Tuesday, June 09, 2009

கேள்வியும் நானே!!! பதிலும் நானே!!!!

கேள்வி பதில் தொடரில் மாட்டமலேயே இருக்கோமேன்ன்
சந்தோஷப்பட்டுகிட்டே இருந்தேன். சொக்கன் விடலை!!
பட்டாம்பூச்சியாரின் வடிவத்தில் வந்து மாட்டி விட்டுடுச்சு.

சரி, சரி வாங்க என்ன பதில் சொல்லியிருக்கேன்னு
பாப்பீக.


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்ன பெயர் வைக்கலாம்னு யோசித்து பிறந்த ஊருக்கு
”பெருமை”!! சேப்போமேன்னும், புயலா வீசும் நாம
பேருலையாவது தென்றல் இருக்கட்டுமேன்னும் நானே
நாமகரணம் செஞ்சுகிட்டதுதான். என் நிஜப் பெயர் பிடிக்கும்.
அதில் அயித்தானும் பேரையும் சேர்த்த பிறகு ரெம்பவே
பிடிக்கும். :))



2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் அழுததுதான் எல்லோருக்கும் தெரியுமே.
20.3.09 மாமா இறந்த பொழுது கண்கள் குளமல்ல...
நாகார்ஜுன சாகர் அணையை திறந்த மாதிரி
அழுதேன். :((


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்கும். மத்தவங்களுக்குகொஞ்சம்
டவுட்டுதான். :)


4).பிடித்த மதிய உணவு என்ன?

சோறு இல்லாம எதுன்னாலும் சரி தான். (அடுத்தவங்க
சமைச்சுபோட்ட சோறானாலும் சந்தோஷம் தான்) சுத்த சைவம்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் விருப்பத்தை விட அடுத்தவங்க விருப்பமும்
தெரிஞ்சுக்கணும்ல. அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும்
ஓகே தான். ஆனா ஒரே ஒரு கண்டீஷன் மட்டும்
எனக்கு நானே வெச்சிருக்கேன். உண்மையான
நட்பா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்கலாம். ஆனால் அலையை நினைச்சு பெம்மா இருக்கும்.
குற்றால அருவியில குளிச்சது மறக்க முடியாத அனுபவம்.



7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்ணைப்பாத்து பேசாட்டி அவங்க மனசை படிக்க முடியாதே!
ஆக கண் தான்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் பிடிவாதம் எனக்கு பிடிச்ச விஷயம். பிடிவாதத்தினாலேயே
நிறைய்ய கற்றுக்கொண்டுள்ளேன்.

என் கோபம் எனக்கு பிடிக்காது. ஆனால் பல விடயங்களில்
விசுவாமித்திரரின் நேரடி வாரிசாகத்தான் இருந்திருக்கிறேன்.

அடுத்தவங்களைப்பத்தி அதிகமா கவலைப்பட்டு அவங்களுக்காக
நல்லது செய்யறேன்னு செஞ்சு இ.வாவாவே இருப்பது.
(மாத்தவே முடியலை.)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : ரெம்ப நல்லவர், என்னால் பிரிந்திருக்க முடியாத
அளவு பாசமானவர்.

பிடிக்காத விஷயம் : அதிகமா டூர் போறது :(((((


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?.
பிறந்த வீட்டில் அன்பு அம்மம்மா, புகுந்த வீட்டில்
மறைந்த சுப்ரமண்ய மாமா(கணவரின் அண்ணன்)


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு பேண்ட் , ரெட் டீஷர்ட்


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கூன் பரி மாங்க் எனும் ஹிந்தி படத்திலிருந்து
எனக்கு மிகவும் பிடித்த “ஹஸ்தெ ஹஸ்தே கட் ஜாயே
ரஸ்தே ஜிந்தஹி யூ ஹி சல்தி ரஹே”

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு!!

14.பிடித்த மணம்?
மழை பெய்ததும் கிளர்த்து எழும் மண்ணின் மணம்,
பிறந்த குழந்தையின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நானானி: சின்னச் சின்ன விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில்
பார்த்து பதிவெழுதுவது. அட இத மறந்துட்டோமேன்ன்னு நாம
யோசிக்கும் விதத்தில் இருக்கும் இவரது பதிவுகள்.

தேவா: காரைக்குடி டாக்டர். தமிழ்த்துளியில் அப்பச்சியை பற்றி
கதையும் எழுதுவாரு, பார்கின்சம் பற்றி மருத்துவக் குறிப்பும்
கொடுப்பாரு.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

வண்ணத்துப்பூச்சியாரின் திரைப்படங்கள் பற்றிய அறிமுகம்
மிக மிக பிடிக்கும். பல மொழிப் படங்களையும் அறிமுகப்
படுத்துவதற்காக ஷ்பெஷல் பாராட்டு.

17. பிடித்த விளையாட்டு?
அப்பாவுடன் அமர்ந்து சீட்டு விளையாடுதல் பிடிக்கும். இப்போ
பிள்ளைகளுடன் ஓடி பிடித்து விளையாட்டு, நொண்டிஆட்டம்.


18.கண்ணாடி அணிபவரா?
வீட்டை விட்டு வெளியே போனால் கூலிங் கிளாஸ்
இல்லாமல் போக மாட்டேன்.


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதுக்கு இதம் தரும், குடும்பத்தினருடன் அளவளாவிக்கொண்டு
பார்க்கக்கூடிய திரைப்படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர்ல பசங்க. டிவிடியில சுவராபிஷேகம்.


