Tuesday, June 30, 2009

HOME IMPROVEMENT COMMITTEE.

பிள்ளைங்க வளர வளர நமக்கு வேலையும் ஜாஸ்தியாகுது.
ஓவ்வொரு ஸ்டேஜ்லையும் ஒருவிதமா இருக்கும்.

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் பெற்றோரைப் பார்த்து
“ம்ம் உங்களுக்கு பிரச்சனை இல்லை!!!! உங்க பையன்
வளர்ந்திட்டான்” அப்படின்னு சொல்லும்போது
அந்த பெற்றோர் கண்டிப்பா சிரிச்சுப்பாங்க.

அவங்க படும் கஷ்டம் அவங்களுக்குத்தானே தெரியும். :))

பெரிய கிளாஸ் போகப்போக பெற்றோர்களுக்கும் டென்ஷன் தான்.
அந்த டென்ஷனை பசங்க மேலே காட்டினா பாவம் பசங்க.

வளரும் குழந்தையோ, வளர்ந்த குழந்தையோ அட்வைஸ்
சொன்னா கண்டிப்பா பிடிக்காது. (நமக்குமே அப்படித்தானே!!)

எப்படித்தான் சமாளிப்பது???

ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கியதும் எங்க வீட்டில்
கமிட்டி மீட்டிங் நடக்கும். வீட்டின் தலைவர் எப்போதும்
டூரில் இருப்பதால் துணைத்தலைவராகிய எனக்கு வேலை
அதிகம். தலைவர் அவ்வப்போது மீட்டிங்கிற்கு வந்து
பேசுவார். இயலாத போது கலந்தாலோசித்து பிறகு
மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துகொள்வேன்.

கமிட்டில என்னதான் செய்வோம்?

கமிட்டி மெம்பர்ஸ் ஆஷிஷும் அம்ருதாவும் தான்.

“திட்டினா உங்களூக்கு பிடிக்காது.
உங்களை திட்டறதுல எனக்கும் இஷ்டமில்லை.
ஆக, ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்குவோம்.
நான் கோபப்படற மாதிர் நீங்க நடந்துக்க வேணாம்.
உங்களை சந்தோஷமா வெச்சுக்க வேண்டியது
எங்க கடமை” அப்படின்னு ம்யூச்சுவலா பேசி
முடிவெடுத்துட்டு கோல்டன் ரூல்ஸ் பட்டியல் போடுவோம்.
(இது 2008ல் போட்டது. வகுப்புக்கு தக்கவாறு கொஞ்சம்
கொஞ்சமா ஒவ்வொரு வருடமும் மாற்றம் இருக்கும்.அவர்களுக்கென சில
பொறுப்புக்கள் கொடுப்பேன்.)


இந்த வருடமும் திட்டமிட்டாச்சு.

இந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்திய
திட்டங்கள்:

1. தான் செய்ய வேண்டிய ப்ராஜக்டுகள், அடுத்த
வாரம் செய்து முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள்
ஆகியவற்றை ஒரு பேப்பரில் எழுதி ஃப்ரிட்ஜில்
மேக்னெடில் ஒட்டி வைத்துவிட வேண்டும்.

2. வெள்ளிக்கிழமை இரவுக்குள் அந்த வாரப்பாடங்கள்,
ஹோம் வொர்க்குகள், ப்ராஜக்டுகள் முடித்துவிட்டால்
1 மணி நேரம் கம்ப்யூட்டர் விளையாடலாம்.

3. அந்த ஒரு மணிநேரத்தில் கேம்ஸ் போக
ஆங்கில வலைப்பூ மற்றும் தமிழ் வலைப்பூவில்
தலா ஒரு பதிவு இடவேண்டும்.
(மொழி வளர்ச்சிக்கு உதவுமே!!)

அப்பப்போ ஐடியா தோணும்போது கமிட்டி கூடி
பேசிமுடிவெடுப்போம்.

மழலையர்களுக்காக பேரண்ட்ஸ் கிளப்பில் இந்த
கோல்டன் ரூல்ஸ் பதிவும் இருக்கு.

7 comments:

butterfly Surya said...

ரூல்ஸ் ஒ.கே. ஆனா மெம்பர்ஸ் RULES ARE MADE TO BREAK.. அப்படின்னு சொல்ல கூடாது.

அதான் முதல் ரூல்.

மங்களூர் சிவா said...

me the first!

மங்களூர் சிவா said...

/
மாதக் கடைசியில் சேர்ந்திருக்கும் பாயிண்ட்களூக்கு ஒவ்வொரு பாயிண்டுக்கும் ஒரு ரூபாய் வீதம் பாக்கெட் மணி கொடுக்கப்படும். அதை அனாவசியமாக செலவு செய்ய விடமாட்டேன்.
/

இம்புட்டு ரூல்ஸ் போட்டு பசங்க ஸ்டார் வாங்குறதே கஷ்டம் அதை அவங்க விருப்பத்துக்கு செலவுசெய்ய விட மாட்டீங்களா? என்ன கொடும அம்ருதா இது?
:)))))

தேவன் மாயம் said...

ஏதோ
பெரிய கமிட்டி
ஆரம்பித்துவிட்டீர்களோ
என்று
பயந்து விட்டேன்!!

pudugaithendral said...

ஆனா மெம்பர்ஸ் RULES ARE MADE TO BREAK.. அப்படின்னு சொல்ல கூடாது. //


ரூல்ஸ் ப்ரேக்கான சிம்பிளா பாயிண்ட்ஸ் கட் செஞ்சு பாக்கெட் மணியை குறைச்சுட்டு போய்கிட்டே இருக்கலாம்

:))

pudugaithendral said...

இம்புட்டு ரூல்ஸ் போட்டு பசங்க ஸ்டார் வாங்குறதே கஷ்டம் //

அதெல்லாம் போட்டி போட்டுகிட்டு வாங்கிடுவாங்க

pudugaithendral said...

வாங்க தேவா,

இது தான் பெரிய கமிட்டி.

ஒரு ஹோம் மேக்கருகுத்த்தான் அதோட கஷ்டம் புரியும்.

:))