Thursday, June 11, 2009

இப்படியும் ஒரு நாள் ஆகலாம்!!!!!!

என்னிக்காவது ஒரு நாள் இப்படித்தான் ஆகும்னு
ரொம்ப திடமா நம்பறேன்.

நான் யார் எனும் கேள்வி அடிக்கடி மண்டைக்குள்ள
ஓடுது. ஆன்மீகத் தேடல் அப்படின்னு ஏதும்
நினைச்சீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்ல.


ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாளம்
அவரது பெயர் தான். என் பெயர் எனக்கே
மறந்து போய்விடும் போல இருக்கு.

எனது பெயர் பற்றிய முந்தைய பதிவு

வீட்டில், பள்ளியில் தவிர பெரும்பாலும்
என்னை ரமணிசார் மகள் எனவோ, சுந்து சார் பேத்தி எனவோ
ரத்னா டீச்சர் மகள் எனவோ தான் தெரியும்.
அம்மா, அப்பா இருவரும் வேலைக்கு
போனதால வார இறுதிகளில் தான் அதிகம்
பேச நேரம் கிடைக்கும்.

கல்யாணத்துக்கப்புறம் என் பெயர் என்ன என்பது
சுத்தமா மறந்தே போயிடும் போல இருக்கு.
வீட்டில்வேறு பெரியவர்கள் கிடையாது. ஆரம்பம்
முதலே தனிக்குடித்தனம்.

கல்யாணத்துக்கு கங்கணம் கட்டும் போதே
என்னை பேர் சொல்லி கூப்பிடக்கூடாதுன்னு
கங்கணம் கட்டிகிட்டாரு போல மனிஷன்.

இது நாள் வரை என்னை பெயர் சொல்லி
கூப்பிட்டதே இல்லை. :(

ஒரு தடவையாவது கூப்பிடுங்கப்பா?ன்னு
கெஞ்சினாலும் ம்ம்ஹூம்.

போம்மா!உன்னை பேர் சொல்லிக்கூப்பிட
நிறைய்ய பேர் இருக்காங்க(!!!)
மனசார கண்ணா!ன்னு கூப்பிட்டுக்கறேன்.
அப்படின்னு சொல்லிட்டாரு.
அழைக்கும் தொனியில் அன்பு, பாசம்
தெரியுது. ஆனால் என் பெயர் சொல்லிக்
கூப்பிடணும்னு ஆசை!!!

நானும் என்னன்னவோ செஞ்சு பாத்திட்டேன்
ம்ஹீம்....

ஆஷிஷ் பிறந்த பிறகு என் பெயர்
ஆஷிஷ் அம்மா என்று ஆகிவிட்டது.

அவனது பள்ளி, நண்பர்கள் அக்கம்பக்கத்தவர்கள்
இப்படி எல்லோருக்கும் ஆஷிஷ் அம்மா.

அம்ருதா பிறந்த பிறகு அம்ருதாம்மா என
அழைத்தவர்கள் அம்ருதாவை நன்கு
அறிந்தவர்கள்.


இந்த அபார்ட்மெண்ட்க்கு வந்த புதிதில்
எனக்கு மிகவும் பரிச்சியம் இல்லாதவர்கள்
கூட ஹாய்! சொல்வார்கள். குழப்பாமாக
பார்க்கும் என்னை “நீங்க ஆஷிஷ் அம்மாதானே!
என்றோ நீங்க அம்ருதாவோட அம்மாதானேன்னு
கேட்டு பரிச்சயம் செய்து கொள்வார்கள்.

ஒருவரும் உன் பெயர் என்னன்னு கேட்டதே இல்லை.

என் பிள்ளைகளின் பெயர் சொல்லி அவர்களின்
அம்மா என்று அழைக்கப்படும்பொழுது அளவில்லா
சந்தோஷம் தான். ஆனாலும் சில சமயங்களில்
எனக்கென ஒரு பெயர் இருக்கிறது, அதைச்
சொல்லி அழைக்க யாருமே இல்லையா? என்று
தோன்றும்.


பதிவெழுத வந்த பொழுது ஊரின் பெயர் வரவேண்டும்
என நினைத்து தென்றல் என்று வந்தால் பெண்
என புரிந்து கொள்ள வசதியாய் இருக்குமென்று
இந்த புனைப்பெயரை வைத்துக்கொண்டேன்.

வலையுலகிலும் என்னை தென்றல் என்றே
பலரும் அழைக்கின்றனர்.

