Monday, May 25, 2009

சத்யநாராயண விரதம்

அன்னவரம் பற்றிய இந்தப்பதிவு பல்வேறு் காரணங்களால்
முடிக்கப்படாமலேயே இருந்துவிட்டது. மன்னிக்கவும்

இதற்கு முந்தைய பதிவிற்கு

ஸ்ரீ சத்யநாராயண விரதத்தை செய்தால் விரும்பியது
கிடைக்கும். நம் துயர் தீரும். இந்த விரதத்தை
பார்த்தாலும் புண்ணியம், கதை கேட்டாலும்
புண்ணியம்.





ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து
செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரதம்.
பொதுவாக பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம்
ஆண்டவனின் அருளாக கருதப்படுகிறது.
அப்படிபட்ட பிரசாதத்தை அனைவருடனும்
பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர்
நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

பூஜை செய்து பிராசதம் எடுத்துக்கொள்ளாமல்
போன கலாவதி தன் கணவன் மற்றும் அவர்
வந்த ஓடம் நதியில் மூழ்கிப்போக, பிரசாதம்
உண்ட பிறகு திரும்பபெற்றதாக சத்யநாராயண
விரத கதா மகிமையில் சொல்லப்பட்டிருக்கிறது.


நம் வீடுகளில் சத்யநாராயண விரதம் செய்வது
விசேடம். அதிலும் அன்னவரத்தில் சத்ய்நாராயண
விரதம் செய்வது மேலும் மேலும் விசேஷம்.

காரணம்:

அன்னவரத்தில் யந்திர ரூபமாக இருப்பது பிரம்மா.
சிவனும் ஹரியும் ஒன்றாகி கோவில் கொண்டிருப்பது
இங்கே. துர்கா,லட்சும், சரஸ்வதி ஆகிய முத்தேவியரும்
சத்யவதியாகி அருள் பாலிக்கின்றனர்.
முத்தேவர்களும் சேர்ந்து அருள் பாலிக்கும்
இந்தக் கோவிலில் முதல் சத்யநாராயண விரதத்தைச்
செய்தது யார் தெரியுமா??

ராமேஸ்வரத்தில் இருக்கும் லிங்கம் ஸ்ரீராமனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அன்னவரம்
கோவிலில் முதல் விரதம் செய்து கொண்ட
தம்பதிகள் பத்ராசல வாசனாம் ஸ்ரீராமனும்
அவரது தர்மபத்தினி சீதாபிராட்டியும் ஆவார்கள்.

சைவமும் வைணவுமும் ஒன்றே என்று சொல்ல
இதைவிட ஆதாரம் ஏதும் உண்டா?

அன்னவரம் கோவிலிலேயே நாம் பணம் கட்டி
விரதம் செய்து கொள்ளலாம், 116,501,1116
ஆகிய மதிப்புக்களில் விரதம் செய்து கொள்ளலாம்.

500 ரூபாய் விரதம் உற்சவ மூர்த்தியின் அருகில்
நடைபெறும்.(மேலே இருக்கும் படம் உற்சவ
சத்யநாராயணர் உடனுறை சத்யவதி)

நவக்கிரக எந்திரத்தில் அரிசி இட்டு,
தேங்காய்களை வைத்து ஆவாஹனம்
செய்து சங்கல்பம் செய்து வைப்பார்கள்.

சத்யநாராயணரின் பிரதிமை(உருவம்) + எந்திரம்
இருக்கும் தாமிரக்காசை பூஜையில் வைத்து
பூஜை நடக்கும்.





நவக்கிரக பூஜை, அங்கபூஜை செய்து சத்யநாராயண
அஷ்டோத்ரம் படித்து பூஜை முடிந்து ஆரத்தி.


