Monday, March 02, 2009

”லவ்”வுன்னா தப்பா??

இந்தக் கேள்வியை நான் கேக்கலை!!!

பிரபல எழுத்தாளர் அனுராதாரமணன் கேட்டுருக்காங்க.

நியாயமான கேள்வியா படுது.

குமுதம் சிநேகிதி பிப்ரவை1-15 இதழில்
லவ்வுன்னா தப்பான்னு? தொடர் ஆரம்பித்திருக்கிறார்
அனு. அருமையாக இருக்கிறது.

முதல்ல காதல்னா என்னன்னு தெரியாம
குழம்பிக்கிட்டு நிறைய பேரு இருக்காங்க.


அதென்னவோ கல்யாணத்துக்கு முன்னாடிதான்
காதலிக்கனும், கல்யாணம் முடிஞ்சிட்டா (காதலி போய்
மனைவிங்கற அந்தஸ்து வந்த பிறகு) காதலாவது
கறிவேப்பிலையாவது??? எனும் நிலைதான்!!!!

கல்யாணத்துக்கப்புறமும் காதலிக்கறது தப்பா?

காதல் திருமணம் செய்யாமல் பெற்றோர்கள்
பார்த்து நிச்சயத்த திருமணமாக இருந்தாலும்
திருமணத்துக்கப்புறம் தன் மனைவியைக்/கணவனைக்
காதலிக்கத் துவங்கினால் காதல் மட்டுமல்ல
வாழ்க்கையும் கசக்காது..

3 அல்லது 5 வருடங்களுக்குள் வாழ்க்கை
போரடிக்காது, மனைவியோ/கணவனோ
போரடிக்கமாட்டார்கள்.





வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பார்க்கில் மாலைகளில்
வாக்கிங் போவேன். அங்கே காதலர்களும் மறைவான
இடங்களில் உட்கார்ந்திருப்பார்கள். என்னை மிகவும்
கவர்ந்தது ஒரு தம்பதிகள் தான்.

தள்ளாத வயதில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு,
பேசிக்கொண்டு இருவரும் பார்க்கை வலம் வருவார்கள்.
இதுவும் காதலின் வெளிப்பாடுதான். திருமண பந்தம்
நல்ல துணையைத் தருகிறது. அந்த உறவு நட்பாக,
காதலாக இருந்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும்
வாழ்க்கை இனிமைதான்.






அம்மம்மாவும் சரி அம்மாவும் சரி தங்களது
கணவர் சாப்பிட்ட இலை/தட்டில்தான் சாப்பிடுவார்கள்.
“புருஷந்தான்! அதுக்காக இதெல்லாம் டூ மச் அம்மா”
என சண்டை போட்டிருக்கிறேன்.

என் அம்மா செய்வது போல் நான் செய்கிறேன்!
என அம்மா சொல்லிவிட்டார்.அம்மம்மா விடம்
கேட்ட பொழுது,”இது அன்பின் வெளிப்பாடு.
அந்த இலையில் மிச்சம் இருக்கும் காய் எனக்கு
பிடித்த ஒன்று, எங்கே எனக்கு மிச்சம் இல்லாமல்
போய்விடுமோ என்றுதான் கொஞ்சம் வைத்திருப்பார்”
என்பார்.


இந்தத் தொடரில் அனுவும் “வாழை இலையில்
காதல் கவிதை” என இந்த நிகழ்வுகளைத்தான்
குறிப்பிட்டிருக்கிறார். ம்ம்ம். பெற்றோர்கள்
நிச்சயத்த திருமணங்களிலும் தெய்வீகக் காதல்.
ஆனால் யாருக்கும் தெரியாமல் அன்பின்
வெளிப்பாடு.




இப்பொழுதெல்லாம் கணவர் சாப்பிட்ட பிறகுதான்
சாப்பிடவேண்டும் என்ற நிலை இல்லை.
அருகருகே அமர்ந்து சாப்பிடும் நிலைதான்.


