இதைப்பற்றி இத்தனை நாளாய் பெரிதாகக் தோன்றவில்லை!!!
ஆனால் ஓவ்வொரு வருடமும் இதைப்பற்றி நினைவு வரும்.
பெருமையாகவும் இருக்கும்.
இவ்வளவு பெருமையாக நான் நினைப்பது என் நட்பை பற்றி.
எனக்கு ஆரம்பமுதலே உதட்டளவில் நட்புக்கொள்ளப்பிடிக்காது.
தெரியாது என்றாலும் தவறில்லை.
இதுல என்ன குறைஞ்சிடப் போறோம் என் நினைப்பேன்.
என்னுடைய பெரிய குறையும் இதுதான். என்னைப்போல்
அனைவரும் ”நெஞ்சத்தக நக நட்பு” கொள்ள மாற்றார்கள்
என்பது காலம் எனக்கு கற்றுக்கொடுத்தாலும் நான்
என்னை மாற்றிக்கொள்வதாக இல்லை.
நட்பிற்கு இலக்கணமாக நல்ல நட்பாக இருந்துவிட்டு
போவேமே என்ற எண்ணம் தான் காரணம்.
நம் அலைவரிசை நட்பு மட்டுமல்ல, நம்மைப்போல்
நட்பு பாராட்டும் ஒரு நண்பரோ/தோழியோ கிடைப்பதும்
ஆண்டவனின் ஆசிர்வாதம் தான்.
நான் அந்த விதத்திலும் கொடுத்து வைத்தவள். ஆண்டவனுக்கு
நன்றி.
ஆண்களின் நட்போடு பார்க்கும்பொழுது பெண்ணிற்கு தனது
பள்ளீ/கல்லூரி அல்லது ஊரில் இருக்கும் நட்பு தொடர
வாய்ப்பு குறைவுதான்.
பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தொடர்பு விட்டு போகும்.
திருமணத்திற்கு பிறகும் தன் மனைவியின் நண்பனுடன்
தொடர்பு(communication) என்பதை ஏற்றுக்கொள்ளும்
கணவர்கள் வெகு சிலரே.
இப்படி இருக்க நான் ஒவ்வொரு வருடமும் ஜூலை
மாதம் பிறந்தால் சந்தோஷமாக, ஆண்டவனுக்கு
நன்றி சொல்லும் வகையில் எனக்கும் ஒரு நட்பு
இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையோ
பெருமைதான்!!!
என் நட்பின் வயது என்ன தெரியுமா?
அது தெரிந்தால் நீங்கள் பொறாமை கொள்ளக்கூடும்!!!
என் நட்புக்கு 18ஆவது வயது ஆரம்பித்திருக்கிறது.
இன்றும் தொடர்பில் இருக்கிறோம்..
யார்?? யார்?? யார்??
கேள்விக்கு விடை அடுத்த பதிவில்
(சஸ்பென்ஸ் வெச்சு பதிவு போட்டு
எம்புட்டு நாளாச்சு? :)))
10 comments:
உங்க கணவரா???
உங்க வீட்டுக்குள்ளே இருக்கும் ஒருவர் ??
பொறாமைக்காரன் மீ தி பர்ஸ்ட்டேய்!
நட்பு
சொல்லும் போது எவ்வளவு இனிமையாக இருக்கின்றது
எனக்கும் இப்படி ஒரு நட்பு இருக்கு
1990 இறுதியில் துவங்கியது
ரொம்ப இனிமையாக எங்கள் இருவரின் துனைகளோடு நட்பு இன்னும் தொடர்பில்
ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன் இந்த அதிகாலையில் பதிவினை படித்தவுடன் ...
வாழ்நாளுக்கும் தொடரப் போகும் இந்த இனிய நட்புக்கு எங்களின் வாழ்த்துக்கள்!
வாங்க கல்ஃப் தமிழன்,
அயித்தானும் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்தான். இது வேற
வாங்க ரவி,
வீட்டுக்குள்ளே இருப்பவர் இல்ல
மிஸ் ஆகிடுச்சே சிவா
ரொம்ப சந்தோஷமாக உணர்கிறேன் இந்த அதிகாலையில் பதிவினை படித்தவுடன் ...//
சந்தோஷம்
நன்றி ராமலக்ஷ்மி
Post a Comment