Thursday, March 12, 2009

காட்டுல மழை...

எஸ்.வீ.சேகரின் டைமிங்கான காமெடி
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

என்னுடை ஆல் டைம் ஃபேவரிட்
“காட்லமழை” நாடகம்.

பலடயலாக்குகள்.

”அவனவன் வீட்டுல அரிசியைதான்
மூட்டைல வாங்குவாங்க,

இது என்னடா? பல்பு விஷயம்!!!”


”இந்த ராஜாளி சாதாரணமா போர்வையை போத்தமாட்டான்!
அப்படி போத்தினா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்கும்”


ஆச்சுடா பட்டாபி”
என்ண்ணன்னா?
12 வருஷம் ஆச்சு,
எண்ணண்ணா மெட்ராஸ் வந்தா?
சனியனே, கச்சேரி பண்ணியே 12 வருஷம் ஆச்சே



அப்பல்லாம் என் முதுகுக்கு பின்னாடி
எதையோ நீள...மா நிக்க வெச்சு
மீட்டுவையே!!!!

“ஐயோ! அது தம்புராண்ணா!!”

மறந்தே போச்சுடா பட்டாபி”






மவுண்ட் ரோடுல ஒசரமா அடுக்கடுக்கா
இருக்குமே அது பேரு என்ன?

கீதா காபி மைசூர்பாக்கு..
ரஜினி காந்த் பேனர்!!!

என்ன இப்படி இந்தாளு படுத்தறாரு?

எங்க அந்த ஸ்கேல்!! ஏறு பெஞ்ச்மேல


எல் ஐ சிக்கு எத்தனை மாடி?

20 மாடிண்ணா!!




ஐயோ அடிக்காதிங்கண்ணா!!
மாத்திகேக்கறேன்.

13க்கு 15க்கும் எத்தனை மாடி

14 1/2 மாடிண்ணா

அது என்ன 1/2 மாடி?

மொட்டை மாடி!

மொட்டை மாடி உனக்கா? இல்ல
எல் ஐ சிக்கா.
சரி மாத்தி கேக்கறேன்.
13 க்கும் 14 1/2க்கும் இடையே
எத்தனை மாடி?

14 மாடி

முழுசா சொல்லு.

எல் ஐ சிக்கு 14 மாடிண்ணா.

இறங்கட்டுமா!

இறங்கறியா அடுத்த வரியை யார் சொல்வா?

ஆரஞ்சு பழத்தை உரிச்சுத்தான் சாப்பிடணும். சொல்லு

ஐயோ அப்படித்தாண்ணா சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.

சொல்லு..

ஆரஞ்சு பழத்தை உரிச்சுத்தான் சாப்பிடணும்


பலாபழத்தை சுளைசுளையா சாப்பிடணும்

எலுமிச்சம்பழத்தை அமுக்கி அமுக்கிசாப்பிடணும்


திராட்சையை கொட்டையோட சாப்பிடணும்...



ஹையா இந்தக் கட்டிடம் என்னுது!
இந்தக் கட்டிடம் என்னுது.


கலக்கல் நகைச்சுவை நாடகம்.

எதைவிடுப்பது எதை தொடுப்பதுன்னு தெரியவில்லை.

நீங்களே கேட்டு ரசியுங்கள்.

தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


Get this widget | Track details | eSnips Social DNA

23 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல மழை தான் போல

இங்கே குடையிருப்பதால்

மழையில் நினைய முடியவில்லை

வீட்டில் போய் நினைகிறேன் ...

ஆயில்யன் said...

எனக்கும் எஸ்.வி சேகர் டிராமா ரொம்ப்ப புடிக்கும் நகைச்சுவை துணுக்கு தோரணங்களில் மிளிரும் நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு :)))

butterfly Surya said...

பல வருடம் முன்பே பார்த்து இருக்கேன். இருந்தாலும் ஆடியோவிற்கு நன்றி..

anujanya said...

எனக்கும் 'காட்ல மழை' ரொம்பப் பிடிக்கும். செம்ம டைம் பாஸ்.

திடீர்னு 'இது வரைக்கும் உன் காட்ல மழை - இனிமே என் காட்ல மழை' என்பார். '

இப்ப எதுக்கு திடீர்னு அதச் சொல்லற?'

'டிராமா முடியப் போகுது. அதுக்குள்ளே டைட்டில் வரவேண்டாமா?'

