படிக்கும் காலத்தில்அதிக பட்சமா 8 மணிக்கு
இல்லாட்டி 8.30க்கு தூங்கப்போயிடுவேன்.
எங்கவீடு ஓட்டு வீடுதான்.
காலேல 3.30க்கு சரோஜாம்மா பால் கொண்டுவந்து
கொடுத்திட்டு என்னியத்தான் கூப்பிடுவாங்க.
அதை வாங்கி வெச்சிட்டு பல்லை விளக்கிட்டு
சமையற்கட்டு கேஸ் அடுப்பு மேடைல
உக்காந்து படிக்க ஆரம்பிப்பேன். 5 மணிக்கு
சங்கு ஊதற சத்தம் கேட்டதும் பாட்டி எந்திரிப்பாங்க.
அவங்க பல் விளக்கி, காலைக்கடன் முடிச்சு
வர்றவரைக்கும் சிம்மாசனத்தை விட்டு இறங்காம
கருமமே கண்ணாயிரமாக படிச்சிகிட்டு இருப்பேன்.
பாட்டி காபிப்போட வந்ததும் நான் தூங்கப் போயிடுவேன்!!
அப்புறம் பக்திமலரோடு எந்திரிச்சு மத்த வேலைகள்,
(தண்ணி பிடிக்கறது.... இத்யாதிகள்)
மதியம் தூங்கும்
பழக்கம் இல்லாததாலும், காலேல சீக்கிரம்
எழுவதாலும்,”எங்கடி சேச்சி? 8 மணிக்கே
அவுட்”ன்னு :)) சொல்ற மாதிரி தூங்கப்போயிடுவேன்.
எங்கம்மா அநியாயத்துக்கு படுத்துவாங்க.
அவங்களால சீக்கிரம் படுக்க முடியாது
என்பதால் என்னிய எப்பவும் சீக்கிரம் தூங்கப்போறேன்னு!
திட்டிகிட்டே இருப்பாங்க. அப்பா 8 மணிக்குத்தான்
வீட்டுக்கு வருவாரு. அதுக்கப்புறம் அவரு குளிச்சு
சாப்பிட வருவதற்குள் 8.45ஆகிடும். சாப்பாடு
சூடா இருக்கணும், ஹாட் பேக்கில் எல்லாம்
வைக்கக்கூடாது என்பதால் அப்பா சாப்பிட்ட
பிறகு அம்மா தான் சமையற்கட்டை சுத்தம்
செய்வாங்க. (அவங்க வேலைக்கு போறாங்கன்னு
பாட்டிதான் சமையல், தண்ணி மத்த வெளி வேலைக்கு
நான், பாத்திரம், துணிக்கு வேலைக்காரம்மா. இவுங்க
வந்து செய்யுறதே அப்பாவுகு சுடா பலகாரம் செஞ்சு,
மேடையைக் கழுவுறது. அதுக்கு தான் அதிகம்
வேலை செய்வதா திட்டிகிட்டே இருப்பாங்க!!! )
அன்னைக்கு (21st may 1991)
அப்படித்தான். வாழ்க்கையில ரொம்ப
சந்தோஷமா இருந்த நந்நாள். +2 பரிட்சை முடிவுகள்
வந்து 70% மேல மார்க் வாங்கி சந்தோஷமா இருந்தேன்.
எப்பவும் போல 8 மணிக்கு தூங்கப்போயிட்டேன்!!
கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து சீக்கிரம் குளிச்சிட்டு
சாப்பிட உக்காந்தாங்க. ஆரம்பிச்சாங்க அம்மா!!
வீட்டுல பொண்ணு இருந்தும் எல்லா(!!) வேலையும்
நானே செய்யணும். ஒரு நாளாவது 8 மணிக்கு
தூங்கப்போகாமல் சமையற்கட்டை கழுவி விட்டாத்தான்
என்னவாம்?? அதுஇதுன்னுபுலம்பிக்கிட்டே இருந்தாங்க.
அவங்க சாப்பிடற வரை காத்திருந்து, என் ரேடியோவோடு
போய்,”முதல்ல சமையற்கட்டை விட்டு
வெளியே போங்கன்னு” கோபமா கத்திட்டு விவிதபாரதி
கேட்டுகிட்டே கட கடன்னு அடு்ப்பைக் கழுவி,
மேடையையும் சோப்பு போட்டுக் கழுவிட்டு
அடுப்புகடியிலேர்ந்து கையால தண்ணியைத் தள்ளினா??
