Thursday, March 19, 2009

சர்ப்ரைஸாக ஒரு லன்ச்!!! :))

கைலாஷ்ஹில்ஸ், நீர்மூழ்கிக்கப்பல் பாத்து அடுத்தது
கடலில் போட்டிங். துறைமுகத்துக்குள் நுழைய பர்மிஷன்
வாங்கவேண்டும், தவிர சனி,ஞாயிறாக இருந்ததால்
கொஞ்சம் கஷ்டம். ஆனால் APSRTC வழங்கும் போட்டிங்
மீன்பிடித்துறையில் VUDA(VISHAKAPATNAM
URBAN DEVELEMPMENT ASSOCIATION)வழங்கும் சேவை
போர்ட் ட்ரெஸ்டில். அதற்குள் நுழைய வாய்ப்பை
விடலாமா என யோசித்து அங்கேயே சென்றோம்.
இவர்கள் ஆர்,கே பீச்சிலிருந்து பஸ்ஸில் போட்டிங்
ஏரியாவுக்கு அழைத்து வந்து, படகு பயணம் முடிந்ததும்
இலவசமாகவே திரும்ப ஆர்.கே பீச்சில் கொண்டுவந்து
விடுகிறார்கள்.(இதற்காக ஒரு பஸ் எப்போதும் அங்கே
இருக்கிறது)




கடலில் ஒரு 30 நிமிட பயணம்.. ஆஹா அருமை.
வெளிர் நீறக்கலரில் இருந்த கடல் சட்டென அடர்நீலத்திற்கு
மாறும் அழகே அழகு.(அடர்நீலம் கடலின் ஆழத்தை
குறிக்குமாம்) மாலத்தீவுகளில் தன் பயண அனுபவத்தை
பிள்ளைகளுக்கு சொல்லியபடியே வந்தார் ஸ்ரீராம்.

சட்டென் பார்த்தால் பிள்ளைகள் இருவரும் மாலுமிகளாக
படகை செலுத்திக்கொண்டிருந்தார்கள். படகுக்காரர்களுக்கு
ஃப்ரெண்டாகி அவர்கள் சொல்ல இவர்கள் செலுத்தினார்கள்.
முகமெல்லாம் சந்தோஷத்துடன் இருவரும் இருந்தனர்.

அருமையான பயணத்துக்கு பிறகு ஹோட்டலுக்கு சென்று
கொஞ்சம் ரெஃப்ரெஷ் செய்து கொண்டே பிள்ளைகள்
“லஞ்சுக்கு போகலாம்பா!!” என்றனர்.

நமட்டு சிரிப்புடன்,”எல்லாம் ரெடி. டேபிள் புக் செஞ்சிட்டேன்!
போகலாம்!!!”என்றதும், எங்கே? என்ற கேள்வி எல்லோர்
முகத்திலும். :))

எனக்கு மட்டும் உள்ளுக்குள் அந்த இடமாக இருக்குமோ!!’
என்று ஒரு எண்ணம். அடிக்கடி நாங்கள் இருவரும் ஒன்று
போல நினைப்போம். அன்றும் என் அனுமானம் சரியாக
இருந்தது.

11 வருடங்களுக்கு முன் ஆஷிஷ் குட்டியாக இருந்தபோது
நாங்கள் வைசாக் சென்றிருந்தோம். அப்போது அங்கேதான்
தங்கியது.

ஆஷிஷ் முதன் முதலில் பாத் டப்பில் ஆட்டம் போட்டது!
இண்டர்காமை எடுத்து ஏதோ டயல் செய்ய அது ஜீ.எம்
(ஸ்ரீராமின் ஃப்ரெண்டாக இருந்ததால் பரவாயில்லை)
ரூமுக்கு போனது.. என நிறைய ஞாபகங்கள் அந்த
இடத்திற்கு உண்டு.

எங்கப்பா போகப்போறோம்?” என்று பிள்ளைகள்
கேட்டுக்கொண்டே நடந்து வந்தார்கள்.

“நீ முதன் முதலில் தர்பூஸ் ஜூஸ் குடித்த
இடமாக இருக்கும்!!” என்றேன்.

“எப்படி சரியா சொன்ன?”என்று ஸ்ரீராம் முகத்தில்
சந்தோஷம். :))

அவர் அழைத்துச் சென்றது நாங்கள் முன்பு தங்கியிருந்த
டால்பின் ஹோட்டலுக்கு. ரூஃப் டாப்பில் இருக்கும்
ரெஸ்டாரண்டில் தான் ஆஷிஷ் முதன் முதல் ஸ்ட்ராபோட்டு
தானகவே குடித்தது.




ரொம்ப சந்தோஷமாக உள்ளே சென்றமர்ந்தனர் பிள்ளைகள்.

