Thursday, March 26, 2009

பட்டென்று போன பட்டு...

+2 பரிட்சைக்கு 2 மாதம் இருக்கையிலேயே என் வகுப்புத் தோழி
நிர்மலாவுக்கு திருமணமாகிவிட்டது. நான், நிர்மலா, மங்கை
மூவரும் நெருங்கிய தோழிகள். நிர்மலாவின் திருமணத்திற்கு
போகமுடியாவிட்டாலும் அவளை வீட்டில் சென்று பார்த்தோம்.


ஹாலில் அவளது கணவருடன்சேர்ந்து எடுத்துக்கொண்ட
போட்டோ இருந்தது. மிளகாய்ச் சிவப்பு கலர் பட்டுப்புடவையில்
டார்க் நீல பார்டர் போட்ட புடவை கட்டியிருந்தாள். அவரது
கணவர் நீல நிற கோட் அணிந்திருந்தார். நாங்கள் மூவரும்
நிக் நேம் S ல் ஆரம்பித்தது போல் வைத்தல் என பல விடயங்கள்
ஒரு சேர இருக்கும். பிற்காலத்தில் நிம்மியின் போட்டோ போல்
எங்கள் திருமணத்திற்கு பிறகும் சேம் கலர் புடவையுடன் போட்டோ
எடுத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம்.

வெந்தயக் கலரில் அரக்கு கலர் பார்டர் காம்பினேஷனும்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

சத்யாமாமா ஒரு முறை புதுகை வந்த போது
அம்மமாவுடன் நான் இந்தக் காம்பினேஷன் குறித்து
பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டார்.

”இந்தப் பட்டுப்புடவைகளை எப்படித் தயாரிக்கிறார்கள்
தெரியுமா? அதைத் தெரிந்து கொண்டதனால்தான்
என் திருமணத்தில் உன் வருங்கால அத்தை பட்டு
கட்டக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறேன்!!”
என்றார் மாமா.

“உங்களுக்கு பிடிக்கவில்லை! ஆனால் எனக்கு
பிடித்திருக்கிறது” என்றேன்.

மாமா சிரித்துக்கொண்டே போய்விட்டார். நானும்
அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.






ஒரு நாள் டீவியில் பட்டுப்பூச்சி வளர்ப்பு, அதிலிருந்து
பட்டுநூல் எப்படி தயாரிப்பது? எல்லாம் காட்டினார்கள்.
கொதிக்கும் வெந்நீரில் புழுக்களை போட்டு....
நூல் தயாரிப்பதை பார்த்த நொடியில் மாமா சொன்னது
ஞாபகம் வந்தது. பார்க்கவே முடியவில்லை.


மாமாவுக்கு நான் கண்ட நிகழ்ச்சியைப் பற்றி
கடிதம் எழுதினேன்.

“இப்படி நெய்யப்படும் புடவையை அணிவது நல்லதா”?
என யோசி!!” என்று மாமா பதில் எழுதியிருந்தார்.


அதன் பிறகு நிறைய யோசித்தேன்.

இப்படி உயிரைக் கொன்று உருவாக்கப்படும்
பட்டுபுடவையை உடுத்தி மங்களமான திருமணமா?

கோவிலுக்கு உயிர்வதை செய்யப்பட்ட புடவையா?

எங்கள் தெலுங்கு சம்பிரதாயத்தில் ஒரு பழக்கம்.
மணப்பெண்ணிற்கு தாலிகட்டும் நேரத்தில் அணியும்
புடவையை “வெல்லம்ப்பூ சீர” என்போம்.

அது வெள்ளை பருத்தித் துணியால் ஆன புடவை.
அதை மஞ்சளில் முக்கி(கிருமி நாசினி) காயவைத்து
அதைத்தான் உடுத்த வேண்டும்.

இப்போது அப்படியாரும் செய்யவில்லை என்றாலும்,
மஞ்சள் கலர் காட்டன் புடவை அல்லது
கேரளா காட்டன் புடவைதான் அணிவது வழக்கமாக
இருக்கிறது.

வாழ்வில் மிக முக்கியமாண தருணமாகிய
திருமணத்தின் தாலிமுடியும் நேரத்தில் கூட
மதிக்கப்படாத அந்த பட்டுப்புடவையை நான்
கட்டித்தான் ஆக வேண்டுமா என யோசித்தேன்.