அவ்வ்வ்வ்... கையில என்னமோ டக்குன்னு குத்துச்சு!!!
செம வலி.. வாய் ஆடோ மேடிக்கா ஷ்ஷ்டி கவசத்தை
சொல்ல ஆரம்பிக்க, வாசல்ல உக்காந்திருந்த அம்மா
ஓடிவந்து என்ன ஆச்சுன்னு? கேக்க எல்லாம் உன்னாலதான்
ஒழுங்கா தூங்கிகிட்டுருந்தவளைத் திட்டினன்னு எந்திரிச்சு
வந்து அடுப்பைக் கழுவினேன். என்னவோ குத்திடுச்சி(??)
அப்படின்னு சொன்னேன்.
கட்டைவிரலுக்கு கீழே சரி வலி. அம்மா அடுப்பை எடுத்துப்
பார்த்தா???? அங்கே உக்காந்திருக்காரு மிஸ்டர்.வெள்ளைத்தேள்!!!!
அம்மாடி தேளுக் கொட்டிடுச்சேன்னு? அம்மா பதற
உன் வார்த்தை தந்த வலியோட தேள்கொட்டினது பரவாயில்லைன்னு
கோபமா சொல்லிட்டு வாசல்ல போய் உக்காந்துட்டேன்.
ராத்திரி நேரம் எந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போகலாம்னு?
யோசிக்க, எதிர்வீட்டு செல்வராஜ் மாமா,”என்ன மருமகளே!
தூங்காம இங்க உக்கந்திருக்கன்னு? கேட்டாரு.
தேளுகொட்டிடுச்சு, அதான் எஞ்சாய் செஞ்சுகிட்டிருக்கேன்னு
சொல்ல, அவர் அரக்க பரக்க சைக்கிள்ள உக்கரவெச்சு
கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு(அவர் அங்கதான்
வேலை செய்யறார்) கூட்டிகிட்டு போய், தேளோட
கொடுக்கு கொஞ்சமா இருந்ததை எடுத்து, ஊசி போட்டு
கூட்டிகிட்டு வந்தாரு. கூட வர்றேன்னு சொன்ன அம்மாவை
“தேவையில்லை நானே போய்க்கிறேன்னு” சொல்லிட்டோம்ல.
11 மணி ஆகிடுச்சு. ஆஸ்பத்திரிலேர்ந்து வர்றவழியில
போலீஸ்டேஷ்ன்!! எப்பவும் இல்லாத திருநாளா
நிறைய போலீஸ். ஒவ்வொரு முக்குலையும்
நிக்குறாங்க!!!! என்ன பிரச்சனையோன்னு தெரியாம
மாமா பதமா பத்திரமா வீட்டுக்கு கொண்டுவந்து
சேத்தாரு. தூங்கறவளை எழுப்பி தேள் கொட்ட
வெச்சிட்டான்னு அப்பா நல்லா பாட்டு விட்டிருக்காரு.
வலி ஊசி மயக்கமெல்லாம் சேர்ந்து தூங்க
ஆரம்பிச்சேன். கை வலி மட்டும் குறையல.
நடுவுல கண் முழிச்சு பாத்தா? அம்மா, அப்பா,
செல்வராஜ் மாமா எல்லோரும் திண்ணையில
உக்காந்து பேசிகிட்டிருந்தாங்க.
அப்பா ரொம்ப திட்டாறாரோன்னு போய்
பாத்தா, செல்வராஜ் மாமா,” நல்ல வேளை
மருமகளே! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்.
ராஜிவ் காந்தி இறந்திட்டாரு” அதான் போலீஸ்
அங்கங்க நிக்குதுன்னு!!”’ தாக்கல் சொல்ல.
ஆஹான்ன்னு இருந்துச்சு.
இப்பவும் ராஜீவ் காந்தி இறந்த நாளை என்னால்
மறக்கவே முடியாது!!
இன்னமும் வலது கையில் அந்த வலி
இருந்துகிட்டே இருக்கு.(கூடுதல் உபயமா
ஹாஸ்டல்ல இருக்கும்பொழுது ராகிங்
செய்யறேனு கல்லை எடுத்து போட்டாங்க.
