நன்றாக படித்துக்கொண்டிருந்த தனது மகன்
தற்போது படிப்பில் கவனமில்லாமல் இருப்பதாகவும்,
கொஞ்சம் டிஸ்டர்படாக இருப்பதாகவும் வருத்தப்பட்ட
என் தோழி எங்கள் ரெய்கி மாஸ்டருக்கு போன் செய்து
என்ன செய்யலாம்? என கேட்டிருக்கிறார்.
மாஸ்டர் சொன்னது,” உன் மகனின் கட்டிலுக்கு கீழ்
வைத்திருக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு பிறகு
பார்” என்று சொல்லியிருக்கிறார்.
மகனின் விளையாட்டு பொருட்கள், உடைந்த பேட்
போன்றவை பாசிடிவி எனர்ஜியை வெளியே தள்ளி
நெகட்டிவ் எனர்ஜியாக மாறி படுத்தியிருக்கிறது.
மாஸ்டர் சொன்னபடி செய்ததில் நல்ல முன்னேற்றம்
இருப்பதாக சொன்னார்.
நம்பிக்கை இருப்பவர்கள் மேலே படியுங்கள்.
(வேண்டாத விவாதம் செய்ய விருப்பமில்லை)
நம் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பொருட்கள்
குப்பைகளாகின்றன. 6 மாதத்திற்கு மேல் உபயோகப்படுத்தாத
எதுவும் குப்பையே. வீசிவிடுவது, அல்லது உபயோகப்படுத்துபவர்களூக்கு
கொடுத்து விடுவது நல்லது.
ஒரு காட்சி பாருங்கள்:
காலையில் எழுந்து காபி குடித்து, பேப்பர் படித்து
இன்று என்ன உடுத்தலாம் என கப்போர்டை திறந்தால்
எது எங்கே இருக்கிறது என்று தெரியாமல்
குழப்பமாக இருக்கிறதா?
வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாமல்
தேடுவது உங்கள் பழக்கமா?
கலைந்து கிடக்கும் பொருட்களினால் தேடியது
கிடைக்காமல் கோபம், எரிச்சல் இவைகள் உங்களை
ஆட்கொண்டு இதுதான் நம் இயல்பு என நினைத்தீர்களானால்
நீங்கள் இந்தப் பதிவை கட்டாயம் படிக்க வேண்டும்.
மேலே இருக்கும் படம் பார்க்க அழகாக இருப்பதாக
தோன்றினாலும் கூர்ந்து பார்த்தால் மேலே சொன்ன
காட்சிகள் இந்த அறையின்வாசிக்கு கட்டாயம் ஏற்படும்.
இந்த நிலை எரிச்சல், கோபம் இல்லாத வாழ்க்கை வேண்டுமானால்
நாம் பின்பற்ற வேண்டியது ஃபெங் சுயி முறை.
ஃபெங் சுயி பொம்மைகளை வீட்டில் கொண்டுவந்து
வைப்பதால் மட்டும் பிரச்சனை சரியாகாது.
நம் வீட்டுலிலுள்ள பொருட்கள் சுவாசிக்கும் அளவுக்கு
காற்றோட்டமாக, எளிதாக எடுக்கும் முறையில்
வைக்கப் பட வேண்டும்.
1. வீட்டில் இருக்கும் கப்போர்ட் போன்றவற்றிற்கு
கதவு போட்டு மூடிவிட்டு உள்ளே குப்பையும்
கூர்வாளமாகவும் இருந்தால் ஃபெங் சூயி வேலை செய்யாது.
2. மனிதர்களின் தன்மை,குணம் மாறிக்கொண்டே இருக்கும்.
நாம் மாறுவது போல்தான் நம் வீடும் மாறும்.
3. கப்போர்ட், டிராயர்கள், அலமாரிகள் என எல்லா
இடங்களிலும் தூய்மையாக, அழகாக பொருட்களோ,
துணியோ அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. இந்தப் பொருள் இங்கேதான் இருக்கும் என
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிவது அவசியம்.
5.புதியன புகுதலும் பழையன கழிதலும் இயல்பு
என்றாலும் புதியவற்றை நாம் எவ்வளவு அக்கறையோடு
வைத்துக்கொள்கிறோம் அப்போதுதான் அது நம்மிடம் தங்கும்.
6.அலமாரிதான் இருக்கிறதே என்று அடைத்துவைக்காமல்
உள்ளே என்ன இருக்கிறது? என்பது தெரியும்படி
அடுக்கி அழகாக வைப்பது அவசியம்.
