Friday, February 27, 2009

நம்ம ஊரு நல்ல ஊரு! இப்ப ரொம்ப மாறிப்போச்சுங்க...

சமீபகாலமா நம்ம் ரயில்வே துறை சூப்பரா
வேலை செய்யுது.

எந்த கோச் எங்க வரும்னு எழுதி வெச்சிருப்பாங்க.
இல்லாட்டி போர்டர் கிட்ட,” இந்த கோச் எங்க வரும்னு”
கேட்டுகிட்டு இருப்போம்.
இப்ப அந்தந்த ப்ளாட்பார்ம்ல வண்டி வருவதற்கு
30 நிமிடம் முன்னாடியே அழகா வண்டி எண்,
கோச் நம்பர் எல்லாம் தெரியறமாதிரி செஞ்சு
வெச்சிருக்காங்க.
டிக்கெட் ரிசர்வேஷனுக்கு வரிசையில் நின்னு
டிக்கெட் வாங்கிகிட்டு இருந்தோம். கேன்சலேஷன்,
ரிசர்வேஷன்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு பாரம்
எழுதி அதைக் கொடுத்து கவுண்டர்ல இருக்கறவங்க
சல்லு புல்லுன்னு விழுவாங்க அதையும் கேட்டுகிட்டு
வேற விதி இல்லாம டிக்கெட் புக்கிங் செஞ்சிருக்கோம்.

கொஞ்சம் அதிகம் பணம் கொடுக்க முடிஞ்சவங்க
ட்ராவல்ஸ் மூலமா முன் பதிவு செஞ்சுக்குவாங்க.

இப்ப எல்லாம் ஆன்லைன் தான். அழகா
கஷ்டப்படாம டிக்கெட் புக் செஞ்சுக்கலாம்.
நல்ல வசதி இது.

இங்க பதிவு
செஞ்சு வெச்சுகிட்ட கார்டு ஒண்ணு அனுப்புவாங்க.
அந்த கார்டு இருந்தா ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கத் தேவையில்லை.

நாம் புக் செய்யும் டிக்கெட்களுக்கு விமானம்
மாதிரி பாயிண்ட்ஸ் சேரும்.

(பலருக்கும் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்களுக்காகத்தான்)


யாராவது ஊருலேர்ந்து வர்றாங்கன்னா அவங்களை
ஸ்டேஷன்ல போய்கூப்பிட்டுகிட்டு வர்றதுக்குள்ள
நம்ம உசிரு போயிடும். நேரத்துக்கு வராது.
நான் ஒவ்வொரு முறை மும்பையிலிருந்து
சென்னை வரும்பொழுது சென்னை எக்ஸ்பிரஸ் தான்
வருவேன். அது என்னைக்கும் சரியான நேரத்துக்கு
வந்ததே கிடையாது. 8 மணிக்கு வரவேண்டிய
ட்ரையின் ராத்திரி 12 மணிக்கு வந்த கொடுமையும் உண்டு.


இந்த மாதிரி யாரையாவது கூப்பிட போகும் முன்
ரயில்வே என்கொயரிக்கு போன் போட்டு
எத்தனை மணிக்கு வருது ட்ரையின்னு கேட்டுகிட்டு
போறது நல்ல ஐடியா. ஆனா அங்கையும் பிரச்சனை
இருக்கு.

அந்த நம்பர் எப்பவும் என்கேஜ்டாத்தான் இருக்கும்!!!

“ஆப் கதார் மேன் ஹை!! யூ ஆர் இன் க்யூ”
இப்படி சொல்லி டடடையிங்குன்னு பாட்டு
ஒண்ணு ஓடும். வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.


ஆனா இப்ப இதுவும் ஆன்லைனில் பார்க்க முடியுமே!!
வண்டி எண், எந்த இடத்திலிருந்து எங்கேன்னு
விவரங்கள் கொடுத்தா போதும். ட்ரையின் எங்க
இருக்கு? எத்தனை மணிக்கு வருதுங்கற லேட்டஸ்ட்
விவரங்கள் தெரியுது. அப்பப்ப அப்டேட் செஞ்சு
வைக்குது நம்ம ரயில்வே.