அது நேரே தேள் கொட்டின இடத்துல விழுந்து
கட்டைவிரல் மட்டும் துடிச்சிகிட்டே இருந்துச்சு!!)
இதே மாதிரி தூங்கிகிட்டிருத தம்பியையும்
அம்மா திட்ட அவனும் அவசரமா துணியை
எடுத்து வந்து பரபரன்னு துடைக்க அவனுக்கும்
தேள் கொட்டிச்சு. (நான் அப்போ மும்பைல
இருந்தேன்!!)
இப்ப என்ன திடும்னு இந்த கொசுவத்தின்னு
கேக்கறீங்களா? பாம்பை பத்தி படிச்சதும்
நம்ம தேள் ஞாபகம் வந்திருச்சு. அதான்.
கருநாகமும் 13ஆம் நம்பர் வீடும்.
52 comments:
தேளாஆஆஆஆஆ
யெஸ்ஸூ தேளேதான்!!!!!
\\இப்பவும் ராஜீவ் காந்தி இறந்த நாளை என்னால்
மறக்கவே முடியாது!!
\\
மிக(ச்) சரி,
எனக்கு அப்படி நடந்தது -
ஆனா சொன்னா நம்ப மாட்டாங்க
அய்யய்யோ...தேளு....
ஏன் இப்படி பயமுறுத்துறீங்க....
/படிக்கும் காலத்தில்அதிக பட்சமா 8 மணிக்கு
இல்லாட்டி 8.30க்கு தூங்கப்போயிடுவேன்./
ஓ...நீங்க அந்தக்காலத்து ஆளா...சரி..!
/காலேல 3.30க்கு சரோஜாம்மா பால் கொண்டுவந்து
கொடுத்திட்டு என்னியத்தான் கூப்பிடுவாங்க./
உங்க வீட்டில் உங்களுக்கு தான் சரியா அளவு பார்த்து வாங்க தெரியாதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சா....?
/அதை வாங்கி வெச்சிட்டு பல்லை விளக்கிட்டு
சமையற்கட்டு கேஸ் அடுப்பு மேடைல
உக்காந்து படிக்க ஆரம்பிப்பேன்./
அட...சூப்பர் பிளேஸ்...குட்...:)
/5 மணிக்கு
சங்கு ஊதற சத்தம் கேட்டதும் பாட்டி எந்திரிப்பாங்க./
அவங்க எழுந்ததும் நீங்க தூங்க போய்டுவீங்க...சரியா???
/எங்கம்மா அநியாயத்துக்கு படுத்துவாங்க./
அக்கா...பொய் சொல்லாதீங்க....அம்மாவை பார்த்தா நியாயத்துக்கு தான் படுத்துற மாதிரி இருக்காங்க....இருங்க...போட்டு கொடுக்கிறேன்....:)
/அம்மாடி தேளுக் கொட்டிடுச்சேன்னு? அம்மா பதற
உன் வார்த்தை தந்த வலியோட தேள்கொட்டினது பரவாயில்லைன்னு
கோபமா சொல்லிட்டு வாசல்ல போய் உக்காந்துட்டேன்./
வார்த்தையால கொட்டி இருக்கீங்க....அம்மாவை....:(
/தேளுகொட்டிடுச்சு, அதான் எஞ்சாய் செஞ்சுகிட்டிருக்கேன்னு
சொல்ல/
ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஓவரு....:)
எல்லாரும் பாம்பு தேள்'நு ஒரு விதமா தான் இருக்கீங்க இன்னைக்கு :) :)
இதே எங்கையாவது தொடர் பதிவா ஆகிட போகுது :) :) :)
/இதே மாதிரி தூங்கிகிட்டிருத தம்பியையும்
அம்மா திட்ட அவனும் அவசரமா துணியை
எடுத்து வந்து பரபரன்னு துடைக்க அவனுக்கும்
தேள் கொட்டிச்சு./
அச்சச்சோ....நல்லவேளை....நான் அம்மாகிட்ட நல்ல பேரு எடுத்திட்டேன்....:)
உங்க வீட்டில் உங்களுக்கு தான் சரியா அளவு பார்த்து வாங்க தெரியாதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சா....?//
அதிகாலை தூக்கத்தை தியாகம் செஞ்சு பால் வாங்கி குடும்பத்துக்கே காபி கொடுத்த வள்ளலை பத்தி இப்படி கேட்டுபுட்டீங்களே என்ன ஒரு வில்லத்தனம் :))
/எங்கம்மா அநியாயத்துக்கு படுத்துவாங்க./
அக்கா...பொய் சொல்லாதீங்க....அம்மாவை பார்த்தா நியாயத்துக்கு தான் படுத்துற மாதிரி இருக்காங்க....இருங்க...போட்டு கொடுக்கிறேன்....:)//
ம்ம் இப்ப போட்டுக் கொடுத்தாத்தான் என்ன? அதெல்லாம் அனுபவிச்சவங்களுக்குத்தான் கஷ்டம்.