சரி இப்பொழுது எப்படி அனபை வெளிப்படுத்திக்கொள்வார்கள்?


ஒரு கவளம் மனைவிக்கு ஊட்டிவிட்டால் மனைவியின்
மனது குளிர்ந்து போகாதா?

அவசரமாக வேலைக்கு கிளம்பும் கணவன் உண்ண
நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்பொழுது
மனைவி வாயில் ஊட்டிவிட்டால் கணவனின்
வயிறு மட்டுமல்ல நி்றைவது மனதும் தான்.

அடுத்த தொடர்களில் அனு என்ன சொல்கிறார்
என பார்க்க வேண்டும்.





ரொமான்ஸ் ரகசியங்கள்

30 comments:

S.Arockia Romulus said...

காதல் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா காதலுக்கு புது விளக்கம் அருமை

நட்புடன் ஜமால் said...

யாரு சொன்னா!

நட்புடன் ஜமால் said...

முதல்ல காதல்னா என்னன்னு தெரியாம
குழம்பிக்கிட்டு நிறைய பேரு இருக்காங்க\\

அதென்னவோ உண்மைதான்

ஜியா said...

நீங்க இப்படி சொல்றீங்க.... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நீயா நானா நிகழ்ச்சில ஒரு பெண் எழுத்தாளர் (பேரு ஞாபகமில்லை...) வந்தாங்க... காதல்ங்றது கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாளே முடிஞ்சு போயிடும்.... மக்கள் அன்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாம பேசிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க...

அதனாலத்தான் வெவரமா இவுங்க லவ்னு ஆங்கிலத்துல போட்டுட்டாங்க போல... ;))

நட்புடன் ஜமால் said...

அதென்னவோ கல்யாணத்துக்கு முன்னாடிதான்
காதலிக்கனும், கல்யாணம் முடிஞ்சிட்டா (காதலி போய்
மனைவிங்கற அந்தஸ்து வந்த பிறகு) காதலாவது
கறிவேப்பிலையாவது??? எனும் நிலைதான்!!!!\\

ஆண்களுக்கும் இந்த நிலை வருவதுண்டு

Anonymous said...

:)

அபி அப்பா said...

ஆஹா இன்றைக்கு பார்த்து இந்த பதிவை போடனுமா நீங்க!

"பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும், பாவை உன் முகம் பார்த்து நான் பசியாற வேண்டும்"

சூப்பர் சூப்பர். நான் கூட காலையில் பாடினேனே:-))

pudugaithendral said...

காதல் மேல எனக்கு நம்பிக்கை இல்லை.//

:((
ஆனா காதலுக்கு புது விளக்கம் அருமை//

நன்றி ரோமுலஸ்

pudugaithendral said...

வாங்க ஜமால்,

வருகைக்கு நன்றி


அதென்னவோ கல்யாணத்துக்கு முன்னாடிதான்
காதலிக்கனும், கல்யாணம் முடிஞ்சிட்டா (காதலி போய்
மனைவிங்கற அந்தஸ்து வந்த பிறகு) காதலாவது
கறிவேப்பிலையாவது??? எனும் நிலைதான்!!!!\\

ஆண்களுக்கும் இந்த நிலை வருவதுண்டு//

ஆமாம் மனமார ஆமோதிக்கிறேன்.

யார் செஞ்சாலும் தப்பு தப்புத்தான்.

pudugaithendral said...

வாங்க ஜீ

காதல்ங்றது கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாளே முடிஞ்சு போயிடும்....//
கல்யாணத்துக்கப்புறம் தான் வாழ்க்கையே இருக்குன்னு புரியாதப்போ இதுதான் நிலை.

மக்கள் அன்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாம பேசிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க...//

ஆஹா....

pudugaithendral said...

ஸ்மைலிக்கு நன்றி தூயா.

pudugaithendral said...

