மாமல்லபுரத்து சிற்பங்கள் மிக அற்புதம்.
வெறும் கல்லாய் பார்க்காமல் சொல்லிப்
பார்த்து புரிந்து கொள்ள கைடு ஒருவரை
ஏற்பாடு செய்து பார்த்த பொழுது பல
அரிய விடயங்கள் தெரிந்தது.
சிற்பக்கலையின் பெருமை புரிந்தது.
உளியின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது.
கல்லிலிருந்து சிற்பம் உருவாகும் அதிசயத்தை
பிள்ளைகளோடு பிள்ளையாய் பார்த்து
வியந்தேன்.
அர்ச்சுனன் தவசு, கடற்கரைக்கோவில்,
ஐந்து ரதம் எல்லாம் அற்புதம்.
மாமல்ல புரம் சென்று வந்ததன்
அடையாளமாக அந்த சிற்பங்கள்
இருப்பது போல் ஏதும் வாங்க வேண்டுமென
கடை கடையாகத் தேடினோம். சின்ன
சைஸ் சிற்பங்கள் முதல் பெரிய சைஸ்
சிற்பங்கள் வரை கிடைக்கின்றன.
ஆனால் மாமல்ல புரத்தின் சிறப்பான
சிற்பங்கள் உள்ள ஏதும் கிடைக்கவில்லை.
ஒரு ஃப்ரிட்ஜ் மேக்னெட்டாவது கிடைக்குமா
என்று பார்த்தால் இல்லை. கடைசியில்
ஒரு கடையில் நெட்டியில் கடற்கோயில்
கிடைத்தது.
நம் சுற்றுலாத்துறை ஹாப் ஹாப் டூர்
போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து புறப்பட்டு மாமல்ல புரம்
வரை வரும் இந்த பயணத்தில் ஒரு இடத்தில்
இறக்கிவிட்டு நாம் அந்த இடத்தை பார்த்த
பிறகு வேறொரு பஸ்ஸில் அடுத்த இடத்துக்கு
செல்வது போல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சிறப்பு மிக்க இடங்களின் நினைவுப் பொருட்கள்
நியாயமான விலையில் எல்லா இடத்திலும்
கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லா இருக்கும்.
11 comments:
கல்லிலிருந்து சிற்பம் உருவாகும் அதிசயத்தை
பிள்ளைகளோடு பிள்ளையாய் பார்த்து
வியந்தேன்.\\
இந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை
நானும் சென்னை வந்ததிலிருந்து முயற்சிக்கிறேன் .கல்லிலே கலை வண்ணம் காண.இதுவரை நேரம் வாய்க்கவில்லை...
வாங்க ஜமால்,
சீக்கிரம் கிட்டட்டும்
வாங்க கோமா,
நான் சென்னையில் 4 வருடம் இருந்தபோ பார்க்கலை. இப்பத்தான் சான்ஸ் கிடைச்சது. :))
நான் ‘85ல் லயன்னஸ் கிளப் பிக்னிக் போது சென்றது. 24 ஆண்டுகளாகி விட்டன...
அடுத்த விசிட் போனால் தெரிவிக்கிறேன்.
கலைவண்ணத்தை டிஜிடலில் எடுத்து வந்து பதிவிடுகிறேன்
பிரம்மாண்டம் இல்லை, பழமை என்பதைத்தவிர வியக்கச்செய்ய வேறொன்றுமில்லை.
ஆனால் எத்தனை முறை கண்டாலும் ஒரு சந்தோஷப்பெருமூச்சை ஏற்படுத்தும் அற்புதம் கடற்கரைக்கோயில்.!
மாமல்லபுரத்தை அணு அணுவாக ரசித்திப் பார்த்து இருக்கின்றீர்கள். அழகான ஒரு உலகம் அது. ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன.
// சிறப்பு மிக்க இடங்களின் நினைவுப் பொருட்கள்
நியாயமான விலையில் எல்லா இடத்திலும்
கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லா இருக்கும். //
சரியாகச் சொன்னீர்கள். நடக்கும் என்று நம்புவோமாக...
ஆஹா கண்டிப்பா போட்டோ போடுங்க.
நீங்க ஒரு கேமிரா கலைஞி என்பது பதிவர் சந்திப்பு அன்னைக்கே பார்த்தேன்.
வாங்க ஃப்ரெண்ட்,
நிறைய்ய இருக்கு. ஒரு இடத்தில் மாட்டின் தலையை கையால் மறைத்து விட்டு பார்த்தால் யானை போல் இருக்கு. துதுக்கை பாகத்தை மறைத்துவிட்டு பார்த்தால் மாடு மாதிரி இருக்கு. மிக அற்புதமான சிற்பக்கலை.
கட்டாயம் கைடு ஏற்பாடு செஞ்சு பாருங்க.
wow nice!
நன்றி சிவா
Post a Comment