அம்மாவை நீங்க ரீஜண்டா தான் பாத்திருக்கீங்க.
வார்த்தையால கொட்டி இருக்கீங்க....அம்மாவை....:(//
இல்லை அவங்க வார்த்தையால கொட்டின இடத்துக்கு மருந்து போட்டுகிட்டேன்.
தேளுகொட்டிடுச்சு, அதான் எஞ்சாய் செஞ்சுகிட்டிருக்கேன்னு
சொல்ல/
ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஓவரு....//
ஆமாம் திட்டு +தூக்கம் போச்சு + தேள்கொட்டின வலி. நமக்குத்தான் அழுகை வராதே. :))
அச்சச்சோ....நல்லவேளை....நான் அம்மாகிட்ட நல்ல பேரு எடுத்திட்டேன்...//
உங்களை அம்மா வேலை செய்யச் சொன்னதில்லை. அதனால தப்பிச்சிட்டீங்கன்னு சொல்வதுதான் மிக சரி :))
எல்லாரும் பாம்பு தேள்'நு ஒரு விதமா தான் இருக்கீங்க இன்னைக்கு :) :)
இதே எங்கையாவது தொடர் பதிவா ஆகிட போகுது :) :) :)//
:))))))))
ஆஹா சிஸ்டரும் வத்தி சுத்தியிருக்கீங்க. நல்லவேளை என்ன பாம்பு கடிக்கல:)
நீங்க விருச்சிக ராசியா? ஆசையாக வந்து கொட்டியிருக்குது?
உன் வார்த்தை தந்த வலியோட தேள்கொட்டினது பரவாயில்லைன்னு
கோபமா சொல்லிட்டு //
உங்களுக்கு தேள் கொட்டு தேவைதான்.!
//தை வாங்கி வெச்சிட்டு பல்லை விளக்கிட்டு
சமையற்கட்டு கேஸ் அடுப்பு மேடைல
உக்காந்து படிக்க ஆரம்பிப்பேன்.//
உங்களுக்கு பயமே இல்லையா?
சிலிண்டர் வெடிக்கும் என்று அப்போது தெரியுமா?
பதிவு நன்று!
ஆஹா சிஸ்டரும் வத்தி சுத்தியிருக்கீங்க. //
ஆமாம். ஒவ்வொரு வருடமும் ராஜீவ்காந்தி நினைவுநாளின் போது சுத்தும் வத்தி இந்த தடவை ரெண்டுமாதம் முன்னாடியே சுத்திடுச்சு.
நீங்க விருச்சிக ராசியா?//
இல்ல நானானி, மகர ராசி.
ஆசையாக வந்து கொட்டியிருக்குது?//
சரியான விஷத்தேள், ஆள் போகாம இருந்தது ஆச்சரியம்னு டாக்டர் சொன்னப்பத்தான் வலி அதிகமாச்சு.
:((
உங்களுக்கு தேள் கொட்டு தேவைதான்.!//
:((
உண்மையைச் சொன்னா தேளுக்கு நன்றி சொல்லணும் தாமிரா.
அன்றிலிருந்துதான் அம்மா தன் தேள் போன்ற நாக்கை கொஞ்சம் கட்டி வெச்சு என்னிடம் பாச்மாக பேச ஆரம்பித்தது.
:))
உங்களுக்கு பயமே இல்லையா?//
அது சரி.
சிலிண்டர் வெடிக்கும் என்று அப்போது தெரியுமா?//
அடுப்பு, சிலிண்டர் எல்லாம் ஆஃப் செய்த நிலையில் இருக்கும்பொழுது
வெடிக்க வாய்ப்பு இருக்கா என்ன?