ஆஹா இன்றைக்கு பார்த்து இந்த பதிவை போடனுமா நீங்க!//

:)))

"பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும், பாவை உன் முகம் பார்த்து நான் பசியாற வேண்டும்"

சூப்பர் சூப்பர். நான் கூட காலையில் பாடினேனே:-))//

இப்பத்தான் உங்க பதிவுல என் வாழ்த்தை சொல்லிட்டு வந்திருக்கேன்.

அபி அப்பா said...

அது போல கணவனை மனைவி டீஸ் பண்ணி பார்ப்பதும் கணவன் மனைவியை டீஸ் பண்ணி சந்தோஷப்படுவதும் "காதல்" ல சேர்த்திதான்ன்னு நான் சொல்லுவேன்.

நான் இன்றைக்கு போன் பண்ணினேன்!

"ஹல்லோ, அபிஎப்படி இருக்கா, தம்பி என்ன பண்றான்"

"நல்லா இருக்காங்க, ஆமா நான் எப்படி இருக்கேன்னு கேட்டா குறைஞ்சா போயிடும்"

"அட போன்ல காசு கம்மியா இருக்கு, அதல்லாம் கேட்டு காசு வேஸ்ட் பண்ணனுமா?"

"சரி போகட்டும், மார்ச் மாசம் என்ன விஷேஷம்"

"டாக்ஸ் கட்டனும்"

"தலையில கொட்டனும். சரி அது மார்ச் கடைசில இல்ல முதல் வீக்ல என்ன விஷேஷம்"

"பிப்ரவரி மாச சம்பளம் வாங்கனும்"

"அய்யோ இன்னும் ஒரு குளூ தரேன்! மார்ச் முதல் வாரத்திலே யாருக்கு பிறந்த நாள்?"

"அட இப்படி வெளிப்படையா கேட்க வேண்டியது தானே"

"சரி சொல்லுங்க"

"நான் கோவிலுக்கு போனேன் தெரிய்யுமா? 4 பேருக்கு சாப்பாடு போட்டேன் ஆபீஸ்ல பெப்சியும் சாண்விச்சும் அய்யா ட்ரீட்"

"ரொம்ப தேங்ஸ், எங்க நீங்க எப்போதும் போல மறந்துடுவீங்களோன்னு நெனச்சேன்"

"ச்சே எப்படி மறப்பேன், 57 வயசாச்சுன்னா இன்னும் நம்பவே முடியலை. இன்னும் இளமை"

"என்ன குழப்பறீங்க எனக்கு 57 வயசா ஆச்சு? ரொம்ப தான் கிண்டல்"

"உனக்கு இல்ல எங்க தளபதிக்கு மார்ச் 1 பிறந்த நாள் அதான் இந்த ட்ரீட் எல்லாம் நீ வேற யாருக்குன்னு நெனச்சுகிட்டே"

போன் டொக்குன்னு வைக்கும் சத்தம் கேட்டுச்சு:-)))))))))))))))))))))

FunScribbler said...

பதிவு கலக்கலா போய்கிட்டு இருக்கு! ரசித்து படித்தேன்:)

pudugaithendral said...

அது போல கணவனை மனைவி டீஸ் பண்ணி பார்ப்பதும் கணவன் மனைவியை டீஸ் பண்ணி சந்தோஷப்படுவதும் "காதல்" ல சேர்த்திதான்ன்னு நான் சொல்லுவேன்.//

ஆமாம் அபிஅப்பா,

அது அடுத்தவர் மனைதை புண்ணாக்காதவரை மிகச்சரியே.

திருமணமான புதிதில் சரியாக வேகாத உருளைக்கிழங்கில் கறிசெய்து போட்ட என்னிடம் உப்பு,காரம் எல்லாம் சரியா இருக்கு. காய் மட்டும் கொஞ்சம் நல்லா வெந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்” என்றார் அயித்தான். அந்த வார்த்தைகள் சமையலைக் கற்றுக்கொள்ள வைத்தது. இதையே வார்த்தையால் காயப்படுத்தி சொல்பவர்களும் இருக்கிறார்களே!!

pudugaithendral said...

