கப் பருப்புத்தான் வைப்பாங்க.

சரிவிகித உணவெங்கே?

விரிவா ஒரு பதிவு அடுத்து வருது.

pudugaithendral said...

எக்ஸைஸ் லிஸ்ட்ல முக்கியமான ஒன்னு விட்டுபோயிருக்காம்...இங்க ஒருத்தர் முனகறாங்க....அது..வந்து
மாமியார்களை பழிவாங்கும் சீரியல்களை எப்போ பார்ப்பதாம்.(அதுதான் முக்கியமான ட்யூஷன் நேரமாம்).//

:))))

Thamira said...

அய்யய்யோ உங்களக்கவனிக்காம நானும் இதே மாதிரி ஒருபதிவ இப்பதானே போட்டுட்டு வர்றேன்.(ஆனா சிம்பிளா)! ஆமா அந்த டயட்டீஷியனைப்பற்றி மேலே ஒண்ணுமே சொல்லலியே.!

Thamarai said...

romba nalla post..PMS awareness kku romba nandri!

Poornima Saravana kumar said...

பெண்களுக்கு உபயோகமான நல்ல பதிவு..

சுரேகா.. said...

ரொம்ப உபயோகமா எழுதியிருக்கீங்க!

இங்க ஒரு நிரந்தர ரசிகை உங்களுக்கு உருவாகி படிச்சுக்கிட்டிருக்காங்க!(தங்கமணிதான்)

நான் ஊரில் இல்லாவிட்டாலும் உங்க பதிவை மட்டும் படிச்சுட்டு சொல்லுவாங்க! ஆனா பின்னூட்டம் போட மாட்டேங்கிறாங்க! ஏன்னு தெரியலை :)

இதுல இன்னோரு உள்குத்தும் ஆகிப்போச்சு!

நீங்கள்லாம் உருப்புடியா எழுதுறீங்களாம்.. நாங்கள்லாம் நடக்காத விஷயத்தை கற்பனை பண்ணி எழுதுறோமாம். ! :((

வாழ்த்துக்கள் ! :)

pudugaithendral said...

அந்த டயட்டீஷியனைப்பற்றி மேலே ஒண்ணுமே சொல்லலியே.!//

ரமா ஊர்லெர்ந்து இன்னம் வர்லியா?????

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி தாமரை

pudugaithendral said...

பெண்களுக்கு உபயோகமான நல்ல பதிவு..//

நன்றி பூர்ணிமா.

pudugaithendral said...

இங்க ஒரு நிரந்தர ரசிகை உங்களுக்கு உருவாகி படிச்சுக்கிட்டிருக்காங்க!(தங்கமணிதான்)//

ஆஹா சந்தோஷமா இருக்கு.

//நான் ஊரில் இல்லாவிட்டாலும் உங்க பதிவை மட்டும் படிச்சுட்டு சொல்லுவாங்க! ஆனா பின்னூட்டம் போட மாட்டேங்கிறாங்க! ஏன்னு தெரியலை :)

ஏன்???? (இதை தில்லானா மோகனாம்பள் படத்தில் மனோரமா சொல்வது போல் படிக்கவும் )

Expatguru said...

மிக பயனுள்ள தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள். ஒரு விஷயம். அரிசி சோறை (rice or rice-based foods) ஒரேயடியாக சில வாரங்களுக்கு நிறுத்தி பாருங்கள். நான் இதை மிகவும் கண்டிப்பாக கடைபிடித்து வருகிறேன். ஆரம்பத்தில் சிறிது கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் போகப்போக பழகி விடும். இன்னொரு விஷயம். மைதாவினால் செய்த பண்டங்களை தவிர்த்துவிடுங்கள். காலை சிற்றுண்டிக்கு இரண்டு wheat bread எடுத்துக்கொள்ளுங்கள்.பசி எடுக்கும்போது ஒரு வெள்ளரிக்காயையோ அல்லது காரட்டையோ சாப்பிடுங்கள். கண்டிப்பாக இது பலன் கொடுக்கிறது.

pudugaithendral said...

வாங்க எக்‌ஷ்பாட் குரு,

சரியாச் சொன்னீங்க. அரிசி சோற்றின் அளவைக் குறைச்சாலே பிரச்சனை தீர்ந்தது.

இதைப்பத்தி விரிவா பேசணும்.

பொங்கல் கொண்டாட்டம் முடியட்டும் வர்றேன்.