தேள் கடிக்கா நினைவுநாள்னுக கொஞ்சம் பதறித்தான் போயிட்டேன்....
அன்புடன் அருணா
நானும் தேள் தான் (Scorpian)!!
:-))
எங்க பாலையா ஸ்கூல்ல தேளூ அடிக்கடி ஓடுலேந்து கீழ வந்து எங்களப் பார்த்துட்டு போகும் :)
யக்கா...உங்களுக்கும் கொட்டிடிச்சா!! ;) சூப்பரு ;)
நமக்கு கொட்டியிருக்கு...ஊரே எழுப்பிட்டோம்ல ;)
யக்கா கண்ணு கட்டுதுக்கா உங்க பதிவை படிச்சி முடிக்கிறதுகுல்ல கலர் அம்புட்டு தூக்குது...பீலிஸ் ஏதாச்சும் பண்ணுங்க ;(
// அங்கே உக்காந்திருக்காரு மிஸ்டர்.வெள்ளைத்தேள்!!!! //
மிஸ்டர் வெள்ளைத்தேள்...
ஆஹா தேளைக்கூட மரியாதைகாத்தான் கூப்பிடுவீங்க போலிருக்கு
// கருமமே கண்ணாயிரமாக படிச்சிகிட்டு இருப்பேன். //
கண் ஆயிரமாக வா.
வாரரே வா... சூப்பர்...
// படிக்கும் காலத்தில்அதிக பட்சமா 8 மணிக்கு
இல்லாட்டி 8.30க்கு தூங்கப்போயிடுவேன். //
ரொம்ப சமத்து போலிருக்கு
// எங்கவீடு ஓட்டு வீடுதான். //
வீட்ல இருக்கிறவங்களூக்கு ஓட்டு உண்டுங்களா?
// அதை வாங்கி வெச்சிட்டு பல்லை விளக்கிட்டு //
பல்லை விளக்கிட்டு...
நல்ல பழக்கம்
// பாட்டி காபிப்போட வந்ததும் நான் தூங்கப் போயிடுவேன்!! //
அந்த தூக்கத்தில் இருந்து எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்கன்னு சொல்லவேயில்லையே ?
// (தண்ணி பிடிக்கறது.... இத்யாதிகள்) //
தண்ணி பிடிக்கறது தெரியும்..
இத்யாதிகள் என்னவென்று சொல்லவும்.
இங்கு தங்ஸ் நான் இத்யாதிகள் செய்வதில்லை என்று படுத்துகின்றார்கள்.
// மதியம் தூங்கும்
பழக்கம் இல்லாததாலும், //
ஸ்கூலுக்கு போயிட்டு வரும்போதே, 4 மணி ஆகிவிடுமே, அப்புறம் மத்யானம் தூங்குவது..
// அம்மாடி தேளுக் கொட்டிடுச்சேன்னு? அம்மா பதற
உன் வார்த்தை தந்த வலியோட தேள்கொட்டினது பரவாயில்லைன்னு
கோபமா சொல்லிட்டு வாசல்ல போய் உக்காந்துட்டேன்.//
அம்மாவை நல்லா கொட்டினீங்க..
// +2 பரிட்சை முடிவுகள்
வந்து 70% மேல மார்க் வாங்கி சந்தோஷமா இருந்தேன். //
70% ஆ...
வெரிகுட்.. வெரிகுட்
// வீட்டுல பொண்ணு இருந்தும் எல்லா(!!) வேலையும்
நானே செய்யணும். ஒரு நாளாவது 8 மணிக்கு
தூங்கப்போகாமல் சமையற்கட்டை கழுவி விட்டாத்தான்
என்னவாம்?? //
அதானே... கழுவிவிட்டாத்தான் என்னவாம்...
// இப்ப என்ன திடும்னு இந்த கொசுவத்தின்னு
கேக்கறீங்களா? பாம்பை பத்தி படிச்சதும்
நம்ம தேள் ஞாபகம் வந்திருச்சு. அதான். //
பாம்புக்கு தேள் சரியா போச்சுங்க...
பின்னாடி யாரவது நண்டுவாக்கிளி அப்படின்னு ஆரம்பிக்க போறாங்க.
நான் ஒரு பத்து கமெண்ட் போட்டு இருப்பேன் அப்படின்னு நினைக்கின்றேன்.
