Wednesday, April 22, 2009

புதுக்கோட்டை பசங்க

புதுகைக்கும் கலையுலகத்திற்கும் நிறையவே தொடர்பு
இருக்கிறது. இது என்னுடைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இப்ப லேட்டஸ்டா எங்க புதுக்கோட்டை பசங்க
நடிச்ச படத்தை சுப்ரமணியபுரம் புகழ் சுசிகுமார்
தயாரிக்கிறார். எங்க ஊரு சுத்துப்பட்டு வாண்டுகளை
பிடிச்சு கலக்கியிருக்காங்க. இசை ஜேம்ஸ் வசந்தன்.



தமிழ்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியா எல்லா சேனல்களிலும்
பசங்க ராஜ்யம் தான்!!!




இயக்குனர் பாண்டிராஜ்(சேரனின் அசிஸ்டெண்ட்)
புதுகையின் வட்டார மொழிக்காகவே
பசங்களை எங்க ஊர்ல தேடிக்கண்டுபிடிச்சதா சொன்னாரு.

ஆமாம். மத்த ஊர்களை பார்க்கும்பொழுது எங்க ஊரின் வட்டார
மொழி கொஞ்சம் வித்தியாசமா, மரியாதை கலந்ததா,பாசமா
இருக்கும்.

இப்படி மரியாதையா பேசினதை கேட்டிருக்கற எனக்கு
சென்னை, திருச்சி, மதுரை தமிழ் கேட்கும்போது
கொஞ்சம் நெருடலாவே இருக்கும்.

நேற்றுவரைக்கும் கூட ஆடிக்கொண்டிருந்த ஆண்நண்பன்
தன் தோழி வயதுக்கு வந்துவிட்டதும் அக்கா என
அழைக்கும் பண்பு எங்க ஊரின் பண்பு.

(அதுக்காக ஈவ் டீசிங் எல்லாம் இல்லன்னு சொல்ல
மாட்டேன். :)) )

பாரதிராஜாவின் என் உயிர்தோழன் பட ஹீரோயின்,
அவங்க அக்கா லதா,
இப்படி நிறைய்ய பேர் எங்க ஊர்லேர்ந்து வந்து
கலக்கியிருக்காங்க.


இப்போது பட்டைய கிளப்ப கிளம்பியிருக்கும் “பசங்களுக்கு”
என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குனர் பாண்டிராஜ்,
தயாரிப்பாளர் சுசிகுமாருக்கும் கூட வாழ்த்துக்கள்.

வாங்க பசங்களா!!! நம்ம ஊரு பேரு இனி எட்டு திக்கும்
கேக்கணும்.



அன்பாலே அழகாகும் வீடு...
(பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில்)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பசங்களின் அட்டகாசம்:


Get Your Own Hindi Songs Player at Music Plugin

23 comments:

சென்ஷி said...

திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். பாட்டு இன்னும் கேக்கல. கேட்டுட்டு சொல்றேன்

S.Arockia Romulus said...

அடடா ரொம்ப புகழ்ரீங்க உங்க ஊரை.....
நாங்க பொறந்த நாகர்கோயிலும் நல்ல ஊரு தான்.....ஹஹஆ......
பாடல்கள் நல்லாயிருக்கு.....நானும் படத்தை எதிர்பார்க்கிறேன்.

pudugaithendral said...

வாங்க சென்ஷி,

பாட்டு கேளுங்க.

pudugaithendral said...

அடடா ரொம்ப புகழ்ரீங்க உங்க ஊரை.....//

ஆமாம் பொறந்த ஊர் பெருமையாச்சே!!!!

வருகைக்கு நன்றி ரோமுலஸ்

தேவன் மாயம் said...

வந்து விட்டேன்

சாப்பிட்டு வருகிறேன்!!

தேவன் மாயம் said...

சாயங்காலம் வந்து கமெண்டிடுறேன்!!

ராமலக்ஷ்மி said...

ஊர்ப்பாசம் மணக்கும் பதிவு:)!

'புதுக்கோட்டை பசங்க’ளுக்கு வாழ்த்துக்கள்:)!

பாடல்கள் அருமை.

pudugaithendral said...

உங்க வருகைக்காக காத்திருக்கிறேன் தேவா.

pudugaithendral said...

ஊர்ப்பாசம் மணக்கும் பதிவு//

:)) வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

தேவன் மாயம் said...