மாமாவுக்கு என் எண்ணங்களை கடிதமாக எழுதி
நானும் மாமாவின் வழியில் ”பட்டுப்புடவைக்கு
நோ” சொல்ல விரும்புவதாக சொன்னேன்.

மாமா சந்தோஷம் என்று பதில் அனுப்பினார்.
ஆனால் வீட்டில் பயங்கர எதிர்ப்பு.
“உன் மாமா ஆண்பிள்ளை. அவர் கண்டீஷன்
போடலாம். நீ கண்டீஷன் போட்டால் உன்னை
யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள்”
அப்படி, இப்படி என்று அப்பா, அம்மா
என அனைவரும் எதிர்ப்பு.

எந்த சூழ்நிலையிலும் என் கொள்கையை விட்டுக்
கொடுக்க நான் தயாராக இல்லை. அப்பா காட்டிய
எதிர்ப்பு மேலும் என்னுள் தாகக்த்தை ஏற்படுத்தி
மாமா சொல்லியிருப்பது போல்,” என் திருமணத்தில்
நோ பட்டுப்புடவை. அதற்கு பிறகும் வாழ்நாளில்
பட்டு கட்ட வற்புறுத்துக்கூடாது. வரதட்சணை
கேட்க கூடாது” இவைகளை யார் ஏற்கிறாராரோ
அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று
சொன்னதும் அப்பா உனக்கு திருமணமே ஆகாமல்
போய்விடப்போகிறது என பயந்தார்.


ஆனால் சத்யாமாமா பயங்கர சப்போர்ட். என்னை
மட்டுமே விரும்பும் ஒருவர் கண்டிப்பாய் வருவார்
என அப்பாவுக்கு தைரியம் சொன்னேன். :))

நம் நல்ல எண்ணங்களுக்கு ஆண்டவன் எப்போதும்
துணையிருப்பான். அப்பாவுக்கு அதிகம் டென்ஷன்
கொடுக்காமல் ஸ்ரீராம் வந்தார். எனது கொள்கையைப்
போலவே அவருக்கும் வரதட்சணை வாங்கக் கூடாது
என்ற கொள்கை(இன்றுவரை அதுவேண்டும்,இது
வேண்டும் என கேட்டதுகிடையாது.)எனது கொள்கைகளுக்கு
ஒத்துக்கொண்டு எங்கள் திருமணம் இனிதாக
நடந்து இப்போதும் நான் பட்டு கட்டுவதில்லை.


எந்த திருமணம், நிகழ்வு எதற்கும் காட்டன்
புடவையில் தான் செல்வேன். பாலியஷ்டர்
சில்க் போன்றவை கட்டுவேன். பட்டுப்புடவை
கட்டினால்தான் என் ஸ்டேட்டஸ் தெரியும்,
எனக்கு மரியாதை கிடைக்கும் என்றால்
அப்படி ஒரு மரியாதை எனக்குத் தேவையே
இல்லை.

என் மகளுக்கு பட்டுப் பாவடை வாங்கித்
தருகிறேன். என் மாமா என்னை வற்புறுத்தவில்லை.
நானாகவேதான் பட்டு வேண்டாமென்று
சொன்னேன். அயித்தானும் என் உணர்ச்சிகளுக்கு
மதிப்பு கொடுத்திருக்கிறார். நாளை என் மகள்
வளர்ந்து தன் மனது போல் முடிவெடுக்கட்டும்.
”உனக்கு விருப்பமில்லை அம்மா! என் ஆசையை
ஏன் கெடுத்தான்/கெடுக்கிறாய்” என்று கேட்டு
விடக்கூடாது.

டிஸ்கி: எனது கொள்கை தந்த மனமாற்றமாக தம்பியும்
பட்டை விட்டுவிட்டான். பட்டு வேட்டி கட்டுவதில்லை
என்பதுடன் தனக்கு வரும் மனைவியும் இந்த உன்னதமான
கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை
கோரிக்கையாக வைத்து பெண் தோட சொல்லிவிட்டான்.