எல்லா கமெண்டுக்கும் பதில் சொல்லுங்க..
இருந்தும் மறந்து விடாதீர்கள்,
மறந்தும் இருந்து விடாதீர்கள் பதில் சொல்ல...
தேள் கடிக்கா நினைவுநாள்னுக கொஞ்சம் பதறித்தான் போயிட்டேன்....//
வாங்க அருணா,
தேள்கடிச்சன்னக்க்கு பல விடயங்கள் நடந்ததால தேள்கடி நினைவுநாள்!!
இப்ப ராஜீவ்காந்தி நினைவுநாள்னா என்னுடைய நினைவும் எல்லோருக்கும் வந்திரும்ல!!!
நான் ஸ்கார்பியோ இல்லீங்க கணிணீதேசம்.
விர்கோ.
எங்க பாலையா ஸ்கூல்ல தேளூ அடிக்கடி ஓடுலேந்து கீழ வந்து எங்களப் பார்த்துட்டு போகும் :)//
வாங்க அப்துல்லா,
எங்கவீட்டுக்கும் அடிக்கடி வரும். அம்மாதான் அதை லாவகமாக அடிப்பாங்க. நானும் தம்பியும் அதைப் பொதைக்க குழி தோண்டி ரெடியா வெச்சிருப்போம்.
யக்கா...உங்களுக்கும் கொட்டிடிச்சா!! ;) சூப்பரு ;)
நமக்கு கொட்டியிருக்கு...ஊரே எழுப்பிட்டோம்ல ;)//
ஊரைக்கூட்டினா எங்கம்மா அங்கையே வெச்சு என் கதையை முடிச்சிருப்பாங்க!!! :((
யக்கா கண்ணு கட்டுதுக்கா உங்க பதிவை படிச்சி முடிக்கிறதுகுல்ல கலர் அம்புட்டு தூக்குது...பீலிஸ் ஏதாச்சும் பண்ணுங்க ;(//
ம்ம் நீங்க மட்டும்தான் இப்படி சொல்றீங்க.
பாப்போம்.
வாங்க ராகவன் உங்க பல கேள்விக்கும் விடை சொல்லிடறேன்.
ரேடியோவில் பக்திமாலை காலை 6 மணிக்கு வரும். அதோடுதான் எந்திரிப்பேன்னு பதிவில் சொல்லியிருக்கேன்.
இந்த தண்ணிபிடியே பெரிய வேலை.
தண்ணீர் உள்ளே வராது என்பதால் வெளியே குழிவெட்டி அதற்குள் ஒரு ஆள் இறங்கி மொண்டு மொண்டு ஊத்த, அதை உள்ளே கொண்டுவந்து ரொப்பணும். :)
அதற்கு பிறகு தம்பிக்கு புத்தகம் அடுக்கிக் கொடுத்து,
ஃப்ரெஷ்ஷாக கீரை வாங்கிவந்து,
எல்லாம் 7.30க்குள் முடித்து
நான் கிளம்ப வேண்டும் :(((
எங்களுக்கு சிஃப்ட் சிஸ்டம் என்பதால் மதியம் 1 மணிக்கு வந்துவிடுவோம்.
ஒரு நாள் செஞ்சா தப்பில்லை ராகவன்.
தினமும் நான் செய்த வேலைகள் படித்துக்கொண்டிருக்கும் எந்த பிள்ளையும் செய்திருக்க மாட்டார்கள்.
அதென்னவோ அம்மாக்களுக்கு எம்புட்டு செய்தாலும் திருப்தியே வராது! தான் ஒரு வேலையும் செய்திராவிட்டாலும் நான் மட்டும் எல்லா வேலையும் செய்ய வேண்டும் அதே சமயம் படிக்கவும் வேண்டும், தம்பியையும் கவனித்துக்கொள்ளவேண்டும் எனும் ஓர் பாடாவதியான நிலை!!!!
+2 பப்ளிக் பரிட்சையின் அன்று காலையில் கூட தண்ணீர் ரொப்பிக்கொண்டே ரிவிஷன் செய்தது நானாக மட்டும்தான் இருக்கும். :))
:( நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும். அதை இப்பொழுது வெளியே சொல்லி ஆவப்போவது ஏதும் இல்லை.
போகட்டும் விடுங்கள்..
Post a Comment