Tuesday, May 26, 2009

மாமா தந்த ட்ரீட்!!!

சாப்பாட்டு நேரத்துல இப்படி ஒரு பதிவான்னு
எத்தனை பேரு வந்து திட்ட போறாங்களோ!!! :))



அதென்னவோ எங்க வீட்டுல ஆண்கள்
அடுப்படியில் கலக்குவாங்க. எங்கப்பா
வைக்கும் ரசத்துக்கு நானும் தம்பியும் அடிமை.
என் கணவரின் அண்ணன் உயிரோடிருந்தவரை
தன்னால் ஆன உதவியை அடுக்களையில்
செய்து கொடுத்துவிட்டுத்தான் நிம்மதியாக
உட்காருவார்.(சின்னச்சின்னதாக சேனைக்கிழங்கு
சிப்ஸுக்கு சீவுவது மாமாவால் மட்டுமே
முடியும்) அயித்தான் போடும் காபி அமர்க்களம் :))
(இதுக்கு ஆதி என்ன சொல்லப்போறார்னு பாக்கணும்)

தம்பியும் அழகாக சமைப்பான். ஆஷிஷ் சமைப்பதைப்
பத்தி பதிவுல சொல்லியிருக்கேன்.

தனது பிறந்த நாள் ட்ரீட்டாக சத்யாமாமா
பாவ்பாஜி செய்து தரப்போறதா பதிவுல
சொல்லியிருந்தேன். மாமா பாவ்பாஜில
எக்ஸ்பர்ட். மிக அருமையாச் செய்வார்.

தேவையான சாமான்களை வாங்கி வெய்யின்னு
சொல்லிட்டாரு. வாங்கி ரெடியா வச்சிருந்தேன்.
ஆனா மாமா செஞ்சது பாவ்பாஜி இல்ல.
FIGHTER BAJI.

இதுவும் பாவ்பாஜி மாதிரிதான். ஆனா செய்முறை
வித்தியாசம். பாவ்பாஜி செய்யத் தெரியாதவங்களுக்காக
ரெசிப்பியும் கொடுத்திடறேன்.

தேவையான சாமான்கள்:
பாவ்: 6
காய்கறிகள் :
தக்காளி-1/2 கிலோ
வெங்காயம் 1/2 கிலோ
உருளைக்கிழங்கு 1/2 கிலோ
காலிப்ளவர் -1
குடைமிள்காய் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
பட்டர் : 100 கிராம்
உப்பு- தேவைக்கேற்ப
பாவ் பாஜி மசாலா - 5 ஸ்பூன்.

செய்முறை:
உருளையை வேகவைத்து தோல்நீக்கி
மசித்துக்கொள்ளவும்.

காலிஃப்ளவ்ரை வெந்நீரில் போட்டு வைத்து
எடுத்து நன்கு வேகவைத்து மசிக்கவும்.

குடை மிளகாயை பொடியாக விதை நீக்கி
அரிந்துக்கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம் பொடியாக அறிந்துக்கொள்ளவும்.

செய்முறை:

அடி கணமான கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு
வெங்காயம் போட்டு வதக்கவும். கொஞ்சம்
வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வெந்ததும்
பாவ்பாஜி மசாலா சேர்த்து வதக்கி
மசித்த உருளை, காலிஃப்ளவர், குடமிளகாய்
ஒவ்வொன்றாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். பாஜி மிக தண்ணீராகவோ
மிக கெட்டியாகவோ இருக்கக்கூடாது.

கொஞ்சம் கொஞ்சமாக பட்டர் சேர்க்கவும்.
(கொஞ்சம் பட்டர் மிச்சம் வைக்கவும்)

இப்போது பாஜி ரெடி. சாதாரண பாவ் பாஜிக்கு
ப்ரட்டை தவாவில் டோஸ்ட் செய்து பாஜியுடன்
சாப்பிட வேண்டும். இந்த FIGHTER BAJIக்கு
ப்ரட்டை துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ள
வேண்டும்.

இன்னொரு வாணலியில் பட்டர் போட்டு அதில்
துண்டுகளாக்கி வைத்திருக்கும் ப்ரட்டைப்போட்டு
இந்த பாஜியை எடுத்து தேவையான அளவு ஊற்றி
கலந்து ”சுடச்சுட”(கண்டிப்பா அப்ப செஞ்சு
அப்பவே சாப்பிட்டாத்தான் ருசி) தட்டில் போட்டு
வெங்காயம், கொத்தமல்லி தூவி போட்டுச் சாப்பிட்டா......

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் செம ருசி.




அதென்ன FIGHTER BAJI? அப்படின்னு பெயர்க்காரணம் கேட்டேன்.
மாமா தந்த விளக்கம்:
“சுடச்சுட சாப்பிடும்பொழுது நாக்கு, கண்ணு எரியும்.
அந்த ஃபைட்டிங் எஃபக்ட் தான் பேரு!!!” என்றார். :)))))


பாவ்பாஜி பராத்தாவும் நல்லா இருக்கும்.

