குழந்தைங்க மட்டுமல்ல பெரியவங்களுக்கும்
பிடிச்சது சாக்லேட்.
இனிப்பு உடம்புக்கு கெடுதல் என்றாலும்,
கொஞ்சமா சாப்பிடலாம். சாக்லெட் சாப்பிடுவதில்
சில நன்மைகளும் இருக்கு.
ஜெர்மனைச் சேர்ந்த HEINRICH HEINE UNIVERSITY
நடத்திய ஒரு ஆய்வில் சாக்லெட் சாப்பிடுபவர்களின்
தோல் மினுமினுப்பதாக கண்டுபிடிச்சிருக்காங்க.
ரத்த ஓட்டத்தை அதிகரித்து தேவையான சத்துக்களைத்
தருவதாக கண்டுபிடிச்சிருக்காங்க.
கோகோவை பானமாக அருந்துபவர்களுக்கு
ஸ்ட்ரோ்க், இருதயநோய், கேன்சர், சர்க்கரை
வியாதி ஆகியவை வரும் சாத்தியம் குறைவாம்.
சாக்லெட் நமது தூக்கத்துக்கும் மன அமைதிக்கும்
மருந்தாக இருக்குன்னு யூகே ஹாஸ்பிடல் ட்ரஸ்ட்
நடத்திய ஆய்வில் கண்டுபிடிச்சிருக்காங்க.
பரிட்சை நாட்களில் பிள்ளைகளுக்கு தினமும்
ஒரு பீஸ் சாக்லெட் உண்ணக் கொடுப்பதால்
அவர்களின் மூளைக்கு நல்லதாம். குறைந்தது
3 மணி நேரத்துக்கு மூளை சுறுசுறுப்பா இருக்குமாம்.
கோகோ அல்ஸமைர் வியாதிகாரர்களுக்கும் உதவுமாம்.
பெண்களுக்கு முக்கியமான செய்தி மார்பக புற்றுநோய்
ஏற்படாமல் இருக்க சாக்லெட் உதவுமாம்.
ஆஹா இம்புட்டு நல்லதான்னு அதிகமா
சாப்டா என்னாகும்னு பாக்கலாமா?
மனநிலை தடுமாற்றமுடையவர்களாக வாய்ப்பிருக்கு.
அதிகமாக சாக்லெட் சாப்பிட்டால் உடம்பு கால்சியத்தை
ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைந்து விடும்.
உடல் பருமன் ஏற்பட வாயிப்பிருக்கு.
*******************************
சிலருக்கு சாப்பாடு முடித்ததும் இனிப்பாக
ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும்.
sugar craving அப்படின்னு பேரு இதுக்கு.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவா
இருக்கும்போது இப்படி இருக்கும்.
(hypoglycaemia - low blood sugar)
உடல் அதிகமாக டீஹைட்ரேட் ஆகும்
போது சர்க்கரை அளவு குறைந்து போகும்.
அப்போது கொஞ்சம் சாக்லேட் அல்லது
இனிப்பு சாப்பிட்டால் சரியாகும்.
(பலருக்கு சர்க்கரை அளவு குறைந்தால்
மயக்கம், தலை சுற்றல் போன்றவை
ஏற்படும்) கையில் சாக்லெட் அல்லது
டாஃபி, மிட்டாய் போன்றவற்றை
வைத்துக்கொண்டு வாயில் போட்டுக்கொண்டால்
சரியாகிவிடும்.
சந்தோஷமா, அளவோட சாக்லெட் சாப்பிடலாம் வாங்க.
16 comments:
அக்கா எப்ப எனக்கு சாக்லேட் வாங்கி கொடுக்க போறிங்க
இப்பவே வருகிறேன் உன்பதற்கு
இவ்வளவு நல்ல மருத்துவ சத்துக்கள் இருக்கா இந்த சாக்கிலேட்டில்
அடுத்த ட்ரையின் பிடிச்சு வாங்க.
ஃப்ரிட்ஜல் எப்பவும் சாக்லேட் இருக்கும்.(நானும் லோ சுகர் பார்டி ஆச்சே)
நம்ம சாய்ஸ் Candy தான்.
@மோனிபுவன் அக்கா - என்னாச்சு ரொம்ப சாப்பிடகூடாதுன்னு - புதுகை அக்கா சொல்லிக்கீறாங்க அதப்பாருங்கோ ...
SO...O..O..O..O
SWEEEEEEEEEEEEEEt
இப்பொழுது 50 ரூபாய்க்கு விற்கப்படும் காட்பரீஸ் சாக்லேட்...50பைசாவுக்கு கிட்டிய காலத்திலிருந்து நான் அதன் அடிமை.
ஊட்டியில் வீட்டில் செய்த சாக்கலேட் சாப்பிட்டு இருக்கீங்களா?
வாங்கஜமால்,
கேண்டி பார்ட்டியா. குட்
வாங்க கோமா,
நான் 5 ஸ்டார்/ கிட்கட்க்கு அடிமையோ அடிமை.
ஊட்டியில் வீட்டில் செய்த சாக்கலேட் சாப்பிட்டு இருக்கீங்களா?//
இல்லையே தேவா,
பெரிய்ய ஹோட்டல்களில் செய்த சாக்லெட் நண்பர்கள் கொடுத்துசாப்பிட்டிருக்கிறேன். அது இன்னும் மென்மையாக ருசியாக இருக்கும்.
நான் ஊட்டியில் இருந்த சமயம் ஹோம் மேட் சாக்லேட் சாப்பிட்டிருக்கிறேன்
அருமையான காம்பினேஷனில் நட்ஸ் படர்ந்திருக்கும் சூப்பர் டேஸ்ட்
கலக்குறீங்க!
ஒரு கிலோ சாக்லேட் பார்சல்!
:)
ஊட்டிக்கு அவசரமா 4 டிக்கெட் எடுத்தாகணுமே!!!
நீங்க என் ப்ளாக் பக்கம் ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கே நான் சாக்லெட் தரணும் சுரேகா
கலக்குறீங்க!
இங்க ஒரு கிலோ சாக்லேட் பார்சல்!
:)
பார்சல் கஷ்டம் நேரே வந்து வாங்கிக்கோங்க சிவா
Post a Comment