ஆஷிஷுக்கும் அயித்தானுக்கும் ரொம்ப பிடிக்கும்.
நேஷனல் ஜியாகரபி சேனலில் எத்தனை முறை
காட்டினாலும் விழுந்து விழுந்து பார்ப்பார்கள்.
முதலைகள் இருவரின் விருப்பம். ஆஹ
முதலைகள் பார்க் சென்றோம். வித்யா வேறு
தன் பதிவில்,”தூங்கும் முதலைகளை எத்தனை
முறை பார்ப்பது!”” என்று எழுதியிருக்க யோசனையுடனே
சென்றேன்.
நன்றாகத்தான் இருந்தது. (முதல் விசிட் என்பதால்
இருக்கலாம்) வெயிலின் கொடுமைக்கு தப்பிக்க
தண்ணீருக்குள் ஓடிக்கொண்டிருந்த முதலைகள்,
வெளியே வந்து கொஞ்சம் சன் பாத் எடுத்த முதலைகள்
என்று பிள்ளைகள் ரசித்தனர்.
வாயை பிளந்துகொண்டு தூங்கும் முதலைகள்,
போகும் போது தன் வாலால் படாரென்று அடித்து
அடுத்த முதலையின் தூக்கத்தை கெடுத்த முதலை
என்று பிள்ளைகள் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
அங்கே வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகையில்
இருப்பதை பிள்ளைகளுக்கு படித்துக்காட்டி
பொறுமையாக வந்து கொண்டிருந்தார் அயித்தான்.
ஒரு பையன் சின்ன சைஸ் முதலையை
கையில் பிடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ்
கொடுத்துக்கொண்டிருக்க ஆச்சரியத்துடன் அங்கே
போனோம். அந்த பையனின் கையில் இருக்கும் பொழுதே
மெல்ல வாயைத் திறக்க ஆஷிஷ் டெர்ரராகி விட்டான்.
நீயும் போய் போட்டோ எடுத்துக்க! என்று சொல்ல
போம்மா, பயமாயிருக்கு என்று சொல்லிவிட்டான்.
நான் எடுத்துக்கறேன்பா போட்டோ என்று நான் போய்
உட்கார்ந்து கையில் முதலையை பிடித்துக்கொள்ள
அண்ணனும், தங்கையும் அருகில் வந்து முதலையை
பிடித்தனர்.(ஜில்லென்று இருந்தது முதலை!!)
அப்புறம் அயித்தானும் போட்டோ எடுத்துக்கொண்டார்.
கரியால் வகை பெரிய முதலையை கண்ணாடி கூண்டிற்குள்
வைத்திருந்தனர். கொழும்பு தெஹிவளை மிருககாட்சி
சாலைக்கு போனால் ஆஷிஷை முதலைகள் இருக்குமிடத்திலிருந்து
கூட்டி வருவது கஷ்டம். இங்கே கேட்கவே வேண்டாம்
ஆசை தீர சுற்றினான். பார்த்தான். அப்பாவிடம்
விவரங்கள் தெரிந்து கொண்டார்ன். இருவரின்
பேச்சையும் கவனமாக கேட்டபடியே அம்ருதம்மா
வந்து கொண்டிருந்தாள்.
அங்கே தெரிந்து கொண்ட விடயம்:
முதலைகள் நமக்கு நன்மை செய்கிறது.
நம் சுற்றுபுறத்தை பாது காக்கிறது.
முதலைகள் தன் தேவைக்கு அதிகமாக
உண்பதால்தான் அந்த மெஹா சைஸ்.
முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தை
சேர்ந்தது.
அங்கே இருந்த 1 மணிநேரத்தில் பலமுறை
மனதில் நிழலாடிய உருவம் ஸ்டீவ் இர்வினுடையதுதான்.
ஆஷிஷும் அயித்தானும் இவரது ரசிகர்கள். அவர்களோடு
பார்த்து பார்த்து நானும் இவரது ரசிகை ஆகிப்போனேன்.
அடுத்து சென்றது எம் ஜீ எம்.
அங்கேயா போனீங்க!! உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி
என்று இவரின் நண்பர்கள் கேட்டதன் பொருள்
புரியவில்லை. பிள்ளைகள் விரும்புவார்களே
என்று அழைத்துச் சென்றோம். ஆனால் இனி
இலவசமாக யாரும் அழைத்தாலும் செல்லகூடாது
என தீர்மானித்து விட்டோம்.
ரைட்ஸ் பெரிய்ய அட்ராக்ஷன் இல்லை.
நீச்சல்குளம்தான். ஆனால் அதற்காக
ஹைஜீனிக் என்று சொல்லி அவர்கள் தரும்
நீச்சல் உடையைத்தான் போட்டு நீச்சல்
குளத்தில் இறங்க வேண்டுமென்றார்கள்.
ஆனால் அதிகமான க்ளோரினாலா, உடையாலோ
அடுத்த நாள் வரை நால்வரும் பிடில் வாசித்துக்கொண்டிருந்தோம்.
:(((
6 comments:
மனதில் நிழலாடிய உருவம் ஸ்டீவ் இர்வினுடையதுதான்.\\
முதலை என்றவுடன்
முதலில் ஞாபகம் வருவது
இவர் தான் ...
ஆமாம் ஜமால்,
மறக்கமுடியாத மனிதர்
// மனதில் நிழலாடிய உருவம் ஸ்டீவ் இர்வினுடையதுதான் //
சரியாகச் சொன்னீர்கள்.
// ஆனால் இனி
இலவசமாக யாரும் அழைத்தாலும் செல்லகூடாது
என தீர்மானித்து விட்டோம். //
ஓ... நீங்களும் போய் மாட்டிகிட்டீங்களா?
ஆமாம் இராகவன்,
:((
நல்லா எண்ஜாய் பண்ணிருக்கீங்க:)
ஆமாம் வித்யா,
செம எஞ்சாய் தான்.
Post a Comment