7. அம்மாவோடது, பாட்டி உபயோகித்தது என அவர்களின்
நினைவாக சில பொருட்கள் வைத்திருப்போம். ஆனால்
அது அவர்களின் நினைவுகளைத் தருவதோடு இடத்தையும்
அடைத்துக்கொண்டு நம் வளர்ச்சிக்கு தடைபடுமேயானால்
அதை உபயோகிப்பவர்களூக்கு கொடுத்துவிடுவது நல்லது.
8. வேண்டாதது எது? என முடிவு செய்வது கொஞ்சம்
கஷ்டம் தான். கொடுப்பதா? வைத்துக்கொள்வதா?
போன்ற எண்ணங்கள் போட்டிபோடும். இது தவிர்க்க
முடியாது. ஆனால் குப்பைகளற்ற வீடு தரப்போகும்
வளர்ச்சியை யோசித்து பார்த்தால் நம்மால்
முடிவு எடுக்க முடியும்.
9. அலமாரியின் இடது பக்கத்தில் நகைகள்,
வேலைக்கு/பள்ளிக்கு போட்டுச் செல்லும் உடைகள்,
வைப்பதால் திறமை,வளர்ச்சி ஏற்படும். ஃபெங் சூயிபடி
இவை திறன், வளர்ச்சிக்கான இடம்.
10. நல்ல உடல்நிலை,புகழ் ஆகியவற்றை பெற
காஷுவலாக உடுத்தும் உடைகள், வார இறுதியில்,
உடற்பயிற்சிக்கான உடைகள் ஆகியவற்றை
அலமாரியின் மத்தியில் வைக்க வேண்டும்.
11.அலமாரியின் வலது பக்கத்தில் வெளியூருக்கு
போகும்போது கொண்டு செல்லும் உடைகள்
வைப்பதால் நல்ல உறவு, பயணங்கள், உதவும்
நட்புக்கள் கிடைக்கும்.
மனம் ஒரு இடத்தில் லயிக்காமல் அலைந்து
கொண்டிருக்க காரணம் இப்படி வைக்கப்பட்ட
செருப்புக்களாக கூட இருக்கலாம்!!!!
ஒரே பக்கத்தில் வைப்பதால் மனம் ஒருங்கிணைந்து
மகிழ்ச்சியாகும்.
அலமாரிகளின் கதவுகள் எளிதாக தி்றந்துமூடும்
வகையில் இருப்பது அவசியம்.
நமது வீட்டில் இருக்கும் கதவுகள், டிராயர்கள்
ஆகியவை திறக்க கஷ்டமாக இருக்கிறது
என்றால் நம் வாழ்க்கையும் அப்படித்தான்.
வீட்டில் போதுமான அளவு வெளிச்சம், காற்றோற்றம்
இருக்கிறதா என பார்கக் வேண்டும். மின்விளக்கு
போட்டால்தான் எதுவும் தெரியுமென்றால் இயல்புக்கு
சற்று மாறாக வாழ்வு இருக்கும்.
ஃபெங் சூயியின் இந்த பகுவாவை பார்த்தால்
ஃபெங் சூயி நமக்கு எவ்வளவு வளத்தை தரும்
என்பது தெரியும்.
இனிய இல்லம் எல்லோருக்கும் இனியதாய்
வாழ்வுக்கு வளம் சேர்க்கும்.
FENG SHUI பற்றிய பல தகவல்களுக்கு
8 comments:
மாஸ்டர் சொன்னது,” உன் மகனின் கட்டிலுக்கு கீழ் வைத்திருக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு பிறகு பார்” என்று சொல்லியிருக்கிறார்.\\
ஓஹ்! இது ஒரு முக்கிய காரணமோ!
ஆமாம் ஜமால்,
அவைகளை நீக்கிய பின் தோழியின் மகனிடம் பெரிய மாற்றம். இப்போது லண்டனில் ஏரோனாடிகல் எஞ்சினியரிங் படித்துக்கொண்டிருக்கிறான்.
உண்மைதான் கலா...குறித்த இடத்தில் பொருட்களைச் சரியாக வைத்தால் எத்தனை நன்மை...
குறிப்பிட்ட இடத்தில் பொருட்களை வைப்பதால்தான் எவ்வளவு நன்மைகள்...
ஆமாம் பூவனம்,
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. குடும்பத்தினர் அனைவரின் ஒத்துழைப்பும் பூரண அவசியமாகிறது.
வாங்க பாசமலர்,
எத்தனையோ நன்மைகள். அனுபவத்தில் உணர்ந்ததால் சொல்கிறேன்.
nice post. very informative. thanks.
thanks siva
Post a Comment