என் மாமாவின் என் திருமணத்தில் எனக்கு மனமாற்றம்
போல என் தம்பிக்காக பெண் தேடும்பொழுது பட்டு புடவை
வேண்டாம் என நாங்கள் சொல்லும் காரணத்தைப்பார்த்து
அம்ருதாவும் பட்டைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டாள்.
இதுவரை இருப்பது போதும். இனிமேல் எனக்கு பட்டு
எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள்

மனதைரியம் இருப்பவர்கள் மட்டும் இந்தப் பதிவை
படிக்கவும்-இது என் அன்பு வேண்டுகோள்.



ஹேண்ட்பேக் பற்றிய
இந்தப் பதிவை நேற்று தமிழ்மணத்தில் கண்டேன்.
பின்னூட்டம் கூட மனது வராமல் வந்துவிட்டேன்.


நல்லவேளை நான் தோல் கைப்பைக்களை உபயோகிப்பதில்லை.

39 comments:

ஆயில்யன் said...

//வெந்தயக் கலரில் அரக்கு கலர் பார்டர் காம்பினேஷனும்
எனக்கு மிகவும் பிடிக்கும்.//

சூப்பரூ பெரும்பாலும் அரக்கு பார்டர் அட்டகாசமாய் இருக்கும் :)

ஆயில்யன் said...

//அப்பாவுக்கு அதிகம் டென்ஷன்
கொடுக்காமல் ஸ்ரீராம் வந்தார்.///


பாஸ் அயித்தான் எண்ட்ரீ இன்னும் கொஞ்சம் பில்ட் அப் போட சொல்லியிருக்கலாமோன்னு தோணுது :)

Anonymous said...

தோல்ப்பைகளை நானும் உபயோகிப்பதில்லை...


அரக்கு என்றால் என்ன நிறம்?

ஆயில்யன் said...

பாஸ் இந்த பதிவு படிச்சு நான் நொம்ப்ப ஃபீல் ஆயிட்டேன் :((

(பட்டு புடவை,பட்டு பாவாடை தாவணி,பட்டு சட்டை பாவாடை என அதிகம் அழகு வெளிப்படுகிறது இந்த ஆடையில் அப்படின்னு எனக்கு ஒரு நினைப்பு!)

Anonymous said...

//பாஸ் அயித்தான் எண்ட்ரீ இன்னும் கொஞ்சம் பில்ட் அப் போட சொல்லியிருக்கலாமோன்னு தோணுது :)///


அதே
அதே
அண்ணாவின் அருமை பெருமைகளை இருட்டடிப்பு செய்றாங்க..

ஆயில்யன் said...

//♥ தூயா ♥ Thooya ♥ said...
தோல்ப்பைகளை நானும் உபயோகிப்பதில்லை...


அரக்கு என்றால் என்ன நிறம்?
//

அரக்கு = மெரூன் கலரு என்று தமிழில் சொல்வார்கள் :))))))

pudugaithendral said...

அயித்தான் எண்ட்ரீ இன்னும் கொஞ்சம் பில்ட் அப் போட சொல்லியிருக்கலாமோன்னு தோணுது

வாங்க ஆயில்யன்,

ஏற்கனவே நான் அயித்தானைப் பத்தி நிறைய்.....ய்ய சொல்லி பலரை கடுப்பேத்திகிட்டு இருக்கேன்.:))

அதிகமான பேரோடை வயிற்றெரிச்சலை கொட்டிக்க வேணாமுன்னே விட்டுட்டேன்.

pudugaithendral said...

பட்டு புடவை,பட்டு பாவாடை தாவணி,பட்டு சட்டை பாவாடை என அதிகம் அழகு வெளிப்படுகிறது இந்த ஆடையில் அப்படின்னு எனக்கு ஒரு நினைப்பு//

உங்க நினைப்புத் தவறில்லை. ஆனால் அந்த பட்டு எப்படித் தயாரிக்கப்படுதுன்னு பார்க்கும்போது மனது வலிக்கும்.

pudugaithendral said...

அண்ணாவின் அருமை பெருமைகளை இருட்டடிப்பு செய்றாங்க..//

அது சரி,

ஆயில்யனுக்கு சொன்ன பதிலை படிங்க தூய்ஸ்.

:))))

Thamiz Priyan said...

சில விடயங்களுக்கு சிலதை செய்யலாம்..ஆனால் அத்தியாவசிய தேவை இல்லாமல் கொல்லக் கூடாது.பட்டுப் பூச்சி இதற்காகவே கூடுகளில் வளர்க்கப்படுவது தானே.... கிட்டதட்ட செயற்கையான வளர்வது போல். தேவையைக் கருதியே வளர்க்கப்படுகின்றது.