21.பிடித்த பருவ காலம் எது?
மழை மனதுக்கு மிகவும் இதமான பருவம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
செம பிசியா இருந்ததால 1 மாசமா புத்தகம்
ஏதும் படிக்கலை. வாரப்புத்தகங்கள் தான்.



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அது அயித்தான் மற்றும் மகனின் டிபார்ட்மெண்ட்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : மெல்லிய இசை
பிடிக்காத சப்தம்: அதிக இரைச்சலான எதுவும் பிடிக்காது.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
நாடோடி கூட்டத்துல ஒரு கூட்டமா அலைஞ்சு கிட்டு
இருக்கோம். இதுல வீடுன்னு எதைச் சொல்ல??
இலங்கை, சிங்கை, மலேஷியா வரை போயாச்சு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
செய்யும் வேலையை சிறப்பாச் செய்வது என் தனித்
தி்றமைன்னு சொல்லிக்கொள்வதில் பெருமை.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
உதட்டளவில் நட்பு கொள்ளல், நம்பிக்கைத் துரோகம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அயித்தானைக் கேட்டால் நிறைய்ய சொல்வார்.:)
என் கோபம் தான் எனக்குள் இருக்கும் சாத்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அந்தமானுக்குச் சென்று அந்த மானைப் பாருங்கள்
அழகுன்னு பாடணும்னு ஆசை இருக்கு.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இருக்கும் இந்த நிலையிலிருந்து கீழே இறங்காமல்
இருந்தால் போதும்.

31.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அவரில்லாம ஒர் அணுவும் அசையாது என்பதால்
இந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மனம்போல் வாழ்வு!!

17 comments:

butterfly Surya said...

இதுக்குதான் உங்களை கூப்பிட்டது. என்னை கூப்பிட்டு எட்டு நாளைக்கு பிறகு தான் பதிவிட்டேன்.

ஆஹா. அருமை.

தூய்மையான குற்றால அருவி போல கொட்டி விட்டீர்கள்.

வாழ்த்துகள்.

pudugaithendral said...

எனக்குத்தான் நாளை என்பதே கிடையாதே தோழரே.. அதான் இன்னைக்கே இப்பவே பதிவு. :))

நன்றி

குசும்பன் said...

//அவரில்லாம ஒர் அணுவும் அசையாது என்பதால்
இந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.//

ம்ம்ம் இப்படியே எல்லா மனைவிகளும் இருந்தால் எவ்வளோ நல்லா இருக்கும்:)

நட்புடன் ஜமால் said...

எனக்குத்தான் நாளை என்பதே கிடையாதே தோழரே.. அதான் இன்னைக்கே இப்பவே பதிவு. :))\\

ஹா ஹா ஹா

pudugaithendral said...

நல்லா சிரிச்சாச்சா!!

சந்தோஷம் ஜமால்

நட்புடன் ஜமால் said...

அந்தமானுக்குச் சென்று அந்த மானைப் பாருங்கள்
அழகுன்னு பாடணும்னு ஆசை இருக்கு.\\

யக்கா ஏன் ஏன்

ஏற்கனவே போய்ட்டு வந்து கடும் அனுபவமுன்னு சொல்லிகிட்டிய ...

நட்புடன் ஜமால் said...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இருக்கும் இந்த நிலையிலிருந்து கீழே இறங்காமல்
இருந்தால் போதும்.
\\

தன்னம்பிக்கையும் தெரியுது

நல்ல ஆசையும் கூட ...

நட்புடன் ஜமால் said...

மனம்போல் வாழ்வு!!\\


அருமையான வார்த்தைகள் அக்கா.

pudugaithendral said...

ஏற்கனவே போய்ட்டு வந்து கடும் அனுபவமுன்னு சொல்லிகிட்டிய ...//

அந்தமானுக்கா இன்னும் போகவே இல்லையே ஜமால்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

எம்.எம்.அப்துல்லா said...

//32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மனம்போல் வாழ்வு!!

//

நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்கக்கா

:))

மணிநரேன் said...

ரசித்தேன் பல பதில்களை...;)

அதிகமாக சிலவற்றை
( 1 - //புயலா வீசும் நாம பேருலையாவது தென்றல் இருக்கட்டுமேன்னும்// ; 5 ;
8 - //விசுவாமித்திரரின் நேரடி வாரிசாகத்தான் இருந்திருக்கிறேன்.//

அன்புடன் அருணா said...

சரி சரி மாட்டிக்கிட்டீங்களா!!!

நானானி said...

தென்றல்! ஏற்கனவே சீனா அவர்கள் என்னை இதில் சிக்க வைத்துள்ளார்கள். இப்போது நீங்கள்.
கண்டிப்பாக உங்கள் இருவருக்காகவும் பதில் தருகிறேன். கொஞ்சம் பொறுமை. சேரியா?

goma said...

என் கோபம் எனக்கு பிடிக்காது. ஆனால் பல விடயங்களில்
விசுவாமித்திரரின் நேரடி வாரிசாகத்தான் இருந்திருக்கிறேன்....

பார்த்தால் அப்படி தெரியலையே

அடுத்தவங்களைப்பத்தி அதிகமா கவலைப்பட்டு அவங்களுக்காக
நல்லது செய்யறேன்னு செஞ்சு இ.வாவாவே இருப்பது.
(மாத்தவே முடியலை.) .....

மீ டூ....

pudugaithendral said...

சரி நானானி

மீ தெ வெயிட்டிங்

pudugaithendral said...

பார்த்தால் அப்படி தெரியலையே//

:))) கோபப் பட வேண்டிய இடத்தில் நியாயமாக என் கோபத்தை காட்டுவேன் கோமா.