முன்பு ஒரு கதை எழுதியிருந்தேன்.
ஞாபகப்படுத்திக்க பாகம்:1
பாகம்:2 .
அந்தக் கதையில் குறிப்பிட்டிருந்த P.M.Sஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
பலரில் நானும் ஒருத்தி. டாக்டர் வந்தனா பன்சால் (அப்போலோ-கொழும்பு)
எனக்கு என்ன நேர்கின்றது என்பதை ஓரளவுக்கு புரியவைத்தார்.
அயித்தானிடமும் பேசியதால் அவருக்கும் என் நிலை
புரிந்து எனக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.
என் போறாத காலம் அந்த டாக்டர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
வேறு டாக்டரிடம் போக ஏனோ மனதில்லை!
அவர் கொடுத்திருந்த மல்டி விட்டமின்களை மட்டும்
சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
மாதாமாதம் நான் படும் அவஸ்தை சொல்லில்
அடங்காது!
15 நாள் சக்கரமாக சுழலும் நான் 10 நாள் படிப்படியாக
ஓய்ந்து விடுவேன். சில நாட்கள் பேசக்கூட முடியாமல்
லோ பீபீ ஆகி்விடும். (எஸ் எம் எஸ் அடித்துதான்
நான் சொல்ல நினைப்பதை சொல்ல முடியும்!)
ஆஷிஷை உண்டாகி இருந்த பொழுது எனக்கு
(ஹைதையில்) மருத்துவம் பார்த்த
கைனகாலஜீஸ்டை அணுகி
என் பழைய ரிப்போர்ட்களைக் காட்டி என்
நிலையைச் சொன்னேன். (அந்த நேரத்தில்
உபாதையுடன் தான் சென்றேன்!!)
ரிப்போர்டை எல்லாம் பார்த்துவிட்டு அவர்.
பயப்பட ஒன்றும் இல்லை. என்று
சொல்லிவிட்டு சொன்னது இதுதான்.
"உனக்கு ஒன்றும் இல்லை.உனக்கு
மனதில் ஏதோ வருத்தம் இருக்கிறது!
உன் கணவருடன் சண்டையா?
குடும்பத்தில் ப்ரச்சனையா? என
கேள்விக் கணையைத் தொடுத்தார்.
இல்லாத ஒன்றை இருப்பதாக எப்படிச்
சொல்ல முடியும்!
அப்படி ஏதும் இல்லை என்றால் நீ நடிக்கிறாய்!
U are acting to divert u r husband's mind!!
என்றார். அயித்தான் போகலாம் எழுந்துவா
என்று கூட்டி வந்துவிட்டார்.
2 மாதம் பழைய மருந்தையே எடுத்துக்கொண்டேன்.
அவதி தாளமுடியாமல் இன்னொரு மருத்துவரைப்
பார்த்தேன். அவர் ப்ளட் டெஸ்ட், தைராய்டு
டெஸ்ட் எல்லாம் செய்து பார்த்துவிட்டு
ப்ரச்சனை ஏதும் இல்லை. நாங்கள் இதை
P.M.S என்று சொல்வோம், என கூறி
சில விட்டமின் மாத்திரைகள், கால்சியம்
கொடுத்தார். அவைகளை எடுத்துக்கொண்டும்
எந்தப் பலனும் இல்லை.
பாடப்பாட ராகம், முனக முனக ரோகம்
என பாட்டி சொல்வார். எனக்கு இருப்பது
வியாதி அல்ல. அதைப் பற்றி நான் நினைக்கவே
கூடாது என முடிவு செய்து பிளாக்கில் எழுதுவது,
படிப்பது, யோகா, பாட்டு, என என்னை ரிலாக்ஸாக
வைத்துக்கொண்டாலும் அந்த 10 நாள் கொடுமை
அதிகமாகவே இருந்தது.
சமீபகாலமாக மாதவிடாய்க்கு முன்னர் படுத்த
படுக்கையாகி அவதி ஜாஸ்தி ஆகி விட்டது.
இருந்த இடத்தில் சாப்பாடு கொடுத்தால் தான்
உண்டு. எழும்பவே முடியாத நிலை!
பள்ளி செல்லும் பிள்ளைகள்! புது இடத்தில்
அலுவலகம் அமைத்துக்கொண்டிருக்கும் அயித்தானின்
வேலை இவைகளுக்கு என்னால் இப்படி இடைஞ்சல்
ஏற்படுகிறதே என்று மிக வருத்தமாக இருந்தது.
அந்தக் கதையில் கூறியிருந்த சிம்ப்டம்ஸ்
மிக அதிக அளவில் இருந்தது. 1 நாள் முழுதும்
சாப்பிடக்கூட முடியாது!
என்னை எப்படியும் ஒரு நல்ல டாக்டரிடம்
காட்ட வேண்டும் என அயித்தான் பலரிடம்
விசாரித்துக்கொண்டே இருந்தார். தெரிந்தவர்
ஒருவரின் மருமகள் இங்கே RAINBOW HOSPITALS
(CHILDREN'S HOSPITAL AND PERINATAL CENTRE)ல்
(மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவம்)
மகப்பேறு மருத்துவராக இருக்கிறார் என
அவரின் நம்பர் கொடுக்க அயித்தான்
அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி என்னை
அழைத்துச் சென்றார்.