தேங்க்ஸ் மா.

அனுஜன்யா

VIKNESHWARAN ADAKKALAM said...

:) நாடகங்கள் நல்ல மொக்கையாக இருக்கும்...

கோபிநாத் said...

ரைட்டு இப்போதைக்கு முடியாது...இறக்கிறேன் ;)

நன்றி அக்கா ;)

பரிசல்காரன் said...

அப்பா.. ஒரு காலத்தில் எஸ்.வி.சேகரின் கேசட்டுகளை அலைந்து திரிந்து வாங்கிக் கேட்ட ஞாபகம் வருதே...

ஆடியோவுக்கு நன்னி!

அப்பப்போ டென்ஷனா இருக்கறப்ப கேட்க, இந்தப் பக்கத்தை புக் மார்க் பண்ணிகிட்டேன்!!!

SK said...

His comedy will be with good timing dialogues :)

pudugaithendral said...

நகைச்சுவை துணுக்கு தோரணங்களில் மிளிரும்//

ஆமாம் ஆயில்யன்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நல்ல மழை தான் போல

இங்கே குடையிருப்பதால்

மழையில் நினைய முடியவில்லை

வீட்டில் போய் நினைகிறேன் .//

ஆஹா ம்முடியல ஜமால் :))

pudugaithendral said...

பல வருடம் முன்பே பார்த்து இருக்கேன்.//

அப்படியா? நாங்க ஆடியோவில் கேட்டதோட சரி

pudugaithendral said...

எனக்கும் 'காட்ல மழை' ரொம்பப் பிடிக்கும். செம்ம டைம் பாஸ். //

வாங்க சார்,

மொத தபா உங்களை என் ப்ளாக் பக்கம் வரவெச்சிட்டேன்.

தன்யையானேன்.

pudugaithendral said...

நாடகங்கள் நல்ல மொக்கையாக இருக்கும்...//

வருகைக்கு நன்றி விக்கி

pudugaithendral said...

ஸ்மைலிக்கு நன்றி நிஜமா நல்லவன்

pudugaithendral said...

இப்போதைக்கு முடியாது//

முடிஞ்சாலும் அடிக்கடி கேக்கத் தூண்டுமே!

இறக்கறது(தரவிறக்கம்) தான் பெஸ்ட்

நன்றி கோபி

pudugaithendral said...

அப்பா.. ஒரு காலத்தில் எஸ்.வி.சேகரின் கேசட்டுகளை அலைந்து திரிந்து வாங்கிக் கேட்ட ஞாபகம் வருதே...//

சேம்ப்ளட். எங்கப்பாவால்தான் எனக்கு இதெல்லாம் அறிமுகம்


அப்பப்போ டென்ஷனா இருக்கறப்ப கேட்க, இந்தப் பக்கத்தை புக் மார்க் பண்ணிகிட்டேன்!!!//

:))) வீட்டுல மணல்கயிறு காசெட் ஓடினா அப்பா ரிலாக்ஸாகிக்கிறாருன்னு அர்த்தம்.

pudugaithendral said...

His comedy will be with good timing dialogues//

ஆமாம் எஸ்.கே.
அதுல அவரு கிங்காச்சே.

Anonymous said...

arimugathukku nandri..ketttuttu solren

cheena (சீனா) said...

எஸ் வி சேகர் சிரிப்புன்ன்னா சிரிப்புதான்

Vidhya Chandrasekaran said...

ஆமாம் சிஸ்டர். One of the best of S.Ve. Sekar

மங்களூர் சிவா said...

thanks for link

S.Arockia Romulus said...

எஸ்.வீ.சேகர் அப்படி சொன்னாலே ஞாபகம் வரும் காமடி

மனைவி அவருக்கு காப்பி கொடுப்பாங்க உடனே அவர் "நீ ரொம்ப அழகா இருக்கனு" சொல்லுவார்.
அவர் மனைவி "சும்மா சொல்லுரீங்க" னு வெட்கப்படுவாங்க
இவர் உடனே "கள்ளி கண்டு பிடிச்சிட்டியே" னு சொல்லுவார்

அரட்டை அகிலன் said...

நல்ல காமடி ......

1990 க்கு போன மாதிரி ஒரு உணர்வு .....

வாழ்த்துக்கள்

அரட்டை அகிலன்