TRAIN RUNNING INFORMATIONFind Your Train
Train Arrivals
Train Departures
Train Time Table
Passing By Trains
Tourist Information
Passenger Amenities
Reservation Enquiry

Fares
Special Trains
Platform Berthing
Western Railway
Rules
Other Information
About Us
FAQs

இந்த விவரமெல்லாம் இந்த சைட்ல
தெரிஞ்சுக்கலாம்.

ரயில்வேக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

16 comments:

நட்புடன் ஜமால் said...

சமீபகாலமா நம்ம் ரயில்வே துறை சூப்பரா
வேலை செய்யுது.

எந்த கோச் எங்க வரும்னு எழுதி வெச்சிருப்பாங்க.
இல்லாட்டி போர்டர் கிட்ட,” இந்த கோச் எங்க வரும்னு”
கேட்டுகிட்டு இருப்போம்.\\

மெய்யாலுமா!

சந்தோஷமாயிருக்கு

கார்க்கி said...

உண்மைதாங்க ரொம்ப நல்லா முன்னேறிடுச்சு

Thooya said...

முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் :)

எம்.எம்.அப்துல்லா said...

இந்த அக்காவுக்கும் டிரைனுக்கும் அப்படி என்னதான் லவ்வோ??? அப்பப்ப டிரைனப் பத்தி எழுதலனா தூக்கம் வராதே??

:))))

ஆ.ஞானசேகரன் said...

மாற்றங்கள் வரவேக்கப்படும்போது,.. மாற்றங்கள் வந்தே தீரும்... வாழ்க இந்தியா!

வித்யா said...

ஆமா சிஸ்டர். அப்படியே கொஞ்சம் நல்ல சோத்துக்கு வழி செஞ்சா புண்ணியமா போகும்:)

புதுகைத் தென்றல் said...

மெய்யாலுமா!/

நம்புங்கப்பா :))

சந்தோஷமாயிருக்கு//

ஆமாம்.

புதுகைத் தென்றல் said...

ரொம்ப நல்லா முன்னேறிடுச்சு//

ஆமாம் கார்க்கி. வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள்
:))))

புதுகைத் தென்றல் said...

இந்த அக்காவுக்கும் டிரைனுக்கும் அப்படி என்னதான் லவ்வோ??? //

அப்படில்லாம் பிரிச்சுப் பேசப்படாது. அக்கா மாதிரி தம்பிக்கும் டிரைனுக்கும் உங்களுக்கும் கூட லவ்வுதான்.

தமிழ்மணவிருதுல ரயிலோடி விளையாடி பதிவுக்கு விருது கிடைச்சிருக்குல்ல

:)))

புதுகைத் தென்றல் said...

மாற்றங்கள் வரவேக்கப்படும்போது,.. மாற்றங்கள் வந்தே தீரும்... வாழ்க இந்தியா!//

ஆமாம். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

அப்படியே கொஞ்சம் நல்ல சோத்துக்கு வழி செஞ்சா புண்ணியமா போகும்//

அது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஆனாலும் தமிழ்நாட்டில் வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பல்லவன் சாப்பாடு சூப்பராச்சே.

கீழை ராஸா said...

என்ன புதுகை எப்படி இருக்கீங்க...

"நம்ம ஊரு கெட்ட ஊரு இப்ப ரொம்ப மாறிப்போச்சி"ன்னு தலைப்பு இருந்தா இன்னும் ரொம்ப பொருத்தமா இருந்திருக்கும்.

புதுகைத் தென்றல் said...

என்ன புதுகை எப்படி இருக்கீங்க..//

நான் நலம்.

நீங்க சுகமா?

"நம்ம ஊரு கெட்ட ஊரு இப்ப ரொம்ப மாறிப்போச்சி"ன்னு தலைப்பு இருந்தா இன்னும் ரொம்ப பொருத்தமா இருந்திருக்கும்.//

:))))))))

கணினி தேசம் said...

நிச்சயம் நல்ல விஷயம்..
மக்களுக்கு பல சௌகர்யங்களை ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது.

முக்கியமாக சிகரட் விற்க ரயில் நிலையங்களில் தடைபோட்டது. குறிப்பிடத்தக்கது.

cheena (சீனா) said...

லல்லு நல்லாத்தான் பண்றார் - சும்மா சொல்லக்கூடாது - நல்ல லாபம் - நல்லாவே ஓடுது டிரெயின்

சைடு பர்த்லே மிடில் போட்டுக் குழப்பியதத் தவிர