இறந்த அல்லது சாகடிக்கப்பட்ட பாம்புகளின் தோலில் தானே பை செய்யப்படுகின்றது..அதனால் என்ன? தப்பு என்று நினைத்தால் தானே தப்பு
(குறிப்பு : முஸ்லிம்களில் திருமணத்திற்கு எப்படிப்பட்ட பட்டுப் புடவை எடுப்பார்கள் என்று தெரியும் தானே..என் திருமணத்தில் சாதாரணமான திருமண சேலை தான் மனைவிக்கு எடுத்தோம். வரதட்சணை..மூச்..நோ!)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//♥ தூயா ♥ Thooya ♥ said...
தோல்ப்பைகளை நானும் உபயோகிப்பதில்லை...
அரக்கு என்றால் என்ன நிறம்?
//
அரக்கு = மெரூன் கலரு என்று தமிழில் சொல்வார்கள் :))))))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

வாங்க தமிழ்ப்ரியன்,

உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

வரதட்சணை வாங்காத உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

S.Arockia Romulus said...

பட்டுக்கு பட்டு என்று பெயர் வரக் காரணம்......
அல்லல் பட்டு ...... துன்ப பட்டு.......வேதனை பட்டு....
கணவனிடம் திட்டு பட்டு ......கடன் பட்டு ....வாங்குவதால்தான் அதன் பெயர் 'பட்டு'

pudugaithendral said...

பட்டுக்கு பட்டு என்று பெயர் வரக் காரணம்......
அல்லல் பட்டு ...... துன்ப பட்டு.......வேதனை பட்டு....
கணவனிடம் திட்டு பட்டு ......கடன் பட்டு ....வாங்குவதால்தான் அதன் பெயர் 'பட்டு'//

ஆஹா இம்புட்டு இருக்கா இதுல..
இத்தனை நாள் தெரியாம போயிருச்சே.

நன்றி ரோமுலஸ்

மாதேவி said...

கொதிக்கும் வெந்நீரில் புழுக்களை போட்டு....எனக்கும் மனதுவலிக்கும்.
பாலியஷ்டர்சில்க் அணிவது எனக்கும் பிடிக்கும்.

நட்புடன் ஜமால் said...

நல்ல அயித்தான்!

வாழ்த்துகள் அவருக்கும் தங்களுக்கும்.

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
வரதட்சணை..மூச்..நோ!)//

பாவம் அண்ணே!

அண்ணி வீட்ல கொஞ்சம் டெரராத்தான் இருந்திருக்காங்க :(

FunScribbler said...

உங்கள் பதிவு, பதிவில் சொன்ன விஷயம், நீங்க தைரியமாக எடுத்த முடிவு அனைத்தும் அருமை! சூப்பர்!ரொம்மப பெருமையாக இருக்கிறது.:)

pudugaithendral said...

same blood madangi

pudugaithendral said...

ஆமாம் ஜமால்,

ரொம்பவே நல்லவர். :))

மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தமிழ்மாங்கனி,
பதிவை அனு அனுவா ரசிச்சிருக்கீங்க போலிருக்கு.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

வெண்பூ said...

என்னாது பட்டுப்புடவை வேணாம்னு சொல்லுற ஒரு ஆளா? புதுக்கோட்டையில இருந்து வர்றவங்க எல்லாம் ஏன் இப்படி வித்தியாசமா இருக்கீங்க.. :)))

Paheerathan said...

//மனதைரியம் இருப்பவர்கள் மட்டும் இந்தப் பதிவை
படிக்கவும்-இது என் அன்பு வேண்டுகோள்.//

இந்த வாசகங்களை அடிக்கடி இப்போது காண வேண்டியுள்ளது , என்ன ஒரு வித்தியாசம் இது விலங்குகளுக்காக அவை மனிதர்களுக்காக.

தொடுப்புக்கு நன்றி புதுகை தென்றல்.

pudugaithendral said...

என்னாது பட்டுப்புடவை வேணாம்னு சொல்லுற ஒரு ஆளா?//

இதுல என்ன ஆச்சரியம் வெண்பூ,
என் அத்தை(சத்யா மாமாவின் மனைவி) சின்ன மாமாவின் மனைவி, அவர்களின் பெண்கள் என யாரும் பட்டு கட்டுவதேயில்லை.

