சிவராத்திரி முடிஞ்சதும் சிவ சிவான்னு குளிர்
போயிடும்னு எங்க பாட்டி சொல்வாங்க.
சிவராத்திர்க்கு முன்னாடியே குளிர் குறைஞ்சிடுச்சு.
:(
திங்கள்கிழமை சிவராத்திரி முடிஞ்சதும் தன்னோட
வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாரு சூரிய பகவான்.
சென்ற வருடத்தோடு ஒப்பிடும்பொழுது நேற்று
வெப்பநிலை 39 டிகிரியாம். 5 டிகிரி அதிகமாயிடுச்சாம்.
அனல் காத்து வீச ஆரம்பிச்சிடிச்சி
இப்பவே இந்த நிலைன்னா? மே மாசம் கேக்கவே
வேண்டாம். ஆனந்த தாண்டவமாடிடுவார் சூரியன்
அண்ணாச்சி. 44 டிகிரியையும் தாண்டிடுமோன்னு தோணுது.
வெயிலோட கொடுமைக்கு ப்ளம்பர், கார்பெண்டர் கூட
வேலைக்கு வரமாட்டாங்க. சாயங்கலமா வர்றோம்
அப்படின்னு ஊட்டுலையே உக்காந்துக்குவாங்க.
என் பசங்களுக்கு மார்ச்ல 2 வாரம் விடுமுறைக்கப்புறம்
பள்ளி திறந்து ஏப்ரல் கடைசியில் விடுமுறை கொடுக்கும்
வரை மதியம் 12 மணிக்கே ஸ்கூல் விட்டுவாங்க.
ஏப்ரல் மேல 4 மணிநேர கரண்ட் கட் இருக்கும்.
இந்த 3 மாசம் மட்டும் தாக்காட்டிட்டா அப்புறம்
ஹைதை சொர்க்கம். :)))
வெயில் காலம் பாட்டி அதிக சூடு இல்லாமல்
உடம்புக்கு சூடு ஆகாத சாப்பாடா கொடுப்பாங்க.
புளியை குறைச்சு, தக்காளி அதிகமா சேப்பாங்க.
வீட்டில எப்பவும் ஸ்ரீராம நவமி தான். (கரைச்ச மோர் :)) )
வெள்ளரிக்காய், நுங்கு, இளநி வாங்கி கொடுப்பாங்க.
மதியம் 4 மணி வாக்கில் நல்லா சில்லுன்னு தயிர்
சோறு பிசைஞ்சு தொட்டுக்க வெங்காயம் வெச்சு
கொடுப்பாங்க. வயித்துல போனதும் உடம்பு
சில்லுன்னு ஆயிடும். ( இப்பவும் வெயில்காலத்தில் என்
ஊறுகாய் பழக்கமெல்லாம் மூட்டை கட்டி
வெச்சிட்டு வெங்காயத்தை தான் எடுப்பேன். :( )
அப்பல்லாம் வீட்டில் ஃப்ரிட்ஜ் கிடையாது.
பாட்டி நல்ல மண் பானை வாங்கிவந்து
கழுவி சுத்தமாக்கி கீழே மணல் பரப்பி,
பானையை வெச்சு அதுல தண்ணி ஊத்தி
வைப்பாங்க. ஏலக்காய், வெட்டிவேர்னு தினத்துக்கு
ஒண்ணு போடுவாங்க. சீரகம் போட்டத் தண்ணி
சூப்பரா இருக்கும்.
மண்பானையை சுத்தி ஒரு வெள்ளைத் துணி
போட்டு வெச்சிருப்பாங்க. அந்தப் பக்கம்
போகையில் 1 டம்பளர் தண்ணி எடுத்து
மண்ணுலையும், துணி மேலையும் ஊத்தி
வெச்சா பானைக்குள்ள தண்ணி ஜும்ம்மா
ஜில்லின்னு இருக்கும்.
வெயில் காலம்னா பானைத்தண்ணிதான்.