பதிவு கலக்கலா போய்கிட்டு இருக்கு! ரசித்து படித்தேன்:)//

நன்றி தமிழ்மாங்கனி.

அபி அப்பா said...

//அது அடுத்தவர் மனைதை புண்ணாக்காதவரை மிகச்சரியே.//

இதை நான் 100 சதம் ஒத்துக்கறேன்!

Kumky said...

ஏம்மா லன்ச் ரெடியா..

அதெல்லாம் வசந்தம்” போடறதுக்கு முன்னமே ரெடி.
நீங்க சீக்கிறம் வந்து சாப்பிட்டுட்டீங்கன்னா.. செந்தூரப்பூவே” போட்டுடுவாங்க அதுக்குள்ள வந்துடுங்க.

இல்ல இங்க மீட்டிங் லேட்டாகும் போல தெரியுது அதனால...

சீக்கிரம் சொல்லி தொலைங்க எவ்வளவு நேரம் டி வி ய ம்யூட் லயே பார்துட்டிருக்கறது ஒன்னும் புரியமாட்டிங்குது...

வெளில சாப்டுக்கலாம்னு ப்ரண்ஸ்லாம் சொல்றாங்க....

செட்டு சேந்துட்டீங்களா இனி விளங்கினாப்பலதான்...
லன்ச்சுக்கு வரலன்னா நைட் டிபன் கிடையாது..மதிய லன்சையே நைட் நீங்க சாப்பிடவேண்டியதுதாம்..

ஏன் அத வேலைக்காரம்மாவுக்கு போடவேண்டியதுதான...

அந்தம்மா வேலைக்கு சேர்ந்த புதுசுல ஒரு நாள் சாப்பிட்டதுதான் அதுக்கப்புறம் இன்னிவரை சாப்பிட்டதேயில்ல...

ஹி...ஹி..ஹி.

வீணா என் கோபத்த கிளராதீங்க...

சரிம்மா என் பணிஷ்மெண்ட்ட நைட் அனுபவிச்சுக்கறேன்....இப்ப வெளில சாப்டுக்கறேன்...

இத முதல்லயே சொல்லி தொலைக்க வேண்டியதுதான...அய்ய்யய்யோ பாதி சீரியல் ம்யூட் லயே போயுடுச்சே...டொக்.

எம்.எம்.அப்துல்லா said...

வாரத்துல 5 நாள் பணிநிமித்தம் வெளியில் இருந்து விட்டு வாரக்கடைசியில் வீட்டிற்குச் செல்லும் என்ன மாதிரி ஆளுங்களுக்குத்தான் தெரியும் திருமணத்திற்கு பின்னான காதலின் அருமை.

நல்ல பதிவு அக்கா

எம்.எம்.அப்துல்லா said...

கல்யாணத்துக்கப்புறமும் காதலிக்கறது தப்பா?

//

தென்றல் அக்கா இப்பிடி சொல்லுறாங்களே என்னன்னு தங்கமணிக்கிட்ட கேட்டுப் பாக்குறேன். தப்பில்லன்னு சொன்னா யாரையாவது காதலிக்க முயற்சி பண்ணுறேன்.

:))

pudugaithendral said...

வாங்க கும்க்கி,

நீங்க சொல்வது நடக்குதுன்னாலும் நான்
சொல்ல விரும்பற விஷயத்தையும் இங்கே சொல்லிக்கறேன்.


கணவன் மனைவியை சரியாக கவனித்து, முறையாக பார்த்துக்கொள்ளும் பொழுது மனைவியும் தன் அன்பை வெளிப்படுத்துவாள்.

சீரியலைக் கட்டிக்கொண்டு அழமாட்டாள். EVERY ACTION HAS A REACTION.

pudugaithendral said...

