ஊஞ்சலில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும்.
ஆஷிஷ் அம்ருதாவும் வீட்டில் ஊஞ்சல் போட
வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
வெளிநாட்டில் இருந்தபோதுதான் சாத்தியமில்லை
என்பதால் பிள்ளைகள் ஒவ்வொருமுறையும்
இந்தியா போனதும் ஊஞ்சல் போட்டுக்கொடுங்கள்
என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
இதற்கு முன்பிருந்த வீட்டில் ஊஞ்சல் போட
வசதி இல்லை. பிரம்பு ஊஞ்சல் விற்கும்
கடை பக்கம் போகும் போதெல்லாம் அம்ருதா
ஏக்கப் பார்வை பார்ப்பாள்.
இந்த வீட்டிலும் ஊஞ்சல் மாட்டக் கொண்டிகள்
இல்லை. இருப்பதோ வாடகை வீட்டில்.
கொண்டி போட்டுக்கொடுக்கச் சொன்னல்
செய்வார்களா? ஆனாலும் பிள்ளைகளின்
ஆசை நிறைவேற்ற வேண்டுமென
நினைத்துக்கொண்டிருந்தேன்.
கடைக்குச் சென்ற பொழுது இது கண்ணில் பட்டது.
வாங்கிவந்தேன். விலையும் அதிகம் இல்லை
150ரூபாய்தான்.
வாங்கிவந்துவிட்டாலும் மாட்ட முடியாமல்
2 மாதமாக கிடந்தது. அதற்கு இப்பொழுதுதான்
வேளை வந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமை
வேலைக்கு வந்திருந்த கார்பெண்டரைக் கூப்பிட்டு
இதை மாட்டிக்கொடுக்கச் சொன்னேன். கொண்டி
போடும் டென்ஷன் இல்லாமல் பால்கனி கம்பியில்
அழகாக கம்பி போட்டு முடிக்கிக் கொடுத்தார்.
அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரே சந்தோஷம்.
அதுவும் அந்த பால்கனியில் மாலை வேளையில்
காற்று இதமாக வீசும்.
அண்ணனும் தங்கையும் படிப்பது கூட அங்கேதான்.
படித்துக் களைத்து அண்ணன் உறங்குகிறார். :))
நமக்கு இது சின்ன விஷ்யம் தான். ஆனால்
பிள்ளைகளுக்கு பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
“ஊஞ்சல் போட்டுக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்மா!
என்று முத்த மழை பொழிந்து விட்டார்கள்””
ஆஷிஷ் அம்ருதாவும் வீட்டில் ஊஞ்சல் போட
வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
வெளிநாட்டில் இருந்தபோதுதான் சாத்தியமில்லை
என்பதால் பிள்ளைகள் ஒவ்வொருமுறையும்
இந்தியா போனதும் ஊஞ்சல் போட்டுக்கொடுங்கள்
என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
இதற்கு முன்பிருந்த வீட்டில் ஊஞ்சல் போட
வசதி இல்லை. பிரம்பு ஊஞ்சல் விற்கும்
கடை பக்கம் போகும் போதெல்லாம் அம்ருதா
ஏக்கப் பார்வை பார்ப்பாள்.
இந்த வீட்டிலும் ஊஞ்சல் மாட்டக் கொண்டிகள்
இல்லை. இருப்பதோ வாடகை வீட்டில்.
கொண்டி போட்டுக்கொடுக்கச் சொன்னல்
செய்வார்களா? ஆனாலும் பிள்ளைகளின்
ஆசை நிறைவேற்ற வேண்டுமென
நினைத்துக்கொண்டிருந்தேன்.
கடைக்குச் சென்ற பொழுது இது கண்ணில் பட்டது.
வாங்கிவந்தேன். விலையும் அதிகம் இல்லை
150ரூபாய்தான்.
வாங்கிவந்துவிட்டாலும் மாட்ட முடியாமல்
2 மாதமாக கிடந்தது. அதற்கு இப்பொழுதுதான்
வேளை வந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமை
வேலைக்கு வந்திருந்த கார்பெண்டரைக் கூப்பிட்டு
இதை மாட்டிக்கொடுக்கச் சொன்னேன். கொண்டி
போடும் டென்ஷன் இல்லாமல் பால்கனி கம்பியில்
அழகாக கம்பி போட்டு முடிக்கிக் கொடுத்தார்.
அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரே சந்தோஷம்.
அதுவும் அந்த பால்கனியில் மாலை வேளையில்
காற்று இதமாக வீசும்.
அண்ணனும் தங்கையும் படிப்பது கூட அங்கேதான்.