இலங்கையில் இருந்தப்ப கூட வெள்ளவத்தைக்கு
போய் வருசா வருஷம் புது பானை வாங்கிகிட்டு
வந்து தண்ணி ஊத்தி வெப்பேன். என் தோழிகள்
கூட எங்க வீட்டு பானைத்தண்ணி குடிக்க
வந்துட்டு போவாங்க.
இதோ இன்னைகு காலேல பானை கண்ணுல
பட்டதும் வாங்கிகிட்டு வந்திட்டேன்.
இன்னைக்கு ஏலக்காய் போட்டு வெச்சிருக்கேன்.
மூண்டா மார்க்கெட் போகும் பொழுது
வெட்டிவேர் வாங்கிகிட்டு வரணும்.
தர்பூஷணி பழம் மீடியம் சைஸ் 10 ரூபாய்தான்
இங்கே. சீட்லஸ் திராட்சையும் விலை குறைய
ஆரம்பிச்சிருச்சு. கிலோ 30. :))
உடம்புக்கு சூடு ஏறாமல் சாப்பாடு.
மாசத்துக்கு ரெண்டு தடவை (கண்டீஷனிங்)
ஹென்னா போட்டா உடம்பு கூலாகிடும்.
(இல்லாட்டி கண்ணு எறிய ஆரம்பிச்சிடும்)
தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சை ஜூஸ்.
டீ காபியை குறைச்சு திக் மோர் குடிச்சாலும்
நல்லதாச்சே!
போன வருஷம் சம்மர் ஷ்பெஷல் பதிவு
போட்டிருந்தேன். அதை இப்ப மீள் பதிவாக
போட்டுக்கறேன்.
அப்புறம் நண்பர்களுக்கு வேண்டுகோள்:
வெளியே அதிகம் போறவங்க சன்ஸ்கீரீன் லோஷன்
போட்டுக்கோங்க.
கூலிங்கிளாஸ் (பார்வைக் கண்ணாடி அணியறவங்க
கூட வெயிலில் போகும்பொழுது கூலிங் கிளாஸ்
கட்டாயம் போடணுமாம். வெயில் அதிகம் பட்டால்
மைக்ரேன் தலைவலி வரும்ணு டாக்டர் சொன்னார்)
மத்தவங்க சிரிப்பாங்கன்னு வெக்கப்படாம ஹேட்,
போடுங்க.
குடையை எடுத்துகிட்டு போறது இன்னும் நல்லது.
(கையில வெச்சிருந்தா பத்தாது. குடையை
விரிச்சு வெக்கணும் :)) )
சன்ஸ்ட்ரோக் வந்துச்சுன்னா ரொம்ப கஷ்டம்.
உடம்பை நல்லா பாத்துக்கோங்க.
42 comments:
வெட்டிவேர்னு தினத்துக்கு
ஒண்ணு போடுவாங்க. //
அடா அடா அடா செம சூப்பரா இருக்கும்!
படங்கள் அனைத்தும் அருமை
/*சிவராத்திரி முடிஞ்சதும் சிவ சிவான்னு குளிர் போயிடும்னு எங்க பாட்டி சொல்வாங்க.*/
எங்க பாட்டியும் தான். சொன்ன மாதிரி பாருங்க வீட்ல இருக்கேன் திங்கட்கிழமை வெட்கை தெரியலை, செவ்வாய் கிழமை தெரிய ஆரம்பிச்சுடுச்சு. நேத்து தான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட இந்த டயலாக்கைச் சொன்னேன்... இன்னிக்கு நீங்க சொல்லிட்டீங்க :-))
/*தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சை ஜூஸ்.டீ காபியை குறைச்சு திக் மோர் குடிச்சாலும் நல்லதாச்சே!*/
ஆமாம். பாருங்க பழங்களும் நல்ல சுவையா இப்ப தான் இருக்கும்.
அப்புறம் அந்த மண்பானை ரொம்ப அழகா இருக்கு. நானும் ஒண்ணு வாங்கி வச்சிடறேன்.
பயனுள்ள தகவல்கள்......