சிறுவயதில் ஒரு கதை படித்திருக்கிறேன்.
ஒரு ஈ தன் பெயரை மறந்து, தன் வழியில்
தென் படுபவர்களிடமெல்லாம் தன் பெயர்
தெரியுமா! என்று கேட்டு கடைசியில்
எப்படியோ தன் பெயரை தெரிந்து கொண்டதாக
கதை.
இந்த நிலை இப்படியே நீடித்தால் சீக்கிரம்
என் பெயர் என்ன என்பதையே மறந்துவிடுவேன்.
அதனால் என் பெயரை பதிவு செய்து வைத்தாலாவது
நான் மறந்து போனாலும், நீங்கள் யாராகிலும்
எனக்கு ஞாபகப்படுத்தலாமே!!! :))

எனது பெயர் திருமதி. கலா ஸ்ரீராம்.

ஞாபகம் வெச்சுக்கோங்கப்பா. மறந்துட்டா எடுத்து
கொடுக்க வசதியா இருக்கும்.

29 comments:

ரங்கன் said...

கலா மேடம்..
டோண்ட் வரி..
வீ ஹெல்ப் யூ நெள.


எல்லாரும் அவங்க பேரை சொல்லி ஞாபகப்படுத்துங்கப்பா!!

வண்ணத்துபூச்சியார் said...

வாழ்த்துகள் திருமதி. கலா ஸ்ரீராம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ரங்கன்,

எத்தனை கலாய்த்தல் பின்னூட்டங்கள் வரப்போகுதோன்னு நினைச்சுகிட்டுத்தான் பதிவு போட்டேன்.
:)))

புதுகைத் தென்றல் said...

வாங்க வண்ணத்துப்பூச்சியார்,

அயித்தானோட பேரையும் சேர்த்து அழைக்கப்படும்போது சந்தோஷமா இருக்கு. நன்றி

S.Arockia Romulus said...

திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.
திருமதி. கலா ஸ்ரீராம்.


pothuma madom.........

www.narsim.in said...

நல்ல பதிவு கலா ஸ்ரீராம் அவர்களே...

புதுகைத் தென்றல் said...

pothuma //

:))))))

புதுகைத் தென்றல் said...

கலா ஸ்ரீராம் அவர்களே...//

ஏன் ஃப்ரெண்ட் இப்படி??

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

//வலையுலகிலும் என்னை தென்றல் என்றே
பலரும் அழைக்கின்றனர்.///

ஆக்சுவலா பதிவுலக மின்னல்லுன்னு அழைக்கணும்! பட் தென்றல்ன்னு அழைக்க்கிறாங்க

பொதுக்குழுவை கூட்டி சீக்கிரமே முடிவெடுக்கணும் :))))))))))

வித்யா said...

ரைட்டு கலா அக்கா:)

நட்புடன் ஜமால் said...

செல்லாது செல்லாது

நீங்க எப்போதும் புதுகை அக்காதான்

தென்றலோ புயலோ ...

புதுகைத் தென்றல் said...

பதிவுலக மின்னல்லுன்னு அழைக்கணும்! பட் தென்றல்ன்னு அழைக்க்கிறாங்க

பொதுக்குழுவை கூட்டி சீக்கிரமே முடிவெடுக்கணும் //

நல்லாத்தானே போயிகிட்டிருந்துச்சு பாஸ்

ஒரு முடிவோடத்தான் இருக்கீக போல

புதுகைத் தென்றல் said...

ரைட்டு //

:)))

புதுகைத் தென்றல் said...

நீங்க எப்போதும் புதுகை அக்காதான்

தென்றலோ புயலோ ...//

:)))))))

இராகவன் நைஜிரியா said...

மிகவும் தேவையான பயம் தான் திருமதி. கலா அவர்களே. ஆனால் ஒரு சந்தேகம் திரு. ஸ்ரீராமை உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் மற்றவர்களுக்கு பரிச்சயப் படுத்தும்போது, கலா வீட்டுக்காரர் என்று பரிச்சயப் படுத்துவதில்லையா?

இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வரக்கூடாது என்றுதான் என்னோட வலைப்பூ பேரையே ராகவன் என்று வைத்துக் கொண்டேன்.

மறக்க மாட்டோம். எப்போது வேண்டுமானாலும் கேளுங்க உங்க பேர் என்ன என்று உடனே
திருமதி கலா ஸ்ரீராம் என்று சொல்லுவோம்.