அன்று மகளிர் தினம் + சக்தி 2009 என் படைப்பு வந்தது
என்பதால் எனக்கு ட்ரீட்டாக அங்கே அழைத்துச் சென்றதாக
சொன்னார்.

புஃபே முறை சாப்பாடு. அருமையாக இருந்தது.

முன்பு ஆஷிஷ் அமர்ந்து ஜூஸ் குடித்த இடத்தைக் காட்டினேன்.

”எப்படி அம்மா இத்தனை வருடம் கழித்தும் ஞாபகம் இருக்கிறது!!”
என வியந்தான். பிள்ளையின் ஒவ்வொரு முதல் சாதனையும்
தாயின் நினைவேட்டில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டிருக்குமே!!

அங்கே ஒருவர் அழகாக இன்ஸ்ட்ருமெண்ட் வாசித்துக்கொண்டிருந்தார்.

ஆஷிஷை அனுப்பி எனக்காக இந்தப் பாடலை வாசிக்குமாறு
கேட்டேன். அடுத்துவாசிப்பதாக சொன்னார்.

பீஜிங் ஸ்டார் செய்ததுமே அருமையாக இருந்தது.
பாடலை வாசிக்க ஆரம்பித்ததுமே மனிதர்
பாட்டுக்குள் போய்விட்டார்.

“என்னக்கா? உருகி உருகி வாசிக்கிறார்?” என்றாள்
தங்கை. ”பாட்டு அப்படிம்மா!!” என்றேன்.
வாசித்து முடித்ததும் அனைவரும் கைதட்டினர்.
பெருமையாக இருந்தது அவருக்கு்.






சாப்பிட்டு கிளம்பும்பொழுது பாடலுக்காக நன்றி
சொன்னேன். முகமுழுதும் புன்னகையுடன் அதை
ஏற்றார்.

திரும்ப ஹோட்டலுக்கு வந்து 1 மணிநேரம் ரெஸ்ட்
எடுத்து 5.15 கோதாவரியை பிடித்து அன்னவரம் சென்றோம்.

17 comments:

நட்புடன் ஜமால் said...

\\முகமெல்லாம் சந்தோஷத்துடன் இருவரும் இருந்தனர்.\\

சந்தோஷம் இங்கேயும் வந்துடிச்சிக்கா!

நட்புடன் ஜமால் said...

\\அன்று மகளிர் தினம் + சக்தி 2009 என் படைப்பு வந்தது
என்பதால் எனக்கு ட்ரீட்டாக அங்கே அழைத்துச் சென்றதாக
சொன்னார்.\\

ஆஹா! மீண்டும் வாழ்த்துகள் அக்கா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூப்பர் பாட்டுல்ல அத... ஹ்ம்..:)

ரவி said...

:)))))))))

Thamira said...

என்ஜாய் பண்ணியிருக்கீங்க ஃபிரென்ட்.. ஆஷிஷின் முதல் ஜூஸ் நினைவு அழகு.!

ராஜ நடராஜன் said...

சாப்பாட்டு நேரமா பார்த்து சாப்பாடு பத்தி நினைவு படுத்துங்க.நான் பதிவுக்குப் போகல.கணினியோட மூஞ்சிய தூங்க வைக்கப் போறேன்.பை.பை.

நானானி said...

உண்மையிலேயே உங்களுக்கு நல்ல ட்ரீட்தான், தென்றல்!

pudugaithendral said...

நன்றி ஜமால்

pudugaithendral said...

சூப்பர் பாட்டுல்ல//

ஆமாம் கயல். இன்னைக்கு கேட்டாலும் மனசு இதமாயிடும்

pudugaithendral said...

வந்தா ஸ்மைலிதான் போடுவதுன்னு கொள்கையை காப்பத்தற நிஜமா நலல்வனுகு ஒரு ஓ.

pudugaithendral said...

வாங்க ரவி.

நீங்களும் ஸ்மைலியா??

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் ஃப்ரெண், செம எஞ்சாய் தான்.

நன்றி

pudugaithendral said...

சாப்பாட்டு நேரமா பார்த்து சாப்பாடு பத்தி நினைவு படுத்துங்க.//

மறக்காம நேரத்தோட சாப்பிடுவீங்கன்னு தாங்க பதிவு போட்டேன்.

:))))))))

pudugaithendral said...

ஆமாம் நானானி,

வயிற்ற்க்கும் செவிக்கும் உணவு. இனிமையான உணவாச்சே.

butterfly Surya said...

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

//பிள்ளையின் ஒவ்வொரு முதல் சாதனையும்
தாயின் நினைவேட்டில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டிருக்குமே!!//

ரொம்பச் சரி:)!

pudugaithendral said...

நன்றி ராமலட்சுமி