ஜில்லென்று ஒரு ஐடியா!!!! nice
வாங்க குசும்பன்.
வெட்டிவேர் வாசத்தோட பானைத்தண்ணி சூப்பராத்தான் இருக்கும்.
வருகைக்கு நன்றி
வாங்க அத்திரி,
மிக்க நன்றி
எங்க பாட்டியும் தான். சொன்ன மாதிரி பாருங்க வீட்ல இருக்கேன் திங்கட்கிழமை வெட்கை தெரியலை, செவ்வாய் கிழமை தெரிய ஆரம்பிச்சுடுச்சு. நேத்து தான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட இந்த டயலாக்கைச் சொன்னேன்... இன்னிக்கு நீங்க சொல்லிட்டீங்க :-))
ஆஹா,
:))
vetti verukku kannadaththula enna ?
ஆமாம். பாருங்க பழங்களும் நல்ல சுவையா இப்ப தான் இருக்கும்.//
ஆமாம்பா,
அப்புறம் அந்த மண்பானை ரொம்ப அழகா இருக்கு. நானும் ஒண்ணு வாங்கி வச்சிடறேன்.///
வெரி குட். வாய்யா ஒரு கை பாத்திடுவோம்னு சூரியனோட மல்லுக்கட்டலாம் :))
செம ஹாட் பதிவு. Be Cooollll..
பயனுள்ள தகவல்கள்......//
நன்றி அத்திரி
ஜில்லென்று ஒரு ஐடியா!!!! nice//
ஆமாம் ரோமுலஸ்,
இத்தனை நாளா ஊருக்கே ஏசி போட்டா மாதிரி இருந்த கிளைமேட் இப்படிமாறிடிச்சு. நமக்குள்ள ஏசி போட்டுக்க அந்தக் காலத்துப் பழக்கம் உதவுமில்லை.
செம ஹாட் பதிவு.//
avvvvv
Be Cooollll..//
ஆமாங்க அதுக்கான முயற்சிதான் இந்தப் பதிவு. :)))
vetti verukku kannadaththula enna ?//
கேட்டுத்தான் சொல்லணும்.
பார்சல் வேணா அனுப்பி விடவா ஜீவ்ஸ்.
இங்கே தாம்பரத்துலயும் அடிச்சுத் தூக்குது. கடைக்கு போகனும்னா கூட 6 மணிக்கு மேல தான் கிளம்புறேன். அப்புறம் நல்லண்ணெய்குளியலை விட்டுட்டீங்களே சிஸ்டர்:)
தர்பூசணி, இளநீர், நொங்கு - ரொம்ப பிடிக்கும்
இங்கே தாம்பரத்துலயும் அடிச்சுத் தூக்குது. //
தாம்பரமா என் மகள் பிறந்தது அங்கே தான்.
கடைக்கு போகனும்னா கூட 6 மணிக்கு மேல தான் கிளம்புறேன்.//
நான் காலையிலேயே முடிச்சிடுவேன், 9 மணிக்கு முன்னாடி.
அப்புறம் நல்லண்ணெய்குளியலை விட்டுட்டீங்களே சிஸ்டர்:)//
அது எனக்கு அலர்ஜி. தவிரவும் எண்ணைய்குளியலை பிள்ளை மருத்துவர்கள் தவிர்க்க சொல்லியிருக்கிறார்களே!!
படங்களில் உள்ள நொங்கு மற்றூம் இளநீர்...ஆஹா..ஜொள்ளுதான்....
இங்கே எங்கே கிடைக்கிறது..அடடா ஆசைய இப்படிக் கிளப்பிவிட்டுட்டீங்களே கலா..நல்லா எனக்கும் சேத்துச் சாப்பிடுங்க.
coooooooooooooooollllllllllllllllllllll
hmmmmmmm next two days I have to spend in Hyderabad...