தன் மருமகள்களுக்காக என் அம்மம்மாவும் பட்டு கட்டுவதில்லை.
அம்மாவும் கட்டாமல் தனக்கும் அப்படி ஒரு மருமகளைத் தேடிக்கொண்டிருகிறார். உன்னத செய்லாக நாங்கள் இதை நினைக்கிறோம்.


புதுக்கோட்டையில இருந்து வர்றவங்க எல்லாம் ஏன் இப்படி வித்தியாசமா இருக்கீங்க..//

:)))))))) அப்துல்லாவை ஏதும் சொல்லலியே!!

pudugaithendral said...

தொடுப்புக்கு நன்றி //
அவ்வை சண்முகி படத்தில் கமலஹாசன் ஜெனினி கணேசனிடம் ஒரு வசனம் சொல்வார்.

கசாப்புக்கடை பாஷா வெட்டிய மிருகங்களை விட ஜெமினியின் லெதர் ஃபேக்டரிக்காக வெட்டப்பட்ட மிருகங்கள் அதிகம்” என்பதுதான்.

உங்களின் பதிவிறாக என் மனமார்ந்த பாராட்டுக்கள்

நிஜமா நல்லவன் said...

ஆஹா...பதிவிலும் எழுதியாச்சா???

goma said...
This comment has been removed by the author.
goma said...

என் உறவினர்களில் ஒரு பெண்மணி வயது 40க்குள்தான் இருக்கும்.அவர் சொன்னது என் மனதில் அலையடித்துக் கொண்டிருக்கிறது.பட்டுப் புடவை உடுத்துவதில்லை என்று சபதம் எடுத்திருப்பதாகக் கூறினார்.

goma said...

இந்த பட்டுப் புடவை, சில பெண்களை ,மனரீதியில் ஒன்று,கர்வம் கொள்ள வைக்கும், இரண்டு தாழ்வுமனப்பான்மையை உண்டு பண்ணும்.
சில திருமண வீடுகளில் வந்திருப்போருக்கு உபசாரம், அவர்கள் அணிந்திருக்கும் புடவையின் தராதரம் கண்டுதான் .

மங்களூர் சிவா said...

எப்படி பட்டு தயாரிக்கிறாங்க அப்படின்னு எங்க வீட்டம்மணிக்கும் கொஞ்சம் எடுத்து சொன்னீங்கன்னா என் பர்ஸ் தப்பிக்கும்.

ஹேண்ட் பேக் பதிவு போட்டோக்கள் இதை ஈமெயிலில் ஏற்கனவே பார்த்தேன் மனசு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு
:((((((

pudugaithendral said...

இந்த பட்டுப் புடவை, சில பெண்களை ,மனரீதியில் ஒன்று,கர்வம் கொள்ள வைக்கும், இரண்டு தாழ்வுமனப்பான்மையை உண்டு பண்ணும்.
சில திருமண வீடுகளில் வந்திருப்போருக்கு உபசாரம், அவர்கள் அணிந்திருக்கும் புடவையின் தராதரம் கண்டுதான் .//

ஆமாம் கோமா,
சத்யமான உண்மை.

pudugaithendral said...

எப்படி பட்டு தயாரிக்கிறாங்க அப்படின்னு எங்க வீட்டம்மணிக்கும் கொஞ்சம் எடுத்து சொன்னீங்கன்னா என் பர்ஸ் தப்பிக்கும்.//

பட்டுப்பூச்சியை வளர்த்து அதை கொதிக்கும் வெந்நீரில் போட்டு சாகடித்து அதன் வாயில் ஊரும் சலைவாவை எடுத்து பட்டு நூல் தயாரித்து புடவை தயாரிக்கிறார்கள்.

1 புடவை தயாரிக்க கொல்லப்படும் பட்டு பூச்சிகளின் எண்ணிக்கை நிறைய்ய்ய்ய

pudugaithendral said...

டிஸ்கியில் சொல்ல மறந்த விடயம்.

எங்களின் இந்த வித்யாசமான கொள்கையை என் சித்தி மங்கையர் மலருக்கு எழுத 2000ஆம் வருடம் நடைபெற்ற என் சின்ன மாமாவின் திருமணத்தில் மங்கையர்மலர் நிறுவனத்தினர் வந்து பேட்டியெடுத்து எங்கள் குடும்ப புகைப்படம் + பேட்டி ஜூன்/ஜூலை இதழில் ப்ரசூரமானது.