ஆமாம். மத்த ஊர்களை பார்க்கும்பொழுது எங்க ஊரின் வட்டார
மொழி கொஞ்சம் வித்தியாசமா, மரியாதை கலந்ததா,பாசமா
இருக்கும்.///

உண்மை. என் தங்கை அங்குதான் வசிக்குது!!

தேவன் மாயம் said...

இப்படி மரியாதையா பேசினதை கேட்டிருக்கற எனக்கு
சென்னை, திருச்சி, மதுரை தமிழ் கேட்கும்போது
கொஞ்சம் நெருடலாவே இருக்கும்.///

நம்ம ஊர்ப் பக்கம் மரியாதைக்கு பேர் போனதாச்சே!

தேவன் மாயம் said...

தமிலிஷில் போட்டுவிட்டேன்

குசும்பன் said...

ஏற்கனவே உங்க ஊரில் இருந்து வந்து பதிவு எழுதும் யூத் பதிவரின் அலும்பே தாங்க முடியவில்லை இதுல நீங்கவேற ஏத்திவிடுங்க:)

இயற்கை நேசி|Oruni said...

அப்படியா, கேள்விப்படவில்லையே.. ம்ம் நல்லது நல்லது. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

நம்மூருக்குன்னு ஒரு குணம், மணமிருக்கே மறுக்க முடியுமா :-)

இன்னொரு முக்கியமான ஆளை விட்டுட்டீங்களே... பாட்ஷாவில ரஜினிக்கு தங்கையா நடிக்குமே அதுவும் புதுகைதானே?

மங்களூர் சிவா said...

திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

ஆமாம் தென்றல்! நம்ம ஊர் பத்தி பேசும் போதே இத்தனை சந்தோஷம் பாருங்க!இதோ இங்க வந்திருக்கும் நாதாறிக்க (சென்ஷி, குசும்பன்) எல்லாம் என் ஊர் தானே! அதுங்க மட்டும் என்னவாம். ஊர் பெருமை பேசுங்க பேசுங்க!!!

எம்.எம்.அப்துல்லா said...

//ஏற்கனவே உங்க ஊரில் இருந்து வந்து பதிவு எழுதும் யூத் பதிவரின் அலும்பே தாங்க முடியவில்லை இதுல நீங்கவேற ஏத்திவிடுங்க:)

//

அந்த யூத் பதிவரை கிளப்பிவிட்டதே இந்த அக்காதான் தெரியுமா உங்களுக்கு??

pudugaithendral said...

வாங்க தேவா,

தமிலிஷில் போட்டதுக்கு நன்றி.

உங்க தங்கச்சி நம்ம ஊர்லதான் இருக்காகளா?? ம்ம் பக்கத்தாப்லதான். அடிக்கடி பாத்துகிட வசதி.

pudugaithendral said...

ஏற்கனவே உங்க ஊரில் இருந்து வந்து பதிவு எழுதும் யூத் பதிவரின் அலும்பே தாங்க முடியவில்லை இதுல நீங்கவேற ஏத்திவிடுங்க//

நல்லா ரசிச்சு சிரிச்சேன் குசும்பன்.

:))))))))

pudugaithendral said...

வாங்க இயற்கை நேசி,

நீங்களும் நம்மூருதானா??

பாட்ஷாவில் ரஜினியின் தங்கையாக வருவது யுவராணி. அவரு நம்ம ஊருங்கறாங்க, வேற ஊருங்கறாங்க ஒண்ணும் புரியலை.

ரஞ்சித் கூட நம்மூருன்னு அவர் மொத படத்துக்கு பேனர் எல்லாம் கட்டினாங்க. (ஊட்டி மல ரோட்டு மேல போகுது பார் சைக்கிள் வண்டி.. பாட்டு வருமேஅந்தப் படம்)

pudugaithendral said...

வாங்க சிவா,

வாழ்த்திற்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அபி அப்பா,

சொந்த ஊர்க் காரவுகள இங்கன பாத்து பேசுறதுல இருக்கற சுகமே சுகம்தான்.

pudugaithendral said...

அந்த யூத் பதிவரை கிளப்பிவிட்டதே இந்த அக்காதான் தெரியுமா உங்களுக்கு??//

இப்படி சொல்லித்தான்....

சரி பதிவெழுத வந்து ஒரு வருஷம் ஆகப்போகுதே. கொண்டாட்டம் ஏதுமில்லையா அப்துல்லா????