பல மருத்துவரை சந்திப்பு என்னை
நம்பிக்கையற்றவளாக ஆக்கியிருந்தது.
நம்பிக்கையே இல்லாமல்
அவரை சந்தித்தேன். அவர் என்
ஃபைலை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
அவர் பேசப் பேச எதற்கும் கண்ணீர்
விடாத என் கண்களிலிருந்து நீர்!!
என்ன பேசினார்?
அடுத்த பதிவில் அதுதான்.
(இந்தப் பதிவு ரொம்ப பெருசாயிடுச்சுன்னு
திட்டாதீங்க! என்னைப் போல பாதிக்கப்பட்ட
பலருக்கு இது உபயோகமா இருக்கும்னே
இவ்வளவு பெரிய புலம்பல்
17 comments:
\\"மருத்துவர் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்."\\
உண்மைதான் ...
\என்ன பேசினார்?
அடுத்த பதிவில் அதுதான்.\\
தொடர் கதையின் டச் ...
வாங்க ஜமால்,
நம்ம வாழ்க்கையே ஒரு பெரிய தொடர்கதை ஆச்சே!
:)))))))
சஸ்பென்ஸ் தாங்கல! அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க!
ஒவ்வொருவரும் சொல்ற விதம் மாறுதலா இருக்கும் :-)
நீங்க முன்ன எழுதின படிக்கும் பொது எனக்கு எங்க அம்மா நெனப்பு தான் வந்திச்சு. அவுங்களும் இது மாதிரி அவஸ்தை பட்டு இருக்காங்க. ஆனா எங்களுக்கு எல்லாம் ஒன்னும் புரியாத வயசு.. ஒண்ணுமே செய்ய முடியாம இருந்து இருக்கோம். :( :( அதை நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருந்திச்சு .( :(
ஆ..என்னக்கா பதிவு இப்படி அதிர்ச்சியா போய்ட்டிருக்கு..?
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு
வாங்க ராமலக்ஷ்மி,
இதோ அடுத்த பதிவு போடறேன்.
வாங்க எஸ்.கே,
வீட்டுல அம்மாவுக்கு என்ன நடக்குதுன்னு பலருக்குத் தெரியாது. அது ஆண்பிள்ளையோ/ பெண்பிள்ளையோ நிலமை இதுதான்.
அம்மாவும் தனக்கு இப்படி இருக்கிறது என்று சொல்லாமலே இருந்துவிடுவார்கள்.(தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லத் தயங்குவாள்)
நான் அதிலிருந்து சற்று மாறுபட்டு எனது 12 வயது மகனுக்கு எனது உபாதை, மூட்ஸ்விங், எல்லாம் சொல்லியிருக்கிறேன்.
இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது நான் கோபப்படும்படி நடந்துகொள்வதில்லை. எப்போதையும் விட அதிக அளவில் உதவி செய்கிறான்.
அயித்தானும், பிள்ளைகளும் உதவுவதால்தான் என் நிலை சற்று பரவாயில்லை.
அதிர்ச்சிப்படாதீங்க கும்க்கி,
இது இயல்பான விஷயம் தான். பலருக்கு இது குறித்து தெரிந்திருக்கவில்லை.
:)
காத்திருத்தலின் சுகத்தை உணர்ந்திருக்கும் அமுதா உங்களை அதிகம் காக்க வைக்காமல் இதோ அடுத்த பதிவு.
:)))))))
என்னங்க ஆச்சு!!
பதற்றம் எங்களையும்
தொற்றி விட்டது
தொற்று நோய்
போல!!
தேவா..
அடுத்த பதிவு போட்டாச்சே தேவா.
பாருங்க.
அன்பின் புதுகைத் தென்றல்
நலமா ? உடல் நலம் சரியில்லையா ? கொஞ்ச நாளா நான் இந்தப்பக்கம் வரலே !
மனம் கலங்குகிறது
அடுத்த பதிவப் பாத்துட்டு வரேன். பாகம் 1 பாகம் 2ம் பாத்துடறேன்
சீக்கிரமே உடல் நலம் தேறி பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனின் கருணை துணை இருக்க வேண்டுகிறேன்.
பல மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் - சில மருத்துவர்கள் தான் வந்தனா மாதிரி இருக்கிறார்கள். நோயாளியின் மனநிலை உடல்நிலை இவற்றை அறிந்து அவரின் மனம் மகிழும் படி மருத்துவம் செய்து ஒரு மதிப்பினைப் பெறும் மருத்துவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவே ! நாம் அடிக்கடி பல ஊர்களுக்குச் செல்வதினால் பல புதிய மருத்துவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் நம்மைச் சோதித்து விடுகிறார்கள். என்ன செய்வது
ஹைதையில் உங்களுக்கு மருத்துவம் பார்த்த கைனகாலஜீஸ்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்றே சொல்வேன். என்ன தான் இருந்தாலும் தன்னிடம் கஷ்டத்துடன் வந்த நோயாளியிடம் இப்படியா பேசுவார்? உங்க அயித்தான் பண்ணினது சரிதான்.
வாங்க அநந்யா,
அதான் ஃப்ரொபஷனல்ஸ் கிட்ட இருக்கற கெட்ட குணம்னு சொல்வது.
வருகைக்கு நன்றி
Post a Comment