(நான் தான் அதில் ஹைலைட், பட்டு கட்டமாட்டேன் என்று கண்டீஷன் போட்டதனால் :))) )

ஆ! இதழ்கள் said...

மஞ்சள் கலர் காட்டன் புடவை அல்லது
கேரளா காட்டன் புடவைதான் அணிவது வழக்கமாக
இருக்கிறது.//

ஆண்கள் பட்டு கட்டுவதில்லையா?

pudugaithendral said...

வாங்க ஆ! இதழ்கள்,

தெலுங்கு சம்பிரதாயத்தில் தாலி கட்டும் பொழுது இருவரும் பட்டு அணிவதில்லை. காட்டன் புடவை, வேஷ்டிதான்.

வருகைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா அவரு என்னையத்தான் சொல்றாரு :))

பாயா இருந்துக்கிட்டு வெஜ்டேரியனா இருக்கியேன்னு கிண்டல் பண்ணுவாரு என்னைய :))

Anisha Yunus said...

ஹை தென்றல்.

நல்லா எழுதறீங்க. ஆனா அதுக்காக உங்க பயத்துக்கு எல்லாரையும் வழி மொழிய வெச்சுடாதீங்க. கைப்பை ரகசியத்தைதான் சொல்றேன். எல்லா ஹேண்ட்பேகும் அப்படி தயாராவதில்லை. அது மிக மிக மிக வசதி படைத்தவங்க வாங்கற வகையை சேர்ந்தது. அது நம்மளை மாதிரி சாதாரண மக்கள் கூட உபயோகிக்கற நிலை வர்றப்ப பாம்பு என்கிற ஜீவராஸியே உலகத்துல இருக்காது. நாம அதிகமா உபயோகிபதெல்லாம் மாடு / எருமை / ஆடு / செம்மறி ஆடு இந்த மாதிரி பாவப்பட்ட ஜீவராஸிகள்ல இருந்து தயாராவது. கிட்டத்தட்ட பாம்புகள் படற பாடுதான் அவைகளுக்கும். யாரை சொல்லறது? இதுக்கே நீங்க அரண்டா சில காலம் முன்னாடி மேனகா காந்தியம்மா குமுதத்திலோ ஆனந்த விகடன்லயோ ஒரு கட்டுரை தந்திருந்தாங்க. அதுல ஒரு சிறப்பு இடுகை வந்தது. நாம கடையில இருந்து வாங்கி சாப்பிடற ஸ்வீட்ஸ்ல இருக்கற ஸில்வர் ஃபாயில் பத்தி. அதை படிச்சதுல இருந்து அப்படிபட்ட ஸ்வீட்ஸ் வாங்கறதையோ சாப்பிடறதையோ விட்டுட்டேன். அதைவிட கொடுமை அந்த வகை ஸ்வீட்ஸ் சாப்பிடறது ஜைன மக்கள். சுத்த சைவம்னு சொல்றவங்க. அது சைவம்தான். ஆனால் அந்த ஃபாயில் தயாரிக்க ஒவ்வொருதடவையும் கொல்லப்படற மாடுகளின் எண்ணிக்கை? ஹ்ம்ம்...உலகத்துல எல்லாவிதத்திலும் எலா நேரத்திலும் வாய் பேசா ஜீவராசிகள் மேல கொடுமை நடந்துகிட்டுதானிருக்கு, மனிதனும் உள்பட சிலநேரம்.

M said...

Silver foil article was in Snegithi.

M said...

சிலவர் ஃபொயில் பற்றி நான் சொன்ன போது சிரித்தவர்கள் தான் அதிகம். நன்றி அன்னு. சிநேகிதியில் வந்த பதிவு என்று நினைக்கிறேன். அதனால் தான் ஸ்வீட்டிலும் பச்சை மற்றும் சிகப்பு குறியீடு போடும் படி போராடி போட வைத்தார்கள். ஃபொயிலில் போட்டு வரும் எந்த ஸ்வீட்டும் எனக்கு அதிகம் பிடித்ததில்லை. இதைப் படித்த பின்னர் 2004/5 என்று நினைக்கிறேன். அந்த ஸ்வீட் பக்கமே போவதில்லை.