வாரத்துல 5 நாள் பணிநிமித்தம் வெளியில் இருந்து விட்டு வாரக்கடைசியில் வீட்டிற்குச் செல்லும் என்ன மாதிரி ஆளுங்களுக்குத்தான் தெரியும் திருமணத்திற்கு பின்னான காதலின் அருமை.//

ஆமாம் அப்துல்லா,

பிரிவில் தான் காதல் பலப்படுகிறது.
காத்திருத்தலில் தான் காதலின் அவசியம் புரிகிறது.

வருகைக்குமிக்க நன்றி.

pudugaithendral said...

கல்யாணத்துக்கப்புறமும் காதலிக்கறது தப்பா?

//

தென்றல் அக்கா இப்பிடி சொல்லுறாங்களே என்னன்னு தங்கமணிக்கிட்ட கேட்டுப் பாக்குறேன். தப்பில்லன்னு சொன்னா யாரையாவது காதலிக்க முயற்சி பண்ணுறேன்.

:))//

aahaa

இப்படி வேறு தப்பர்த்தமா??? :)))

காதலிச்சு கல்யாணம் கட்டிகிட்டவங்க கல்யாணத்துக்கப்புறம் காதலிக்கறதை நிப்பாட்டக்கூடாதுன்னு சொன்னேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்

சரி இந்த வார இறுதியில் அப்பாவை வந்து உங்க வீட்டுல விசாரிக்கச் சொல்றேன்!!! தங்கமணிகிட்ட நீங்க அந்தக் கேள்வியை கேட்டதக்க்ப்புறம் விளைவு எப்படின்னு அப்பா வந்து விசாரிச்சு சொல்ல நான் பதிவு போடறேன். :))))))

கவிதா | Kavitha said...

யாரு சொன்னா தப்புன்னு..?!!

:))

எதுவுமே தப்பு இல்ல.. நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவே தப்பு இல்ல.. !!

Kumky said...

சீரியலைக் கட்டிக்கொண்டு அழமாட்டாள். EVERY ACTION HAS A REACTION.

நீங்க ஹஸ்பண்டாலஜி(எந்த காலேஜி) ப்ரொபஸர்..அதனால அபிடித்தாம் சமாளிப்பிங்க.

pudugaithendral said...

எதுவுமே தப்பு இல்ல.. நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவே தப்பு இல்ல.. !!//

:))))))))))

pudugaithendral said...

நல்ல புள்ளையா இருக்கோணும்னு பார்த்தேன். இருக்க விடமாட்டேங்களே!!!

//வெளில சாப்டுக்கலாம்னு ப்ரண்ஸ்லாம் சொல்றாங்க....//

இப்படி அடிக்கடி ரங்கஸ் வெளியே போனா தப்பில்லை.இப்படி தன் தோழிகளுடனும் போகும் பழக்கம் நம்ம பெண்களுக்கு கிடையாது. தனியே வீட்டுல உக்காந்துகிட்டு அவங்க என்னதான் பண்ணுவாங்க!!


அதனாலதான் சீரியல்களை கட்டிகிட்டு அழறாங்க.//

நீங்க ஹஸ்பண்டாலஜி(எந்த காலேஜி) ப்ரொபஸர்..அதனால அபிடித்தாம் சமாளிப்பிங்க.

இதுல சமாளிக்க ஏதேதும் இல்லை.

உண்மை இதுதான்

Vidhya Chandrasekaran said...

ம்ம்ம்ம் ரொமான்ஸ் ஸ்பெஷல்:)

pudugaithendral said...

ம்ம்ம்ம் ரொமான்ஸ் ஸ்பெஷல்

yessu

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்தலுக்கு நன்றி

இது அன்பின் வெளிப்பாடு.
அந்த இலையில் மிச்சம் இருக்கும் காய் எனக்கு
பிடித்த ஒன்று, எங்கே எனக்கு மிச்சம் இல்லாமல்
போய்விடுமோ என்றுதான் கொஞ்சம் வைத்திருப்பார்”
என்பார்.

ஓஹ் இதுதான் மேட்டரா.