படித்துக் களைத்து அண்ணன் உறங்குகிறார். :))
நமக்கு இது சின்ன விஷ்யம் தான். ஆனால்
பிள்ளைகளுக்கு பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
“ஊஞ்சல் போட்டுக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்மா!
என்று முத்த மழை பொழிந்து விட்டார்கள்””
20 comments:
ஹையா எனக்கிம் பிடிக்குமே!
\\நமக்கு இது சின்ன விஷ்யம் தான். ஆனால்
பிள்ளைகளுக்கு பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
“ஊஞ்சல் போட்டுக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்மா!
என்று முத்த மழை பொழிந்து விட்டார்கள்””\\
ஆஹா!
நெகிழ்வாய் இருக்கிறது
உங்க வீட்டுக்கு வந்தால் ஊஞ்சலில் உட்கார விடுவீர்களா. இப்படிக்கு ஒரு ஊஞ்சல் பைத்தியம்:)
நம்ப தாரிணிபிரியா கிட்ட கேட்டு இருந்தா ஊஞ்சல் குடுத்து இருப்பாங்களே
:)))))
வாங்க ஜாமால்,
ஊஞ்சலில் ஆட யாருக்குத்தான் பிடிக்காது.
வாங்க வல்லிசிம்ஹன் அம்மா,
தாராளமாய் ஊஞ்சலில் உட்கார்ந்து காற்று வாங்கிக்கொண்டே பேசிமகிழலாம்.
எப்போ வர்றீங்க??
நம்ப தாரிணிபிரியா கிட்ட கேட்டு இருந்தா ஊஞ்சல் குடுத்து இருப்பாங்களே//
இதுல என்ன உ.கு இருக்குன்னு எனக்குத் தெரியலை.
தாரணி வந்து நீங்களே சொல்லுங்க.
:))
:)
/ஊஞ்சலில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும்./
நான் கூட கொண்டி எல்லாம் அடிச்சிட்டேன்.....ஊஞ்சல் தான் இன்னும் வாங்கலை...:)
ஆஹா ஸ்மைலி போட ஆரம்பிச்சிட்டாருப்பா தம்பி.
/புதுகைத் தென்றல் said...
ஆஹா ஸ்மைலி போட ஆரம்பிச்சிட்டாருப்பா தம்பி./
இப்படி சொல்வீங்கன்னு தெரியும்...அதனாலேயே இன்னொரு பின்னூட்டம் போட்டு இருக்கேன்.....:)
ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது.. வாழ்த்துகள் தென்றல்.
\\தாமிரா said...
ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது.. வாழ்த்துகள் தென்றல்.\\
ரிப்பீட்டேய்:)
/ஊஞ்சலில் ஆடுவது அனைவருக்கும் பிடிக்கும்.//
எனக்கும்தான் !
குழந்தைகளை மகிழ்வித்த உங்களுக்கு ஒரு ஷொட்டு.
ச்சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது.. //
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க ஃப்ரெண்ட்.
ரிப்பீட்டுக்கு நன்றி வித்யா
குழந்தைகளை மகிழ்வித்த உங்களுக்கு ஒரு ஷொட்டு.//
தன்யையானேன்
தாய் மடி போல ஆட்டிய சொகுசில் தூங்கியே போய் விட்டிருக்கிறான் ஆஷிஷ்:)! நல்லாயிருக்கிறது ஊஞ்சலும் அதற்கான இடமும்.
என் வலைப்பூ பேருதான் ஊஞ்சல் தென்றல். அதைத்தான் அப்துல்லா அண்ணா சொல்லி இருக்கார். என் ஊஞ்சல் வேணுமா ?
எனக்குமே ஊஞ்சல் ரொம்பவே பிடிச்ச விசயம். என் மாமனார் வீட்டில ரகளை செஞ்சு (அது சூப்பரா செய்வேன்) ஊஞ்சல் மாட்ட வெச்சேன் :). அம்மா வீட்டுல முதல்ல இருந்தது. இப்ப இல்லை. ஆனா வீட்டுக்கு முன்னால் ஒரு சில்டரன்ஸ் பார்க் இருக்கு, அங்க பெரியவங்களும் ஆட நாலு ஊஞ்சல் இருக்கு. அதுல என்சாய் செஞ்சுகிட்டு இருக்கோம் :)
நல்லாயிருக்கிறது ஊஞ்சலும் அதற்கான இடமும்.//
நடுவீட்டில் ஊஞ்சலை கட்டிவிட்டு ஆடாதே, அசையாதேன்னு சொல்வதை விட ஆனந்தமா பால்கனியில் ஊஞ்சலில் ஆடலாமே.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
Post a Comment