இப்ப சந்தோஷம் தானே...

ராமலக்ஷ்மி said...

ஹலோ ஹலோ!!
கலா கலா,
நலமா நலமா??

புதுகைத் தென்றல் said...

திரு. ஸ்ரீராமை உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் மற்றவர்களுக்கு பரிச்சயப் படுத்தும்போது, கலா வீட்டுக்காரர் என்று பரிச்சயப் படுத்துவதில்லையா?//

எங்க ரெண்டு பேருக்கும் உறவினர் பொதுதான்.அங்கயும் ஸ்ரீராம் மனைவின்னுதான் தெரியும், இல்லாட்டி ராஜம் பேத்தி :))

புதுகைத் தென்றல் said...

இப்ப சந்தோஷம் தானே...//

ரொம்ப

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி
இங்கயும் கவிதை மாதிரியா,

அவ்வ்வ்வ்வ்வ்வ்

பாலராஜன்கீதா said...

idugai ***kalakkala*** irukku.

புதுகைத் தென்றல் said...

idugai ***kalakkala*** irukku.//

நீங்க வந்ததே சந்தோஷம். பாராட்டுக்கு மிக்க நன்றி

சின்னக்கவுண்டர் said...

நியாயமான பயம் தான், இருந்தாலும் கண்ணு / கண்ணா னு உங்களில் சரி பாதி (?) சொல்லுறது எத்தனை சுகம் என்று தினமும் தங்கள் சொந்த பெயரில் அழைக்கப்படும் தங்கமணிகளிடம் கேளுங்கள், கதை கதையாய் சொல்வார்கள்.

பெயர் சொல்லி பேசுவதைவிட கண்ணு / கண்ணா இன்னும் நெருக்கத்தை தரும் என்று உங்கள் துணை விரும்பலாம். இன்னொன்று கண்ணு / கண்ணா என்று சொல்ல எல்லா கணவர்களுக்கும் வருவது இல்லை.

நீங்கள் கொடுத்து வைத்தவர்.

கோபிநாத் said...

ஆகா....கலா ! வா ;)))))

என்னோட அம்மா பெயரில் பாதி உங்க பெயர் ;)

புதுகைத் தென்றல் said...

பெயர் சொல்லி பேசுவதைவிட கண்ணு / கண்ணா இன்னும் நெருக்கத்தை தரும் என்று உங்கள் துணை விரும்பலாம். இன்னொன்று கண்ணு / கண்ணா என்று சொல்ல எல்லா கணவர்களுக்கும் வருவது இல்லை.

நீங்கள் கொடுத்து வைத்தவர்.//

ஆமாம் சின்னக்கவுண்டரே,
அடியேய், என்றோ பெயரை சொல்லி கத்தி அழைப்பதோ தரும் நாராசம் அப்பப்பா.

அயித்தான் கூப்புடறதுல நெருக்கம் அன்பு தெரியுதுதான்.

கொடுத்து வைத்தவள்னு தான் தெரிஞ்சு போச்சே. :)))
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோபி,

அப்படியா....

எம்.எம்.அப்துல்லா said...

//ரமணிசார் மகள் //

என் அப்பாவுக்கே ரமணி சார் பொண்ணுன்னு சொன்னாதான் தெரியும்

:)

புதுகைத் தென்றல் said...

என் அப்பாவுக்கே ரமணி சார் பொண்ணுன்னு சொன்னாதான் தெரியும்

அதானே சொல்றேன். :( :)

மங்களூர் சிவா said...

நம்பற மாதிரியா இருக்கு??

பேங்க்குக்கு போங்க உங்க அக்கவுண்ட்ல தினைக்கும் நாலுதடவை நூறு நூறு ரூபாயா கட்டுங்க திரும்ப நாலு தடவை நூறு நூறுரூபா வித்ட்ராயல் பண்ணுங்க (ஏடிஎம்ல எடுக்க கூடாது. )

பேர் மறக்க சான்ஸே இல்ல என்னங்க ஆஷிஷ் அம்மா நான் சொல்றது சரிதானே!?

:))))

புதுகைத் தென்றல் said...

உங்க அக்கவுண்ட்ல தினைக்கும் நாலுதடவை நூறு நூறு ரூபாயா கட்டுங்க திரும்ப நாலு தடவை நூறு நூறுரூபா வித்ட்ராயல் பண்ணுங்க (ஏடிஎம்ல எடுக்க கூடாது. )//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்