பணத்தைக்கட்டிவிட்டால் தேங்காய் பூ, பழங்கள்,
நைவேத்தியம் எல்லாம் கோவிலிலேயே தந்து
விடுவார்கள். பூஜையில் வைத்த அந்த நவக்கிரகதுணியை
வீட்டில் வைத்துக்கொள்வதால் நவக்கிரக தோஷம் இராது.
சத்யநாராயணர் உருவம் பதித்த காயினை பூஜையில்
வைத்து தினமும் பூஜிக்கலாம்.

கோவிலேயேயே அந்தணர் ஒருவர் சத்ய்நாராயண
விரத கதையைச் சொல்வார். ஆரத்தி காட்டி முடிந்ததும்
பூஜை முடிந்தது.(காலை 7 மணிக்கு கோவிலுனுள் சென்ற
நாங்கள் வெளியே வந்த பொழுது 11 மணி. ஒவ்வொரு
பேட்சாக பூஜை நடக்கும்)

கலியுகத்தில் விசேஷ பலனை அளிக்கும் இந்த
பூஜை செய்ததாக கதையில் சொல்லப்பட்டவர்களின்
மறு பிறப்பு கதையின் சாராம்சமாகும். அந்தணன்
குசேலராக பிறந்தான்,விறகு விற்பவன் குகனாக
பிறந்து ஸ்ரீராமனின் தம்பியானான், உல்காமுகன்
தசரத்னாக பிறந்தான், வணிகன் மோரத்வஜனாக பிறந்து
தனது உடலில் பற்றில்லாமல் அந்தணுர்க்காக தன்
சதையை அறுத்துத் தந்து மோட்சமடைந்தான்,
அரசன் துங்கத்வஜன் நான்முகனான்.


“ஸ்ரீ சத்யநாராயனம், உபாஸ்மகே நித்யம்.
சத்யத்யான நந்த மயம் சர்வம் விஷ்ணு மயம்”


9 comments:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

Thiyagarajan said...

Almost for the last 20 years on every full moon day my mother is doing this pooja. She has a strong belif that all the goodness that we have is only due to this pooja :)

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே

pudugaithendral said...

எங்க அம்மம்மா(பாட்டி) வீட்டுல 50 வருடத்துக்கு மேலா ஒவ்வொரு பொளர்ணமியிலும் இந்த விரதம் செய்றாங்க. (என் பெயர் இந்தக் கதையிலிருந்து எடுத்த பெயர்தான் :)) ))

Raj said...

இந்த விரதம் அன்னவரத்தில் மட்டுமே செய்ய முடியுமா...அல்லது வேறு எந்த ஊரிலும் செய்யும் வசதி இருக்கிறதா...இந்த விரதத்தை பற்றி மேலும் சிறிது விளக்க முடியுமா

தேவன் மாயம் said...

ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து
செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரதம்.
பொதுவாக பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம்
ஆண்டவனின் அருளாக கருதப்படுகிறது.
அப்படிபட்ட பிரசாதத்தை அனைவருடனும்
பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர்
நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
//
இது உங்களால் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது!

pudugaithendral said...

வாங்க ராஜ்,

அன்னவரத்தில்தான் செய்யவேண்டுமென்பதில்லை. நம் வீட்டிலும் செய்யலாம்.

ஸ்ரீ சத்ய்நாராயண விரத புத்தகத்தை வாங்கி வைத்துச் செய்யலாம்.

இந்த விரதம் பற்றி அறிந்த புரோகிதரை அணுகி செய்யலாம்.

விரதத்தை பற்றி மேலும் விளக்க வேண்டுமானால் தனிப்பதிவுதான் போடணும்.

புத்தகம் கிடைத்தால் பாருங்கள். இல்லையேல் பதிவிட்டு விடுகிறேன்.

pudugaithendral said...

இது உங்களால் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது!//

பல விடயங்கள் சொல்லப்படாமலேயே போய்விடுகிறதே. அதுவும் இந்த ப்ரசாத மேட்டர் ரொம்ப டேஞ்சர். சாமிகுத்தமாகிடும்.

selvi said...

நன்றி.
சந்தோசி மாதா விரதம் பற்றி தெரிஞ்சா சொல்லுங்களேன் plz