14 comments:

அபி அப்பா said...

அட கடவுளே நான் சோத்து மூட்டையை மறந்து விட்டு வந்தாச்சு. மணி 12 ஆகுதுஇங்க! பசி கிள்ளுது!டிரைவர் கிட்ட வாங்கி வர சொல்லியிருக்கேன். அவனோ டிராபிக்ல மாட்டிகிட்டான். இந்த நேரத்திலே இந்த பதிவை படிக்கனுமா?என்னவோ போங்க.

நேத்து ஆவாக்கா பதிவு படிச்சுட்டு கிராண்டு மால்க்கு ஓடினேன், ஆனா கோங்குரா தான் கிடைச்சுது!

pudugaithendral said...

இந்த நேரத்திலே இந்த பதிவை படிக்கனுமா?/

me d firstஆ நீங்க வந்திருக்கீங்களா அபிஅப்பா!!!

pudugaithendral said...

நேத்து ஆவாக்கா பதிவு படிச்சுட்டு கிராண்டு மால்க்கு ஓடினேன், ஆனா கோங்குரா தான் கிடைச்சுது!//

ஃபைட்டர் பாஜி வேணும்னா பாம்பேதான் போகணும் அபிஅப்பா

அபி அப்பா said...

பாம்பே எல்லாம் போக வேண்டாம்! இங்க துபாய்ல ரமதா சிக்னல்ல்ல அல் கலீஜ் செண்டர் பின்னால சோயித்ராம் பின்னால "மிட்டா"ன்னு ஒரு சின்ன கடை! அங்க ஃபைட்டர் பாஜி கிடைக்கும். சின்ன கடை தான், 4 பேர்தான் உட்கார முடியும்!

அபி அப்பா said...

இல்லை! துபாய்ல ரமதா ரவுண்டபுட்ல அல்கலீஜ் செண்டர் பக்கத்தில் இருக்கு ச்சொயித்ராம் பின்ன இருக்கும் "மிட்டா" என்னும் கடையிலே ஃபைட்டர் பாஜி கிடைக்கும். வெள்ளி கிழமை போறேன். போட்டோ எடுத்து அனுப்பறேன்!

அப்பாடா சாப்பாடு வந்துடுச்சு!

சின்ன பூண்டு, சின்ன வெங்காயம் போட்ட மிளகு குழம்பு, பாரிக் ரைஸ், அப்பள பூ, ஒரு மோர் மிளகு வறுவல், தயிர், இரு சின்ன வஞ்சின மீன் வறுவல், என்னவோ ஒரு வெஜிடபள் கருமாந்திர கூட்டு!

இருங்க சாப்பிட்டு வரேன்!

நட்புடன் ஜமால் said...

நன்னா சாப்பிடுங்கோ அக்கா

pudugaithendral said...

ச்சொயித்ராம் பின்ன இருக்கும் "மிட்டா" என்னும் கடையிலே ஃபைட்டர் பாஜி கிடைக்கும். வெள்ளி கிழமை போறேன். போட்டோ எடுத்து அனுப்பறேன்!//

ரைட்டு:)))

pudugaithendral said...

சின்ன பூண்டு, சின்ன வெங்காயம் போட்ட மிளகு குழம்பு, பாரிக் ரைஸ், அப்பள பூ, ஒரு மோர் மிளகு வறுவல், தயிர், இரு சின்ன வஞ்சின மீன் வறுவல், என்னவோ ஒரு வெஜிடபள் கருமாந்திர கூட்டு!

இருங்க சாப்பிட்டு வரேன்!//

எஞ்சாய் செய்ங்க அபிஅப்பா

pudugaithendral said...

நன்னா சாப்பிடுங்கோ அக்கா//

:)))

தேவன் மாயம் said...

எங்கள ஒரு வழி பண்ணீடலாம்னு முடிவா?

தேவன் மாயம் said...

காரைக்குடியில் பாவ்பாஜி எல்லாம் கிடைக்காதே!!

pudugaithendral said...

காரைக்குடியில் பாவ்பாஜி எல்லாம் கிடைக்காதே!!//

செய்முறை கொடுத்திருக்கேனே. வீட்டுல செஞ்சு சாப்பிடுங்க தேவா

Thamira said...

சுடச்சுட சாப்பிடும்பொழுது நாக்கு, கண்ணு எரியும்.
அந்த ஃபைட்டிங் எஃபக்ட் தான் பேரு!!!” //

சாப்பாட்டுல கூட என்னா வன்முறை.?

pudugaithendral said...

சாப்பாட்டுல கூட என்னா வன்முறை//

ஆஹா என்ன இன்னும் ஃப்ரெண்டைக்காணோமேன்னு பாத்துகினு இருந்தேன். (திட்டு வாங்கத்தான். இன்னைய கணக்குக்கு 3 பதிவு என் பிளாக்ல, அம்மாக்களின் வலையில் ஒரு பதிவு, கானக்கந்தர்வனில் 2 பாட்டு அம்புட்டுதான் ஃப்ரெண்ட்)

:))