அடடா ஆசைய இப்படிக் கிளப்பிவிட்டுட்டீங்களே கலா..நல்லா எனக்கும் சேத்துச் சாப்பிடுங்க.//
ஃப்ரெண்டுக்கா இது கூட செய்யாட்டி எப்படி பாசமலர்.:)
coooooooooooooooollllllllllllllllllllll//
:))))))))
hmmmmmmm next two days I have to spend in Hyderabad...//
இந்த வாட்டியாவது உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா???
எங்க ஊர்ல இன்னும் குளிரடிக்குதுங்கோ...:)
excellent pictures!!
எங்க ஊர்ல இன்னும் குளிரடிக்குதுங்கோ...:)//
ooho
excellent pictures!!//
thanks sasi
நல்ல பதிவு. படிச்சதுமே ஜில்லுனு இருக்கு. கண்டிப்பா ஃபாலோ பண்ணனும் மைண்ட்ல வெச்சிக்கிறேன்.
நன்றி.
உருப்படியான தகவல்கள்
:))
ம்ம்....அக்கா சொன்னாதை எல்லாம் நோட் பண்ணி செய்யனுமுன்னு தான் ஆசை...ஆனா எங்கயிருந்து செய்யுறது..!! ;)
கண்டிப்பா ஃபாலோ பண்ணனும் மைண்ட்ல வெச்சிக்கிறேன்.
நன்றி சிவா
உருப்படியான தகவல்கள்//
:))))))))))
அக்கா சொன்னாதை எல்லாம் நோட் பண்ணி செய்யனுமுன்னு தான் ஆசை...ஆனா எங்கயிருந்து செய்யுறது..!!//
ஓஓ ????
இன்னிக்கு மார்ச் 1 தான் ஆகுது.. அதுக்குள்ள வயித்துல புளிகரைக்குறீங்களே தென்றல்..
இன்னிக்கு மார்ச் 1 தான் ஆகுது.. அதுக்குள்ள வயித்துல புளிகரைக்குறீங்களே தென்றல்..//
பிப்ரவை 26க்கே தனது கொடூரத்தை காட்ட ஆரம்பிசிட்டுட்டாரே மிஸ்டர் சூரியன்.
:((
இந்த மண்பானை வெட்டிவேரு அந்தக் காலத்திலே எங்கள் வீட்டிலும் உண்டு. இருங்க, மண்பானை தேடறேன் பெங்களூரில.
பழங்களெல்லாம் ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு. இங்கும் கொளுத்தத் தொடங்கியாச்சு வெயிலு.
’ஜில்’லுன்னு அக்கறையா ஒரு பதிவு. நன்றி தென்றல்.
/*சிவராத்திரி முடிஞ்சதும் சிவ சிவான்னு குளிர் போயிடும்னு எங்க பாட்டி சொல்வாங்க.*/
பாட்டிக்கு இதெல்லாம் யார் சொல்லிக்கொடுத்திருப்பாங்க?
சொன்னாப்ல....சிவராத்திரி முடிஞ்சு ரெண்டாம் நாளே அவர் நெற்றிக்கண்ணை திறந்த மாதிரி அனல் தாக்க ஆரம்பிடுச்சு. ஹையோ!!இன்னும் மூணு மாசமிருக்கே! பதிவு சுகமாகவும் இதமாகவும் இருந்தது, தென்றல்! அதிலும் படங்கள்...குளுமையோ குளுமை.
இருங்க, மண்பானை தேடறேன் பெங்களூரில.//
ஆஹா அப்படியே வெட்டிவேர் கிடைச்சா ஜீவ்ஸுக்கும் சொல்லுங்க.
’ஜில்’லுன்னு அக்கறையா ஒரு பதிவு. நன்றி தென்றல்.//
நன்றிக்கு நன்றி
பதிவு சுகமாகவும் இதமாகவும் இருந்தது, தென்றல்! அதிலும் படங்கள்...குளுமையோ குளுமை.//
நன்றி நானானி.
ஹிஹி வெட்டிவேருக்கு கன்னடத்தில என்னான்னு நீங்க சொல்லுவீங்கன்னுல்லா நான் வெயிட்டிங்:)!
Post a Comment